பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

வலை உலக தோஸ்துங்களுக்கு மிக்கிய அறிவிப்பு !!

·

தல அல்லாரும் என்க்கு மன்னாப்பு குட்துடுங்க தல , இம்மாம் நாளுநானு காணாத பூட்டேம்பா !
 ( ஆமாம் , இவுரு இருந்து மட்டும் இன்னா கீச்சாறு )


பொங்கலுக்கு நம்ப தோஸ்து அல்லாரையும் பாத்து பொங்க மருவாத 
வாங்கிக்கீனு வரலாம் இன்னு , 


ஒரு ரவுண்டு வந்தேம்பா !! வந்து அட , நம்ப மக்களுக்கு எதுனா நூசு 
குடுக்கலாம் இன்னு , இந்த பொட்டிய தொறந்தா !! 


ஊர்ல கீர எல்லாருக்கும் இன்டர்நெட்டு வருது நம்பளுக்கு மட்டும் வரல , 
( எதிரி நாட்டு சதியா இருக்கும் ) இன்னாடா !! இது கோராமையா பூடுது 
இன்னு !! மாரியாத்தாவ வேண்டிக்கீனு மறுபடி நோண்டி பாத்தேன் பா !! 
அப்பவும் வரல, அது மட்டும் இல்ல , 


எதுவுமே ஓபன் ஆவல, ஒரே கஷ்டமா பூடுது , சரி நாம தான் பெரி ஆளா 
பூட்டோமே ( ? ) இன்னு நம்ப பொட்டிய , restore பண்ணலாம் இன்னு, 
ஒரு சாப்ட்டு வேறு போட்டு பாத்தேம்பா !! ( microsoft ல கீதே system restore 
அது இல்ல ) பூட் ஆச்சி , அப்பாடா இன்னு my computer ஓபன் பண்ணி பாத்தா , 


ஐயோ !! ரெண்டு டிரைவ்வக் காணோம் !! சரி , நாம தான் செரி இல்ல , 
நம்ப பில் கேட்சு அண்ணாத்த வழிய பாக்கலாம் இன்னு சிஸ்டம் restore 
பன்னேம்பா , 


அட இப்ப பாத்தா நம்ப கஷ்டமான தட்டு அதாம்பா , Hard disk கக் 
காணோம் இன்னு சொல்லுது , நா இன்னா பண்ணுவேன் , 


யாரோ சூனியம் வெச்சா மேரி நம்ப பொட்டி நம்பளுக்கு அம்பேல் 
குட்துடுதுபா !! ஒரு வேல நா எழ்தர்து யாருக்கோ புடிக்காத போய் 
இந்த மேரி பண்ணிட்டாங்கோ !! போல கீதுன்னு நென்சிக்கீனு , 
ஒரு கொர அழ்துட்டு , 


அத எட்துக்குனு அந்த கம்பனிக்கு போனேன்பா !! அங்க இருந்த ஒரு பெரி 
மன்சன் ok , உங்க பேரு , ஊரு , அட்ரசு எல்லாம் சொல்லுங்க இன்னு 
கேட்டான் , எல்லாத்தையும் சொல்லி , கைய நீட்டுனேன் , வாட் , இன்னு 
கேட்டான் , வேற குடு தல , இன்னேன் ,அதுக்கு ஒரு மொர மொரச்சிட்டு , 
போய் பத்து நாளு கழ்ச்சி வா , தேறுமா தேறாதா இன்னு சொல்றேன் 
இன்னு சொல்டாம்பா !! 


அட போடா கைத , அது வெரிக்கும் என் தொஸ்துங்களுக்கு யாரு தாவா 
சொல்றது , நானு இத்தினி நாளு மேட்டரு சொல்லாத இந்த பதிவுலகமே
அல்லோல, கல்லோலப் படுது , ( ? ) இதுல நீ வேற டமாஷ் பண்ணிக்கீனு,
இன்னு காரி மூன்சிட்டு , !!!


எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல இன்னு சொல்ட்டு வேற புது Hard 
டிஸ்க்கு வாங்கியாந்து மாட்டி , மாரியாத்தாவ மரியாதையா வேண்டிக் 
கீனு !! ஆன் பன்னேன்பா !! எனுக்கு ஒரே அழுவையா வந்துடுது அட 
நல்லா வேல செய்யுது !! அதுல வந்த ஆனந்த கண்ணீர் தாம்பா , 


செரி இதுக்கு போய் இன்னா இம்மாம் பெரி டீடைலு இன்னு கேக்கறீயா ? 
அப்ப தானே நானு பதிவு போடாமா கீரத்துக்கு உனுக்கு காரணம் பிரியும் 
அதாம்பா !! இம்மாம் பெரி கதை , 


வன்ட்டேன் , வன்ட்டேன் இனி மேட்டு பதிவு போட்டு உங்கள எல்லாம் 
ஒரு வயி பண்றேன் இன்னு சொல்லி என் கதைய முட்சிக்கறேன் , 
வாய்க அந்த Hard டிஸ்க்கு , வளர்க அந்த கம்பனி . 

31 கருத்துகள்:

SUBBU said...

:((((

S.A. நவாஸுதீன் said...

கஷ்டமான தட்டு காணாமப்பூச்சா. கேக்கவே கஷ்டமாக்கீதுபா.

///வன்ட்டேன் , வன்ட்டேன் இனி மேட்டு பதிவு போட்டு உங்கள எல்லாம்
ஒரு வயி பண்றேன் இன்னு சொல்லி என் கதைய முட்சிக்கறேன் ,///

இது அதாக்காட்டி கஷ்டமாப்பூடுமே.

Prathap Kumar S. said...

இன்னாபா அப்ப இத்தான் ரீசனா... ஒண்ணும் பிரச்சனை இல்ல அந்த மாரியாத்தா எல்லா பாத்த்துப்பா... இனி ஒழுங்கா எழுதணும் ஒகேவா தல...வர்ட்டா அக்காங்....

Mohan said...

வா வாத்யாரே! வந்த்தாச்சா? என்ட்ரியே சொம்மா உஸ்தாது கணக்காக் கீது! நீ கலக்குத் தல!
வாழ்த்துக்கள்!

டவுசர் பாண்டி said...

//SUBBU கூறியது...
:((((//

இல்ல , சொம்மா தெரியாம தா கேக்கறேன் !! இந்த இங்கலீசு பட்ச பெரி மன்சாலுங்கோ தான் இந்த மேரி , : ; " (( ? / { } [ ] இன்னு இன்னாஇன்னாவோ கோலம் எல்லாம் போடுவாங்கோ !! நீ கூட இது மேரி போட்டாக்கா இன்னா அர்த்தம் , எனுக்கு ஒன்னிமே பிரியலளியே ?

யூர்கன் க்ருகியர் said...

Tavusar is back with the bang !

டவுசர் பாண்டி said...

//S.A. நவாஸுதீன் கூறியது
கேக்கவே கஷ்டமாக்கீதுபா....//

வா தல , இன்னா கோராம ? ? ?
பத்தியா !! கேக்க சொல்லவே உனுக்கு பீலிங்கா
கீதே ? எனுக்கு எப்பிடி இருக்கும் ,

//இது அதாக்காட்டி கஷ்டமாப்பூடுமே.//


ஹே , ஹே ஹே கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோ தல !!

டவுசர் பாண்டி said...

//நாஞ்சில் பிரதாப் கூறியது...
அந்த மாரியாத்தா எல்லா பாத்த்துப்பா//

தல , இன்னா பா போட்டோவ மாத்திப் புட்டே , மின்ன இருந்த படம் , சொம்மா எம் ஜி யார் , கணக்கா இருந்துதுபா ,

அப்பால , அந்த மாரியாத்தவ தாம்பா நம்பிக் கீனு கீரேன் , இம்மாம் தொலைவு வந்து ஆறுதலு சொன்னதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//Mohan கூறியது...
என்ட்ரியே சொம்மா உஸ்தாது கணக்காக் கீது!//

தல , வாஜாரே !! உங்கள எல்லாம் பாக்காத உங்க பதிலு எல்லாம் கேக்காத , ஆறிப் போன இட்லி கணக்கா ஆயிப் பூட்டேம்பா !! இப்ப தான் ரவ நிம்மிதியா கீது . அக்காங் !!

டவுசர் பாண்டி said...

// யூர்கன் க்ருகியர் கூறியது...
Tavusar is back with the bang !//

இன்னா தல , எப்பிடி கீரீங்கோ !! ஆமா எனுக்கு ஒரு டவுட்டு ,

நானு பாங்க்குக்கு போயி அப்பால , பேகுல தான் அத்த போட்டு எட்தாந்தேன் இன்ற விஷயம் உனுக்கு எப்பிடி தெரியும் , இன்னா மந்தரமோ , மாயமோ தெரிலே !!

( ஆமாம் நீங்க சொன்னதுக்கு இதானே அர்த்தம் ? )

Nathanjagk said...

பொட்டியில் தான் பிரச்சினையா? நான் கூட வேட்டைக்காரன் பார்த்த 'டயர்ட்ல' டவுசர்​ரெஸ்ட் எடுக்குதுனு நினைச்சிட்டேம்பா!

இப்படி கம்பனி கம்பனியா தட்டைத் தூக்கிட்டு அலையற நெலைமை டவுசருக்கு வந்திருச்சேன்னு நினைச்சா வருத்வருத்தமா இருக்குபா!

டவுசர் பாண்டி said...

//ஜெகநாதன் கூறியது...

இப்படி கம்பனி கம்பனியா தட்டைத் தூக்கிட்டு அலையற நெலைமை டவுசருக்கு வந்திருச்சேன்னு நினைச்சா வருத்வருத்தமா இருக்குபா!//

ஐயே !! இன்னா தட்டு இன்னு தான் டீடைலா சொல்லிக்கீனேனே !! நீங்க வேற தட்டு இன்னு சொன்னதும் !! நம்ப இம்மேஜி இன்னா ஆவறது
தல !!

இம்மாம் தொலைவு வந்து , என் நெலைமையப் பாத்து சிரிச்சதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் பா !!

ஜெய்லானி said...

நா கூட இன்னாவோ உன்னிய நாடு கட்தீதாங்கலோன்னு நென்ச்சேம்பா, எப்டியோ ஸேஃபா திர்ம்பி வந்துட்டே... வாத்யாரே நீ கலக்கு..வர்ட்டா!!பை

Jaleela Kamal said...

ஒரே கஷ்டமா பூடுது ,

டவுசர் அண்ணாத்தே யாரோ சூனியம் தான் வச்சுட்டாங்க்..

உங்கள் பதிவு பூட் ஆயிடுச்சு ஆனா பதிவு லூட் ஆகிவிட்டது
நான் கொஞ்சம் நாளா சோகம்,அப்பாலிக்கா நம்ம பதிவுல பாசக்கார தம்பி தங்கை எல்லா வந்து கண்ண தொடச்சி விட்டாங்க அப்பாலிக்கா நானும் வன்ட்டேன் , வன்ட்டேன்


வந்தது ரொம்ப குஜால் ...

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2010/01/blog-post_23.html

இதுக்கு எதுனா வயி காமிக்கோ

கௌதமன் said...

ஐயோ நானு அம்பேல்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாங்கோ வாத்தியாரே, ஒங்க எழுத்த படிக்காத ஒரே பேஜாரா பூடுச்சி :))

ராஜேஷ் said...

தலிவா எனக்கு ஒர்ர்ரே அழுகாட்சி தான் போ ஆனா நீ திரும்பி வந்ததுல ஒரே குஜால் தான் போஒ

அண்ணாமலையான் said...

திரும்ப வந்தாசுல, சந்தோஷம்தான்

டவுசர் பாண்டி said...

//jailani கூறியது...
உன்னிய நாடு கட்தீதாங்கலோன்னு நென்ச்சேம்பா, //

இன்னாது , நம்பள போய் நாடு கடத்துறதா ? அந்த நாடு தாங்குமா ?

டவுசர் பாண்டி said...

//Jaleela கூறியது...
ஒரே கஷ்டமா பூடுது ,//

இதுக்கு போய் கஷ்டப் படலாமா ? நம்ப தான் பதிவு போட்டு அட்தவங்கள கஷ்டப் பட வக்கணும் , ( சும்மா !! லு லு லு )

டவுசர் பாண்டி said...

Jaleela கூறியது...
//இதுக்கு எதுனா வயி காமிக்கோ//


ஒரு வயி கீது !! கொஞ்சம் ரோசன பண்ணி சொல்றேன் அக்காங் !!

டவுசர் பாண்டி said...

kggouthaman கூறியது...
//ஐயோ நானு அம்பேல்.//


தலீவா !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் பா !! அப்பால , இப்போ அம்பேல் உட்டுடாக்கா கூட அப்பால வாங்கோ
தல !

டவுசர் பாண்டி said...

//சைவகொத்துப்பரோட்டா கூறியது...
வாங்கோ வாத்தியாரே, ஒங்க எழுத்த படிக்காத ஒரே பேஜாரா பூடுச்சி :)//

வந்துட்டோமுல்ல , இனி மேட்டு நாம குடுக்குற டார்ச்சர்ல எல்லாரும் பொட்டிய பாத்தாலே நடுங்க தேவலயா ?
அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//RAJESH கூறியது...
தலிவா எனக்கு ஒர்ர்ரே அழுகாட்சி
தான் //


அய்ய !! அழுவாத வாணாம் , ட்ரெசு நென்ஜிடப் போவுது !! அத வண்டேன் இல்ல , ஒரு நாலு காமிடி போட்டு குஷிப் படுத்திட்டா போச்சி !!

டவுசர் பாண்டி said...

//அண்ணாமலையான் கூறியது...
திரும்ப வந்தாசுல, சந்தோஷம்தான்//


தலீவா !! ரொம்ப டாங்க்ஸ் ,
வாஜாரே !!

பெருங்காயம் said...

அதான் காணாமா? அதான் மெயில்அனுப்புனாலு கண்டுக்க மாட்டேங்கிரியா..

டவுசர் பாண்டி said...

//விஜய் கூறியது...
அதான் காணாமா? அதான் மெயில்அனுப்புனாலு கண்டுக்க மாட்டேங்கிரியா..//


தல !! கோச்சிக்காத தல இனிமேட்டு இது மேரி ஆவாத பாத்துக்கறேன் , வருகைக்கி தாங்க்ஸ் தல !!

பனித்துளி சங்கர் said...

உங்களின் இயல்பான வார்த்தைகள் அற்புதம் !
பகிர்வுக்கு நன்றி !

டவுசர் பாண்டி said...

//வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! கூறியது...//
//உங்களின் இயல்பான வார்த்தைகள் அற்புதம் !//


அல்லாரும் கேட்டுக்கோங்க !! என்னப் பத்தி இன்னாவோ சொன்னீங்களே !! இப்பவாது தெர்தா ? தலீவா !! உங்களுக்கு ரொம்பவே டாங்க்ஸ் .

malar said...

இனாத்தா எழுத அத்தான் எலலாரும் எழுதி புட்டாங்களே ...அக்காங்...

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh