பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

சிம்பிளா பென் டிரைவ - ரிமூவ் பண்றது எப்படி ?

· 20 கருத்துகள்


நம்ப தோஸ்துங்க அல்லாருக்கும் , வணக்கம் பா !!


போன பதிவுக்கு ஒட்டு போட்ட
ஜெகநாதன் அப்பால, மோகன் அண்ணாத்தே,

இவங்கோ + கருத்து போட்ட அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ்பா !!
அப்பால வருகை தந்து படிச்சிட்டு போன அல்லாருக்கும் டாங்க்ஸ் ,

இன்னைக்கி நம்ப பேனா டிரைவரு பத்தி பாக்கலாம் பா !! அதாம்பா
pendrive இப்போ !!

நம்ப பென் டிரைவ மாட்டி, எதுனா பைல காப்பி பண்ணுவோம் , அப்பால
அத்த வெளி எடுக்கறத்துக்கு safely Remove Hardware இன்னு போய் அப்பால
stop குடுத்து எடுப்போம் , இதுக்கு வேற மேரி ஒரு ஐடியா கீது !!

இந்த சின்ன சாப்ட்வேர்( 467 kb ) நம்ப பொட்டில போட்டு வெச்சிட்டா
போதும் , இப்போ இங்க போய் இந்த software டவுன் லோடு
பண்ணுங்க ,

Zip பைல இருக்கும் , அத்த extract பண்ணி உட்டுட்டா போதும் வேற
எதுவும் பண்ணத் தேவல அக்காங் !!

இப்போ இது மேரி ஒன்னு வரும் ( அத டெஸ்க் டாப்புல வெயுங்க ) அப்பால ,



ஒரு pendrive போட்டு இத்த ஓபன் பண்ணாக்கா !! இது மேரி வரும் ,



இப்போ டபுள் கிளிக் , இல்லாக்காட்டி என்டெர் பண்ணாக்கா !!
இது மேரி வரும் ,

வேல ரொம்ப சிம்பிள் , எதுனா ப்ரோக்ராம் ரன் ஆயக்கீனு இருந்து இப்ப
எடுக்க முடியாது !! இன்னு சொல்லுது இன்னு வைங்க ,

அதுல autorun ப்ராபிளம் கீது இன்னு அர்த்தம் இல்லன்னா எதுனா
வைரசு கிரசு இருக்கும் ,

அதுமேரி சில சமயம் கூவும் போது அது மேரி சொல்லாம
கீரத்துக்கு நம்ப நண்பர் INVISIBLE ஒரு பதிவு உட்டுக் கீனு
இருக்காரு ,

அதுல கீற மேரி பண்ணாக்கா , எப்பவும் இது மேரி கூவாது !!

ஐய , மறந்துட்டேனே !! தொயில் நுட்பம் பத்தி எழ்தரவங்களுக்கு வெக்கற
போட்டில எனுக்கு ஒட்டு போட்ட அத்தினி பேருக்கும் நன்றி ,

போடாதவங்கோ !! உடனே போய் ஒரு ஓட்டத்தான் போடுங்களேன் ,

-- டாங்க்ஸ் -- -- டாங்க்ஸ் -- -- டாங்க்ஸ் --


டாக்குமெண்ட் பைல்களை upload செய்து download செய்வது எப்படி ?

· 10 கருத்துகள்

இந்த தபா, பெரி இஸ்கூலு படிக்கிற புள்ளைங்களுக்கு

அவுகோ பாட சம்பந்தமா எதுனா, டாக்குமென்ட்டு ,

கீது பாரு அத்த மெய்லு பண்ணி தான் ஷேர், பண்ணிக்குவாங்கோ ,
ஆனா இந்த மேரி கொஞ்சம் டாக்குமென்ட்டு தான் , அனுப்ப முடியும் ,

ஆனாக்கா !! இந்த Deposite file . com - இன்னு கீரதுல , நீங்க
வெறுமினே sign பண்ணி அப்பால,
உங்களுக்கு ஒரு அக்கவுன்ட்டு ஓபன் பண்ணிக் கோங்க,
அப்பால எந்த பைல upload பண்ணனுமோ அத்த upload
பண்ணிட்டா !

அதனோட url குடுக்கும் , அத sms பண்ணி பைல டவுன்லோட்
பண்ணிக்கலாம் ,

இதுல 2 GB அளவுக்கு பைல upload பண்ணலாம் , ஊஸ் பண்ணி பாருங்கோ !!

புட்சா அல்லாருக்கும் சொல்லுங்கோ !!


அப்பிடியே எனுக்கு கருத்து ரவ சொல்லுங்கோ !!


அனைத்து image பைல்களையும் ஓபன் செய்வது எப்படி ?

· 13 கருத்துகள்

போன பதிவுக்கு ரொம்பவே ஆதரவு குடுத்தீங்கோ !!

ரொம்ப குஷாலா பூடுச்சிப்பா !! செரி, சூடா உன்னொரு பதிவு போடலாம்
இன்னுட்டு , ரோசன பண்ணி பாத்தேன்பா !!

இது தான் நாபகம் வந்துச்சி !! செரி , மேட்டருக்கு வருவோம் , இப்போ
நாம எதுனா டவுன்லோட் பண்றோம் இன்னு வெச்சிக்கோங்க !!

சில சமயம் அது iso image - பைலா வரும் , அத்த நாம்ப nero வுக்கு போய்
தான் burn பண்ணுவோம் !!

செரி இத்த அப்பிடியே open பண்ணி பாக்க முடியாதா ? இன்னு
மண்டைய போட்டு கொயப்பிக்குவோம் !! அதுக்கு ஒரு வயி கீது
தலீவா !! ஒரு சின்ன software கீது ,

அத்த டவுன்லோட் பண்ணி run பண்ணிட்டு அப்பால அத ஓபன்
பண்ணிக்கோங்க ,

இப்போ !! ஓபன் பண்ண உடனே ungister இன்னு கீர்த , click பண்ணி
உடுங்கோ !! ஏன்னா இது ஒரு trial சாப்ட்வேர் தான் ,




அப்பால , file இன்னு கீர்த click பண்ணி நாம download பண்ண image file ஐ
open பண்ணிக்கோங்க ! அப்பால ,



அந்த பைல்ல ரைட் கிளிக் பண்ணி , view பண்ணாக்கா image பைல்ல
இன்னா தான் கீது இன்னு பாக்கலாம் , அதுல எதுனா வோணும்னா கூட
அத்த காப்பி பண்ணி எடுத்துக்கலாம் ,

இல்ல extract இன்னு கீர்த click பண்ணி All files இன்னு
கீர்த செலக்ட் பண்ணி ok பண்ணனும் ,



இப்போ அது extrat ஆகி நாம்ப எங்க save குடுத்தொமோ அங்க வந்து
குந்திக்கும் , இதுலயே Burn option கூட கீது ,

செரி இப்போ இந்த சாப்ட்வேர் இங்க வந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க !!
மறுபடியும் சொல்றேன் இது trial தான் ,

உங்களுக்கு மேட்டர் புடிச்சா ஒரு ஓட்ட குத்தி உடுங்கோ .



குஜிளிங்கோ - சைட்ட லாக் பண்றது எப்படி ?

· 20 கருத்துகள்


போன பதிவுக்கு ஆதரவு குட்து ஒட்டு போட்ட அல்லாருக்கும்
ரொம்பவே டாங்க்ஸ்பா !!

இந்த தபா ஒரு சின்ன சாப்ட்வேர் பத்தி பாக்கலாம் !! நம்ப ஊட்டுல கீற
புள்ளைங்கோ நம்ப இல்லாத போது internet பக்கம் போனாக்கா !!
google serch ல எதுனா தட்டப் போய் ,

லிங்க் எதுனா குஜிளிங்கோ !! பக்கம் போய்டும், அத்த தடுக்கர்த்துக்கு
தான் இந்த website blocker இன்ற சாப்ட்வேர் ஊசு ஆவுது ,

இந்த சாப்ட்வேர் download பண்ணி அப்பால ரன் பண்ணுங்கோ !! அப்பால்
அதுல செட்டிங்க்ஸ் போய் அதுல அல்லொவ் பண்ணதே இன்ற காலத்துல
சில சைடோட அட்ரச குடுங்கோ !!

( உங்களுக்கு தெரியாதா ? சைடு பேரு அல்லாம் )

அப்பால ஓகே குடுத்துட்டாக்கா !! செரியா பூடுச்சி !! அந்த மேரி அர்த்தம்
வர்ற website அல்லாம் badrequest இன்னு வந்துடும் தலீவா !!

இங்க போய் அத்த download பண்ணுங்கோ !! இது ஒரு trial software தான் ,

உங்க கர்த்துக்கு இந்த டவுசர் பாண்டி வைட்டிங்க்பா !!




நம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.

· 12 கருத்துகள்

நம்ப தோஸ்து அல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் பா !!

எனுக்கு ஒரு குசி இன்னான்னா !! நெரியோ பேருக்கு OS மாத்த தெரியும்
போல கீது , நானு இன்னாடான்னா !! அது தெரியாத கீறேன் பா !!
செரி அத்த உடு ,

புட்சா பிளாக்கு ஆரம்பிச்சி கீரவங்களுக்கு !! இந்த மேட்டர் !!

இந்த தபா , ஒரு சின்ன மேட்டர் பா !! நம்ப பிளாக்குல youtube படத்த
வர வெக்கறது எப்பிடி ?

இது நெரியோ பேரு சொல்லி இருப்பங்கோ !! இருந்தாலும் நானும் ஒரு
தபா கூவிக்கிறேன் பா !!

அதே மேரி நமபுளுக்கு புட்சா மேரி கீர, வீடியோவ , நம்ப சைடுல கீர
கெட்ஜெட்ல கூட போட்டுக்கலாம் , சோக்கா இருக்கும் ,

இப்போ அது எப்பிடின்னு பாக்கலாம் , மொத்தல்ல youtube ஓபன் பண்ணி
அதுல உங்களுக்கு புட்சா மேரி கீர ஒரு வீடியோவ ஓபன் பண்ணிக்கோங்க !!

அதும் பக்கத்துல ஒரு சின்ன பொட்டில நாம்ப செலக்ட் பண்ண வீடியோ
பத்தி இருக்கும் அதுக்கு கீய Embed அப்பிடின்னு ஒன்னு இருக்கும் அத்த
அப்பிடியே காப்பி பண்ணி ,

நம்ப பிளாக்குல போடறத்துக்கு newpost இன்னு கீர்த , போய் அதுல
Edit HTML கிளிக் பண்ணி அதுல paste பண்ணிடனும் ,

அப்பால compose இன்னு கீர்த அமுக்கி பாத்தா நம்ப போட்ட வீடியோ
அங்க வந்து இருக்கும் அப்பால ,எதுனா நீங்க எழ்தரா மேரி இருந்தா
எழ்தி வெளியிடலாம் ,

அதே மேரி தான் இந்த வீடியோவ , நம்ப கெட்ஜெட்டுல போடறதுக்கும் ,
இப்போ layout ( தளவமைப்பு) போய் அதுல HTMl /javascript இன்னு கீர்த
ஓபன் பண்ணி இந்த Embed கோடிங்க paste பண்ணிடுங்க ,

அதுல கீர அளவ நம்ப கேட்ஜெட் அளவுக்கு ஏத்த மேரி மாத்திக்கலாம் ,

இங்க ஒரு வீடியோ குத்துக்கீறேன் , படா சோக்கா கீது பா !! இன்னா மேரி
அல்லாம் இந்த தம்பி போட்டு வாங்கு வாங்கு இன்னு வாங்குது அத
நீயும் தான் ரவ பாரேன் !!







இன்னாபா !! மேட்டர் புட்சிகீதா !! உங்க கருத்த சொல்லு தலீவா !!


OS மாற்றுவது எப்படி ? - விளக்கமாக , எளிய தமிழில்.

· 12 கருத்துகள்

அல்லா தோஸ்துகளுக்கும் இந்த டவுசர் பாண்டியோட சலாம்பா !!


போன தபா பதிவுக்கு ஒட்டு போட்ட அப்பால கருத்து சொன்ன
தோஸ்துங்களுக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

இந்த தபா , நம்ப பொட்டில எதுனா லிப்பேறு ஆயி பூடுச்சின்னா !!
இத செரி பன்றதுக்கு ஒர்தர கூப்புடுவோம் !! அவுரும் வந்து பாத்துட்டு
O / S மாத்தனும் இன்னு சொல்ட்டு ,

சகஜாலமா, இன்னா இன்னாவோ பட்டன அல்லாம் தட்டி ஒரு cd ஐ எட்து
போட்டு அத்த ஓட வுட்டு பயாஸ் கோப்பு வேல அல்லாம் காம்சி, செரி
பண்ணிட்டேன், துட்ட வெட்டு இன்னு சொல்வாரு ,

நமபுளுக்கு இந்த os மாத்தர வேல இன்னவோ பெரி கொயப்பமா
இருக்கும் , அதுக்கு தான் நண்பர் , திரு .drp பெருமாள் , என்ற நண்பர்
தமிழில் எளிய முறையில் OS - நிறுவுவது எப்படி இண்ட்டு ஒன்னு
எழ்திக்கிராறு ,

அவருக்கு " நன்றி " தெரிவிச்சி இதை அனைவரும் பயன்
பெறட்டும் இன்னு பதிவு இடுகிறேன் ,

Window Xp Instal in Tamil



இந்த மேட்டர் அல்லாருக்கும் பயன்படும் என நினைக்கிறேன் ,

உன்னும் ரொம்ப பேரு இத்த படிக்க ஒரு வோட்ட போட்டு

உங்க கருத்த சொல்லுங்க !!



எளிய வழியில் Task manager வர வைப்பது எப்படி ?

· 20 கருத்துகள்


அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!

ரொம்ப நாளா பதிவு எதுவும் போட முடியாம , எங்க ஏரியாவுல வேல
அதிகமா பூடுச்சி ,

( அப்போ வேல வெட்டி எதுவும் இல்லாம இருந்தா தான் பதிவு
போடுவியா , இன்னு கேக்காம இருந்ததுக்கு ரொம்பவே தாங்க்ஸ் பா )
செரி, இப்போ நேரா விஷியத்துக்கு வருவோம் !! ( ? )

நாம இந்த பொட்டில எதுனா நோண்டிக் கீனு இருக்கும் போது,
இல்லன்னா எதுனா சாப்ட்டு வேருல எதுனா பிரச்சனை வந்தாக் கூட
இல்லா காட்டி எதுனா வைரசு நம்ப பொட்டிய அட்டாக் பண்ணாக் கூட
இந்த taskmanager இன்னு ஒரு மேட்டரு கீதே அது அம்பேலு ஆய்டும்
அதுக்கு , இன்னா அப்பிடின்னு நெனைக்கறீங்களா !!

இந்த task manager இல்லாக் காட்டி எந்த ப்ரோக்ராமையும் ரன்
பண்ணவே முடியாது தலீவா !! அதே மேரி எந்த ப்ரோக்ரமையும்
ஸ்டாப் பண்ண முடியாது , தலீவா !!

இன்னா தான் பண்றது இன்னு ஒரு கொயப்பம் வரும் , அதுக்கு
ஒரு சின்ன வயி கீது , இப்போ , மொதல்ல நம்ப taskmanager விசிபிலா
கீதா ? இன்னு செக் பண்ணிக்கலாம் ,

நம்ப டாஸ்க் பார்ல நம்ப கரசர வெச்சி ஒரு ரைட்டு கிளிக்கு குடுங்கோ !!
அப்போ தெரியும் , நம்ப taskmanager விசிபிலா கீறாரா இல்ல hide ஆயி
பூட்டாரா இன்னு தெரியும் .

அந்த manager இல்லன்னா !! அவர இட்டுக்கீனு வரலாம் !!

செரி. இப்போ start ல போய் ஓபன் பண்ணிக்கோங்க !!




அதுல run ஓபன் பண்ணி
இப்போ இது மேரி ஒன்னு வரும் ,




அதுல gpedit இன்னு போட்டு புள்ளி வெச்சி msc இன்னு type
பண்ணுங்கோ !! அப்பால அத்துல ok பண்ணவும் ,

இது மேரி ஒன்னு வரும்

அதுல user configuration இன்னு கீர்த, டபுள் கிளிக் பண்ணவும் , உங்களுக்கு
இது மேரி ஒன்னு ஓபன் ஆவும்

அதுல Administrative Template இன்னு கீர்த டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு இது மேரி ஒன்னு ஓபன் ஆவும் ,


அதுல system இன்னு கீர்த, டபுள் கிளிக் பண்ணவும் , உங்களுக்கு இது
மேரி ஒன்னு ஓபன் ஆவும்

அதுல ctrl+Alt+Del option இன்னு கீர்த, டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு இது மேரி ஒன்னு ஓபன் ஆவும்

இப்போ இதுல எதுனா ஒன்னுல டபுள் கிளிக் பண்ணால் இது மேரி ஒன்னு வரும்

,
இப்போ அதுல Disabled கிளிக் பண்ணி Apply குடுக்கவும் அப்பாலிக்கா ok குடுக்கவும், இப்போ , மறுபடி கீய கீற task குல வந்து right click பண்ணி பார்த்தால் taskmanager வந்து குந்திக்கினு இருக்கும் , அவ்ளோ தாம்பா மேட்டர்.

பதிவு புடிச்சி இருந்தாக்கா ஒரு ஓட்ட போட்டு சொல்லு தல அப்பிடியே உனுக்கு தோனுறத ரவ கருத்து பொட்டில போடுங்க !!


இது வெரிக்கும் காணாம போன task manager வர வெச்சவங்க !!


web counter





நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh