பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

உஜாரு - செல் போனுக்கு இந்த மேரி தகவல் வந்தா எடுக்காதீங்கோ !! !

· 34 கருத்துகள்



போன பதிவுக்கு , ஆதரவு குட்த, கூட்டாளிங்கோ அல்லாருக்கும் ,
ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்பா !!

இந்த தபா, இந்த செல் போனு கீதே !! அதாம்பா !! அல்லாரும் காதுல
வெச்சிக்கீனு , சும்மா !! கத்திக்கீனு கிராங்களே !!

அதுக்கு இன்னாமோ வைரசு வருமாமே ? அதுல ஏதோ !! ஒன்னு
ரெண்டு பத்தி பாக்கலாம் ,

இப்போ !! நம்ப செல்லுல இந்த மேரி அதாவது , ACE இல்லன்னா ,
XALAN இன்னு எதாவது டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !! ஐயோ !!
அத்த மட்டும் எடுக்காதீங்க தலீவா !!

அதே மேரி !! " UNAVAILABLE " இன்னு டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !!
அப்பிடியே !! அத்த அமுக்கி போடு !! உஷாரு !! நாபகம் இல்லாம
இந்த மேரி , எதுனா போனு வந்து அத்த எட்துட்டா !!

வேற போனு தான் வாங்கனும் !! செரியா !! இதுவேரிக்கும் 3 மில்லியன்
போனு கவுந்து போச்சாம்பா !!

இங்க இல்லா அமெரிக்காவுல தான் , புன்னியவானுகோ !! நமபுளுக்கு
எதுனா , இது மேரி ஆய்ட கீய்ட போவுது !!

சில சமயத்துல , NO NAME இன்னு சில காலு வரும் , அது எப்பிடின்னா !!
சில வெளி நாட்டுல , போலோ கார்டு இன்னு ஒன்னு கீதுபா !! அதுல
அங்க கீற கம்பீட்டரு பொட்டில கொஞ்சம் கோல் மால் பண்ணி , நம்ப
நம்பருக்கு கனேக்சனு குடுப்பாங்கோ !! அப்பிடி வர காலுங்கோ No number ,
(or ) NO NAME , இன்னு இருக்கும் ,

அதனால அல்லாம் ஒன்னியும் ஆவாது , தெகிரியமா பேசலாம் !!

மத்தபடி மேல சொன்னா மேரி வந்தா எடுக்காதீங்கோ !!
உஜாரா , இருக்க தாவலியா !!

நம்பளுக்கு ஜுரம் வந்தா , டாக்டரு கிட்ட போவலாம்
போனுக்கு வந்தா ?

மேட்டர் பட்சிட்டு அப்டியே ஒரு ஓட்ட குத்தி , போடு தல !!


நிரந்தரமாக - பைல்களை அழிக்க எளிய வழி

· 34 கருத்துகள்




அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!

போன பதிவுக்கு ஆதரவு குட்து, கருத்து போட்ட
தோஸ்துகளுக்கும், வருகை தந்தவர்களுக்கும் , ரொம்ப டாங்க்ஸ்பா !!

இந்த பதிவுல , நிரந்தரமா ஒரு பைல அழிப்பது எப்படி இன்னு ,
பாக்கலாம் ,

இப்போ , சாதாரணமா ஒரு பைல delete - பண்ணும் போது, அது
delete ஆகிடும் , அந்த பைல் நம்பளோட Recycle Bin -ல , போய்
உக்காந்துடும் ,

செரி, இன்னு நெறைய பேர் Shift + Delete யூஸ் பண்ணினால் சுத்தமா
அழிந்து பூடும் இன்னு நெனைப்பாங்கோ !! ஆனா !!

அது நம்மோட Hard Disk ல போய் உக்காந்துக்கும் , அந்த மேரி
நேரத்துல தான் இந்த சாப்ட்டு வேரு நமபுளுக்கு ரொம்பவே யூசு
ஆவுது தலீவா !!

இதும் பேரு Sure delete , இது ரொம்ப சின்ன சாப்ட் வேர் தான் , இத்த
down load , பண்ண இங்கு , down load பண்ணி முடிச்ச வுடன் , run
குட்துடுங்கோ ,

உங்களுக்கு இது மேரி ஒரு ஐக்கான் வரும் , இப்போ !! இத்த கிளிக்
பண்ணி ,

கீய கீரா மேரி வரும் , அதுல Add file இன்னு கீர்த அமுக்கி , அப்பால
உங்களுக்கு தேவை இல்லாத பைல அதுல Add பன்னுக்கோ !!

ஒரு வேல தப்பான பைல சேத்துட்டா கூட இதுல clear list இன்னு
ஒரு ஆப்சனு கீது , அத்த அமுக்கி மறுபடியும் , செரியான பைல குட்து ,
next பட்டன அமுக்குங்கோ , மறுபடியும் next அமுக்கர்த்துக்கு மின்ன
கன்பார்ம் பண்ணிக்கினு next அமுக்குனா ,

இப்போ !! அந்த பைல் சுத்தமா !! அழிஞ்சி பூடும் . இன்னா தான்
recovery soft ware போட்டாலும் இதும் மூலமா அழிச்சது
கெடைக்காது , தலீவா !!

இத்த யூஸ் பண்ணி பாருங்கோ !! அப்பிடியே ஒரு ஒட்டு போட்டு ,
உங்க கருத்த சொல்லுங்கோ !! தலீவா !!


நமது பிளாக்கை - எத்தனை முறை பார்த்தோம் என பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள எளிய வழி.

· 17 கருத்துகள்

அல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் ,


போன பதிவுக்கு , ஆதரவு குட்த அல்லாருக்கும் ரொம்ப
டாங்க்ஸ்பா !!

இப்போ !! நம்ப பிளாக்க பார்க்க வரவங்கோ , நம்ப பிளாக்குக்கு
எத்தினி தபா, வந்தோம் இன்னு தெரிஞ்சிக்கர்த்துக்கு , ஒரு
வழி கீது !!

இப்போ !! மொத தபா , வந்தாங்கோ இன்னு வெச்சிக்கோ !!
தங்கள் 1 வருகைக்கி நன்றி !! இன்னு காமிக்கும் ,

அதே மேரி, அவுங்கோ !! எப்போ வந்தாலும் , கரீக்ட்டா !! ஏம்பா ,
இது மேரி நீங்கோ , இத்தினி தபா நம்ப பிளாக்கு பக்கம் வந்து
கீரிங்கோ, அதுக்கு , நன்றி , இன்னு சொன்னா ,

படிக்க வரவங்கோ , குசி ஆயிடுவங்கோ !! இந்த புள்ள பாருப்பா !!
நம்போ எத்தினி தபா வந்தோம் இன்னு கூட நாபகம் வெச்சிக்கீது !!

இது " ரொம்ப நல்ல புள்ள " , ( சொம்மா !! ) நெனைப்பாங்கோ !!

அவுங்கோ இந்த மேரி நம்பல நெனைக்கர்த்துக்கு, கீய , ஒரு ,
கோடிங்கு, கீது பாருங்கோ !! அத ,காப்பி பண்ணி,


<script>
function GetCookie (name) {
var arg = name + "=";
var alen = arg.length;
var clen = document.cookie.length;
var i = 0;
while (i < clen) {
var j = i + alen;
if (document.cookie.substring(i, j) == arg)
return getCookieVal (j);
i = document.cookie.indexOf(" ", i) + 1;
if (i == 0) break;
}
return null;
}
function SetCookie (name, value) {
var argv = SetCookie.arguments;
var argc = SetCookie.arguments.length;
var expires = (argc > 2) ? argv[2] : null;
var path = (argc > 3) ? argv[3] : null;
var domain = (argc > 4) ? argv[4] : null;
var secure = (argc > 5) ? argv[5] : false;
document.cookie = name + "=" + escape (value) +
((expires == null) ? "" : ("; expires=" + expires.toGMTString())) +
((path == null) ? "" : ("; path=" + path)) +
((domain == null) ? "" : ("; domain=" + domain)) +
((secure == true) ? "; secure" : "");
}
function DeleteCookie (name) {
var exp = new Date();
exp.setTime (exp.getTime() - 1);
var cval = GetCookie (name);
document.cookie = name + "=" + cval + "; expires=" + exp.toGMTString();
}
var expDays = 30;
var exp = new Date();
exp.setTime(exp.getTime() + (expDays*24*60*60*1000));
function amt(){
var count = GetCookie('count')
if(count == null) {
SetCookie('count','1')
return 1
}
else {
var newcount = parseInt(count) + 1;
DeleteCookie('count')
SetCookie('count',newcount,exp)
return count
}
}
function getCookieVal(offset) {
var endstr = document.cookie.indexOf (";", offset);
if (endstr == -1)
endstr = document.cookie.length;
return unescape(document.cookie.substring(offset, endstr));
}
</script>
<script>
document.write("தங்களின் <b>" + amt() + "</b> - வது ,வருகைக்கு நன்றி.")
</script>


வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,

இன்னா ஒன்னு , இது வந்து அல்லார் பார்வைக்கும் , தெரிரா
மேரி கீர எடத்துல , வரா மேரி வெக்கணும் ,

அப்போ தான் , பாக்க சொல்லவே , கரீக்ட்டா இருக்கும் ,

இந்த மேட்டரு அல்லாருக்கும் தெரிய ஒரு ஒட்டு போட்டு ,
அப்பிடியே , கருத்து சொன்னா இந்த டவுசரு குசியா
ஆயிடுவான் பா .


நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh