பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

கால நேரத்துக்கு ஏத்தா மேரி - நம்ப பிளாக்குல வணக்கம் சொல்லோ !!

·

தோஸ்து அல்லாருக்கும் இந்த பாண்டியோட வன்கம்பா !! 

போன பதிவுக்கு நானே எதிரு பாக்காத அளவுக்கு , எனுக்கு 
ஆதரவு குட்தீங்கோ !! ஓட்டும் போட்டு கெலிக்க வெச்சீங்கோ ( ? ) 
அதுக்கு அல்லாருக்கும் டாங்க்ஸ் ,

செரி, இப்போ !! நாம எழதற கொடுமைகளையும் சகிச்சிக்கீனு,
நம்ப பிளாக்க பாக்க வர தோஸ்துங்களுக்கு, நேரத்துக்கு ஏத்தா 
மேரி ஒரு வணக்கத்த போட்டா எப்பிடி , இருக்கும் , அதாம்பா !! 


காத்தலே ஓபன் பண்ணா காலை வணக்கம் , அப்பால 
சாயங்கலாம் ஓபன் பண்ணா மாலை வணக்கம் , இது மேரி 
ராவைக்கி ஓபன் பண்ணாக் கூட அதுக்கு ஏத்தா மேரி , எதுனா 
சொன்னாக்கா !! நல்லா இருக்கும் இல்ல , 

இதுக்கு , இங்க கீய கீர , கோடிங்க அப்பிடியே காப்பி பண்ணி , <script>

var Digital=new Date()
var hours=Digital.getHours()

//Configure message below to your own.
if (hours>=5&&hours<=11) //MESSAGE FOR MORNING
document.write('<b><marquee>காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.</marquee></b>')
else if (hours==12) //MESSAGE FOR NOON
document.write('<b><marquee>நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.</marquee></b>')
else if (hours>=13&&hours<=17) //MESSAGE FOR AFTERNOON
document.write('<b><marquee>அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.</marquee></b>')
else if (hours>=18&&hours<=20) //MESSAGE FOR EVENING (6pm-8pm)
document.write('<b><marquee>இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி</marquee></b>')
else if (hours>=21&&hours<=11) //MESSAGE FOR NIGHT (9pm-11pm)
document.write('<b><marquee>இனிய இரவுக்கு வாழ்த்துக்கள்.</marquee></b>')
else //MESSAGE FOR LATE NIGHT, EARLY MORNING (12pm-4am)
document.write('<b><marquee>இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!</marquee></b>')

</script>


வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > 

சேத்துட்டா, போதும்

1 ) காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய 
    வாழ்த்துக்கள்.


2 ) நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை 
      படிப்பதற்கு      நன்றி 


3 ) அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு 
     நன்றி.


4 ) இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு 
      வந்ததற்கு     நன்றி


5 ) இனிய இரவுக்கு வாழ்த்துக்கள் 


6 ) இரவு நேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை 
     படிப்பதற்கு      நன்றி

இன்னு குட்துக்கேரீன் பா !! உங்களுக்கு ஏத்தா மேரி , எதுனா
மாத்தி போடராதா இருந்தா , இத , எட்துட்டு மாத்தி 
போட்டுக்கோங்க  தலீவா !! 


அப்பிடியே , இதுக்கு marquee கமாண்டு குத்துக் கீரேன், தல , 
அது வேண்டாம்னா , அதையும் எட்துட்டு போடலாம் ,  


தல , வயக்கம் போல உங்க ட்டு அப்பிடியே ஒரு 
கருத்தையும் போட்டு உடுங்க தல !! 


50 கருத்துகள்:

Unknown said...

சோக்காகீதே...

நம்ம ப்ளாகுல போட்டுடவேண்டியது தான்..

Unknown said...

என் ப்ளாகில் சேர்த்தாச்சு.. நன்றிங்க

டவுசர் பாண்டி said...

//சோக்காகீதே..//-Mrs.Faizakader கூறியது.

மொத தபா !! நம்ப ஏரியாக்கு வந்து கண்டுக்கனதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் சகோதரி !!

Sudhakaran said...

காலை, மாலை, இரவு இந்த மாதிரி நேரத்தை எல்லாம் விட, அதனுடன் நீங்கள் இணைத்திருக்கும் வாக்கியங்கள் மிக அருமையா உள்ளன.
தொடரட்டும் உங்கள் பணி. விரியட்டும் உங்கள் வலைப்பக்கம்!

அண்ணாமலையான் said...

கலக்குறே டவுசர்

முனைவர் இரா.குணசீலன் said...

அட!
நல்லாருக்கே..

a.jeyakumar said...

GOOD GOOD GOOD GOOD GOOD GOODDDDDDDDD NANPAA

TAMIL said...

கலக்கறீங்கள் ரவுசர் பாண்டி

Chitra said...

ஓட்டும் போட்டு கெலிக்க வெச்சீங்கோ ( ? )
அதுக்கு அல்லாருக்கும் டாங்க்ஸ் ,


........இருக்கட்டும் மக்கா. இப்போவும் ஜெயிக்க வச்சுருவோம்ல. வோட்டு போட்டாச்சுல.

டவுசர் பாண்டி said...

// வாக்கியங்கள் மிக அருமையா உள்ளன.//-Sudhakaran கூறியது.


ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !! ஏதோ எனுக்கு தெரிஞ்சத எழ்தி கீரேன்
வாஜாரே !! அவ்ளோதான் !!

டவுசர் பாண்டி said...

//கலக்குறே டவுசர்//-அண்ணாமலையான் கூறியது.

வாங்க !! தலீவா உங்க வருகைக்கி டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//அட!நல்லாருக்கே//- முனைவர்.இரா.குணசீலன் கூறியது,

உங்க வருகைக்கி+ கருத்துக்கு , ரொம்பவே டாங்க்ஸ் !!

டவுசர் பாண்டி said...

//GOOD GOOD GOOD GOOD GOOD GOODDDDDDDDD NANPAA//-jkrworld கூறியது.

இன்னாப்பா !! இது !! ஜாங்கிரி கணக்கா கீது !! ஓ, நல்லாக் கீதா !! உங்க கருத்துக்கு , ரொம்ப டாங்க்ஸ்
வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//கலக்கறீங்கள் ரவுசர் பாண்டி//-TAMIL கூறியது.

தலீவா !! உங்க பேரே தமிழா !! அய் சோக்கு தான் தல , இன்னா தல புச்சா ரவுசர் இன்னு கூப்டே , எனுக்கு ஒரே பீலிங்கா கீதுபா !! கர்த்துகு
டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

// வோட்டு போட்டாச்சுல.//-Chitra கூறியது.


ஒரு நாலு அஞ்சி ஒட்டு போட்டு உடுங்கப்பா !! அப்ப தான் ஈஜியா கெலிக்க முடியும் , அக்காங் !! கர்த்துக்கு +வோட்டுக்கு ,
டாங்க்ஸ் பா !!

Unknown said...

வந்துட்டு ஓட்டு போட்டுட்டோம்ல...அப்புறம் வரட்டா.. வாழ்க வளமுடன் வேலன்.

Sugumarje said...

வணக்கோம்பா! அப்பப்பொ மூள நல்லா ஜூட் வுடும் போலகீது...

ப.கந்தசாமி said...

சோக்கா கீது தோஸத்து. நம்ம ப்ளாக்குலேயும் ஜாயின் பண்ணாச்சும்மா!
வரீட்டா.

யூர்கன் க்ருகியர் said...

//இனிய இரவுக்கு வாழ்த்துக்கள் //

அப்படின்னா ???

டவுசர் பாண்டி said...

//ஓட்டு போட்டுட்டோம்ல...அப்புறம் வரட்டா.//- வேலன்.

ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//வணக்கோம்பா! அப்பப்பொ மூள நல்லா ஜூட் வுடும் போலகீது.//-Sugumarje கூறியது.

மூஞ்ச திரிபிக்கீனு கீரா மேரி கீர போட்டோ நல்லாத்தா கீது !! அப்பால , தலீவா !! ஒன்னு வெச்சிக்கீனே , நம்பால எழ்த முடியலியே ,

பத்து வெச்சிக்கீனு , எப்பிடி ? இத்தினி பிளாக்க எழ்தரீங்கோ !! யப்பா !! பெரி ஆளு தான் பா !! வருகைக்கி டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//சோக்கா கீது தோஸத்து. நம்ம ப்ளாக்குலேயும் ஜாயின் பண்ணாச்சும்மா!
வரீட்டா.//- Dr.P.Kandaswamy கூறியது.

அண்ணாத்தே !! மொத தபா !! நம்ப ஏரியாவுக்கு , வந்து கீரீங்கோ !! ரொம்ப , குசியா கீது !! உங்கள மேரி வஸ்தாது அல்லாம் ,

நம்ப ஏரியா லாங்குவேஜ தூலா பேசரீங்கோ !! எப்பிடி? சோக்கா கீது பா !! வருகைக்கி ,ம்ம்ம் கருத்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//இனிய இரவுக்கு வாழ்த்துக்கள் //

//அப்படின்னா ???//-யூர்கன் க்ருகியர் கேட்டது ,

இன்னாடா இது , எப்பகாண்டியும் கேள்வி மேல கேள்வியா
கேட்டுக்கீனு !! கீது !! ஐயே , கொயந்தயா கீரியே !! தல ,

இனிய இரவு - இன்னா , அதாம்பா !! ஒண்டிக் கட்டையா இருந்தா , உனுக்கு ஜிகிடி கனா , வர வாய்த்து,
சொம்மா !! பேமிலி இன்னா , சோக்கா போய் - தூங்குங்கோ , இன்னு சொல்றது , இப்ப பிரியுதா ? ( டவுட்டு தனபாலு இன்ற பேர நம்ப தலீவருக்கு குடுக்கறேன்பா )

ஆ , இம்மாம் தொலைவு வந்து சின்ன டவுட்டா இருந்தாலும் பெர்சா கர்த்து வாங்கிக்கீனதுக்கு , ரொம்ப
டாங்க்ஸ் பா !!

ப.கந்தசாமி said...

பாண்டி சாருக்கு, நம்மளை என்னான்னு நினைச்சே?நம்மளுக்கு கோயமுத்தூருன்னாலும் மெட்ராஸ் பாஸைலே சும்மா பூந்து வூடு கட்டி விளையாடுவோம்ல.(எப்டி?)

டவுசர் பாண்டி said...

//ப்ளாக்குலேயும் ஜாயின் பண்ணாச்சும்மா!வரீட்டா.//- Dr.P.Kandaswamy கூறியது.

ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!
உங்களைப் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் , நன்றிகள் பல .

டவுசர் பாண்டி said...

//பாண்டி சாருக்கு,//- Dr.P.Kandaswamy கூறியது.

அண்ணாத்தே !! நீங்க இன்னாடா தோஸ்த்து இன்ன சொல்ற போது , கெடைக்கற சந்தோசம் இது மேரி கூப்பிடும் போது இல்ல
அண்ணாத்தே !!


//மெட்ராஸ் பாஸைலே சும்மா பூந்து வூடு கட்டி விளையாடுவோம்ல.//

இத்த விட இன்னா ஒனும் ,

//(எப்டி?)//

super

Unknown said...

Very nice !!keep rocking

டவுசர் பாண்டி said...

//Very nice !!keep rocking//-sakthi கூறியது.

இன்னாவோ சொல்றீங்க இன்னு பிரியுது ஆனா இன்னாவோ நம்பளுக்கு பிரியாத லாங்குவேஜில கீது பா !! நல்லா தான் சொல்லி இருப்பீங்கோ !! அதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

சசிகுமார் said...

வழக்கம் போல கலக்கிட்ட தலீவா. இப்டியே மெய்ன்டன் பண்ணு.

Mohan said...

நல்ல கான்செப்ட்! வாழ்த்துக்கள்! சொம்மா குஜாலாகீது தல!!

டவுசர் பாண்டி said...

//வழக்கம் போல கலக்கிட்ட தலீவா. இப்டியே மெய்ன்டன் பண்ணு.//-சசிகுமார் கூறியது.

வாங்க !! தோஸ்த்து , உங்க வாழ்த்துக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//நல்ல கான்செப்ட்! வாழ்த்துக்கள்! சொம்மா குஜாலாகீது தல!!//-Mohan கூறியது.

மோகனு .தலீவரே !! உங்க வருகைக்கும் கருத்துக்கும் டாங்க்ஸ்
தல !!

சைவகொத்துப்பரோட்டா said...

எப்படி தலிவா, சும்மா அதிருதில்ல, டான்க்சுப்பா, இனிய நண்பகல் வன்க்கம் :))

Jaleela Kamal said...

அண்ணாத்த ம்ம் நீங்க கலக்குங்கக வாத்யாரே,

ரொம்ப டாங்க்ஸ் பா,

டவுசர் பாண்டி said...

//எப்படி தலிவா, சும்மா அதிருதில்ல,//-சைவகொத்துப்பரோட்டா கூறியது.

இதுனால தான் , இந்த பொட்டி இந்த மேரி ஆட்டம் காட்டுதா ? நானு இன்னாவோ இன்னு நென்செம்பா !! வருகைக்கி டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்த ம்ம் நீங்க கலக்குங்கக வாத்யாரே,//-Jaleela கூறியது.

வாங்க !! சகோதரி , உங்க டான்க்சுக்கு , ரொம்ப டான்க்சுங்கோ !!

ரோஸ்விக் said...

தல... ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் உன் பக்கம் இப்பதான் வந்தேன். வந்துடனே நீ கேட்டிருக்கதுல.. புரிகிறது எனும் பதிலுக்கு என் ஓட்டுகள்...அளித்துவிட்டேன்.

நான் உம் தளத்தை வாசிப்பது டெக்னிகல் விஷயங்களுக்கு மட்டுமல்ல... இதில் வரும் சென்னை தமிழுக்காகவும் தான். புரியாத வார்த்தைகளை புரிந்துகொள்ள முயலுவதற்கும் தான்.

இந்த தமிழில் நீங்கள் எழுதுவது தான் வித்தியாசம். அதை நான் ரசிக்கிறேன். தொடர்ந்து எழுதினால் நான் மகிழ்வேன்.

இதற்கு முந்தைய நான் படிக்காத உங்கள் பதிவுகளை வாசித்தேன். அதில் ஏதோ ஒரு நண்பர் "உண்மை விரும்பி" என்ற பெயரில் என் வலைத்தள முகவரியை கொடுத்திருந்தார். அவர் என் நண்பனா இல்லை எனை விரும்பாதவரா தெரியவில்லை. ஆனால், அது நான் இல்லை. அவரும் எதுவும் தவறாக சொல்லவில்லை. இருந்தாலும், அப்படி அவர் என் முகவையை பயன்படுத்தியது தவறு. நான் வருந்துகிறேன்.

அதே பதிவின் பின்னூட்டங்களுக்கான தங்களின் பதில் மூலம் நான் என் தளம் பயன்படுத்தப் பட்டிருப்பதை அறிந்து கொண்டேன்.

-ஐ நீங்கள் தடை செய்யவில்லையெனில் இது போன்ற தவறுகள் இன்னும் நடக்க வாய்ப்புண்டு.

நான் அனைத்து இடங்களிலும், எனது உண்மையான முகத்துடன் தான் பின்னூட்டம் இடுவேன். பிடிக்கவில்லையெனில் ஏதும் பின்னூட்டமிடாமல் வந்துவிடுவேன்.

தங்களின் புரிதலுக்கு நன்றி. :-)

இதையெல்லாம் சென்னை தமிழில் எழுத ரொம்ப நேரம் ஆகும் என்று இவ்வாறு எழுதுகிறேன்.

டவுசர் பாண்டி said...

தங்களின் புரிதலுக்காக... - ரோஸ்விக். :-)

ரோஸ்விக் said...

பெயர்/URL & பெயரில்லா option--ஐ நீங்கள் தடை செய்யவில்லையெனில் இது போன்ற தவறுகள் இன்னும் நடக்க வாய்ப்புண்டு.

டவுசர் பாண்டி said...

//புரிகிறது எனும் பதிலுக்கு என் ஓட்டுகள்...அளித்துவிட்டேன்.//-ரோஸ்விக் கூறியது.

வாங்க தல !! இத நீங்க சொல்லி தான் நானு தெரிஞ்சிக்கனுமா தல !! இந்த பாஷைல எழுத , எனுக்கு ஊக்கம் கொடுக்குற தோஸ்துங்கல்ல நீங்களும் ஒர்த்தர் தல !! அது எனுக்கு தெரியும் .

//அதில் ஏதோ ஒரு நண்பர் "உண்மை விரும்பி" என்ற பெயரில் என் வலைத்தள முகவரியை கொடுத்திருந்தார்.//

அப்படியா ? அது உண்மையில் , எனக்கு தெரியாது தல !!

//அவரும் எதுவும் தவறாக சொல்லவில்லை.//

ஆமாம் , !! அப்படியெல்லாம் சொல்லபடாது என்று தான் சொல்லி கீராரு தல !!

//அப்படி அவர் என் முகவையை பயன்படுத்தியது தவறு. //

உண்மை தான் , அவருடைய தவறு .

//நான் வருந்துகிறேன்//

இதுக்கு போய், நீங்க ஏன் தல , வருத்தப் படுறீங்க ?

சில பேர் இது போல இருக்காங்க ! ! இன்னு நாம தெரிஞ்சிக்க வேண்டியது தான் !!

//பெயர்/URL & பெயரில்லா option--ஐ நீங்கள் தடை செய்யவில்லையெனில் இது போன்ற தவறுகள் இன்னும் நடக்க வாய்ப்புண்டு.//

யாரும் கருத்துரை இடலாம் , அப்படீன்னு வெச்சதுக்கு காரணம் , அவங்களுக்கு தோணுன கருத்த சொல்றதுக்கு , நீ இதுல கீரீயா ? அதுல கீரீயா ? இன்னு கேட்டு டார்ச்சர் பண்றது எனுக்கு புடிக்காது தல !!
( இதை இப்படி பயன் படுத்துவாங்கோ இன்னு நான் நினைக்கல )

நீங்க மாடலுக்கு போட்டு இருக்கீங்களே , அதுல நீங்க பிளாக்கர் ஆ , இல்லையா இன்னு ஹைலைட் பண்ணி இருக்கும் , என்ன தான் நீங்க எனனோட url குத்து பேரு குத்தாலும் , ஹைலைட் ஆவாது . அதுனால , இதை மாற்ற வேண்டுமா ? என ரோசன பண்றேன் . மேலும் மூட்டை பூச்சிக்கி பேந்துகுனு ..... இன்றா மேரி !!

நீங்க உண்மை விரும்பி தானே பாத்தீங்க ? உண்மை விளம்பி இன்னா சொல்றாரு !! இன்னு பாத்தீங்களா ? எனுக்கு கோவமே , இன்னான்னா உம்பேர சொல்ட்டு திட்டு , நான் கேட்டுக்கறேன் , ஆனா பேரே சொல்லாம , இன்னாவோ மொட்ட கடுதாசி மேரி போட்டா தான் கோவம் வருது தல ! மொதல்ல அவர கூட நான் திட்டிட்டேன் , ( பேர் சொல்லாத கோவம் தான் )
அப்பால , அதுக்கு அடுத்த பதிவுல அத பத்தி சொல்லி இருக்கேன்
பாருங்க !! சில பேர் சில எடத்துல இருந்து நம்ப பிளாக் பாத்து கருத்து போடுவாங்கோ !! அதுனால sign in ஆக முடியாத இருக்கும் , ஆனா - பேர் மட்டும் போடுவாங்கோ , நான் அது மேரி தான் நெனச்சேன் ,

இவ்வளவு நேரம் நம்பள டைப் பண்ண வெச்ச அந்த உண்மை விரும்பி நல்லா இருக்கட்டும் . என்றும் அன்புடன் டவுசர் பாண்டி .

ரோஸ்விக் said...

உண்மை தான் தல... சில பொதுவான வாசகர்கள் பின்னூட்டமிடுவதற்கு இந்த பெயரில்லா வசதி பயன்படும். ஆனா, பெரும்பாலும் திட்டுறவந்தான் இதை பயன்படுத்துறாங்க...

அந்த உண்மை விளம்பியை நானும் படிச்சேன்... லூஸ்ல விடு மாமு... :-))

உம்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல... நானும் சோக்காளி தான்... குஜாலா இருக்கலாம் டவுசரு...

நம்ம கூட்டளிகளைஎல்லாம் பாரு.... இன்னாமா கலாய்க்கிராங்கன்னு .... இவங்களை இதுவரை நான் சந்திச்சது கூட இல்ல... :-))

http://pattapatti.blogspot.com

<a href="http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_04.html>http://rettaivals.blogspot.com</a>

பத்மா said...

very good

டவுசர் பாண்டி said...

//very good//-padma கூறியது,

ரொம்பவே டாங்க்ஸ் சகோதரி !!

ஆர்வா said...

தலைவா.. கலக்கலா இருக்கு உங்க பதிவுகள்

டவுசர் பாண்டி said...

//தலைவா.. கலக்கலா இருக்கு உங்க பதிவுகள்//-கவிதை காதலன் கூறியது.

யப்பா !! பேரே சோக்கா கீது தலீவரே !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

வரதராஜலு .பூ said...

என்னோட பிளாகுல சேத்தாச்சி, ரொம்ப தேங்க்ஸ் வாத்யாரே

http://varadaradj.blogspot.com

prabhadamu said...

என்னுடைய பிளக்கிலும் இதனை சேர்த்தாகி விட்டது நன்றி நண்பா.

இந்த சிம்பில் இல்லாமா சேர்க்க முடியாதா நண்பா.( HTML சிம்பில் இல்லாம சேர்க்க முடியாதா )


என் பிளக்கு

http://azhkadalkalangiyam.blogspot.com/

யவனராணி said...

வாத்யார
நம்ம ப்ளாக்ல இது வேல செய்ய மாட்டேங்குதே...

gadjetக்கு அப்பால வர பொட்டியில எங்கே க்ளிக் பண்ணி சேக்கரதுனு சொன்னா நல்லாருக்கும்பா...

நா textlல கிளிக் பண்ணம்பா

Eelam said...

கலக்கறீங்கள் ரவுசர் பாண்டி. பிளாகுல சேத்தாச்சி, ரொம்ப தேங்க்ஸ் வாத்யாரே

Jaleela Kamal said...

பாண்டி நன்னாத்தே,
என்ன காலை வணக்கம் மாலை வணக்கம் சொல்லி கொடுத்துட்டு அப்ப்படியே எஸ்கேப் ஆகியாச்சு.

நேரம் கிடைக்கும் போது என் பதிவில் ஒரு அவார்டு குட்துக்கிறேன் வந்து பெற்று கொள்ளவும்.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh