பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

காணாத போன பாண்டி வன்ட்டேன்பா !!

· 47 கருத்துகள்

உஸ்ஸ் யப்பா !! அல்லா தோஸ்தும் , 
இந்த பாண்டிக்கு 

மன்னாப்பு குட்துடுங்கோ !! தலீவா !! 

பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , 


சொல்லிக்காம அம்பேலு உட்டவன் தான் , இப்போ ,


மறு படி வந்துக் கீரேன் , அக்காங் !! கிட்டத் தட்ட 


மூணு மாசம் , ஆவுது , 


ஸ்கிரீனு தல கீய நாட்டிக்கிட்டா - இன்னா பண்றது ?

· 65 கருத்துகள்

வன்கம்பா !! டவுசர் பாண்டியோட வன்கம் !! 


போன பதிவுக்கு ஆதரவு குட்த அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ் பா !! 

இன்னைக்கி , ஒரு சிம்பிலு மேட்டரு தான் பாக்க போறோம் !! 


அதாவது நம்ப வொர்க் ( ? ) பண்ணும் போது , சில சமயம் , 


அப்பிடியே அல்லேக்கா ,இந்த பொட்டில கீரது , பல்டி அட்சிடும் 


பா !! பிரிலியா ? 

அதாம்பா , இஸ்கிரீனு தல கீய நாட்டிக்கும் , அதுக்கு இன்னா பண்றது ? 


ரொம்ப சிம்பிலு , ctrl +Alt  , ரெண்டுத்தையும் அமிக்கிகீனு , இந்த ஏரோ கீ ,


கீது பாரு , மேல கீய இன்னு அதுல கீய கீரத அமுக்குனா , செரியா பூடும் ,


இது வெரிக்கும் யாருக்குனா , இது மேரி ஆய் கீதா ? இல்லன்னா , இனி 


மேட்டு ஆவும் , நம்ப ஊட்டுல கீர பசங்க கேம்ஸ் ஆடும் போது இது மேரி 


ஆவும் தல , வர்ட்டா !! இந்த பதிவுல இருந்து , சில தகவல் பலகை , இன்னு ஒரு 


மேட்டரு போடுறேன் , புட்ச்சா சொல்லுங்க , தொடர்ந்து போடலாம் ,


புடிக்கலன்னாலும் சொல்லுங்க , உடனே நிர்திடலாம் . தகவல் பலகை .
இசை மேதை பீத்தோவனுக்கு ,  காது கேட்காது !! 

நம்ப பித்தன் சொல்றாரே இன்னு , டாஸ்மாக் போய் 
வந்தா ? நெலம இது மேரியா ஆவணும் ? 
நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh