பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

சண்டேன்னா மூணு - டவுசர் பாண்டி கவித .

·அன்பு தோஸ்த்து , சைவக் கொத்து பரோட்டாவின் விருப்பத்திற்காகவும் 

ஹாலிவுட் பாலா - மற்றும் யூர்கன் , & கக்கு இவங்கோ !!    ஏரியா கவித 

கேட்டதுக்காவும் , மற்றும் நமது ரசிகர்களுக்காகவும் ,

( சொம்மா ஒரு பந்தா தான் , கண்டுக்காத ) 

இந்த கவித( அடிக்காத தல )  டவுசர் பாண்டியால் எழதப் பட்டது . 


ண்டேன்னா ரெண்டு ,இன்னு தினமலர் பேப்பரு மட்டும் தான் ,

வரணுமா , நம்ப கவித ( ? ) வரக் கூடாதா ? 

அதுக்காக சண்டே வெரிக்கும் வைட்டு பண்ண முடியுமா ? 


நம்ப தோஸ்துங்கோ !! திட்ட மாட்டாங்களா ? 

இன்னு , ரோசன பண்ணி , இப்பவே , இந்த ரெண்டும் போடறேன் தல !  நம்ப ஏரியா கவித ( ? ) 


நாலனாக்கு பூவு வாங்கி 

நாலு பேருக்கு வெச்சேன் ,

அதுல , 

வண்டைப் போல நீயும் 

வந்து வாட்டிட்டியே - என் 

நெஞ்ச !! 


காள மாடு கயனித் தண்ணி 

குடிக்கறத கண்டு 

காண்டு ஆயிப் போனேனே 

சின்ன இளம் சிட்டு .


ஆக்கி வெச்ச மீனு கொயம்பு மேரி ,

நீ அல்வாவாட்டமா கீரே,

எடக்கி எட போட்டு பாத்து 

மேட்டர தான் சொல்றேன் 


ஊரு கண்ணு பட்டிடும் 

உள்ள வாடி கண்ணு 

உ அயக்கப் பாத்து 

மயங்கினேனே - நானு 

ஒரு மக்கு  !! 

--------------------------------------------------------

விடியல் .   

விடிகின்ற விடியலை ,

விழித்துப் பார்ப்பதற்குள், 

இறந்து விட்டேன் .

நான் விடியலை - வெறுப்பவன் . 

-----------------------------------------------------------------

இது போனஸ் ஹைக்கூ ( அப்பிடியான்னு தெர்ல ) நீங்க தான் 


சொல்லணும் .

வித்திர்த்துப் போட்டது உறக்கம் 

கனவில் ,

உன்பின்னே - யாரு ?தல ( இது மேரி சொல்றதால நானு அஜித் ரசிகரா இன்னு நெரியோ 

பேர் கேக்குறாங்கோ , கண்டிப்பா இல்ல , அதுக்காக அவர புடிக்காது 

இன்னு இல்ல , இது எங்க ஏரியால சொல்ற ஒரு வார்த்த ஒரு சொல் 

எப்பிடி ஒன்னாலும் வெச்சிக்கலாம் )


உங்க கருத்த ரவ சொல்லுங்க தல !! 

ஒட்டு நீங்க போடுவீங்க இன்னு தெரியும் !! இருந்தாலும் கேக்காம ,

இருந்தா ? அது நால்லாவா இருக்கும் , அதனால உங்க 


பொன்னான ஓட்டை , டவுசர் சின்னத்துல நிக்கற  ( அல் ) உக்காந்து 


இருக்கும் ,பாண்டிக்கு போட்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன் பா !! 

34 கருத்துகள்:

ஜெய்லானி said...

///நாலனாக்கு பூவு வாங்கி

நாலு பேருக்கு வெச்சேன்////

அரளி பூ தான் நாலனாக்கு நாலு வரும் ந்ல்லா பாரு தல அது கெய்வியா இருக்க போவுது.

Chitra said...

நீங்க கவிதை எழுத வில்லை என்றாலும், எங்கள் வோட்டும் ஆதரவும் உங்களுக்கு உண்டுங்கோ.............
கவுஜ, நல்லாத்தான் இருந்துச்சு.

டவுசர் பாண்டி said...

//அரளி பூ தான் நாலனாக்கு நாலு வரும் ந்ல்லா பாரு தல அது கெய்வியா இருக்க போவுது//-ஜெய்லானி கூறியது,

ஹா ஹா ஹா , பின்ன நம்ப
மூஞ்சிக்கி , ஐசுவரியா ராயா , கெடைக்கும் , இன்னா தல !! ஒரு எஸ்டிமேசனு வாணாமா !! வருகைக்கி டாங்க்ஸ் !! தல !!

டவுசர் பாண்டி said...

Chitra கூறியது...
//நீங்க கவிதை எழுத வில்லை என்றாலும்,//

ஐயையோ !! நல்லா இல்லியா ? நம்பளுக்கு வர வெரிக்கும் தானே எழத முடியும் ?

//எங்கள் வோட்டும் ஆதரவும் உங்களுக்கு உண்டுங்கோ..//

யப்பா !! அது போதும் , அது
போதும் !!

//கவுஜ, நல்லாத்தான் இருந்துச்சு//

உஸ் , யப்பாடா !! இப்ப தான் மூச்சே வந்துது , வருகைக்கி டாங்க்ஸ் பா !!

சைவகொத்துப்பரோட்டா said...

தொண்டனின் வேண்டுகோளை ஏற்று கவுஜ வடித்த தங்க தலைக்கு டாங்க்ஸ். நம்ம ஏரியாவும்,
விடியலும் சோக்காகீது வாஜாரே.

ப.கந்தசாமி said...

தோஸ்த்து,
இன்மேக்கொண்டு பயாஸ்கோப் விமர்செனமும் கேவி பதிலும் போட்டுக்கினா நம்மொ பதிவு ஸூப்பர் பதிவாகிடும்ப்பா.

ப.கந்தசாமி said...

கவிதெ நன்னாத்தான் இருக்குது தோஸ்த், நானும் போடலாம்னு பாக்கறேன்.

டவுசர் பாண்டி said...

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
//தொண்டனின் வேண்டுகோளை ஏற்று கவுஜ வடித்த தங்க தலைக்கு டாங்க்ஸ்//

வா தல !! இன்னா , புட்சிக்கீதா ? கருத்துக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

Dr.P.Kandaswamy கூறியது...

//தோஸ்த்து,
இன்மேக்கொண்டு பயாஸ்கோப் விமர்செனமும் கேவி பதிலும் போட்டுக்கினா நம்மொ பதிவு ஸூப்பர் பதிவாகிடும்ப்பா.//

வணக்கம் , அண்ணாத்தே !! அதே மேரி செஞ்சிடுவோம் , உங்க கருத்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

SUFFIX said...

நெய்னா நீ ஏம்ப்பா கவுஜ ஏரியாவுக்கெள்ளாம் போற, ஒரே பீலிங்க்ஸா கீதுபா, பேட்டை பேர பேஜாரா ஆக்கிடுவே போல, சரி சரி இன்னொரு தபா தெளிவா கரீட்டா கவுதணும், இல்லாங்காட்டீ....

Prathap Kumar S. said...

தல எப்படி எப்படி இதெல்லாம்...?

அல்லாரும் கவுஜை எழ்தீறீங்கோ எனக்கும் கத்துக்குடு தல...

Mohan said...

தல! நீங்க கவிதலையும் கலக்குறீங்க!!

MUTHU said...

அண்ணாதே எப்போ எப்பூடி இப்பூடி

டவுசர் பாண்டி said...

SUFFIX கூறியது...
//பேட்டை பேர பேஜாரா ஆக்கிடுவே போல, சரி சரி இன்னொரு தபா தெளிவா கரீட்டா கவுதணும், இல்லாங்காட்டீ....//

ஐயையோ !! தலீவா !! என்னால நம்ப குப்பத்துக்கு எந்த கெட்ட பேரும் வாராத பாத்துக்கறேன் பா !! எதுனா தப்பா இருந்தாக்கா மன்னாப்பு குட்துடு தல !!

இனிமேட்டு செரியா கவிஜ்கறேன் , டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

நாஞ்சில் பிரதாப் கூறியது...

//அல்லாரும் கவுஜை எழ்தீறீங்கோ எனக்கும் கத்துக்குடு தல...//

சோக்கு ஆளு தான் போ !! கவித்தைக்கே , கவிதையா எப்புடீ !!

டவுசர் பாண்டி said...

Mohan கூறியது...
//தல! நீங்க கவிதலையும் கலக்குறீங்க!//

அட , தலீவரு !! இன்னா தல , எப்பவும் இன்னாவோ கொயப்பமாவே எழ்தரே இன்னு கம்பிளைண்டு
அதாம்பா !! ஆனா இதுவும் ஒரு மேரி
தான் கீது !!

டவுசர் பாண்டி said...

Muthu கூறியது...
//அண்ணாதே எப்போ எப்பூடி இப்பூடி//

அட அத ஏன் தல கேக்குரீங்கோ !! இதுக்கு தான் இதே மேரி அதே மேரி எழ்தக் கூடாது இன்னு சொல்றது !! பிரியுது இன்னு பிரியாத மேரி நீங்க சொன்னாலும் , பிரியாத அது கரீக்டா பிரிஞ்சிடும் !! டாங்க்ஸ் தல !!

Paleo God said...

இன்னாதிது உன்ன நம்பி நான் கட போட்டா நீ என் கட எதிர்க்கவே கல்லா கட்டறியே தோஸ்த்து. உன்ன சொல்லி தப்பில்ல அந்த அமெரிக்கா பிஸ்தா பண்ற வேல,,கீட்டும், கீட்டும் மொத்தமா ரிவிட் வேக்கிறேன்,,,:)))

ஏதோ நீயும் நானும் பாகாயம் பேட்டை, சரி உடு நான் கண்டுக்கல இன்னா..

ஆனா வாத்யார் பாட்டு மேரி சூப்பரா கீது.. ::)

Menaga Sathia said...

கவுஜ நல்லாகீது அண்ணாத்தே...

S Maharajan said...

"ஆக்கி வெச்ச மீனு கொயம்பு மேரி ,
நீ அல்வாவாட்டமா கீரே,
எடக்கி எட போட்டு பாத்து
மேட்டர தான் சொல்றேன்"

மெய்யாலுமே தூக்குகினிய
சூப்பரா கீது!

அண்ணாமலையான் said...

சூப்பர்

டவுசர் பாண்டி said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...
//இன்னாதிது உன்ன நம்பி நான் கட போட்டா நீ என் கட எதிர்க்கவே கல்லா கட்டறியே தோஸ்த்து.//

ஐயையோ !! மன்னாப்பு குட்துடு தல !! தெரியாம ஏரியா மாத்தி பூட்டேம்பா !! நேத்து உட்ட ஓர ஒன்னியும் செரியில்லபா !! அதான் கண்டுக்காத ,
அப்பால , டான்குசு பா !!

டவுசர் பாண்டி said...

Mrs.Menagasathia கூறியது...
//கவுஜ நல்லாகீது அண்ணாத்தே//

வருகைக்கி அப்பால கருத்துக்கு டாங்க்ஸ் சகோதரி !!

டவுசர் பாண்டி said...

S Maharajan கூறியது...
//மெய்யாலுமே தூக்குகினிய
சூப்பரா கீது!//

ஆமாம் , தோஸ்த்து , இன்னாப் பண்றது ம்ம்ம்மம்மம்ம்ம்ம் !! அக்காங் !!
கர்த்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

அண்ணாமலையான் கூறியது...
// சூப்பர் //

வருகைக்கி டாங்க்ஸ் தல !!

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

பொன் மாலை பொழுது said...

அப்பா சாமி ஆள வுடு. தப்புதான் தப்புதான், மன்னாப்பு வாங்கறோம்.சாமி. இன்னாடா நம்ம ஆளு இப்டி ஒரே மேரிக்கி இந்த பொட்டிய புட்சிகினு எய்திகினுகீதே அத்த கொஞ்சம் மாத்த தாவல்ல அப்டீன்னு சொல்லிகினு " கொஞ்சம் வெரைட்டி குட்டு கண்ணு " அப்டீன்னு கேட்டுகினா இப்டி நம்ல மேர்சலாக்கிட்டிய .நீயி இந்த பொட்டிய பத்தியே எதிகினு கட ராசா. மன்னாப்பு மன்னாப்பு. ஆளவுடு .

டவுசர் பாண்டி said...

கமலேஷ் கூறியது...
//ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...//

ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
//நீயி இந்த பொட்டிய பத்தியே எதிகினு கட ராசா. மன்னாப்பு மன்னாப்பு. ஆளவுடு //


அய்யே !! இதுக்கே மெர்சலு ஆனா எப்பிடி ? உன்னும் எவ்ளோ கீது !! ஒரு வயி பண்ணத் தாவல ? அக்காங் !!

Jaleela Kamal said...

பதிவு திருட்டு என்று ஒரு பதிவு போட்டேனே இதை தான் என்ன செய்ய இன்னும் என் பதிவுகள் அங்கு 12.3.10 அன்றும் எடுத்து போட்டுஇருக்காஙக் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படி ஒரு மெசேஜ் பிலாக் நபர்களுக்காவது தெரிய படுத்தாம் என்று.

டவுசர் பாண்டி said...

கவலைப் படாதீங்கோ !! தங்கச்சி , இதுக்கு ஒரு வயி கீது !! user name paasword குட்தா தான் , உங்க ப்ளாக் உள்ளே போறா மேரி பண்ணலாம் , ஆனா

அதுல கீர சிக்கல் இன்னான்னா !! login ஆவாத யாரும் படிக்க முடியாது , அதுவும் இல்லாம login ஆய்ட்டு திருடுனா இன்னா பண்றது ?

உங்க பாதைல தொடர்ந்து போங்க , இதுக்கெல்லாம் , பாத்தா , முடியாது .( ஆறுதல் சொல்றது ஈஸி , ஆனா பாதிக்கப் பட்டவங்களுக்கு தான் அந்த வலி தெரியும் , இது நானு அனுபவப் பூர்வமா சொல்றது )

நானு செக் பண்ணிட்டு சொல்றேன் !! ( login )

திவ்யாஹரி said...

//''அசல் இடுகையை காண்பி..
அசல் இடுகையை மறை''//

"தல" ரசிகர்ன்னு நல்லா தெரியுதுப்பா.. கவிதை நல்லா இருக்கு பாண்டி..

Jaleela Kamal said...

ஆமாம் நான் போன வருடம் கொடுத்த பதிவெல்லாம் இபப் எடுத்து போட்டு இருக்காங்க , கீழே என் பெயர் போட்டு இருந்தாலும் பராவாயில்லை. சரின்னு விடலாம். அதான் இப்படி போட்டு மனச தேத்திக்கிட்டேன்.

இதற்கான உங்கள் டிப்ஸை விரைவில் எதிர் பார்க்கிறேன்.

ரோஸ்விக் said...

நல்லாத்தான் நயினா எழ்துற... ச்சூபராக்கீது...
புச்சு புச்சா கவுஜையுல வார்த்த வுட்டுக்குனே கீரே... அதுக்கோசமே, நான் பட்ச்சிட்டு இருப்பேன் டவுசரு... :-))

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh