பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

கூகிள் வீடியோக்களை நமது பிளாக்கில் இணைப்பது எப்படி ?

·


தலீவா !! எல்லாருக்கும் வணக்கம் , இப்போ , நெரியோ கூகிள் வீடியோ கீது , அதுல எந்த தலைப்புல கீர,
வீடியோ ஒனும்னாலும் நம்ப பிளாக்குல வர வெச்சி நம்ப பிளாக்க
பாக்கறவங்க , இந்த வீடியோவையும் பாக்கறா மேரி பண்ணலாம் .


செரி, இப்போ அதுக்கு மொதல்ல நீங்க உங்க கூகிள் அக்கௌன்ட்ட 
ஓபன் பண்ணி வெச்சிட்டு , இந்த எடத்துக்கு போங்க , 


            

படத்துல கீரா மேரி ஒரு பேஜ் ஓபன் ஆவும் , அதுல 1 , இன்னு இருக்குற 
எடத்துல உங்களுக்கு தேவையான தலைப்பு குடுங்க , நானு வடிவேலு 
காமிடி குடுத்து கீரேன், அடுத்து , 2 , இன்னு இருக்குற எடத்துல , உங்க 
பிளாக்கு அட்ரச குடுங்க , அப்பால ,

3 , இன்னு கீர எடத்துல generate code இன்னு இருக்குற அமுக்கி அதனோட 
கோட எடுங்க ,கீய கீர படத்த பாருங்க !! 

                    


அப்பால வயக்கம் போல  

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,

இப்போ , இதை எந்த எடத்துல வெச்சா நல்லா இருக்கும் இன்னு 
நீங்க நெனைக்கேரீன்களோ !! அந்த எடத்துல வர வெக்க , 
கீய கீர படத்துல இருக்குறா மேரி பண்ணாக்கா , போதும் .அப்பால , 

       


      

ரொம்ப மிக்கியமான விசியம் பதிவு புடிச்சா ஒரு ஓட்ட போடுங்க 
தலீவா !


23 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா said...

ரொம்ப டாங்க்ஸ் தலீவா. ஓட்டு போட்டுகினு வரேன்.

S.A. நவாஸுதீன் said...

இனி ஷோக்கா படம் காட்டலாம்பா. தேங்ஸ்பா.

டவுசர் பாண்டி said...

//சைவகொத்துப்பரோட்டா கூறியது...
ரொம்ப டாங்க்ஸ் தலீவா. ஓட்டு போட்டுகினு வரேன்//

வாங்க தலீவா !! உங்க வருகைக்கி + கருத்துக்கு + ஓட்டுக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
இனி ஷோக்கா படம் காட்டலாம்பா. தேங்ஸ்பா.//

அண்ணாத்தே !! வன்க்கம் , சொம்மா ரீஜின்ட்டான படத்த மட்டும் காட்டலாம், தலீவா !! வேற இன்னான்னா மேரி அக் அக் காங் !! போட்டு பேஜாரா ஆய்டப் போவுது , இன்னா நா சொல்றது !! கரீக்டா !! வந்து கண்டுக்கனதுக்கு
டான்க்ஸ் தல !!

Mohan said...

தல.... படம் காட்றதுக்கு வழி சொன்னதுக்கு ரொம்பவே டான்க்சுப்பா!...

டவுசர் பாண்டி said...

//தல.... படம் காட்றதுக்கு வழி சொன்னதுக்கு ரொம்பவே டான்க்சுப்பா!...//-Mohan கூறியது.

சொம்மா அதிரி புதிரியா, வந்து கமண்ட்டு குட்ததுக்கு டாங்க்ஸ்
வாஜாரே !!

வேலன். said...

சொக்காகீதுபா.... வாழ்க வளமுடன், வேலன்.

RAJESH said...

இன்னா தலிவா சோக்கியமா? சோக்கான மேட்ருதான் வூட்டாண்ட ஆல கானுமே பூட்டியானு பாத்தேன் ....

டவுசர் பாண்டி said...

//சொக்காகீதுபா.//-வேலன். கூறியது.

ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

// ஆல கானுமே பூட்டியானு பாத்தேன்//- RAJESH கூறியது.

ஐயோ !! ஐயோ !! மாரியாத்தா , ஒரு பத்து நாள்கு இல்லன்னா , பாட கட்டி பாலு ஊத்திடுவாங்கோ !! போல கீதே !! இன்னா நாயம் இது ? அக்காங் !!

S.A. நவாஸுதீன் said...

Hi syednavas,

Congrats!

Your story titled 'கூகிள் வீடியோக்களை நமது பிளாக்கில் இணைப்பது எப்படி ?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd February 2010 11:49:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/179292

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

டவுசர் பாண்டி said...

அட , வவுத்தெரிச்சல கலப்பாத தல , இன்னா தான் ஓசில குட்தாலும் , நம்ப கூகிள் கார அண்ணாத்த இது மேரி நம்பள பண்ணக் கூடாது !! இந்த கூகிள் லிங்க் குடுக்கறதுக்கு நா பட்ட பாடு கீதே !! மாரியாத்தா !! அலகு குத்தி லாரியே இழுக்குறா மேரி பூடுது பா !! அதுக்குள்ளே , நம்ப தமிளிஷ் காரா அண்ணாத்தைக்கி மொரப்பு வந்து , நம்பள அல்லேக் குட்துட்டாறு , சாரி, யுவர் url இஸ் நாட் கரெக்ட் இன்னு போடு போட்டு ஒரு வயி பண்ணி உட்டுட்டாரு , ப்ளீஸ் கிளிக் டூ times on the url இன்னு வந்துது செரி நானும் டூ டைம்ஸ் கிளிக்க்கோ கிளிக் பன்னேன்பா !! உடனே இது மேரி வருது யாரு அந்த மன்சனோ , அவரு பேரு போட்டு summitted இன்னு வருது , ஆனா ஒன்னு நல்ல காலம் கிளிக் பண்ணாக்கா கரீக்டா எம் பிளாக்கு போவுது ? இன்னா பண்றது சொல்லு . ... மன்சே உடஞ்சி பூடுச்சி தல .

S.A. நவாஸுதீன் said...

இன்னா தல. இம்பூட்டு வெவரமான ஆளு நீயி இது தெரியாம பூடுச்சே ஒனக்கு. நீ பதிவு போட்டப்போ ரொம்பநேரங்காட்டி தமிழிஷ்ல கோர்த்து உடாம இருந்தியா, நாந்தான் தல கோர்த்து உட்டேன். என்னா போ. சப்ப மேட்டரு இதுக்கு போயி பேஜாராயிட்டியே.

டவுசர் பாண்டி said...

தல , தல , யாரோ ஒரு மன்சன்னு நென்செம்பா !! ஐய்யா !! அது நீங்க தானா ? செரி , நம்ப தோஸ்த்து தானே இன்னா இப்போ !! நானு தமிளிஷ்ள இப்பிடி , வந்த உடனே பாத்தேன் , செரி இதுக்கு போய் டீட்டைலு குடுக்கறதா இன்னு உட்டுட்டேன் பா !! யாராது கேட்டாக்கா சொல்லிக்கலாம் இன்னு இருந்தேன் , ஆனாக்கா பாருங்க யாரும் சொல்லல , நீங்க கூட உங்களுக்கு மெய்லு வந்து இருக்கும் அதனால தான் பாத்து கீரீங்கோ, கரீக்டா !!

Mrs.Menagasathia said...

அண்ணாத்தே பதிவு ரொம்ப ஷோக்கா கீது ப்பா...

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்தே பதிவு ரொம்ப ஷோக்கா கீது ப்பா//-Mrs.Menagasathia கூறியது.

உங்க கருத்துக்கு , ரொம்பவே , டாங்க்ஸ் சகோதரி !!

shan said...

HAI THIS IS SHUNMUGAM YOUR INFORMATIONS ARE VERY NICE PL DOING LIKE THIS IN UR BLOG http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

shan said...

HAI THIS IS SHUNMUGAM YOUR INFORMATIONS ARE VERY NICE PL DOING LIKE THIS IN UR BLOG http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

Jaleela said...

அண்ணாத்தா இனி நவாஸ் சொன்ன மேரி ஷோக்கா படம் காட்டலாம், மாரியாத்த கோயிலண்ட் இருந்து எப்படி பா இப்படி யெல்லாம் வெளுத்து கட்ரீங்க‌
இதுவரை வீடியோ இனைக்கல தேவைப்ப்பட்டால் இங்கு வந்து டிப்ஸ் பெற்றுகொள்ளலாம் இல்லையா

நீங்க என்னோட வயதில் பெரியவரா என்னன்னு தெரியல நான் பதிவு போடும் போதேல்லாம் பதிவு பாணியிலேயே பதில் போடுறேன்,,

ஒன்னுய பிரச்சனை இல்லையே

Jaleela said...

//இன்னா தல. இம்பூட்டு வெவரமான ஆளு நீயி இது தெரியாம பூடுச்சே ஒனக்கு. நீ பதிவு போட்டப்போ ரொம்பநேரங்காட்டி தமிழிஷ்ல கோர்த்து உடாம இருந்தியா, நாந்தான் தல கோர்த்து உட்டேன். என்னா போ. சப்ப மேட்டரு இதுக்கு போயி பேஜாராயிட்டியே//

ஹா ஹா நவாஸ் கரீட்டா பேசிட்டீங்க

டவுசர் பாண்டி said...

//நீங்க என்னோட வயதில் பெரியவரா என்னன்னு தெரியல நான் பதிவு போடும் போதேல்லாம் பதிவு பாணியிலேயே பதில் போடுறேன்,,//

உங்களுக்கு அண்ணாத்தையா தான் இருப்பேன் !! சகோதரி !!
எனக்கு ( 40 + )

//ஒன்னுய பிரச்சனை இல்லையே//

இப்பிடி போட்டா தான் என் எழுத்துக்கு பெரும ( ? ) தாராளமா போடுங்க !!

Jaleela said...

right baa

palapavanam said...

நன்றி தலிவா சோக்காஇக்கு '|||||||||||

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh