பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டான்சு ஆடற படம் ( gif ) - எப்பிடி பண்றது ?

·அன்பான பதிவுலக தோஸ்துங்களே !! அல்லாருக்கும் வணக்கம் ,

இப்போ !! இந்த பதிவுல , நீங்க சில gif போட்டோக்கள ,பாத்து 
இருப்பீங்கோ !! அதாவது , ஓடரா மேரி , நடக்கறா மேரி , உன்னும்
நெரியோ, அதல்லாம் இப்ப இப்ப ரொம்ப சிம்பிளா எப்பிடி பண்றது ,
இன்னு பாக்கலாம் !! 

மொத்தல்ல , இங்க போய், இந்த சாப்டு வேர டவுன் லோடு 
பண்ணிக்கோங்க !! தல , (சின்னது தான் , 20 kb அளவு )

அப்பால , அத extract , பண்ணி ரன் பண்ணிட்டா , போதும் , செரி ,
இப்போ !! பெயிண்ட் ஓபன் பண்ணிக்கோங்க !! அதுல ஒரு சின்ன 
கோடு , போட்டு ,save as ல , கிளிக் பண்ணி , டெஸ்க் டாப் ல save 
பண்ணுங்க ,gif பைலா தான் save பண்ணனும் ,

இப்போ , மறுபடி பெயிண்ட் போய் உன்னொரு கோடு வேர கலர்ல 
போட்டு அதே மேரி save ,பண்ணுங்க .

நானு இந்த மேரி போட்டு கீரேன் பா !! ரெண்டு படமும் பாருங்க ,


 இப்போ !! இது ரெண்டும் சேந்து இன்னா , மேரி ஆட்டம் போடுது 
பாருங்க , தலீவா !! 

Photobucket

அப்பால , இந்த software ஓபன் பண்ணா , உங்களுக்கு இது மேரி 
வரும் 

,

இதுல , இருக்குற காலி எடத்துல நீங்க save பண்ண gif போட்டவ ,
ஈத்து உடுங்க , அதாம்பா ட்ராக் பண்ணி உடுங்க , உன்னோன்னையும் 
அதே மேரி பண்ணுங்க , 

இப்போ !! Make animated gif இன்னு கீரத ஒரே அமுக்கு அமிக்கி 
எங்க save பண்ணணுமோ !! அத குடுத்து save பண்ணிடுங்க ,
வேல முடிஞ்சிது ,

நல்லா டிராயிங் வரையத் தெரிஞ்சவங்களுக்கு , கூடவே கற்பனை 
அதிகமா கீரவங்களுக்கு , ( நம்பளுக்கு இல்லப்பா !! ) 
பொம்ம போட்டு , இது மேரி ஈசியா நெரியோ பண்ணலாம் பா !! 


அய்யே !! பட்சிட்டு அப்பிடியே போனா !! இன்னா அர்த்தம் ,
ரவ ஒட்டு போட்டுட்டு போங்க தல , கருத்தும் போட்டா 
நானு இன்னா வானாம்னா சொல்லப் போறேன் !!  
Photobucket

42 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா said...

ஜோராகீதுப்பா இந்த வெளாட்டு, ஓட்ட போட்டதுக்கு அப்பால நானும் இத்த ட்ரை பண்ணப்போறேன்,
டான்க்சு தலிவா, வர்ர்ட்டா :))

தம்பி.... said...

இன்னா மாரி, படா,படா பதிவெல்லாம் சோக்கா போடுற நைனா...
கம்பூட்டர் பயலுவ எல்லாம் பீட்டரு உட்டுகினு இருக்கப்ப நீ படா சோக்கா மெட்ராசு பேசுற நைனா....

Prathap Kumar S. said...

சோக்காகீதுபா...

நட்புடன் ஜமால் said...

மேட்டரு ஜூப்பராக்கீது

கொஞ்சூண்டு திறமையும் வேணும் போலிருக்கே

அது எங்கனா தரவிறக்க இயலுமா

டவுசர் பாண்டி said...

//ஜோராகீதுப்பா இந்த வெளாட்டு,//-சைவகொத்துப்பரோட்டா கூறியது.

இது வெள்ளாட்டுக்கு ,மட்டும் இல்ல தலீவா !! ரோசன பண்ணி செஞ்சாக்கா, ஓடாரா மேரி எல்லாம் கூட பண்ணலாம் கர்த்துக்கு டாங்க்ஸ்பா !!

Menaga Sathia said...

இந்த வெளாட்டு ஷோக்காகீதுப்பா...

டவுசர் பாண்டி said...

//இன்னா மாரி, படா,படா பதிவெல்லாம் சோக்கா போடுற நைனா..//-தம்பி.... கூறியது.

ஹி , ஹி அதல்லாம் ஒன்னியும் இல்ல தலீவா , ஏதோ, ரவ நோண்டி ,கீண்டி, பாத்துட்டு சொல்றேன் தல !! மொத தபா !! நம்ப ஏரியாவுக்கு வந்து கண்டுக்கீனதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//சோக்காகீதுபா..//- நாஞ்சில் பிரதாப் கூறியது.


இன்னா தல !! சோக்கீமா, கீரியா ? என்ட்ரி குட்ததுக்கு டாங்க்ஸ் பா !!

ஜெய்லானி said...

இன்னா ஆட்டம் ஆடுதுபா.இந்த எறும்பு.

டவுசர் பாண்டி said...

//கொஞ்சூண்டு திறமையும் வேணும் போலிருக்கே//-நட்புடன் ஜமால் கூறியது,என்னைப் பாத்ததுக்கு அப்பாலியுமா , இந்த டவுட்டு , கர்த்துக்கு டாங்க்ஸ்
தல !!

ப.கந்தசாமி said...

ஆஜர் கொடுக்றேன் தோஸ்த்து

டவுசர் பாண்டி said...

//இந்த வெளாட்டு ஷோக்காகீதுப்பா.//-Mrs.Menagasathia கூறியது.

நம்ப கிட்ட கீர, எதுனா போட்டோ கூட பெயிண்ட்ல போய், GIF ஆ மாத்தி இது மேரி செய்யலாம் !! கர்த்துக்கு டாங்க்ஸ் சகோதரி !!

டவுசர் பாண்டி said...

//இன்னா ஆட்டம் ஆடுதுபா.இந்த எறும்பு//-ஜெய்லானி கூறியது.

நானு இன்னாவோ பொம்ம வரையறதா நென்சிடம்பா !! அது எறும்பு மேரியா கீது ? செரி ஏதோ ஒன்னு நடந்தா
செரி !! உங்க என்ரிக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

பத்மா said...

wow wow super super

டவுசர் பாண்டி said...

//ஆஜர் கொடுக்றேன் தோஸ்த்து//-Dr.P.Kandaswamy கூறியது.

அட பெரிய வாஜார் , வாங்க தல !! உங்க கர்த்துக்கு டாங்க்ஸ்
அண்ணாத்தே !!

டவுசர் பாண்டி said...

//wow wow super super//-padma கூறியது.

சவுண்டு குட்துக்கீனே , என்ட்ரி ஆனதுக்கு டாங்க்ஸ் தங்கச்சி !!

சசிகுமார் said...

தலீவா இன்னாமெறி மேட்ர சொல்லிட்ட! ரொம்ப தேங்க்ஸ் பா

அண்ணாமலையான் said...

super....

டவுசர் பாண்டி said...

//தலீவா இன்னாமெறி மேட்ர சொல்லிட்ட! ரொம்ப தேங்க்ஸ் பா//-சசிகுமார் கூறியது.

வாங்க சசி தலீவா !! உங்க கர்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//super..//-அண்ணாமலையான் கூறியது.

ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

Chitra said...

ஜோரா ஆட்டம் போடுது. தேங்க்ஸ் பா.

டவுசர் பாண்டி said...

//ஜோரா ஆட்டம் போடுது. தேங்க்ஸ் பா.//-Chitra கூறியது.

கொஞ்சம் முயற்சி பண்ணாக்கா !! நாம வரஞ்சத ஓட உடலாம் !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் சகோதரி !!

ManA © said...

நன்றி தலிவா?

பெருங்காயம் said...

சுப்பராக்கீது வாத்யாரே

பெயரில்லா said...

தல சூப்பர் தல....... உங்களோட இந்த தமிழ் படிக்குரதுக்க்காகவே உங்க ப்ளாக் வருவேன்........
நீங்க பேசுற தமிழ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.........

அபி.

வேலன். said...

நம்ப ஆளுங்களையே டான்ஸ்ஆட உடலாமா? வாழ்க வளமுடன். வேலன்.

Unknown said...

என்னாமா எறும்பு டான்சு ஆடுது... நல்லா இருக்கு டான்சு ஆடுவது..

டவுசர் பாண்டி said...

//நன்றி தலிவா?//-ManA கூறியது.

இன்னாத் தலீவா !! இதுக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கீனு !! நீங்க நம்ப ஏரியாவுக்கு வந்து கண்டுகுனதுக்கு நான் தான் ,தல டாங்க்ஸ் குடுக்கறேன் .

டவுசர் பாண்டி said...

//சுப்பராக்கீது வாத்யாரே//-விஜய் கூறியது.

வா , தல !! உங்க கர்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//தல சூப்பர் தல....... உங்களோட இந்த தமிழ் படிக்குரதுக்க்காகவே உங்க ப்ளாக் வருவேன்.//-அபி.

ரொம்ப டாங்க்ஸ் , பா !! இங்க கர்த்து குடுக்குற தோஸ்துங்க கூட ,
சொம்மா !! நம்ப லேன்குவேஜில பூந்து வெல்லாடுராங்கோ, பாருங்க

அதுவே எனுக்கு சொம்மா ஓர உட்டா மேரி !! அம்மாம் சந்தோசமா கீது , உங்க கர்த்துக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//நம்ப ஆளுங்களையே டான்ஸ்ஆட உடலாமா?//-வேலன். கூறியது.

நம்ப கம்பீட்டருக்கு ரெண்டு பாக்கட்டு ஓர வாங்கி ஊத்திட்டா இந்த சாப்ட் வேர் இல்லாமயே ஆடும்பா !! என்ட்ரி குட்ததுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//என்னாமா எறும்பு டான்சு ஆடுது..//-சிநேகிதி கூறியது.

மொத தபா !! நம்ப ஏரியாவுக்கு என்ட்ரி குட்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ் சினேகிதி .

இது எறும்பு மேரியா கீது ? நானு மன்சன் போட்டா இன்னு வரைஞ்சா , எறும்பு மேரி வந்துக் கீதே ? செரி இன்னாவோ ஒன்னு வந்தா செரி !!

Sudhakaran said...

இன்று உலகமெங்கும் MULTIMEDIA & ANIMATION மிக பிரபலமாக உள்ளது. அதனுடைய அடிப்படையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் பெயிண்ட்ல ஒரு கோடூ போடுறதே நமக்கு வராது தல. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.
அருமையான பதிவு.

தணா said...

நான் தங்கள் பதிவுகளை தொடற்சியாக படித்து வருகின்றென்.
ஆரம்பத்தில் தங்கள் தமிழ் காரணமாக இருதடவை படித்தால்
தான் புரியும் தற்போது பளகிவிட்டது.

பதிவகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

டவுசர் பாண்டி said...

//பெயிண்ட்ல ஒரு கோடூ போடுறதே நமக்கு வராது தல. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.//-Sudhakaran கூறியது.

வருமா !! வராதா !! இன்னு போட்டு பாத்தா தானே தல தெரியும் ? முயற்சி பண்ணா முடியாதது எதுனா கீதா ? சொம்மா !! ஊடு கட்டி அடிங்க
தல !!! வருகைக்கி + கர்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//இருதடவை படித்தால்
தான் புரியும் தற்போது பளகிவிட்டது.//-ghjghj கூறியது.

அதாம்பா !! அதே தான் , அக்காங் !! பயகப் பயக , அல்லாமே இஜியா பூடும் தல !! கர்த்துக்கு டாங்க்ஸ் பா !!

puduvaisiva said...

பாண்டி படம் சேக்கா கீது பா

நமக்கு மப்புல தான் இது மரி தெரியும் - ஆன
இப்ப பாரு இது வெப்புல தெரியுது.

டவுசர் பாண்டி said...

//நமக்கு மப்புல தான் இது மரி தெரியும்// -புதுவை சிவா,

நம்ப மப்புல இருக்கும் போது இந்த பொம்ம பத்தியா , நினைக்கப்
போறோம் !! இன்னா தல !! அதுக்கெல்லாம் வேற கீதுபா !! மப்ப நாபகப் பட்ததுனதுக்கு டாங்க்ஸ் தல !!

சாமக்கோடங்கி said...

ஹை.. என்னோட எறும்பும் டான்ஸ் ஆடுதுபா...

நெம்ப டான்க்சு....

seenu said...

நன்றி தல நானும் முயற்சிப் பண்ணிபார்க்கிறேன்.

Kiruthigan said...

ஜோராக்கீதுப்பா..
இத்தே மாரி எழ்தூ அண்ணாத்தே..

கவிதா மதிவானன் said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.....

My Favourite Website :- http://www.puthiyaulakam.com

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh