பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

ஸ்கிரீனு தல கீய நாட்டிக்கிட்டா - இன்னா பண்றது ?

· 64 கருத்துகள்

வன்கம்பா !! டவுசர் பாண்டியோட வன்கம் !! 


போன பதிவுக்கு ஆதரவு குட்த அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ் பா !! 

இன்னைக்கி , ஒரு சிம்பிலு மேட்டரு தான் பாக்க போறோம் !! 


அதாவது நம்ப வொர்க் ( ? ) பண்ணும் போது , சில சமயம் , 


அப்பிடியே அல்லேக்கா ,இந்த பொட்டில கீரது , பல்டி அட்சிடும் 


பா !! பிரிலியா ? 

அதாம்பா , இஸ்கிரீனு தல கீய நாட்டிக்கும் , அதுக்கு இன்னா பண்றது ? 


ரொம்ப சிம்பிலு , ctrl +Alt  , ரெண்டுத்தையும் அமிக்கிகீனு , இந்த ஏரோ கீ ,


கீது பாரு , மேல கீய இன்னு அதுல கீய கீரத அமுக்குனா , செரியா பூடும் ,


இது வெரிக்கும் யாருக்குனா , இது மேரி ஆய் கீதா ? இல்லன்னா , இனி 


மேட்டு ஆவும் , நம்ப ஊட்டுல கீர பசங்க கேம்ஸ் ஆடும் போது இது மேரி 


ஆவும் தல , வர்ட்டா !! இந்த பதிவுல இருந்து , சில தகவல் பலகை , இன்னு ஒரு 


மேட்டரு போடுறேன் , புட்ச்சா சொல்லுங்க , தொடர்ந்து போடலாம் ,


புடிக்கலன்னாலும் சொல்லுங்க , உடனே நிர்திடலாம் . தகவல் பலகை .
இசை மேதை பீத்தோவனுக்கு ,  காது கேட்காது !! 

நம்ப பித்தன் சொல்றாரே இன்னு , டாஸ்மாக் போய் 
வந்தா ? நெலம இது மேரியா ஆவணும் ? 
உங்களுக்கு பிடித்த பூக்கள் & எழுத்துகளை , ப்ளாக்கில் கொட்ட வைக்க ( 2 )

· 42 கருத்துகள்

அல்லா தோஸ்த்துக்கும் , டவுசர் பாண்டியோட , வன்கம்பா . 

அல்லாரும் , இன்னாவோ கவித எழ்துடா பாண்டி , இன்னு 

சொல்லி , நம்பள உசுப்பேத்தி உட்டுட்டு ,  இப்போ !! 

இன்னாவோ !! பெரிய புலவரு மேரி , நம்ப ஏரியாவுல 

சுத்திக் கீனு கீரேம்பா !! ( ஆனா , யாரும் புலவரு இன்னு 

கூவ மாட்ராங்கோ ) 

செரி , இன்னைக்கி ஒரு மீள் பதிவு போடறேம்பா !! தோஸ்த்து !! 

மின்ன ஒரு வாட்டி நம்ப ப்ளாக்குல பூக்கள் & நட்சத்திரம் ,

கொட்ட வைக்க , இன்னு போட்டேம்பா !! அதுக்கு நல்ல 

ஆதரவு குத்து இருந்தீங்கோ !! சில பேரு , எனுக்கு பூவு 

கலரு மாறனும் . 

அப்பால, நட்சத்திரம் வேற மேரி இருக்கணும் இன்னு சொல்லி ,

கர்த்து சொன்னாங்கோ !! அதுக்காக , தாம்பா இந்த பதிவு ,

பதிவுக்கு தேடிக்கீனு இருக்கும் போது , இது மாட்டுச்சிப்பா !! 

உண்மைக்கி ரொம்பவே நல்லா இருக்கு ,இதுல , பூக்கள் மட்டும் 

இல்ல , எழுத்துக்களையும் கொட்ட வைக்கலாம் , ரொம்பவே 

சுளுவா கீது !! அதே மேரி , ப்ரீ வீவ் பார்க்கலாம் ,  அதனோட 
speed அப்பால ,direction , எத்தினி பூவு இது மேரி alteration கூட 
கீது !! தல , 

இந்த தளம் போயிட்டு , நம்பளுக்கு தேவையான இமேஜ் மேல 
கிளிக் பண்ணிட்டு கீய கீர அட்ஜீஸ் மென்ட்டு மட்டும் பண்ணிட்டு ,
generate code இன்னு கீரத அமுக்குனா போதும் .

அது மட்டு இல்ல , நாம எதுனா ஒரு இமேஜோட , HTML 
குடுத்து generate பண்ணவும் முடியும் , 

இதுல , பறக்குற பட்டாம் பூச்சியோட html எட்து போட்டுக் கீரேன் !! 
பாருங்க எப்பிடி கீது இன்னு !! அதனோட html code கீயே கீது , இது 
ஒனும்னாலும் copy பண்ணி , அந்த ஜெனரடர்ல போட்டு கோடிங் ,
எட்துக்கலாம் தல !!  

<img src="http://i567.photobucket.com/albums/ss112/anandanila/butterfly2-2.gif" border="0" alt="Photobucket">

வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,


சேத்துட்டா, போதும்

அந்த வலைப் பக்கத்துக்கு போவரத்துக்கு இங்கு கிளிக் பண்ணவும் 
பூவு & நட்சத்திரம் மாத்தணும் இன்னு சொன்னவங்க , இதுல உங்களுக்கு 
புட்ச்சா மேரி குட்து மாத்திக்கலாம் , ( மிக்கியமான விசியம் , ஏற்க்கனவே 
போட்ட கோடிங்க எட்துட்டு தான் இத போடணும் ) 

உங்க கருத்துக்கு தாம்பா இந்த டவுசரு பாண்டி வெய்ட்டிங் !! 


சண்டேன்னா மூணு - டவுசர் பாண்டி கவித .

· 34 கருத்துகள்அன்பு தோஸ்த்து , சைவக் கொத்து பரோட்டாவின் விருப்பத்திற்காகவும் 

ஹாலிவுட் பாலா - மற்றும் யூர்கன் , & கக்கு இவங்கோ !!    ஏரியா கவித 

கேட்டதுக்காவும் , மற்றும் நமது ரசிகர்களுக்காகவும் ,

( சொம்மா ஒரு பந்தா தான் , கண்டுக்காத ) 

இந்த கவித( அடிக்காத தல )  டவுசர் பாண்டியால் எழதப் பட்டது . 


ண்டேன்னா ரெண்டு ,இன்னு தினமலர் பேப்பரு மட்டும் தான் ,

வரணுமா , நம்ப கவித ( ? ) வரக் கூடாதா ? 

அதுக்காக சண்டே வெரிக்கும் வைட்டு பண்ண முடியுமா ? 


நம்ப தோஸ்துங்கோ !! திட்ட மாட்டாங்களா ? 

இன்னு , ரோசன பண்ணி , இப்பவே , இந்த ரெண்டும் போடறேன் தல !  நம்ப ஏரியா கவித ( ? ) 


நாலனாக்கு பூவு வாங்கி 

நாலு பேருக்கு வெச்சேன் ,

அதுல , 

வண்டைப் போல நீயும் 

வந்து வாட்டிட்டியே - என் 

நெஞ்ச !! 


காள மாடு கயனித் தண்ணி 

குடிக்கறத கண்டு 

காண்டு ஆயிப் போனேனே 

சின்ன இளம் சிட்டு .


ஆக்கி வெச்ச மீனு கொயம்பு மேரி ,

நீ அல்வாவாட்டமா கீரே,

எடக்கி எட போட்டு பாத்து 

மேட்டர தான் சொல்றேன் 


ஊரு கண்ணு பட்டிடும் 

உள்ள வாடி கண்ணு 

உ அயக்கப் பாத்து 

மயங்கினேனே - நானு 

ஒரு மக்கு  !! 

--------------------------------------------------------

விடியல் .   

விடிகின்ற விடியலை ,

விழித்துப் பார்ப்பதற்குள், 

இறந்து விட்டேன் .

நான் விடியலை - வெறுப்பவன் . 

-----------------------------------------------------------------

இது போனஸ் ஹைக்கூ ( அப்பிடியான்னு தெர்ல ) நீங்க தான் 


சொல்லணும் .

வித்திர்த்துப் போட்டது உறக்கம் 

கனவில் ,

உன்பின்னே - யாரு ?தல ( இது மேரி சொல்றதால நானு அஜித் ரசிகரா இன்னு நெரியோ 

பேர் கேக்குறாங்கோ , கண்டிப்பா இல்ல , அதுக்காக அவர புடிக்காது 

இன்னு இல்ல , இது எங்க ஏரியால சொல்ற ஒரு வார்த்த ஒரு சொல் 

எப்பிடி ஒன்னாலும் வெச்சிக்கலாம் )


உங்க கருத்த ரவ சொல்லுங்க தல !! 

ஒட்டு நீங்க போடுவீங்க இன்னு தெரியும் !! இருந்தாலும் கேக்காம ,

இருந்தா ? அது நால்லாவா இருக்கும் , அதனால உங்க 


பொன்னான ஓட்டை , டவுசர் சின்னத்துல நிக்கற  ( அல் ) உக்காந்து 


இருக்கும் ,பாண்டிக்கு போட்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன் பா !! 

நம்ப பிளாக்குல தனி பேஜ் போடுவது எப்படி?

· 36 கருத்துகள்

அல்லா தோஸ்த்துக்கும் , டவசர் பாண்டியோட, வணக்கம் பா !!

நம்ப பிளாக்குல , நம்பளப் பத்தி , இன்னு கீர எடத்துல (profile )
ஒரு சில , விவரம் மட்டும் தான் குடுக்க முடியும் , இப்போ !! 
அதுக்காக ஒரு பேஜ் போட்டாக்கா , அது அடுத்த பேஜ் ,
போது பின்னாடி போயிடும் , செரி அத மட்டும் url எட்த்து ,
சைட்டுல போட்டாக்கா !! அதுல கருத்து அப்பால உன்னும்
சில மேடருங்கோ இருக்கும் , அதுக்கு ,

நாம தனியா சில பேஜ் போட்டு சில மிக்கியமான விசியம் ,
எல்லாம் சொல்லலாம் , அது எப்பிடி இன்னு பாக்கலாம் ,

மொதல்ல , டாஸ்போர்ட் , போங்க அப்புறம் இடுகைகளை 
திருத்து , போயிட்டு ஓபன் பண்ணுங்க , இது போல வரும் ,
                                                       (படத்தை பெரித்தாக்க கிளிக் பண்ணவும் )  இதுல பக்கத்தை உருவாக்கு , இன்னு இருக்குறத கிளிக் 
பண்ணினாக்கா !! இது போல ஓபன் ஆகும் ,அதுல பக்கத்தலைப்பு இன்னு இருக்குறதுல தலைப்பு குடுங்க ,
குத்துட்டு , இடுகைகை வெளியிடு குடுங்க ,

இன்னும் ஒரு பக்கம் ஒனும்னா !! மறு படி அதே மேரி போய்
புதிய பக்கம் போங்க !!   இதே மேரி பத்து பக்கம் கூட 
போடலாம் தலீவா !! 

இது உன்னும் சில எடத்துல யூசு ஆவும் , அதாவது 
நம்ப url லியே இருந்து , எடுக்க வேண்டிய சில 
விசியம் கீது ,அதாவது தனி விண்டோ வர இது மேரி ஒன்னு 
அவசியம் தேவ தல ,  அதப் பத்தி அப்பறம் சொல்றேன் !! 


தேவையானவங்கோ !! யூசு பண்ணி பாருங்க தல !! 
உங்க கருத்த ரவ சொல்லுங்க !! 


அந்த டவுசர் - என்து இல்ல !! இல்லவே இல்ல !!

· 39 கருத்துகள்எனது அன்பான தோஸ்த்துகளுக்கு , 
டவுசர் பாண்டியின் வண்க்கம்பா ,

இன்னைக்கி வயக்கம் போல பதிவுகள பாத்துக் கீனு இருக்கும் 
போது, சினேகிதி யோட ப்ளாக்கு பக்கம் போனேன் பா !! 

பதிலு போட்டுட்டு , அப்பிடியே , போன பதிவு இன்னா இன்னு 
பாத்தேன் ,  காதலர் தினத்துக்கு பதிவு இருந்தது , செரி இதுக்கு நாம 
பதிலு போடலே இன்னு , போடறத்துக்கு போனா !! 

அங்க தாம்பா எனுக்கு , 1000 வாட்டு கரண்ட்டு அட்சா மேரி கீது , 
டவுசர் பாண்டி. . .  said . . .  

இன்னு போட்டு இருந்தது , எனுக்கு ஒரே கொயப்பமா பூடுச்சி , நம்ப 
எப்படா ? போட்டோம் , இன்னு அதுவும் இல்லாத அதுல நம்ப 
ஐக்காணு இல்ல , வேற இன்னாவோ ,சிரிச்சிக் கீனு இருந்தது , 
( என்னப் பாத்து ) 

அப்பால , அந்த பிளாக் பக்கம் போனேன் தல , அது வேற டவசர் பாண்டி . 
அட நம்ப பேருல உன்னோர்த்தர் கீறாரே இன்னு ஒரே சந்தோசமா 
பூடுச்சிப்பா ( ம்ம்ம்ம் )

இன்னாடா இது , இது வெரிக்கும் நம்ப கண்ணுல இது மாட்லையே , 
இன்னு ரோசன பண்ணிட்டு இன்னா தான் எழதிக் கீராரு, இன்னு 
பாத்தேன் , 

அட இது மேரி ஒரு ஆளு கீரது , தெரிஞ்சி இருந்தா நாம வேற பேருல , 
மாத்தி இருக்கலாமே ? இன்னு பாத்தேன் !! அப்ப தான் தெரிஞ்சிது ,
அவரு 2009 -ஆகஸ்டு. மாதம் தான் முதல் பதிவு போட்டு கீராரு
இன்னு .

நானு ஆரம்பிச்சது 2009 -மார்ச் மாசம் , அப்ப இது நம்ப தப்பு இல்ல
இத இது வெரிக்கும் பாக்காதது தான் நம்ப தப்பு , இன்னு தெரிஞ்சிது . 

அதனால , நம்ப தோஸ்துகளுக்கு அதேகண்கள் -டவுசர் பாண்டி
சொல்லிக்கறேன் , அது நான் இல்ல .

இத சொல்ல வேண்டிய அவசியம் இன்னான்னா ,அதுல ஒரு பதிவு 
புவனேஸ்வரியும் பின்னே நானும்  இன்ற பதிவு( அது ஒன்னியும் தப்பான பதிவும் இல்ல, இருந்தாலும் ? ) 

இதப் பாத்துட்டு , இன்னாடா !! டவுசரு இது ........ ? 
இன்னு என்னப் பாத்து யாரும் கேட்டுடக் கூடாது , இல்ல 
அதாம்பா !! 

இந்த பேர போட்டு கீர கருத்த பாத்ததுமே , எனுக்கே 
மழ்கம் வந்துது , அதாம்பா !! உங்க காதுலையும் ரவ போட்டுடலாம்,
இன்னு , இத சொல்றேன் !! தப்பா இருந்தாக்கா மன்னாப்பு குட்துடு தல !! 
19 comments:


அண்ணாமலையான் said...
எல்லாமே சூப்பர் பாடல் வரிகள்... அசத்துங்க

டவுசர் பாண்டி... said...
சுகமான காதல் பாடல் வரிகள் னு போட்ருக்கனும்.....
இந்த கொயப்பத்துக்கு எதுனா வயி இருந்தா ரவ சொல்லுங்கோ !! 
வாஜார் , ரொம்ப பீலிங்கா கீது !!  


என்னைக்கி, இன்னா வேல கீது ? இன்னு - மெயில் வர வைக்க .

· 23 கருத்துகள்

ரொம்ப பீலிங்கா கீதுபா !! இன்னா மேட்டருன்னா, நம்ப 
தோஸ்த்து ஒர்த்தர்க்கு கல்யாணம் தலீவரே !! எனுக்கும்,  மட்ச்சீ  
நோட்டிசு அல்லாம் ,குட்தாறு , கண்டிப்பா வந்துடு டவுசரு இன்னு 
சொல்லிட்டு போனாரு , நோட்டிசு வாங்கி ( அதாம்பா பத்திரிக ) 
பட்சி ( ? ) பாத்தா , ஒரு மாசம் கைச்சி தேதி கீது !! செரி இண்ட்டு ,


நம்ப வேலைய பாத்துக்கீனு ( ஒன்னியும் இல்ல சொம்மா !! நானும் 

ரவுடி தான் கத !! ) இன்னாவோ !! நான்தான் பில்கேட்சுக்கு ஐடியா ?

குடுக்குறா மேரி !! இந்த பொட்டியவே நோண்டிக் கீனு , மெய்லு

பாத்துக் கீனு !! இர்ன்துட்டு தோஸ்து கல்யாணத்த கோட்ட,

உட்டுட்டேம்பா !! ஒரே பீலிங்கா பூட்சிபா !! இதுக்கு இன்னா 

பண்ணலாம் , இன்னு ரோசன பண்ணி நானும் பில்கேட்சு 

கணக்கா !! ரோசன பன்னேம்பா !! ( நம்ப மாட்டியே ? ) 

அப்ப, தான் இதுக்கு நம்ப கூகிள் அண்ணாத்தையே தேவலாம் ,

இன்னு பட்டுது தல , எப்பிடியும் மெயில் செக் பண்ணப் போறோம் !! 

பின்ன நாமள்லாம் யாரு ? அப்பிடியே !! கூகிள் அண்ணாத்த காதுல இது மேரி இது மேரி 

எனுக்கு , இன்னைக்கி கல்யாணத்துக்கு போவனும் , இன்னைக்கி 

குளிக்கணும் இன்னு என்ட்ரி போட்டு உட்டுட்டாக்கா !! அந்த 

மன்சன் கரீக்ட்டா நம்பளுக்கு மெயில் பண்ணி சொல்லிடுவாரு ,

தல , பாத்தியா அண்ணன் தம்பி கூட இது மேரி குளிடா , போடா !! 

இன்னு சொல்ல மாட்டாம்பா !! 


இது எப்பிடீன்னு பாரு தல !! ஏற்கனவே தெர்ந்ஜவங்கோ, 

தாண்டிப் பூடுங்கோ !! உங்க gmail ஓபன் பண்ணிட்டு , google .co .in 


ஹோம் பேஜ் போங்க தல !! அதுல more இன்னு இருக்குறதுல , போய் 
calendarஇன்னு கீரத , கிளிக் பண்ணுங்க அப்பால , ரைட்டு சைடுல 
இந்த மாசத்துக்கு காலண்டர் இருக்கும் , அதுல இன்னா தேதி ஒனுமோ 
அத கிளிக் பண்ணா !!  உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் 
ஆவும் தல கிளிக் பண்ணி , மேட்டர சொல்ட்டு அப்பீட்டு உட்டுக்கோ !! நீ சொன்னா மேரி ,கரீக்டா !! மெயில் வந்து உனுக்கு நோட்டீசு  குட்துடும் பா !! 

அப்போ நீயும் உசாரா ஆயிக்கலாம் !! கவருமென்ட்டு லீவு என்னிக்கி இன்னு கூட தெரிஞ்சிக்கலாம் !! 

இதுக்கு month இன்றத கிளிக் பண்ணி பாருங்க லீவு , நாள்  தெரியும் !

இதுல உன்னும் நெரியோ மேட்டரு ,கீது !! தல , யூசு பண்ணி பாருங்க !!  இன்றிரவு பகலில் - டவுசர் பாண்டி.

· 22 கருத்துகள்

      
                 Photobucket

    
இந்த காதலர் தினத்துல , எனுக்கு ரொம்ப புட்ச , ஒரு 
கவித, இல்ல ஹைக்கூ , எப்பிடியாது வெச்சிக்கலாம் ,
இது தான் தல , இதுல கீர வரின்கோ டாப்பா கீதுபா !!

நீயும் தான் ரவ பட்சி பாரேன் , வெளி நாட்டுக் கார ,
மன்சன் இன்னாமா , எழதிக் கீராரு இன்னு , 


இன்றிரவு பகலில், 

யானைகள் தமக்குள்
மனித ஜோக்குகளை,
சொல்லிக் கொள்ளும்

அமெரிக்கா,
ரஷ்யாவோடு,
சமாதானத்தைப்
பிரகடனம் செய்யும்

முதல் உலகப்போரின்
தளபதிகள்,
நவம்பர் - 11 ல் தெருக்களில்
செயற்கை வர்ண பூக்களை,
விற்பார்கள்

நகரப் புழக்கடைகளில்
புறாக்கள்,
பூனைகளை வேட்டையாடும்

வெள்ளை அமெரிக்கர்கள்
கருப்பு மாளிகைஇன்
முன் சம உரிமைக்காக,
போராட்டம் நடத்துவார்கள்

நாட்டுப்புற பாடல்கள்
நாட்டுப்புற மக்களாலேயே,
பாடப் படும்

அரசியல்வாதிகள்
பைத்தியக்கார விடுதிகளில்,
தேர்ந்து எடுக்கப்படுவார்கககள்

ஒவொருவருக்கும்
வேலை காத்திருக்கும்
ஆனால் ,
ஒருவரும் அவற்றை
விரும்ப மாட்டார்கள்

மறந்து போன மயானக்களில்
எல்லா இடங்களிலும்
இறந்தவர்கள்,
உயிருடன்  உள்ளவர்களை
அமைதியாகப் 
புதைத்துக் கொண்டிருப்பார்கள்

மேலும் ,

என்னை காதலிப்பதாக
நீ என்னிடம் கூறுவாய்
இன்றிரவு பகலில் .  

 
 
-- ஆட்ரியன் ஹென்றி. தல , உங்க கருத்த ரவ சொல்லிட்டு போங்க தல !! 
அப்பிடியே ,- அல்லாரும் படிக்கிறா மேரி
ஒரு ஓட்ட குத்தி , உடுங்க வாஜார் !!நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh