அன்பு தோஸ்த்து , சைவக் கொத்து பரோட்டாவின் விருப்பத்திற்காகவும்
ஹாலிவுட் பாலா - மற்றும் யூர்கன் , & கக்கு இவங்கோ !! ஏரியா கவித
கேட்டதுக்காவும் , மற்றும் நமது ரசிகர்களுக்காகவும் ,
( சொம்மா ஒரு பந்தா தான் , கண்டுக்காத )
இந்த கவித( அடிக்காத தல ) டவுசர் பாண்டியால் எழதப் பட்டது .
சண்டேன்னா ரெண்டு ,இன்னு தினமலர் பேப்பரு மட்டும் தான் ,
வரணுமா , நம்ப கவித ( ? ) வரக் கூடாதா ?
அதுக்காக சண்டே வெரிக்கும் வைட்டு பண்ண முடியுமா ?
நம்ப தோஸ்துங்கோ !! திட்ட மாட்டாங்களா ?
இன்னு , ரோசன பண்ணி , இப்பவே , இந்த ரெண்டும் போடறேன் தல !
நம்ப ஏரியா கவித ( ? )
நாலனாக்கு பூவு வாங்கி
நாலு பேருக்கு வெச்சேன் ,
அதுல ,
வண்டைப் போல நீயும்
வந்து வாட்டிட்டியே - என்
நெஞ்ச !!
காள மாடு கயனித் தண்ணி
குடிக்கறத கண்டு
காண்டு ஆயிப் போனேனே
சின்ன இளம் சிட்டு .
ஆக்கி வெச்ச மீனு கொயம்பு மேரி ,
நீ அல்வாவாட்டமா கீரே,
எடக்கி எட போட்டு பாத்து
மேட்டர தான் சொல்றேன்
ஊரு கண்ணு பட்டிடும்
உள்ள வாடி கண்ணு
உ அயக்கப் பாத்து
மயங்கினேனே - நானு
ஒரு மக்கு !!
--------------------------------------------------------
விடியல் .
விடிகின்ற விடியலை ,
விழித்துப் பார்ப்பதற்குள்,
இறந்து விட்டேன் .
நான் விடியலை - வெறுப்பவன் .
-----------------------------------------------------------------
இது போனஸ் ஹைக்கூ ( அப்பிடியான்னு தெர்ல ) நீங்க தான்
சொல்லணும் .
சொல்லணும் .
வித்திர்த்துப் போட்டது உறக்கம்
கனவில் ,
உன்பின்னே - யாரு ?
தல ( இது மேரி சொல்றதால நானு அஜித் ரசிகரா இன்னு நெரியோ
பேர் கேக்குறாங்கோ , கண்டிப்பா இல்ல , அதுக்காக அவர புடிக்காது
இன்னு இல்ல , இது எங்க ஏரியால சொல்ற ஒரு வார்த்த ஒரு சொல்
எப்பிடி ஒன்னாலும் வெச்சிக்கலாம் )
உங்க கருத்த ரவ சொல்லுங்க தல !!
ஒட்டு நீங்க போடுவீங்க இன்னு தெரியும் !! இருந்தாலும் கேக்காம ,
இருந்தா ? அது நால்லாவா இருக்கும் , அதனால உங்க
பொன்னான ஓட்டை , டவுசர் சின்னத்துல நிக்கற ( அல் ) உக்காந்து
இருக்கும் ,பாண்டிக்கு போட்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன் பா !!
பொன்னான ஓட்டை , டவுசர் சின்னத்துல நிக்கற ( அல் ) உக்காந்து
இருக்கும் ,பாண்டிக்கு போட்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன் பா !!









