பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

அந்த டவுசர் - என்து இல்ல !! இல்லவே இல்ல !!

·எனது அன்பான தோஸ்த்துகளுக்கு , 
டவுசர் பாண்டியின் வண்க்கம்பா ,

இன்னைக்கி வயக்கம் போல பதிவுகள பாத்துக் கீனு இருக்கும் 
போது, சினேகிதி யோட ப்ளாக்கு பக்கம் போனேன் பா !! 

பதிலு போட்டுட்டு , அப்பிடியே , போன பதிவு இன்னா இன்னு 
பாத்தேன் ,  காதலர் தினத்துக்கு பதிவு இருந்தது , செரி இதுக்கு நாம 
பதிலு போடலே இன்னு , போடறத்துக்கு போனா !! 

அங்க தாம்பா எனுக்கு , 1000 வாட்டு கரண்ட்டு அட்சா மேரி கீது , 
டவுசர் பாண்டி. . .  said . . .  

இன்னு போட்டு இருந்தது , எனுக்கு ஒரே கொயப்பமா பூடுச்சி , நம்ப 
எப்படா ? போட்டோம் , இன்னு அதுவும் இல்லாத அதுல நம்ப 
ஐக்காணு இல்ல , வேற இன்னாவோ ,சிரிச்சிக் கீனு இருந்தது , 
( என்னப் பாத்து ) 

அப்பால , அந்த பிளாக் பக்கம் போனேன் தல , அது வேற டவசர் பாண்டி . 
அட நம்ப பேருல உன்னோர்த்தர் கீறாரே இன்னு ஒரே சந்தோசமா 
பூடுச்சிப்பா ( ம்ம்ம்ம் )

இன்னாடா இது , இது வெரிக்கும் நம்ப கண்ணுல இது மாட்லையே , 
இன்னு ரோசன பண்ணிட்டு இன்னா தான் எழதிக் கீராரு, இன்னு 
பாத்தேன் , 

அட இது மேரி ஒரு ஆளு கீரது , தெரிஞ்சி இருந்தா நாம வேற பேருல , 
மாத்தி இருக்கலாமே ? இன்னு பாத்தேன் !! அப்ப தான் தெரிஞ்சிது ,
அவரு 2009 -ஆகஸ்டு. மாதம் தான் முதல் பதிவு போட்டு கீராரு
இன்னு .

நானு ஆரம்பிச்சது 2009 -மார்ச் மாசம் , அப்ப இது நம்ப தப்பு இல்ல
இத இது வெரிக்கும் பாக்காதது தான் நம்ப தப்பு , இன்னு தெரிஞ்சிது . 

அதனால , நம்ப தோஸ்துகளுக்கு அதேகண்கள் -டவுசர் பாண்டி
சொல்லிக்கறேன் , அது நான் இல்ல .

இத சொல்ல வேண்டிய அவசியம் இன்னான்னா ,அதுல ஒரு பதிவு 
புவனேஸ்வரியும் பின்னே நானும்  இன்ற பதிவு( அது ஒன்னியும் தப்பான பதிவும் இல்ல, இருந்தாலும் ? ) 

இதப் பாத்துட்டு , இன்னாடா !! டவுசரு இது ........ ? 
இன்னு என்னப் பாத்து யாரும் கேட்டுடக் கூடாது , இல்ல 
அதாம்பா !! 

இந்த பேர போட்டு கீர கருத்த பாத்ததுமே , எனுக்கே 
மழ்கம் வந்துது , அதாம்பா !! உங்க காதுலையும் ரவ போட்டுடலாம்,
இன்னு , இத சொல்றேன் !! தப்பா இருந்தாக்கா மன்னாப்பு குட்துடு தல !! 
19 comments:


அண்ணாமலையான் said...
எல்லாமே சூப்பர் பாடல் வரிகள்... அசத்துங்க

டவுசர் பாண்டி... said...
சுகமான காதல் பாடல் வரிகள் னு போட்ருக்கனும்.....
இந்த கொயப்பத்துக்கு எதுனா வயி இருந்தா ரவ சொல்லுங்கோ !! 
வாஜார் , ரொம்ப பீலிங்கா கீது !!  


39 கருத்துகள்:

Unknown said...

நீங்க இல்லையா.. நீங்க சொன்ன பின்பு தான் 1000 வாட்டு பல்பு அடிச்சுது profileபடத்தினை பார்த்தேன்..

டவுசர் பாண்டி said...

அது நானு இல்லை , தங்கச்சி , இன்று நல்ல பதிவு போடலாம் என இருந்தேன் , இதப் பாத்ததும் மூடே இல்ல ,

எப்பவும் போல உங்க ஆதரவை வேண்டி - டவுசர் பாண்டி .( The original ) வேற இன்னா பண்றது இன்னு புரியல !!

சசிகுமார் said...

தலீவா கவலையே படாத நம்ம தோஸ்துங்க எல்லாரும் ரொம்ப கில்லாடிங்க, அவங்களுக்கு தெரியும் உண்மையான பாண்டி யார்னு

சைவகொத்துப்பரோட்டா said...

உடு தல, அத்தான் நீங்களே சொல்லிடீங்களே வாஜாரே, புச்சா ஒரு கவித போடு தல, நோ பீலிங்க்ஸ், பீ ஹாப்பி.

அண்ணாமலையான் said...

சரி சரி டோண்ட் வொரி பி ஹாப்பீ

ஹுஸைனம்மா said...

இது பாகிஸ்தான் சதிவேலையா இருக்குமோ? ;-)

அட, அவரும் உங்கள மாதிரியே ஏற்கனவே இப்படி ஒருத்தர் இருக்காருங்கிறது தெரியாம அதே பேர வச்சிருக்கலாம். ரெண்டுபேரும் ஒக்காந்து, யார் பேரை எப்படி மாத்திக்கலாம்னு பேசித் தீத்துகிடுவீங்களா, அதை விட்டுட்டு, நாந்தான் அசல், நாந்தான் அசல்னுகிட்டு...? இதுக்குன்னு சொம்பு, ஆலமரம், நாட்டாமைன்னா சீன் வைக்க முடியும்? :-))))))

Nathanjagk said...

ஒண்ணும் கவலை வேணாம் டவுசர்..
புது டவுசர் கிட்ட வேற பேரை பரிசீலிக்க ​கேட்டுக்கோங்க.
மெயில் ஒண்ணு தட்டுவிடவும்.
யாரு கண்ணு பட்டுதோ புதுசு புதுசா பிரச்சினை வருதே..!
அதுக்குதான் அப்பவே சொன்​னோம்............
டவுசரைத் துவைக்க​வேணாம்னு :)))

Nathanjagk said...

ஆல் தி ​பெஸ்ட்!

தமிழ் அமுதன் said...

http://athekangal.blogspot.com

இப்படி பேரு வைச்சு இருக்குறவர் டவுசர் பாண்டியா????

http://tavusarpandi.blogspot.com/

இல்ல ...!

இப்படி பேரு வைச்சு இருக்குறவர் டவுசர் பாண்டியா???;;;))


சொல்லுங்க யாரு உண்மையான டவுசர் பாண்டின்னு
தமிழ் வலை உலகமே குழப்பத்துல தவிக்குது...!;;))

Unknown said...

பீல் பண்ணாதிங்க..அண்ணன் அந்துமணி படத்தை பார்த்து இனி கண்டு பிடித்துவிடலாம்..
உங்களின்பதிவுகள் எப்பொழுதும் தனியாக தான் தெரியும்... இன்னைக்கு போடவேண்டிய பதிவை போடுங்க..

ஸாதிகா said...

டவுசர் பாண்டி அண்ணே!கவலையே படாதீர்கள்.உங்கள் அழகு மொழி மட்டுமல்ல,தலையும் நிஜ பாண்டியனாரை காட்டிக்கொடுத்துவிடும்.

அப்துல்மாலிக் said...

தலீவா உன்னான்ட தமிழூ ஆருக்கு வராதுப்பா நீ கல்க்குப்பா

Prathap Kumar S. said...

//தலீவா உன்னான்ட தமிழூ ஆருக்கு வராதுப்பா நீ கல்க்குப்பா//

அத்தானே...அக்காங்... தலீவா உன்னை மேரி யாராச்சும் எழ்த முடியுமா... எழ்தத்தான் வுட்ருவமா?

ஒரு ஒறைல ஒரு வாள்தான் அண்ணாத்த... அது நம்ம தோஸ்த் டவுசரு பாண்டித்தான்....

நீ ஒண்ணியும் கவ்லபடாத நைனா...
"ம்"...னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு...
ஆளை தூக்கிரலாம்... யார்கிட்ட???

malarvizhi said...

ஆஹா ....உங்க ஸ்டைலு ஆருக்கு வரும் தலீவா !என்ன கொஞ்சம் மெதுவா தான் புரியுது.

Mohan said...

படம் இருப்பதால் குழப்பம் வராது என நினைக்கிறேன்... கவலை வேண்டாம் தல!
அதுபோல உங்கள் தமிழ் எழுத்து நடையும் உங்களை தனியாக அடையாள படுத்திக் காட்டும்!
வாழ்க வளமுடன்!!

நட்புடன் ஜமால் said...

எத்தனையோ வாட்டி நான் கன்பீஜ் ஆகியிறுக்கேன்பா

எதுக்குப்பா இந்த ஆளு இரண்டு போட்டோ வச்சிகினுக்கீறாருன்னு

இரண்டு பதிவுகளுக்குமே துவக்கத்தில் போன நான் - நெம்ப கன்பீயூஸ் ஆகியிறுக்கேன்.

இப்ப நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது இரண்டும் வேறு வேறு ஆட்களென்று.

ஒரே பேரில் இரண்டு பேர் எதார்த்தமாக இருந்திருக்கலாம்.

ஆர்வா said...

புரியுது.. புரியுது.. நல்லா புரியுது தல

Menaga Sathia said...

பீல் பண்ணாதீங்க அண்ணாத்தே!!உங்க பதிவுகள் தனித்து தெரியும்.நீங்க எப்பவும் போல் உங்க பதிவுகள் போடுங்க.உங்க ப்ரொபைல் படத்தை பார்த்ததும் கண்டுபிடிப்போம்.அது நீங்க இல்லைன்னு...உங்க ஸ்டைலு ஆருக்கும் வராது அண்ணாத்தே..

டவுசர் பாண்டி... said...

கவலைப் படாதீர்கள் நண்பரே!.....

என்னால் உங்களின் புகழுக்கு எவ்வித குந்தகமும் வராது. நிற்க எனது இந்த பதிவு எந்த திரட்டியிலும் இனைக்கப் படவில்லை. குறிப்பிட்ட சில பதிவர்களைத் தவிர பெரிதாக யாருக்கும் இந்த பதிவு இருப்பதே தெரியாது.

பெயர்களைப் பிடித்துக் கொண்டு தொங்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை. நான் யாரென்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாய் பதிவுலகில் என்னை தொடரும் மிகச் சில வாசகர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமென நினைக்கிறவன்.

மேலும் வரும் மாதங்களில் இந்த பெயரைத் துறந்துவிடும் யோசனையும் இருக்கிறது. எனவே உங்கள் பணி மற்றும் பாணி தொடர வாழ்த்துகள்.

அன்பன்
டவுசர் பாண்டி.

டவுசர் பாண்டி... said...

நிற்க...

டவுசர் பாண்டி என்பது எங்கள் மதுரை மண்ணின் அடையாளம்.

அதில் தங்களின் சென்னையின் வார்த்தையாடல்கள் கொஞ்சம் முரணாய் இருக்கிறது.

:)

No hard feelings...ok

அண்ணாமலையான் said...

அப்பாடா பிரச்சன தீந்தது....

ப.கந்தசாமி said...

இதென்னாபா ஒரே பேஜாரா கீது. யாராச்சு ஒர்த்தர் டவுசரைக்கிழிச்சுட்டு அண்டர்வாருக்கு போப்பா. என்க்கு தலயச்சுத்துது

ப.கந்தசாமி said...

தோஸ்த்து, இதுல ஏதொ உள்குத்து இருக்கா மாரி படுது. ஏன்னாக்க அங்கெ போயி எம்படத்தை மாத்தினா இங்கயும் மாருதெ, அதெப்டின்னு இந்த மரமண்டைக்கு பொலப்பட மாட்டீங்குது.
ரென்டும் ஒண்ணு மாரி தோண்து.

Chitra said...

பெயர் குழப்பம். "இளைய" பட்டத்தை சேர்த்துக்கிட்டா, சரியா போய்டும்.

"இதென்னாபா ஒரே பேஜாரா கீது. யாராச்சு ஒர்த்தர் டவுசரைக்கிழிச்சுட்டு அண்டர்வாருக்கு போப்பா. என்க்கு தலயச்சுத்துது"
............ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

டவுசர் பாண்டி said...

அன்புள்ள டவுசர் பாண்டி அண்ணாத்தைக்கி உங்களின் கருத்த பாத்தேன் ,

ரொம்ப சந்தோசம் , 5 வருடமா எழதிக் கீனு இருக்கேன் , இன்னு சொல்லிக் கீரீங்கோ !! அதுக்கு ரொம்ப சந்தோசம் , ஆனா இந்த பேருல போன வருஷம் ஆகஸ்ட்டு - மாதம் , 6 ம் தேதி ஐம்பது வயது அழகு - பதிவு , இந்த வலைப் பக்கத்தில் ,
முதல் பதிவா இருக்கு .

அதனால் தான் , எது தவறு இன்னு புரியல ,

செரி, அத உடுவோம் , இது உங்கள் மண்ணின் அடையாளம் , இன்னு சொல்லி இருக்கீங்க !! இது இங்க மெட்ராசுல கீர , பாண்டி , அவரு ( அதாங்க நான் தான் ) முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை , தான் பிரியும் ,

அதனால தான் இந்த டவுசர் பாண்டி ,
இது மேரி பேசறான் , இன்னும் கேட்டா , இதுக்காகவே என்ன கஷ்டப் பத்திக்கீனு
எல்லாருக்கும் பிரியுரா மேரி எழதறேன் ( ? ) உன்னும் எங்க ஏரியாவுல கீர
வார்த்தைகளுக்கு , நெரியோ பேருக்கு அர்த்தம் பிரியாது இன்னு சுளுவா எழதறேன் ,

எனுக்கு தெரிஞ்சி இது தான் முரண் , மத்த படி உங்களுக்கு டாங்க்ஸ் !!

டவுசர் பாண்டி said...

இன்னைக்கி நம்ப (கொயந்த ) மன்சு ரொம்ப பீலிங்கா , இருந்தது பா !! இப்ப தான் கொஞ்சம் நெறைவா
கீது !!

கொஞ்சம் நாளைக்கி எழ்தர்த்த கூட
(யப்பா !! நிம்மதி இன்னு நீங்க சொல்றது கேக்குது , கேக்குது ) நிர்திடலாம் இன்னு நென்ஜெம்பா,

எனுக்கும் இந்த பதிவுலகத்துல ஒரு எடம் கீது ,( ? ) இன்னு எனக்காக கொரலு குட்த , இனியும் குடுக்கப் போற தோஸ்து அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ் பா !!

சினேகிதி ,
சசிகுமார் ,
சைவக் கொத்து பரோட்டா ,
அண்ணாமலையான் ,
ஹுசைனம்மா ,
ஜெகநாதன் ,
ஜீவன் ,
ஸாதிகா ,
அபுஅஃப்ஸர்
நாஞ்சில் பிரதாப் ,
மலர்விழி ,
மோகன் ,
நட்புடன் ஜமால் ,
கவிதைக் காதலன் ,
மேனகா சத்யா ,
கந்தசாமி ,
சித்ரா

இப்ப தான் இந்த பதிவுலகத்துல தவழ்ந்து வர்ர கொயந்த நானு , என்னையும் ஒரு ஆளா மச்சி ஆறுதல் சொல்றதுக்கு கூட நின்ன இவங்க எல்லாருக்கும் மறு படி டாங்க்ஸ் சொல்லி ,

சூடான சங்கதி இன்னு போட்டு இந்த மேட்டர் எல்லாருக்கும்
படிக்க உதவி செய்த தமிளிஷ் அவங்களுக்கும் நன்றி சொல்லி ,

அத்த பதிவுல உங்களோட ஆதரவை எதிர் பார்த்து இருக்கும் - டவுசர் பாண்டி .

SUFFIX said...

அத்து வேற கலர் டவுசரா இருக்கும்ப்பா,சீக்கிரம் வெளுத்துடும்,உங்களோடது தானே மெய்யாலுமேஒரிஜினலு...:)

SUFFIX said...

:)மெயில் பால்லோ அப்புக்காக.

ஜெய்லானி said...

டவுசரே உனுக்கா இந்த நெலம !ஒரே அழுகாச்சியா கீதுபா.பீலிங் வானாம்.அதான் சோடாபுட்டி போட்டோ கீதே.உன்னமேரி எழ்த கொயந்த புச்சா பொறந்துதான் வரனும்.

வேலன். said...

அட கஷ்டகாலமே...டவுசருக்கே சோதனையா...? நாங்க இருக்கோம் டவுசர் ...ஒன்னும் பிரச்சனையில்லை...பார்த்துக்கலாம்.. கவலைபடவேண்டாம்... வாழ்க வளமுடன் வேலன்.

Jaleela Kamal said...

அண்ணாத்தா பதில் போடமல் இருப்பேனா?

காலையில் இருந்து முன்று முறை ஓப்பன் பண்ணியாச்சு, நான் முதலே சொல்லி இருக்கேன், என் பிலாக், தமிழ் டைபிங்க்கு, அதோடு யார் பிலாக்ல பதில் போட இருக்கோமோ அவர்கள் எல்லாத்தையும் ஒன்னா ஓப்பன் செய்தாஎனக்கு என்னற்ற பல வின்டோ ஓப்பன் ஆகும் முன்றூ முறை பதில் போட முடியாம திரும்பி போயாச்சு,

நாங்க உங்களை நம்புறோம். இப்ப பீதி அடைந்து எல்லார் பிளாக்கிலும் போய் சொல்வதை விட உங்கள் பிளாக்கிலேயே ஒரு தலமட்டுல அதான் பதிவு முன்னாடி ஒரு பதிவு போட்டுடலாமே உங்கள் பிலாக்குக்கு வருகிறவர்கள் அதை தெரிந்து கொள்வார்கள்,

Jaleela Kamal said...

உங்கள் பதிவுகளை நாங்க தொடர்ந்து படித்து வருகிறோம் ஆகையால் எங்களுக்கு புரியும் புதுசா வருகிறவர்களுக்கு தான் குழப்பமாகும் நீங்க எதுக்கும் நல்ல பட்டையாநல்ல கலரில் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்று சொல்லி இந்த மேட்டர போட்டுடுங்க, //


நீ கலக்கு அண்ணாத்தா எங்க ஆதரவு என்ன்னிக்கும் உண்டு

எல்லாருக்கும் பதிவுலகில்ஒரு கழ்டகாலம் வேற மாதிரி வருதுன்னா, உங்களுக்கு இந்த ரூபத்தில் வந்துள்ளது. ஆஹா ரொம்ப பீலிங்காயிட்டிங்கலே. பீதி அடைஞ்சிட்டீங்களே.

Jaleela Kamal said...

//நானு ஆரம்பிச்சது 2009 -மார்ச் மாசம் , அப்ப இது நம்ப தப்பு இல்ல ,
இத இது வெரிக்கும் பாக்காதது தான் நம்ப தப்பு , இன்னு தெரிஞ்சிது . //

இது உங்க தப்பு கண்டிப்பா இல்ல,, அவர் தான் இந்த பேர் ரொம்ப பிடிச்சி இருக்குன்னு வச்சிக்கிட்ட்டார் போல

திவ்யாஹரி said...

இதென்னாபா ஒரே பேஜாரா கீது. யாராச்சு ஒர்த்தர் டவுசரைக்கிழிச்சுட்டு அண்டர்வாருக்கு போப்பா. என்க்கு தலயச்சுத்துது//

ஹா..ஹா..ஹா..
இன்னிக்கு தான் உங்கள first பார்க்குறேன்.. யாருடா இது டவுசர்க்கு எல்லாம் சண்டை போடுறதுன்னு பார்த்தா பிரச்சனையை ரொம்ப பெருசா தான் இருக்கு.. ஹா..ஹா..ஹா.. டைம் இருந்த என் blog-க்கு வாங்க.. http://everythingforhari.blogspot.com/

டவுசர் பாண்டி said...

//எல்லாருக்கும் பதிவுலகில்ஒரு கழ்டகாலம் வேற மாதிரி வருதுன்னா, உங்களுக்கு இந்த ரூபத்தில் வந்துள்ளது. ஆஹா ரொம்ப பீலிங்காயிட்டிங்கலே. பீதி அடைஞ்சிட்டீங்களே.//

உங்களோட ஆதரவுக்கு ரொம்பவே டாங்க்ஸ் , தோஸ்த்து
SUFFIX

..................................

ஜெய்லானி
உங்க கருத்து எனுக்கு உற்சாகமா இருந்தது தல !!

..................................

வேலன் வாஜாரே !! டவுசருக்கே கஷ்டம் வந்துடுச்சே !!
இப்போ பரவாயில்ல !!

...................................

தங்கச்சி ஜலீலா ,கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ் ,

...................................

திவ்யா ஹரி , உங்களுக்கு ரொம்ப டாங்க்ஸ் , எம் பெரி பொண்ணு பேரும், அதே தான் திவ்ய நிலா ,

...................................

puduvaisiva said...

பாண்டி உன் டவுசர் இடுப்பு அளவு 56 -ன்னு எல்லாருக்கும் தெரியும் அது காட்டி இல்லாமா நீ டவுசர்ள 12 வெளிபாக்கைட்டு 17 உள்பாக்கைட்டு வைச்சி தக்கைர ஆளு உனக்கு டவுசர் தக்கைகரத்துக்கு பயத்துகுனு டைலர் ராவோடு ராவா காக்கி நாடாவுக்கு போய்யிட்டுதா ஒரு வதந்தி ஊருல இருக்கு.

எதோ பெரிய மனசுபன்னி அந்த டவுசரு ஜாக வாங்கீனாரு பாண்டி உண்மையில அவுரு பெரிய மனுச பா.

நாவேர இந்த மெட்டரு தெரியோமே நமக்கு சப்போட்டுக்கு பிச்சுவா பக்கீரி கிட்ட
சொல்லிட்டேன். உன்ன பாக்க பக்கீரி வுட்டாண்ட வந்த மேட்டரு சுலுவா முடிச்சுச்சுன்னு சொல்லிடுப்பா.

டவுசர் பாண்டி said...

உண்மைக்கி எனுக்கு சொக்கா தைக்க, மூணு மீட்டரு துணி ஆவுதுபா !! பக்கிரி போனு பண்ணாப்பா !!

ராவிக்கி வரேன் இன்னு , அப்ப தான் ஓர உட்டுக் கீனு இருப்பானாம் , நானு எப்பிடியாது மடக்கி உன்கிட்ட அனுப்பறேன் தல !! பாத்துக்கோ ,

உன்ன யாரு அதுன்காட்டி நம்ப பசங்களுக்கு எல்லாம் சொல்ல சொன்னது ? இன்னாவோ போ ! நீ பண்றது எதுவும் செரியில்ல !! அக்காங் !!

Unknown said...

விடு தல.. டோண்டு வொரி பீ ஹாப்பி

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh