பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசர் பாண்டி பேட்டி

· 5 கருத்துகள்

அல்லாறோம் ,கூட்டணி பத்தி பேசிடாங்கோ,
அப்பால கீற மீதி பேரு கூட்டணி பேசராங்கோ,
இப்போ நேரடி பேட்டி..........

(சரத்குமார் , இல . கணேசன்

& T. ராஜேந்தர் - டவுசர் பாண்டி )

டவுசர் பாண்டி ; அல்லாருக்கும் வன்கம் !!!

முவரும் ; வணக்கம் , பாண்டி அவர்களே ,

உட்காருங்கள் ,

டவு பா ; உங்க லச்சிய திமுக யாரு கூட

கோட்டனி வைக்க போதுபா ?

T.R ; நாங்க மூணு பேரு , உன்னோட சேத்தா,

நாலு பேரு , புடிக்கபோறோம் நாப்பது .

டவு பா ; உங்களோட கோட்டநில ஆருக்கு எத்தினி சீட்டு ,?

இல.க ; ஆளுக்கு பத்து .

சரத் ; அண்ணே , பாத்து இன்னு சொல்றத்துக்கு

பதிலா பத்துன்னு சொல்றாரு .

T.R ; அண்ணன் சரியா தான் சொல்றாரு , நாம

மூணு பேரும், ஆளுக்கு பத்து தொகுதி எடுத்துக்கலாம்

மீதி தொகுதிய நம்முடன் சேர துடிக்கும் மீதி கட்சிகளுக்கு

ஒதுக்கலாம் .

இல .க ; ஆம் ,ஆம் அப்படியே செய்வோம் .

டவு பா ; உண்ணுமா ,இந்த ஒலகம் உங்கள நம்புது ????

T.R ; நான் யாருன்னு தேர்தலில் பாருங்கள் , எனக்கு

உள்ள மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை .

சரத் ; என் செல்வாக்கு மட்டும் என்ன சாதாரானமானதா ?

இடை தேர்தலில் பார்த்து அனைத்து கட்சிகளும்

மிரண்டு போய் உள்ளது .

இல .க ; எங்கள் செல்வாக்கை நான் சொல்லத்தேவையே இல்லை .

டவு பாண் ; யப்பா !! எனுக்கு ஒரே மழ்க்கம், மழ்க்கமா,

வருது .இப்போ நீங்கோ இன்ன தான் சொல்லோ வரிங்கோ ,

அத்தே மின்ன சொல்லுங்கோ !

சரத் ; அதை எங்கள் கூட்டணி பொதுக்குழுவில் சொல்கிறோம் .

டவு பாண் ; அல்லறோம் தான் கீரிங்களே , இப்போவே

சொன்னா தான் இன்னா தேஞ்சா

பூடுவிக்கோ !

மூவரும் ;!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதிர்ச்சியுடன் பார்க்க ....

டவு பா ; செரி, உங்கோ தேர்தல் அறிக்க யின்னா ,

அத்த மின்ன சொல்லு ?

T.R ; தி மு க , ஒரு இடத்தில் கூட வெற்றி பெற

முடியாமல் என்னிடம் தோற்க போகிறது ,

அதை மீண்டும் நினைவு கூர்கிறேன் .

இல .க ; காங்கிரஸ் கட்சி எங்களிடம் எத்தனை

இடங்களில் தோற்க போகிறது பாருங்கள் .

சரத் ; தேமுதிக என்னிடம் படும் தோல்வியை

மறக்கவே மாட்டார்கள் .

டவு பாண் ; ஆளாளுக்கு ஒர்தர புட்ச்சி வச்சிகீனு

எப்ப தா கேலீப்பீங்கோ ?

இல .க ; கூட்டணி பங்கீடு முடிந்தவுடன் கிளம்பி

போய் ஜெயிக்க வேண்டியது தான் .

டவு பா ; மறு தபா கேக்கரேன், ஆருக்கு எத்தினி தொகுதி ?

( முவரும் ஒன்றாக ) - ஆளுக்கு பத்து .

டவு பாண் ; நீங்கோ கீரதே, மூணு பேரு தானே ?

இல .க ; நீ கணக்கை தவறாக போடுகிறாய் .

சரத் -10 , லதிமுக -10, பா ஜ க -10,

டவுசரு நீ --10


டவுசரு எஸ்கேப்   எஸ்கேப் ............ 


(அதிர்ச்சியுடன்ஓடுகிறான்!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!டவுசரு கண்ட நியாயம்

· 10 கருத்துகள்

நானு ஊருக்கு போய் வந்த வொடனே, நம்ப 

ஏரியால கீற அல்லாருக்கும் நம்ப மேல ஒரு 
மரியாத வந்து, இன்னாங்கோ பாண்டி சார் ,டீ 
குடிகீறிய இல்ல காபி தண்ணி சொல்ட்டா ! 
அப்டீன்னு ஒரு மேரி நம்பல மச்சிகினாங்கோ ! 
நம்பாளு நொட்ட இன்னாடான்னா ! கலரு 
கண்ணாடி ,அப்பால வாசான வருமே ! அத்தே 
தடவிக்கினு ஒரே குசால் தான் போ.அப்ப தான் நம்ப 
ஏரியால மளீ கட ,அட அதாம்பா இந்த அல்லாமே 
விக்கற கட , அதான் , அதுக்கு நா ஒரு கூள் ட்ரிங்கு 
குடிக்கலான்னு, போனே, அங்க பாத்தா 
ஒரு போர்ட்டு வச்சி கீது, அதுல போட்டு கீது ..  
"கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து
கடன் கேட்காதிர்கள் "  

அப்டீன்னு போட்டு இர்ந்துசி , அவன கூப்ட்டு, டேய் , 
கசமாலம் இன்னடா இதுல எழதி கீது அப்டீனு கேட்டேன் ,
அதுக்கு அவன், டவுசரு இன்ன பிரியல உனக்கு நீ தான் 
உஸ்தாது கணக்கா ,ஊருக்கு அல்லாம் போய் வந்தியே ! 
இன்னா டவுட்டு சொல்லு அப்டீன்னா !
அதுக்கு நா டேய் இதுக்கு வரிக்கு வரி நீ எனக்கு அர்த்தம் 
சொல்லு இல்லன்னா உன் நெஞ்சில கீற மஞ்சா சோத்த 
எட்துடுவேன் அப்டீன்னு கொரலு உட்டேன் ,அதுக்கு 
அவன் இரு நா சொல்லறேன், இன்னுட்டு கான மயிலாட , 
அப்டீனா காட்டுல மயில் டான்சு ஆடுது, அடுத்து கடன் 
வந்து மேலாட - அப்டீன்னா , கடன்னு நம்ப மேல 
டான்சு ஆட, அடுத்து வாங்கியவன் கொண்டாட உன்ன 
மேரி ஆளுங்கோ , குசலா ! இருக்க சொல்ல,  
நான் இங்கு திண்டாட - நா நாமத்த போட்டுக்க ,  
தயவு செய்து கடன் கேட்காதிர்கள் " உன்ன கெஞ்சி
கேட்டு கீறேன், கடன் மட்டு சொல்லாதேபா !! 
இத்தா மேட்டரு , இன்னு சொல்லி ஒரு வையா 
முட்சாம்பா , எனுக்கு கோவமான கோவம்
வந்து அவன புட்சி  டேய் சோமாறி ,  
மயிலு காட்ல கீது அது டான்சு அடனா, உனுக்கு 
இன்னா ? அப்பால ,உனுக்கு கடனு கீதுன்னா ,
அத்த நீ தாண்டா சோமாரி அடிக்கணும் அத்த 
வுட்டுட்டு ,??  நீ நாமாத்தன்னா போட்டுக்கோ ! 
இல்ல காட்டி வேற எத்தனா போட்டுக்கோ ? 
எனுக்கு இன்னடா ? ஓயுங்கு மரியாதையா ,இந்த 
போர்ட எட்துடு , கடன் இல்லன்னா !
"நம்ப கடைல கடன் இல்ல" அப்டின்னு 
எய்து இன்னு சொல்லி ரெண்டு போடு போட்டுட்டு 
அப்பால தான் நா ஊட்டுக்கே வந்தேன் .  
பின்ன இன்னாபா ! ஒரு நியாயம் வாணாம் ! 

நீயே சொல்லு ????????


தோ , வந்துகீனே கீறேன் ..

· 14 கருத்துகள்

myspace layouts

நம்ப டிவி சேனலுக்கு நம்ப நொட்ட சேகரூ, அப்பால நானு 

ஒரு பேட்டி எட்து குட்தொம் பாரு அதுக்கு இன்னாட டவுசரு

நீயு சேகரூம்,வெளீ நாட்டுக்கு போறீங்களா ! அப்பிடீன்னு 

கேட்டாங்கோபா ! செரி இன்னடா இது நம்பளுக்கு வந்த 

சோதன அப்பிடீன்னு பொட்டிய எட்துகீனு கேலம்பிட்டம்பா ! 

ஆவர்த்து ஆவட்டுன்னு அக்காங், நா போன எடத்த நீயு தான் பாரேன் !நம்ப வண்டிய பாத்த உட்னே, நொட்ட  பேஜார ஆய்டான்பா !
மாரியாத்தாவ வேண்டிக்கினு வாடான்னு சொல்லி
கேளம்பிட்டம்பா, 

!!! ஆத்தா இந்த பசங்க கைல இருந்து அந்த ஊரே காப்பாத்து !!!!


யப்பா !!! இந்த பசங்கோ போல்டு நெட்டுல்லாம்  ஒயுங்கா
போண்டான்களோ ? இல்லியோ ?  தெர்லியே ? மாரியாத்தா !  
வியுந்தா, ஐயோ !  


இன்னா ஊருபா இதுன்னு கேட்டா ! 
அது இன்னமோ கோலமாவு பூரு
( கோலா லம்பூர் ) 
எவ் வாயிலே வர்லேபா.


டேய் நொட்ட இது இன்னாடா ! அக்குறும்பா கீது ?
படுக்க வச்சி கட்டி அப்பால நெமித்திட்டானுக்களா ? 
நம்ப ஊரே இதுல குட்தனம் வக்கேலம் பல்து,முருகா !!! ஒயுங்கா நம்பல ஊட்  
இட்டும் போய் சேறு நைனா !
யப்பா ! கீய வுழ்ந்தா தெறியு அப்பால நேரா 
எமலோகம் தான் .


வெள்ளாட்டு கார பசங்கோ ! நம்ப வவுத்துல 
கீரது அல்லாத்தையும்
வாய் வையா வந்துடும் போல கீது ?

                               
மொத ஆளா நிக்கறது தா நொட்ட ,
அப்பால நா ( டவுசர் பாண்டி )
 
அந்த கோலமாவு ஊர்ல இர்ந்து வேர ஊரு வன்டம்பா !
இன்னாடா இது நம்ப சிங்கபூரு .  


டவுசர் பாண்டி  

அந்த சிங்கோ பெர்சா நா பெர்சா


நா இன்னா உன்ன சூப்பு வச்சா சாப்ட போறேன் ? 
மெர்சலா ஆவாதே கண்ணு .  
நம்பலுகு கிளி மேல பாசம் கீது பா !

நம்ப மினிமா பாத்தா செத்தேம்பா  ஐயோ !  
செரியா பூட்சீ

அவ்ளோதான் !


செரி அப்பால உங கர்து இன்னா அப்டீன்னு எழ்து நைனா ! முடிஞ்சா ஒரு ஓட்ட தான் போடம்பா ! ஐயே ! நா இன்னா எலெக்சன்னு ஒட்டா கேக்கிறேன் . வர்ட்டா ! அய்யே ! மறக்காதே கர்து போடு.


இது ஒரு கற்பனை பேட்டி.

· 9 கருத்துகள்

செய்திகள் ; நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு

அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனை.


இதை கேட்ட நம்ப டவுசர் பாண்டி,அவரோட

தோஸ்து நொட்ட சேகரை கூட்டிக் கொண்டு

அனைத்து கட்சி தலைவர்களையும் பேட்டி எடுக்க

புறப்பட்டு விட்டார் .

இனி முதலில் , கேப்டன் விஜயகாந்த்,


டவுசர் பாண்டி ; டே சேகரு நம்ப கேப்டன் கிட்ட

நா பேசர கண்டி நீ வாய தொரக்காதே , அப்பாலே

அவரு நம்ப மேல காண்டு ஆய்டுவாரு அக்காங் சொல்டேன். .

நொட்சேக; ஐய இன்ன கொழந்தன்னு நின்சியப்பா,

நா கம்முனு கீறேன்

கேப்டன். வீட்டுக்குள் வந்துவிட்டார்கள் . இனி ,

டவு,பாண்; வன்கம் தலைய்வரே , உன் கிட்ட

ஒரு சில கொஸ்டீனு கேக்கலாம்முன்னு

ஹி, ஹி .. ( பயத்துடன் )

கேப்; கேளு தம்பி ,

டவு,பாண்; நீங்க கூட்டணி வைப்பீங்களா ? மாட்டீங்களா ?

கேப்; அது தேர்தல் வரும்போது சொல்றேன் ,

டவு,பாண்; ஐயே அதான் வன்ச்சீ பா !

கேப்; இது தேர்தலே இல்லே ! எங்களை

கேட்காமல் தேதி அறிவித்து விட்டார்கள்,

ஆகவே ,இது செல்லாது என என் தொண்டர்களிடம் கூறுகிறேன்

டவு,பாண்; செரி , நீ அவுகள நம்பறியா இல்லையா ?

கேப்; யாரே, ?

டவு,பாண்; அதாம்பா ,இந்த தேர்தலு கமீசன தான் ,

கேப்; அது தான் இடைத் தேர்தலில் அவர்களின் சுய ரூபம் தெரிந்ததே,

டவு,பாண்; செரி , நீங்க இந்த தேர்தல்ல எத்தீனி

சீட்டு கெலீப்பீங்கோ , கரீக்ட்டா சொல்லு

கேப்; இது நம் தமிழர்களின் தன் மானம் காக்கும்

தேர்தல் ஆகவே ,( சற்று குனிந்து தன்

மனைவி பெரேமலதாவிடம் எவ்வளவு சொல்லலாம் ,)

(அவர்கள் , சொல்லு மொத்தம் சொல்லு ).

ஆகவே மொத்தம் உள்ள முப்பத்தி நாலு

தொகுதிகளும் எங்களுக்கு தான் இது ஒரு சரித்திர சாதனை.

டவு,பாண்; அப்போ வர்ட்டா, தலீவா !

கேப்; போய் வா .

நொட்ட ; எப்பா நா ஒரு கேள்வி கேக்கட்டா ?

டவு,பாண்; சொம்மாறு தேவல! ,

கேப்; - தம்பி நீ கேள் .

நொட்ட - மொத்தம் எத்தினி தொகுதீ

இன்னு கூட தெரியாம தான் நீ அர்சீலு பன்றீயப்பா?

டவு,பாண்; ஐயோ ! மாப்பு வெச்சாண்ட ஆப்பு .

( இருவரும் எஸ்கேப் )

அடுத்து ,நம்ப அம்மா, வீட்டுக்கு செல்கின்றனர் .

நொ,சே ; வாணாம்ப்பா . அப்பால நம்ப டவுசர கெய்டீடுவானுகோபா,

டவு,பாண்; மெர்சலா ஆவாதே, கண்ணு நா கீறேன்

டவு,பாண்; ; யம்மா ,உங்க கோட்டனி ல யாரு யாரு கீறாங்கோ!

அம் ; சசி ,இவர் என்ன சொல்லராரு ?

சசி ; யக்கா ,இது தமிழ் தான்,ஆனா கொஞ்சம் உன்னிப்பா கவனி.

அம் ; சரி சரி

டவ் ; யம்மா ,உங்க கோட்டனி ல யாரு யாரு கீறாங்கோ! ;

அம் ; சகோ வைகோ ,மற்றும் கம்யுனிஸ்ட் பிறகு

சகோ டாக்டர்க்கு தூது விட்டுள்ளேன் இது வெற்றி கூட்டணி.

டவ் ; உங்க கய்ல தா டமில் நாட்டோட மானமே கீது

அப்பெடின்னு அல்லாரும் சொல்லி கீறாங்கோ அது மெய்யாலுமா?

அம் ; இதுல என்ன சந்தேகம்? என் கூட்டணி தான் வெல்லும்

அடுத்த பிரதமர் யார் என்பதை நான் தான் தீர்மானிக்க போகிறேன் .

( உடனே சசி , யக்கா , எனக்கு தான் அது )

டவ் ; சேரி ,எத்தினி சீட்டு கேலீப்பீங்கோ!

அம் ; இன்னடி சொல்றான்.

சசி ; நாம எத்தனை தொகுதி வெற்றி பெறுவோம் அப்படின்னு கேக்கிறான்.

அம் ; இதுல என்ன சந்தேகம் 40 -ம் நமதே.

டவ் ; யம்மா இந்த இளங்கே பிரச்சன பத்தி?

அம் : நான் உண்ணாவிரதம் இருந்து பாதி தீர்ந்து விட்டது.

டவ் பா : மீதி எப்போ சொல்லு?

அம் : நான் இந்த தேர்தலில் பிரதமர் ஆகி இலங்கை

பிரச்னையை தீர்த்துவேடுவேன்.

டவ் பா ; மன்சீகம்மா, இது என்கு தெர்யாம பூடுச்சி.

அம் ; பர்வாலப்பா, இப்போ இன்னா அய் பூட்ச்சின்னு

நீ மெர்சலு அவரே, ஐயே !.

சசி ; அக்கா, நீ என்ன சொல்றே,

அம் ; இவன் கிட்ட பேசனா, ஒரே கொழ்பமா கீது,

இவ்னே உட்னே காலீ பண்ணு.

( சசி, ஒரு முறை முறைக்க நம்ப டவ் பா, மற்றும் நொட்ட எஸ்கேப் )

( அறிவாலயத்தில் ஆஜர் ஆகின்றனர் )


டவ் பா, நொட் ; வன்கம் தலீவரே!

கலைஞர்; வா, தம்பி வா ,உன் தினவெடுத்த தோள்களுக்கு ,

தோள், கொடுக்கவே யாம் உள்ளோம்

நொட் ; இன்னாப்பா சொல்றாரு,

டவ் பா ; கண்டுக்காதே.

டவ் பா ; தலீவரே, நீ உடம்பு செரிஇல்லாத மன்சாலு

அதா கண்டி ஒரே ஒரு கேள்வி தான் பா,

கலை ; தம்பி, என் மனதிற்கு இன்னும் வயதாகவில்லை,

அதனால் நீ எதுவும் கேள்.

டவ் பா ; டான்குசுபா, செரி, இந்த தபா எலீசனுல நீ இன்னா

அறிக்கே குடுக்க போரெ? அத்தே மின்ன சொல்லு?

கலை ; என் தேர்தல் அறிக்கையை கேட்கின்றாயா?

டவ் பா ; அக்காங்க்பா ,

கலை ; தேர்தல் நேரத்தில் என் அறிக்கை வரும் பார்.

போன தேர்தல் நாயகனே, என் தேர்தல் அறிக்கை தான்

என்பதால் தான் நீ இப்படி கேட்கின்றாய் என எனக்கு புரிகிறது ,

டவ் பா ; அப்பால, யார் கூடோ தான் தோஸ்தா ஆவ போறே ?

கலை ; எல்லோரும் என் நண்பர்கள் தான்.

டவ் பா ; இப்பிடி சொன்னா இன்னாபா!

( ஆற்காடு ,ஸ்டாலின் ,மற்றும் துரைமுருகன் ஆகியோர் நம்மிடம்

தயவு செய்து கிளம்பு, என அன்பு உத்திரவு போட எஸ்கேப் )


அடுத்து நொட்ட சேகரு டவுசர் பாண்டி கிட்ட மாப்பு

அடுத்ததா எங்க போவலானு சொல்லு பா,

டவ் பா , மச்சி, நம்ப முக்கீமா ஒர்தர பாக்க லாம்ப்பா ,

நொட்; யாரு மாப்பு,

டவ் பா ; நம்போ டாக்டருதாம்பா !
(தைலாவரம் தோட்டத்தில் )

டாக் : வணக்கம், தோழா, உன் போன்ற உழைக்கும் நண்பர்களை
நம்பி த்தான் இந்த நாடே இருக்கிறது.

டவ் பா ; வன்கம் தலீவரே, அப்பாலே, உங்க கிட்ட ஒரு கேள்வி.

டாக் ; கேள் தம்பி.

டவ் பா ; இப்போ நீங்கோ எந்த கூட்டணில தாம்பா கீற?

டாக் ; ( மணி ,நாம் இப்போ யாருடன் இருக்கிறோம், என யோசித்து சொல் )

மணி ; அய்யா, நாம் இருவருடனும் பேசி வருகிறோம் .

டவ் பா ; ஐயே, கரீக்டா சொல்பா!

டாக் ; இந்த தேர்தல் முடியட்டும், இதில் யார் ஆட்சி

அம்மைக்கின் றார்களோ? அவர்களூடன் தான் கூட்டணி
என அறிவித்து விடுகிறேன் . சரி தானே மணி.

மணி ; ஆம் அய்யா !

டவ் பா ; ஒன்னிமே புர்லேபா !

டாக் ; இதில் புரியாததற்கு என்ன இருக்கிறது ? இருவருடனும்
கூட்டணி என அறிவித்து விட்டு அதில் யார் அதிக தொகுதி
வெற்றி பெறுகிறார்களோ, அந்த கூட்டணி தான் நம் கூட்டணி
என அதிகார பூர்வமாக அறிவித்து விடுகிறேன்.

( இதை கேட்ட நம் நொட்ட சேகரு மற்றும் டவுசர்
பாண்டி இருவரும் மயங்கி விழுகின்றனர்)

சொம்மா தமாசா ஒரு ஓட்ட போடு தலிவா,
நா இன்னா வேரெ ஒட்டா கேகீரே.
ஊன் கர்த்து இன்னான்னு சொல்லு அக்காங்,
நம்பல மேரி ஆளுக்குளுக்கு அதாம்பா மிக்கீயம்.நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh