பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

இன்றிரவு பகலில் - டவுசர் பாண்டி.

·

      
                 Photobucket

    
இந்த காதலர் தினத்துல , எனுக்கு ரொம்ப புட்ச , ஒரு 
கவித, இல்ல ஹைக்கூ , எப்பிடியாது வெச்சிக்கலாம் ,
இது தான் தல , இதுல கீர வரின்கோ டாப்பா கீதுபா !!

நீயும் தான் ரவ பட்சி பாரேன் , வெளி நாட்டுக் கார ,
மன்சன் இன்னாமா , எழதிக் கீராரு இன்னு , 


இன்றிரவு பகலில், 

யானைகள் தமக்குள்
மனித ஜோக்குகளை,
சொல்லிக் கொள்ளும்

அமெரிக்கா,
ரஷ்யாவோடு,
சமாதானத்தைப்
பிரகடனம் செய்யும்

முதல் உலகப்போரின்
தளபதிகள்,
நவம்பர் - 11 ல் தெருக்களில்
செயற்கை வர்ண பூக்களை,
விற்பார்கள்

நகரப் புழக்கடைகளில்
புறாக்கள்,
பூனைகளை வேட்டையாடும்

வெள்ளை அமெரிக்கர்கள்
கருப்பு மாளிகைஇன்
முன் சம உரிமைக்காக,
போராட்டம் நடத்துவார்கள்

நாட்டுப்புற பாடல்கள்
நாட்டுப்புற மக்களாலேயே,
பாடப் படும்

அரசியல்வாதிகள்
பைத்தியக்கார விடுதிகளில்,
தேர்ந்து எடுக்கப்படுவார்கககள்

ஒவொருவருக்கும்
வேலை காத்திருக்கும்
ஆனால் ,
ஒருவரும் அவற்றை
விரும்ப மாட்டார்கள்

மறந்து போன மயானக்களில்
எல்லா இடங்களிலும்
இறந்தவர்கள்,
உயிருடன்  உள்ளவர்களை
அமைதியாகப் 
புதைத்துக் கொண்டிருப்பார்கள்

மேலும் ,

என்னை காதலிப்பதாக
நீ என்னிடம் கூறுவாய்
இன்றிரவு பகலில் .  

 
 
-- ஆட்ரியன் ஹென்றி. தல , உங்க கருத்த ரவ சொல்லிட்டு போங்க தல !! 
அப்பிடியே ,- அல்லாரும் படிக்கிறா மேரி
ஒரு ஓட்ட குத்தி , உடுங்க வாஜார் !!22 கருத்துகள்:

Prathap Kumar S. said...

தல என்னாச்சு? நம்பவே முடில... முதல்ல நீங்க எழுதுனதுன்னு நினைச்சேன்...

ரொம்ப உலகப்பார்வையோடு எழுதுப்பட்ட டெக்னிக்கல் கவிதை... Classic

ஜெய்லானி said...

//என்னை காதலிப்பதாக
நீ என்னிடம் கூறுவாய்
இன்றிரவு பகலில் . //
இத்து அந்த ஆளு சொன்னமேரி இல்லியே.வாஜாரே!!கொரலு உனுது தானே..

Unknown said...

உங்களுக்கு அழகாக கவிதை கூட எழுதவருமானு நினைச்சு படிச்சா அது உங்க கவிதையில்லை .//இதுல கீர வரின்கோ டாப்பா கீதுபா !! //

டவுசர் பாண்டி said...

//முதல்ல நீங்க எழுதுனதுன்னு நினைச்சேன்.//- நாஞ்சில் பிரதாப்,

அய்யோ !! தல , இந்த கவித கிட்ட நிக்க முடியுமா ? எத்தினை கவித பட்சாலும் இது மட்டும் ரொம்பவே ஆயமா , மன்சுல கீதுபா !!

டவுசர் பாண்டி said...

//வாஜாரே!!கொரலு உனுது தானே.//. ஜெய்லானி ,


கொரலு மட்டும் தான் தல நம்புல்து , வரின்கோ ஹாட்ரியன் ஹென்றிது , வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//உங்களுக்கு அழகாக கவிதை கூட எழுதவருமானு நினைச்சு படிச்சா அது உங்க கவிதையில்லை//- சிநேகிதி,

ஆஹா, இன்னா மேரி கேள்வி கேட்டுட்டீங்கோ பா !! அப்போ !! இத்த நீங்க கவித இன்னு ஒத்துக்கலயா ? இத பட்சிட்டு சொல்லுங்கோ !! சினேகிதி . வருகைக்கி டாங்க்ஸ் பா !!

http://athekangal.blogspot.com/2010/02/blog-post_09.html

அண்ணாமலையான் said...

”ஒவொருவருக்கும் வேலை காத்திருக்கும் ஆனால் , ஒருவரும் அவற்றை விரும்ப மாட்டார்கள்” இது தாங்க எனக்கு புடிச்ச வரி...

Unknown said...

நீங்க தந்த லிக்கை பார்த்தேன்//ஆறாத ரணங்கள்
எத்தனை வலித்தாலும்
அதிலும் ஒரு சுகம்
இருக்கத்தான் செய்கிறது // ரொம்ப அழகாக எழுதியிருக்கிங்க.. கவிதை வரிகள் அருமை...

பாவா ஷரீப் said...

தல உனக்கு இன்னாமோ கண்ணதாசன் ஆவி பூந்திடுச்சு நெனைக்கிறேன்
ஒரே கவிதையா கீது

பாண்டியுரான் said...

சும்மா சும்மா அதிருதில்ல தலைவா என்னமோ அசத்துங்க போங்க !! என்னமோ அசத்துங்க போங்க !

Chitra said...

சுட்டது என்றாலும் தமிழ் ஆக்கம் அருமையா செய்து இருக்கீங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

யாரு தலிவா இந்த ஆட்ரியன் ஹென்றி, ரொம்ப பகல் கனா காணும் போல, ஆனாலும்
சோக்கா கீது தல. காதலர் தின வாழ்த்துக்கள் வாத்தியாரே.

டவுசர் பாண்டி said...

//”ஒவொருவருக்கும் வேலை காத்திருக்கும் ஆனால் , ஒருவரும் அவற்றை விரும்ப மாட்டார்கள்” இது தாங்க எனக்கு புடிச்ச வரி.//-அண்ணாமலையான் கூறியது.

உங்க கருத்துக்கு டாங்க்ஸ் தல !! எனக்கு கடைசி வரி ரொம்ப புட்சிக்கீது பா !!

டவுசர் பாண்டி said...

//கண்ணதாசன் ஆவி பூந்திடுச்சு நெனைக்கிறேன்//-கருவாச்சி கூறியது.

இது இன்னாடா இது வம்பா போச்சி !! இருக்கும் , இருக்கும் தல நானு அப்பவே நென்ச்சேன் இன்னாடா இது இன்னு !!

நீ நம்ப தோஸ்த்து தானே எதுனா , பண்ணி எண்ணக் காப்பாத்த கூடாதா ? அய்யே !!

டவுசர் பாண்டி said...

//சும்மா சும்மா அதிருதில்ல தலைவா//- பாண்டியுரான் கூறியது.

இத பட்சா, மனசு ரொம்ப தான் அதிருது , தல , உங்க வருகைக்கி டாங்க்ஸ்
தல !!

டவுசர் பாண்டி said...

//சுட்டது என்றாலும் தமிழ் ஆக்கம் அருமையா செய்து இருக்கீங்க//-Chitra கூறியது.

ஐயோ !! சகோதரி இன்னா வர்த்த சொல்டீங்கோ !! சுட்டது இன்னா , திருடினது தானே , எனுக்கு புட்ச்சது , அதுவும்,

வெளிநாட்டுக் கார மனசாலு எழ்தினது இன்னு தானே , சொன்னேன் பா !! அது கூட அந்த பெரி மன்சன் பேர போட்டு கீரேனே !! ஒரே பீலிங்கா பூட்சிபா !!

டவுசர் பாண்டி said...

//காதலர் தின வாழ்த்துக்கள் வாத்தியாரே.//-சைவகொத்துப்பரோட்டா,


தல , நீ ஒரு ஆளு தான் , நானு யூத்துன்னு பிரிஞ்சி , வாழ்த்து சொல்லிக் கீரே !! டான்க்சு , டான்க்சு !!

Jaleela Kamal said...

அட அண்ணாத்தக்கு கவிதையும் எய்த வருமா? ய்ம்மாடியோஓ

Jaleela Kamal said...

என்ன உங்க பதில் மட்டும் மிட்டாய் ரோஸில் மின்னுது

பத்மா said...

ஹ்ம்ம் அவ்ளோ கஷ்டமா அது? இன்றிரவு பகலில் சொல்லுவது ?இது பழைய காலத்து கவிதை .இப்போலாம் ரூபாய்க்கு எட்டு கூட
கிடைக்கலாம் .
உயிர் உள்ளவர்களை மரணித்தவர் புதைப்பதுதான் இதில் செம டச்சிங் வரிகள்

டவுசர் பாண்டி said...

Jaleela கூறியது...
//அண்ணாத்தக்கு கவிதையும் எய்த வருமா? //

இது நானு எழ்தனது இல்ல , எனுக்கு புட்ச கவித , நா எழ்தனத நீங்க படிக்கல போல கீது !! மொதல்ல படிங்க ,

//பதில் மட்டும் மிட்டாய் ரோஸில் மின்னுது//

சொம்மா தான் இது மேரி போட்டேன்! எனுக்கு இந்த கலர் புடிக்கும் !! அதான் . வருகைக்கி ,டாங்க்ஸ் தங்கச்சி

டவுசர் பாண்டி said...

padma கூறியது...
//ஹ்ம்ம் அவ்ளோ கஷ்டமா அது? இன்றிரவு பகலில் சொல்லுவது ?//

எனுக்கு தெரிஞ்சி கஷ்டம் தான் !!

//இது பழைய காலத்து கவிதை .இப்போலாம் ரூபாய்க்கு எட்டு கூட
கிடைக்கலாம் //

அது இன்னாவோ , உண்மை தான் பழைய கவிதை தான் , நானு இதப் படிச்சதே 12 வருஷத்துக்கு மின்ன , இப்பவும் மனசுல நிக்கிது !!

நீங்க சொல்றாமேரி
ரூபாய்க்கி எட்டு - பட்சிட்டு புக்க கீய வெக்கும் போதே மறந்துடும் , அதான் வித்தியாசம் . தங்கச்சி !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh