பதிவுலக தோஸ்துங்களே !! அல்லாருக்கும் டவுசரோட வணக்கம் !!
நம்ப பதிவுங்க மூலமா எனுக்கு கெடச்ச பிரண்டுங்கோ !! நெரியோ பேர் !!
அதுல நானு ஏற்கனவே சொல்லிக்கீறேன் நம்பளுக்கு பிரான்சுல கூட
தோஸ்து கீறாங்கோ இன்னு !!
அவுர நேர்ல பாக்கற மேரி ஒரு சந்தர்ப்பம் கெடச்சது !! அவுரும் செரி
நாம சந்திக்கலாம் இன்னு கேரன்ட்டி குட்து வந்தாரு !!
எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு கேக்கப்
போறாரு இன்னு தான் !! )
ஆனா அப்படி எல்லாம் நடக்கலை , அநியாயத்துக்கு நல்ல புள்ளையா
கீறாரு பா !! இந்த காலத்துலே இப்பிடியா ?
இந்த சந்திப்போட நோக்கமே வெறும் பதிவர் சந்திப்பு மட்டு இல்லே !!
புதுவை .காம் ஒரு டெக்னிக்கல் பதிவருங்கோ கீர .com அவங்க
நோக்கமே கற்போம் !! கற்பிப்போம் !! - pudhuvai.com
அதா கண்டி அவங்களுக்கு தெரிஞ்ச விஷியத்த எல்லாருக்கும் சொல்லித்
தர்றது தான் ,
இதை நான் பதிவர் சந்திப்பு இன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் !
ஏன்னா !!
அவங்க வந்தது முதல் திரும்பிப் போகும் வரை எங்களின் கணினி
பற்றிய சந்தேகங்களுக்கு , விளக்கம் அளிப்பதிலேயே நேரம்
செலவானது !! மிகப் பயனுள்ளதாக அமைந்தது !!
அதுனால , நம்ப கேட்ட டவுட்டுக் கெல்லாம் , சொம்மா !! நச்சு
நச்சுன்னு !! பதிலு குட்துக் கீனாங்கோ ! !
செரி நம்ப கூட இருந்த போட்டோ அல்லாம் போடறேன் , பாருங்க தலீவா !!
இவங்க தான் புதுவை .காம் ,நண்பர்கள் ,முதலில் இருக்குறது
நித்தியானந்தம், அடுத்து மோகன கிருஷ்ணன் ,
ஹைட்டு மட்டும் இல்ல தலீவா !! மனசும் உயர்ந்த மனசு !! தான் ,
அடுத்து மோகன கிருஷ்ணன் பேரு மட்டும் இல்ல ஆளும்
கிருஷ்ணன் மேரி தூளா கீராரு !!
இது நம்ப வேலன் அண்ணாத்தே !! இன்னா மேரி டவுட்டு அல்லாம்
கேக்குறாரு !! பாருங்க !!
நம்ப செட்டுலயே ரொம்ப கொயந்த ( வயசுல தான் மத்த படி கம்பீட்டருல ம்ம்ம்ம்ம்ம்ம் )
invisible விஜி !! விஜி கேட்ட டவுட்டுக்கு எல்லாம் பொறுமையா
பதிலு குடுக்குறாரு !! நித்தி சார் !!
ஹி!! ஹி !! நம்பளுக்கு !!
மோகன கிருஷ்ணன் சார் !! சொல்லிக் குடுக்கறாரு !!
வேலன் அண்ணாத்தைக்கி , மோகன் சார் சொல்லித் தாராரு !
இன்னாமோ அந்த பொட்டிய ரெண்டு பேரும் ஒரு வயி பன்றாங்கோ !!
மூணு பேரு கிட்டயும் மாட்டிக்கினாறு, மோகன் சார் !!
சொம்மா !! லெப்ட்டு, ரைட்டு அல்லாம் கேள்வி மேல கேள்வி !!
எல்லாம் ஆச்சி !! இப்ப தான் கொஞ்சம் ப்ரீயா !! ஒண்ணா நின்னு
போட்டோஎத்துக்கினோம் !!
எனுக்கு ரொம்பவே ஆச்சரியமா பூடுது !! நாம இன்னா
சந்தேகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு பதிலு குடுக்கறாங்க பாருங்க !!
அப்ப தான் புதுவை .காம் மரியாதையே தெரிஞ்சிது !!
" நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லிக் குடுக்கறதுல
இருக்குற திருப்தி வேற எதுலயும் இல்லீங்க !! " -
இந்த இனிய சந்திப்புக்கு புதுவை .காம் நண்பர்களுக்கு நன்றி
வாழ்க வளர்க !!