பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப பிளாக்குல தனி பேஜ் போடுவது எப்படி?

·

அல்லா தோஸ்த்துக்கும் , டவசர் பாண்டியோட, வணக்கம் பா !!

நம்ப பிளாக்குல , நம்பளப் பத்தி , இன்னு கீர எடத்துல (profile )
ஒரு சில , விவரம் மட்டும் தான் குடுக்க முடியும் , இப்போ !! 
அதுக்காக ஒரு பேஜ் போட்டாக்கா , அது அடுத்த பேஜ் ,
போது பின்னாடி போயிடும் , செரி அத மட்டும் url எட்த்து ,
சைட்டுல போட்டாக்கா !! அதுல கருத்து அப்பால உன்னும்
சில மேடருங்கோ இருக்கும் , அதுக்கு ,

நாம தனியா சில பேஜ் போட்டு சில மிக்கியமான விசியம் ,
எல்லாம் சொல்லலாம் , அது எப்பிடி இன்னு பாக்கலாம் ,

மொதல்ல , டாஸ்போர்ட் , போங்க அப்புறம் இடுகைகளை 
திருத்து , போயிட்டு ஓபன் பண்ணுங்க , இது போல வரும் ,
                                                       (படத்தை பெரித்தாக்க கிளிக் பண்ணவும் )  இதுல பக்கத்தை உருவாக்கு , இன்னு இருக்குறத கிளிக் 
பண்ணினாக்கா !! இது போல ஓபன் ஆகும் ,அதுல பக்கத்தலைப்பு இன்னு இருக்குறதுல தலைப்பு குடுங்க ,
குத்துட்டு , இடுகைகை வெளியிடு குடுங்க ,

இன்னும் ஒரு பக்கம் ஒனும்னா !! மறு படி அதே மேரி போய்
புதிய பக்கம் போங்க !!   இதே மேரி பத்து பக்கம் கூட 
போடலாம் தலீவா !! 

இது உன்னும் சில எடத்துல யூசு ஆவும் , அதாவது 
நம்ப url லியே இருந்து , எடுக்க வேண்டிய சில 
விசியம் கீது ,அதாவது தனி விண்டோ வர இது மேரி ஒன்னு 
அவசியம் தேவ தல ,  அதப் பத்தி அப்பறம் சொல்றேன் !! 


தேவையானவங்கோ !! யூசு பண்ணி பாருங்க தல !! 
உங்க கருத்த ரவ சொல்லுங்க !! 


36 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

நெம்ப சுளுவாக்கீதுபா

நன்றிபா

செய்து பார்த்துட்டேன்...

எல் கே said...

சூப்பர் தலைவா ....

Chitra said...

Thank you very much.

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு தல, டாங்க்ஸ் :))

ஜெய்லானி said...

//எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! //

டாங்ஸ் வாஜாரே!!!

Mohan said...

நல்லாருக்கு தல!

Menaga Sathia said...

சூப்பர்ர்ர்!!

S Maharajan said...

நாசமா கீது மே

சசிகுமார் said...

உபயோகமான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

இன்னா பா..... ஆட்டோ
புச்சாகீதே வருமா??

ஆமா எனக்கு வெளங்காம தான் கேட்டிகினுகீரன், நீ இன்னா நைனா எப்ப பாத்தாலும் இந்த பொட்டிய பத்தியே ப்லிம் காம்சிகினுகீர ? போரடிக்கல ?? (எனக்கு அடிச்சிபோச்சே)அட மெய்யாலுமேதா.ப்லாகுன்ன வெரைட்டி வேணும் கண்ணு! நீன்னா வேற ப்ளாக்குகள் போயிபாரு தல. இந்தா பாரு ....நீ மட்டும் வெரைட்டி எழுதலைன்னா கண்டி அப்பால நானே அந்த
"புனே ஆட்டோ சர்வீஸ் " கதைய படத்தோட என் ப்ளாக்குல போட்டு உட்டுடுவேன் ஆக்காங்...

அம்மா தாயே தங்கச்சி மேனகா சத்யா இப்டி எல்லாத்துக்கும் "சூப்பராகீது சூப்பராகீது " இன்னு கமெண்ட்ஸ் உட்டு உட்டு இந்த டவுசர "மொக்கையா ' ஆக்கனுமாங்க?????

டவுசர் பாண்டி said...

நட்புடன் ஜமால் கூறியது...

//நெம்ப சுளுவாக்கீதுபா நன்றிபா
செய்து பார்த்துட்டேன்...//

இன்னா தல , நீங்க போய் நன்றி எல்லாம் சொல்லிக் கீனு !! இதுல உன்னொரு மேட்டரு கீது தல !! அத அப்பால சொல்றேன் . வருகைக்கி டாங்க்ஸ் . தல !!

டவுசர் பாண்டி said...

LK கூறியது...
//சூப்பர் தலைவா ..//

ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

Chitra கூறியது...
//Thank you very much.//

நீங்கலாம் இதுக்கு போய் டாங்க்ஸ் சொல்லலாமா !! உங்க வருகைக்கி + கர்த்துக்கு நா தான் டாங்க்ஸ் சொல்லணும் .

டவுசர் பாண்டி said...

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
//ரைட்டு தல, டாங்க்ஸ் :))//

ஜமால் வாஜாருக்கு சொன்னது தாம்பா ரிபீட்டு !!

டவுசர் பாண்டி said...

ஜெய்லானி கூறியது...
//எதாவது புரீரா மேரி எழ்து
தலீவா !! //

ஹா, ஹா ஹா .... நா சொல்றது தான் பிரியல இன்னு கூவராங்கோ !! அட்லீச்ட்டு நீங்க சொல்றதாவது எனுக்கு பிரியத் தாவலியா அதாம்பா !!

டவுசர் பாண்டி said...

Mohan கூறியது...
//நல்லாருக்கு தல!//

வாங்க தல !! கர்த்துக்கு டாங்க்ஸ் .

டவுசர் பாண்டி said...

Mrs.Menagasathia கூறியது...
//சூப்பர்ர்ர்!!//

டாங்க்ஸ் சகோதரி !! உங்க கர்த்துக்கு அப்பால வருகைக்கி .

டவுசர் பாண்டி said...

S Maharajan கூறியது...
//நாசமா கீது மே //

அய்யே !! இது இன்னா சப்ப மேட்டரு !! இதுல உன்னும் நெரியோ டகாட்டி வேல அல்லாம் காட்டலாம் பா ! அக்காங் !!

ஐயோ !! நம்ப மேரியே பேசுதுபா, நம்ப கொட்டாக்கு, வாயேன் ஒரு வாய் காப்பி தண்ணி குட்சிட்டு போவலாம் !!

டவுசர் பாண்டி said...

சசிகுமார் கூறியது...
//உபயோகமான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

உங்க வாழ்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
//இன்னா பா..... ஆட்டோ
புச்சாகீதே வருமா??

ஆமா எனக்கு வெளங்காம தான் கேட்டிகினுகீரன், நீ இன்னா நைனா எப்ப பாத்தாலும் இந்த பொட்டிய பத்தியே ப்லிம் காம்சிகினுகீர ? போரடிக்கல ?? (எனக்கு அடிச்சிபோச்சே)அட மெய்யாலுமேதா.ப்லாகுன்ன வெரைட்டி வேணும் கண்ணு! //

வன்டியா !! இரு இரு , இத்தினி நாளு எங்க போய் , மாட்டிக் கீனே ? அல்லேக் குட்துட்டு டாமா வேல காட்றியா

சுண்ட கஞ்சி குடிக்க வருவே இல்ல , அப்ப கவுன்சிக்கிறேன் , உனுக்கு போரடிக்குதா ? நம்புளுக்கும் வேற ரூட்டு தெரியும் கண்ணு !!

இரு டகால்ட்டியா , ஒரு பதிவு போடறேன் , அப்ப தெரியும் டவுசரு யாருன்னு !!! அக்காங் !!

Unknown said...

புதுசா edit pagesனு இருக்கே எப்படி யூஸ் பண்ணனும் என்று தெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு பார்த்து தெரிந்துக்கொண்டேன்.நன்றி..//தனி விண்டோ வர இது மேரி ஒன்னு அவசியம் தேவ தல , அதப் பத்தி அப்பறம் சொல்றேன் !! // அடுத்த பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்.. மீண்டும் உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் உங்களின் இந்த பதிவு நல்ல உபயோகம் நன்றி

டவுசர் பாண்டி said...

சிநேகிதி கூறியது...
//உங்கள் பதிவு பார்த்து தெரிந்துக்கொண்டேன்.நன்றி.//

வாங்க தங்கச்சி ! ! உங்க கர்துக்கு , ரொம்பவே டாங்க்ஸ் . எங்க கக்கு இன்னும் நெரியோ பேரு !!

இன்னா எப்பப் பாத்தாலும் பொட்டி பத்தியே போட்டுக் கீரே, இன்னு சவுண்டு குடுக்கர்தாலே ,

அத்த தபா , ஒரு கவித அப்பால இது மேரி மேட்டரு .இன்னா கரீக்டா !!

டவுசர் பாண்டி said...

hamaragana கூறியது...
//அன்புடன் நண்பருக்கு வணக்கம் உங்களின் இந்த பதிவு நல்ல உபயோகம் நன்றி//

உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி , இதில்

என் பங்கு ஒன்றுமே இல்லை , எது எது எங்கு இருக்கிறது என சொல்லும், ஒரு சாதாரண வேலை மட்டுமே நான் செய்கிறேன் , உங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
வாழ்க நலமுடன் .

மோகனகிருஷ்ணன் said...

தலீவா...

கலக்குரீங்க போங்க...

வாழ்த்துக்கள்...

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

Prathap Kumar S. said...

தல முன்னாடி முயற்சி பண்ணேன், நாம கொடுக்கற மெனுவுல லின்க் கொடுக்கறது எப்படித்தல,
உதாரணமா விமர்சனம்னு பேஜ் தலைப்பு கொடுத்தா அதுக்குள்ள விமர்சன பதிவுகளோட லின்க் எப்படி கொடுக்கறது...? ரொம்ப யோசிச்சு தலைவெடிச்சுப்போச்சு

யூர்கன் க்ருகியர் said...

கவிதைக்கு வெயிட்டிங்!

டவுசர் பாண்டி said...

நாஞ்சில் பிரதாப் கூறியது...
//விமர்சனம்னு பேஜ் தலைப்பு கொடுத்தா அதுக்குள்ள விமர்சன பதிவுகளோட லின்க் எப்படி கொடுக்கறது...//மச்சி மெயில் , பாக்கவும் , அம்சிட்டேன் அம்சிட்டேன் ..

டவுசர் பாண்டி said...

மோகனகிருஷ்ணன் கூறியது...
//தலீவா...
கலக்குரீங்க போங்க...
வாழ்த்துக்கள்..//

வாங்க !! தல எப்பிடி கீரீங்கோ !! பாத்தே நாள் ஆச்சி , எதோ நம்ப வண்டியும் ஓடிக் கீனு கீது !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

யூர்கன் க்ருகியர் கூறியது...

//கவிதைக்கு வெயிட்டிங்!//

எங்க தான் போய்டுவே தல !! ஆளையே காணோம் !! உனுக்கு இல்லாத கவிதையா !! நாளைக்கே போடுறேன் பா !! போன பதிவுக்கு
மின்னால ரெண்டு போட்டுக் கரேன் , அத பட்சிட்டீன்களா ? கருத்து சொலுங்க தல !! வருகைக்கி டாங்க்ஸ் தல !!

இனியன் பாலாஜி said...

ய்ப்பா கலீக்கிட்டப்பா.
ஒன்னை மாரி ஒரு ஆளத்தாம்பா இம்மாங்காலம் நான் தேடிக்கிண்ணு இருந்தேன்
கடவுள் எப்பிடி இட்டாந்து வுட்டுக்கினாரு பாத்தியா,
ரொம்ப தேங்க்ஸ் பா
. உங்க வூடு மட்டும் சென்னைலே
இருந்திச்சின்னு வெச்சிக்கோ ஒன்னை வுடுவே மாட்டேன்.
அது சரி அல்லாரும் டிஃப்ரண்ட் டிஃப்ரண்ட்டா போட்டொவெல்லாம்
எங்கேந்தோ புட்சாந்து நம்ம பக்கத்திலே போடறாங்களே . அடுத்த தவா
அத பத்தி கொஞ்சம் சொல்றியா ப்பா...... அட ஒன்னைத்தாம்பா
சொல்றியா...
என் பேரு இன்னாங்கிறியா?

அதாம்பா

இனியன் பாலாஜி

எல் கே said...

thala comment pottiku eppadi color thara nee

டவுசர் பாண்டி said...

//ய்ப்பா கலீக்கிட்டப்பா.
ஒன்னை மாரி ஒரு ஆளத்தாம்பா இம்மாங்காலம் நான் தேடிக்கிண்ணு இருந்தேன்//-இனியன் பாலாஜி கூறியது.

அண்ணாத்தே !! உங்க மொத வருகைக்கி டாங்க்ஸ் பா !! இது மேரி டிபரன்ட்டா போட்டோ தேடறது ஒன்னியு பெரிய வேல இல்ல , அண்ணாத்தே !!

நம்ப கூகுள அண்ணாத்த கிட்ட அவுருக்கு பிரியரா மேரி சொன்னா , போதும் !! அது பத்தி உங்களுக்கு மெயில் உடறேன் பா !!டைம் கெடச்சா, என்து பழைய பதிவுகளை பட்சி பாருங்க தல !! மறுக்கா டாங்க்ஸ் !!

டவுசர் பாண்டி said...

LK கூறியது...
//thala comment pottiku eppadi color thara nee//

தல , என்னோட மெயிலுக்கு , வாங்க அம்சி உடறேன் , தலக்கி, இது கூட செய்ய மாட்டேனா !!

xyzrajkumar@gmail.com

prabhadamu said...

உங்க பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நான் படித்தேன். எனக்கு உபயோகமாக இருந்தது.

நான் ஆழ்கடல் களஞ்சியம் பிளாக்கு ஆரம்பித்து 1 மாதம் ஆகிறது.


ஆனால் பாலோயிங்கு ஏன் வரவில்லை தெரியலை. எனக்கு இன்னும் சோதனை முயற்ச்சி அப்படி தான் வருது. ஏன் நண்பரே.


முன்பு பிளக்கில் இடுவது போல் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

என் தளம் http://azhkadalkalangiyam.blogspot.com/

abuanu said...

உங்க பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நான் படித்தேன். எனக்கு உபயோகமாக இருந்தது.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh