பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

என்னைக்கி, இன்னா வேல கீது ? இன்னு - மெயில் வர வைக்க .

·

ரொம்ப பீலிங்கா கீதுபா !! இன்னா மேட்டருன்னா, நம்ப 
தோஸ்த்து ஒர்த்தர்க்கு கல்யாணம் தலீவரே !! எனுக்கும்,  மட்ச்சீ  
நோட்டிசு அல்லாம் ,குட்தாறு , கண்டிப்பா வந்துடு டவுசரு இன்னு 
சொல்லிட்டு போனாரு , நோட்டிசு வாங்கி ( அதாம்பா பத்திரிக ) 
பட்சி ( ? ) பாத்தா , ஒரு மாசம் கைச்சி தேதி கீது !! செரி இண்ட்டு ,


நம்ப வேலைய பாத்துக்கீனு ( ஒன்னியும் இல்ல சொம்மா !! நானும் 

ரவுடி தான் கத !! ) இன்னாவோ !! நான்தான் பில்கேட்சுக்கு ஐடியா ?

குடுக்குறா மேரி !! இந்த பொட்டியவே நோண்டிக் கீனு , மெய்லு

பாத்துக் கீனு !! இர்ன்துட்டு தோஸ்து கல்யாணத்த கோட்ட,

உட்டுட்டேம்பா !! ஒரே பீலிங்கா பூட்சிபா !! இதுக்கு இன்னா 

பண்ணலாம் , இன்னு ரோசன பண்ணி நானும் பில்கேட்சு 

கணக்கா !! ரோசன பன்னேம்பா !! ( நம்ப மாட்டியே ? ) 

அப்ப, தான் இதுக்கு நம்ப கூகிள் அண்ணாத்தையே தேவலாம் ,

இன்னு பட்டுது தல , எப்பிடியும் மெயில் செக் பண்ணப் போறோம் !! 

பின்ன நாமள்லாம் யாரு ? அப்பிடியே !! கூகிள் அண்ணாத்த காதுல இது மேரி இது மேரி 

எனுக்கு , இன்னைக்கி கல்யாணத்துக்கு போவனும் , இன்னைக்கி 

குளிக்கணும் இன்னு என்ட்ரி போட்டு உட்டுட்டாக்கா !! அந்த 

மன்சன் கரீக்ட்டா நம்பளுக்கு மெயில் பண்ணி சொல்லிடுவாரு ,

தல , பாத்தியா அண்ணன் தம்பி கூட இது மேரி குளிடா , போடா !! 

இன்னு சொல்ல மாட்டாம்பா !! 


இது எப்பிடீன்னு பாரு தல !! ஏற்கனவே தெர்ந்ஜவங்கோ, 

தாண்டிப் பூடுங்கோ !! உங்க gmail ஓபன் பண்ணிட்டு , google .co .in 


ஹோம் பேஜ் போங்க தல !! அதுல more இன்னு இருக்குறதுல , போய் 
calendarஇன்னு கீரத , கிளிக் பண்ணுங்க அப்பால , ரைட்டு சைடுல 
இந்த மாசத்துக்கு காலண்டர் இருக்கும் , அதுல இன்னா தேதி ஒனுமோ 
அத கிளிக் பண்ணா !!  உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் 
ஆவும் தல கிளிக் பண்ணி , மேட்டர சொல்ட்டு அப்பீட்டு உட்டுக்கோ !! நீ சொன்னா மேரி ,கரீக்டா !! மெயில் வந்து உனுக்கு நோட்டீசு  குட்துடும் பா !! 

அப்போ நீயும் உசாரா ஆயிக்கலாம் !! கவருமென்ட்டு லீவு என்னிக்கி இன்னு கூட தெரிஞ்சிக்கலாம் !! 

இதுக்கு month இன்றத கிளிக் பண்ணி பாருங்க லீவு , நாள்  தெரியும் !

இதுல உன்னும் நெரியோ மேட்டரு ,கீது !! தல , யூசு பண்ணி பாருங்க !!  23 கருத்துகள்:

malarvizhi said...

தகவலுக்கு நன்றி தலீவா !

டவுசர் பாண்டி said...

//தகவலுக்கு நன்றி தலீவா//-malarvizhi கூறியது.

உங்க வருகைக்கி டாங்க்ஸ் சகோதரி !!

ஜெய்லானி said...

எனக்கும் ஒருமுறை அதுபோல ஆனது. தகவலுக்கு நன்றி பாஸ்.

ப.கந்தசாமி said...

அதெப்டி தோஸ்த் ஈமேரி புச்சுபுச்சா உன்கு மேட்டரு சிக்குது.

சைவகொத்துப்பரோட்டா said...

தலிவா, எப்புடி இந்த மேரி புச்சு புச்சா மேட்டர் புடிக்கிறீங்க, டாங்க்ஸ் .

Paleo God said...

அப்படியே துட்டு எப்ப வோனுமோ அப்ப அனுப்பரதுக்கு எதுனா இருக்கா தோஸ்த்து ..:)

சொம்மா ...சொன்னேன்,

டாங்க்ஸ் மா.:)

வேலன். said...

உன் காலண்டரில் 2010 பிப்ரவரி 15 திங்கட்கிழமை மத்தியானம் 2-3 குளிக்கனும் போட்டுக்கீது. ஞாபகமா மறந்திடப்போறே....போய் குளி....வரட்டா... வாழ்க வளமுடன் வேலன்.

டவுசர் பாண்டி said...

//அதெப்டி தோஸ்த் ஈமேரி புச்சுபுச்சா உன்கு மேட்டரு சிக்குது.//- Dr.P.Kandaswamy கூறியது.

வாங்க !! அண்ணாத்தே !! நம்பளுக்கு தெரியாத விசியம் எவ்ளவோ கீது தல !! எதுனா ஒன்ன தேடும் போது, தான் இன்னொன்னு கெடைக்கும் !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//தலிவா, எப்புடி இந்த மேரி புச்சு புச்சா மேட்டர் புடிக்கிறீங்க,//-சைவகொத்துப்பரோட்டா,

அண்ணாத்தைக்கி சொன்னது ரிபீட்டு !!

டவுசர் பாண்டி said...

//சொம்மா ...சொன்னேன்,//-ஷங்கர்.

ஹா ஹா , இதுல இன்னா கீது தோஸ்து , கருத்துக்கு டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//திங்கட்கிழமை மத்தியானம் 2-3 குளிக்கனும் மறந்திடப்போறே....போய் குளி.//-வேலன். கூறியது,

இன்னாடா இது !! நானு ஒரு மெயில் தானே வரும் இன்னு பாத்தேன் , எனுக்கு மட்டும் கர்த்துக் கூட ஞாபகப் பட்த்தி உட்தே, நல்லா வேல
செய்து பா !! google

டவுசர் பாண்டி said...

//எனக்கும் ஒருமுறை அதுபோல ஆனது. தகவலுக்கு நன்றி பாஸ்.//-ஜெய்லானி,


வயக்கமா எல்லாருக்கும் நடக்கர்தது தான் தல !! இனிமேட்டு , நடக்காத பாத்துக்கலாம் , இன்னா ஒன்னு மெயில் படிக்க மறக்காத இர்க்கனும் பா !! அதான் மேட்டரு !! வர்கிக்கி டாங்க்ஸ் தல !

Chitra said...

எப்படிங்க? இந்தியாவில் இன்னும் "Google Calendar" popular ஆகலியா?

Unknown said...

I expect ur posting daily. So do it for us.
http://sakthispeaks.blogspot.com

Unknown said...

Neega pondy ya? I mean pondicherry alla?

டவுசர் பாண்டி said...

//இந்தியாவில் இன்னும் "Google Calendar" popular ஆகலியா?//-Chitra கூறியது.

சில பேருக்கு தெரியாம , இருக்கும் அத வெச்சி இந்தியால யாருக்கும் தெரில !! இன்னு முடிவு பண்ணிட முடியாது !! சகோதரி , உங்க வருகைக்கி டாங்க்ஸ்.

டவுசர் பாண்டி said...

//Neega pondy ya? I mean pondicherry alla?//-sakthi கூறியது.

வாங்க தலீவா !! நானு பாண்டிச்சேரி இல்ல தல , பாண்டி from சேரி , உங்க வருகைக்கி டாங்க்ஸ் தல !!

Mohan said...

தல! கொஞ்சம் வேலையா வெளிய போனதால லேட்டாப் போச்சுப்பா! ஜோரான மேட்டரக் குட்ததுக்கு டான்க்சுப்பா!

டவுசர் பாண்டி said...

பரவாயில்ல தல !! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்ததுக்கு டாங்க்ஸ் தல

பொன் மாலை பொழுது said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது said...

இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லா டவுசர்?
தேதிய மாத காலண்டரில் சுழித்து வைத்து விட்டால் தினம் தினம் பார்த்து பார்த்து குறிப்பிட்ட நாளில் தயாராகிவிடலாமே ? இப்படி தொட்டதெற்கெல்லாம் கம்ப்யூட்டர் ன்னு போய்கிட்டே இருந்தா ஊரு முழுக்க குட்டி குட்டியா தேர்களும் ஆட்டோ ரிச்ஷாகளும் தான் மோதிக்கொண்டு நிற்கும்.
அடங்கவே மாட்டீங்களா புள்ளைகளா!!??

Menaga Sathia said...

தகவலுக்கு நன்றி அண்ணாத்தே!!

டவுசர் பாண்டி said...

லேட்டா வந்ததும் இல்லாம , என்ன வேற திட்டிக் கீனு கீரியா ? இரு கவுன்சிக்கறேன் !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh