பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

உங்களுக்கு பிடித்த பூக்கள் & எழுத்துகளை , ப்ளாக்கில் கொட்ட வைக்க ( 2 )

·

அல்லா தோஸ்த்துக்கும் , டவுசர் பாண்டியோட , வன்கம்பா . 

அல்லாரும் , இன்னாவோ கவித எழ்துடா பாண்டி , இன்னு 

சொல்லி , நம்பள உசுப்பேத்தி உட்டுட்டு ,  இப்போ !! 

இன்னாவோ !! பெரிய புலவரு மேரி , நம்ப ஏரியாவுல 

சுத்திக் கீனு கீரேம்பா !! ( ஆனா , யாரும் புலவரு இன்னு 

கூவ மாட்ராங்கோ ) 

செரி , இன்னைக்கி ஒரு மீள் பதிவு போடறேம்பா !! தோஸ்த்து !! 

மின்ன ஒரு வாட்டி நம்ப ப்ளாக்குல பூக்கள் & நட்சத்திரம் ,

கொட்ட வைக்க , இன்னு போட்டேம்பா !! அதுக்கு நல்ல 

ஆதரவு குத்து இருந்தீங்கோ !! சில பேரு , எனுக்கு பூவு 

கலரு மாறனும் . 

அப்பால, நட்சத்திரம் வேற மேரி இருக்கணும் இன்னு சொல்லி ,

கர்த்து சொன்னாங்கோ !! அதுக்காக , தாம்பா இந்த பதிவு ,

பதிவுக்கு தேடிக்கீனு இருக்கும் போது , இது மாட்டுச்சிப்பா !! 

உண்மைக்கி ரொம்பவே நல்லா இருக்கு ,இதுல , பூக்கள் மட்டும் 

இல்ல , எழுத்துக்களையும் கொட்ட வைக்கலாம் , ரொம்பவே 

சுளுவா கீது !! அதே மேரி , ப்ரீ வீவ் பார்க்கலாம் ,  அதனோட 
speed அப்பால ,direction , எத்தினி பூவு இது மேரி alteration கூட 
கீது !! தல , 

இந்த தளம் போயிட்டு , நம்பளுக்கு தேவையான இமேஜ் மேல 
கிளிக் பண்ணிட்டு கீய கீர அட்ஜீஸ் மென்ட்டு மட்டும் பண்ணிட்டு ,
generate code இன்னு கீரத அமுக்குனா போதும் .

அது மட்டு இல்ல , நாம எதுனா ஒரு இமேஜோட , HTML 
குடுத்து generate பண்ணவும் முடியும் , 

இதுல , பறக்குற பட்டாம் பூச்சியோட html எட்து போட்டுக் கீரேன் !! 
பாருங்க எப்பிடி கீது இன்னு !! அதனோட html code கீயே கீது , இது 
ஒனும்னாலும் copy பண்ணி , அந்த ஜெனரடர்ல போட்டு கோடிங் ,
எட்துக்கலாம் தல !!  

<img src="http://i567.photobucket.com/albums/ss112/anandanila/butterfly2-2.gif" border="0" alt="Photobucket">

வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,


சேத்துட்டா, போதும்

அந்த வலைப் பக்கத்துக்கு போவரத்துக்கு இங்கு கிளிக் பண்ணவும் 
பூவு & நட்சத்திரம் மாத்தணும் இன்னு சொன்னவங்க , இதுல உங்களுக்கு 
புட்ச்சா மேரி குட்து மாத்திக்கலாம் , ( மிக்கியமான விசியம் , ஏற்க்கனவே 
போட்ட கோடிங்க எட்துட்டு தான் இத போடணும் ) 

உங்க கருத்துக்கு தாம்பா இந்த டவுசரு பாண்டி வெய்ட்டிங் !! 


42 கருத்துகள்:

prabhadamu said...

உண்மையில் ரொம்ப ரொ‍ம்ப நல்ல தகவல் நன்றி நண்பரே.

பா.வேல்முருகன் said...

நல்லாருக்குதுங்க அண்ணாச்சி... இந்த மாதிரி மேட்ரெல்லாம் எப்டி பிடிக்கிதிக ?

prabhadamu said...

நண்பரே எனக்கு இன்னும் ஒரு உதவி. என் தளத்தில் ரீசன் கமன்ஸ் அப்படின்னு வெச்சு இருக்கேன். ஆனா அது பிளாங்கா இருக்கு. ஆனா டாஷ்போடு போயிட்டு தளவைப்பில் கேஜெட்டைச் சேர் பார்த்தா அதில் சரியா வருது.


ஆனா என் தளத்தில் சரியாக வரவில்லை ஏன் நண்பரே.


எனக்கா கொஞ்சம் விளக்கம் தர முடியுமா பிலீஸ்.

பா.வேல்முருகன் said...

ஆனா ஒரு பிரச்சனைங்க அண்ணாச்சி. ஒங்க சைட்ல பட்டாம்பூச்சி பறக்குரதுனால நீங்க தமிழ்ல எழுதலாமா வேணாமான்னு கேட்ருக்குதியல்லா ?. அந்த எடத்துல க்ளிக் பண்ண முடியலங்க அண்ணாச்சி.

ஒங்க தமிழ் எங்களுக்கு நல்லா புரியிதுங்க அண்ணாச்சி. நீங்க இப்டியே எழுதுங்க. அப்பதான் ஒரு பய காப்பி பேஸ்ட் பண்ண மாட்டான்.

Unknown said...

வண்ணத்து பூச்சி, ச்சும்மா சொய்ங்ன்னு பறக்குது, கலக்கல் தல. இன்னா மேரி ரோசன எல்லாம்
வர்து. டாங்க்ஸ் தல.

டவுசர் பாண்டி said...

prabhadamu கூறியது...
//எனக்கா கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?//

தலீவா !! உங்க கேள்விக்கு கண்டிப்பா பதிலு குடுக்கறேன் தலீவா !! உங்க template மேல எனுக்கு கொஞ்சம் டவுட்டு கீது !! எனக்கும் இது மேரி தான் வந்தது , அப்பால இன்னா இன்னாவோ பண்ணி செரி பண்ணிட்டேன் , உங்க ப்ளாக்க செரி பண்ணிடலாம் தல !!

என்னோட மெயிலுக்கு , வாங்க இன்னும் விரிவா பேசுவோம் !!

Prathap Kumar S. said...

தல ஒன்லி பூச்சியும், அனிமல்ஸ் மட்டும்தானா??? நல்லதா ரெண்டு பிகருங்க பிளாக்குல உலாத்துறமாதிரில்லாம் போட முடியாதா??? சே...ஏமாத்திப்புட்டிங்களே...வாஜாரே...

டவுசர் பாண்டி said...

Vels கூறியது...
//அந்த எடத்துல க்ளிக் பண்ண முடியலங்க அண்ணாச்சி.//

வாங்க வாஜார் !! இதனால எல்லாம் ஒன்னியும் இல்ல தல !! இந்த பேஜ் முழுசும் ஓபன் ஆனா பின்னாடி உங்களால கிளிக் பண்ண முடியும்
தல !! வருகைக்கி அப்பால கருத்துக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

saivakothuparotta கூறியது...
//வண்ணத்து பூச்சி, ச்சும்மா சொய்ங்ன்னு பறக்குது, கலக்கல் தல. இன்னா மேரி //

இன்னா தல , நம்ப பரோட்டா கடைல இருந்து கமண்டு குட்தா மேரி
தெர்லியே ?

வேற கடைல இருந்து கொரலு
வருது ? இன்னா நாஸ்ட்டா துன்ன போனியா ? டாங்க்ஸ் பா !!
கர்துக்கு !!

யூர்கன் க்ருகியர் said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
டவுசர் பாண்டி said...

நாஞ்சில் பிரதாப் கூறியது...
//நல்லதா ரெண்டு பிகருங்க பிளாக்குல உலாத்துறமாதிரில்லாம் போட முடியாதா??? சே...ஏமாத்திப்புட்டிங்களே.//

யப்பா !! அல்லாரும் கேட்டுக்கங்க , நல்ல புள்ளையா கீர என்னை ( ? ) நம்ப பிரதாப்பு கெட்ட புள்ளையா ஆக்கப் பாக்குறாரு !! இதுனால எதுனா ஆச்சின்னா , அதுக்கு நாஞ்சிலாறு ( அவுரு இல்ல ) பிரதாப்பு தான் காரணம் , இன்னு கூவிக்கறேன் !!
.................................

உஸ் ரகஸ்யம் :
( ரெண்டு குஜிளிங்கோ !! இப்பிடியும் அப்பிடியும் நடந்து போனா ? அட அட சோக்கா இருக்கும் பா !! நாஞ்சிலு நம்ப வேற ப்ளாக்குல போட்டு பாத்துக்கலாம் பா !! )

யூர்கன் க்ருகியர் said...

nice!

சைவகொத்துப்பரோட்டா said...

//இன்னா தல , நம்ப பரோட்டா கடைல இருந்து கமண்டு குட்தா மேரி
தெர்லியே ? //


நம்ம கடையாண்ட இர்ந்துதான் கொரலு வுட்டேன் தல, "உங்கள் கருத்துரையை வெளிஇடுக"
பட்டன தட்ட சொல்ல சொய்ய்ன்னு சுத்திகின்னே இந்த மேரி ஆச்சு தல.
பட்டாம்பூச்சி இந்த வேலைய பண்ணி இருக்குமோ :))

டவுசர் பாண்டி said...

// nice! //-யூர்கன் க்ருகியர் கூறியது

thanks ....

டவுசர் பாண்டி said...

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
//சொய்ய்ன்னு சுத்திகின்னே இந்த மேரி ஆச்சு தல.

பட்டாம்பூச்சி இந்த வேலைய பண்ணி இருக்குமோ //

இருக்கும் பா !! அதுங் கூடவே இதுவும் சுத்திக் கீனு இருக்கும் !! ( இன்னா கண்டு புடிப்பு , யப்பா !! )

Unknown said...

ரொம்ப அழகாக இருக்கு.. உங்கள் ப்ளாகில் பட்டாம்பூச்சிகள் பறப்பது.. தகவலும் அருமையாக இருக்கு..வாழ்த்துக்கள் பாண்டி அண்ணன்

Jaleela Kamal said...

அண்ணாத்தே இப்ப நான் போட்டுள்ள புது டிசைன் ஓப்பன் ஆக கொஞ்சம் டைம் எடுக்குது, இப்ப பூ மழை வருகிறவர்களை பூமழை தூவி வரவேற்க ஆசை தான், இப்ப இதையும் போட்டா இன்னும் லேட்டாகுமா பிளாக் ஓப்பன் ஆக.

என்ன இருந்தாலும் நாஞ்சிலாருக்காக இரண்டு பிகர் போட்டு இருக்கலாம்.

திவ்யாஹரி said...

ஐ.. அழகா இருக்கு பட்டாம்பூச்சி.. நன்றி பாண்டி சார்..

சசிகுமார் said...

ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்யா இனிமேல் ஒரே கலக்கல் தான்.

ப.கந்தசாமி said...

நம்ம அண்ணாத்தை ப்ளாக்குலெ போட்டுப்பார்த்துட்டோம் தோஸ்த்து.
படா தமாஸா கீது.

Menaga Sathia said...

சூப்பர்ர் அண்ணாத்தே!!

டவுசர் பாண்டி said...

சிநேகிதி கூறியது...
//வாழ்த்துக்கள் பாண்டி அண்ணன்//


உங்க வாழ்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தங்கச்சி !! நான் மின்ன போட்ட பூ டிசைனு , சுமாரா , ( சுமார் , இன்னா சுமார் நல்லாவே இல்லை ) இருந்தது,அதுல நட்சத்திரம் மட்டும் தான் நல்லா இருந்தது , இன்னைக்கி இதப் போட்ட அப்பால தான் எனுக்கு புட்சிது , அவங்களுக்கு தேவையான டிசைனு போட்டுக்கலாம் , பாருங்க அதான் தங்கச்சி !!

டவுசர் பாண்டி said...

jaleela கூறியது...
//இப்ப இதையும் போட்டா இன்னும் லேட்டாகுமா பிளாக் ஓப்பன் ஆக//

உங்க ப்ளாக் ஓபன் ஆக கொஞ்சம் நேரம் ஆவுது ,பேக் ரவுண்டு , டிசைனு கீது , அதனால தான் லேட் ஆவுது ,அதுல அந்த டிசைன் வர எடத்துல , சமையல் ஐக்கான் மாதிரி எதுனா போட்டா நல்லா இருக்கும் .

இந்த கோடிங்க போட்டு பாருங்க !! லேட் அவுரா மேரி இருந்தா எட்துடுங்களேன் , சின்ன வேல தானே அது , என்னோட ஐடியா ( ? ) படி அதே டைம் தான் ஆவும் .

வருகைக்கி டாங்க்ஸ் தங்கச்சி .

டவுசர் பாண்டி said...

திவ்யாஹரி கூறியது...
//ஐ.. அழகா இருக்கு பட்டாம்பூச்சி.. நன்றி பாண்டி சார்..//


ரொம்ப டாங்க்ஸ் சகோதரி !!

டவுசர் பாண்டி said...

சசிகுமார் கூறியது...
//ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்யா இனிமேல் ஒரே கலக்கல் தான்.//

ஹா ஹா ஹா !! தலீவா !! நீங்கலாம் வந்தா தான் தல கலகலப்பா கீது !!

டவுசர் பாண்டி said...

Dr.P.Kandaswamy கூறியது...
//நம்ம அண்ணாத்தை ப்ளாக்குலெ போட்டுப்பார்த்துட்டோம் தோஸ்த்து//

வாங்க அண்ணாத்தே !! சோக்கா கீதா ? பகுரா கீதா ? அல்லாமே ஒரு டகால்ட்டி தாம்பா !! வந்து கமண்டு குட்ததுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

Mrs.Menagasathia கூறியது...
//சூப்பர்ர் அண்ணாத்தே!!//

உங்க வருகை + கருத்துக்கு டாங்க்ஸ் தங்கச்சி !!

தமிழ்குடும்பம் said...

நன்றி பாண்டி
தமிழ்குடும்பம்.காம்

Chitra said...

புலவரே, தங்கள் கவிதையில் வண்ணத்து பூச்சிகள் பறக்கிற மாதிரி (மேரி) அழகா இருக்குங்க.

டவுசர் பாண்டி said...

தமிழ்குடும்பம் கூறியது...
//நன்றி பாண்டி
தமிழ்குடும்பம்.காம்//

பேரே சோக்கா கீதே !! உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

Chitra கூறியது...
//புலவரே, தங்கள் கவிதையில் வண்ணத்து பூச்சிகள் பறக்கிற மாதிரி (மேரி) அழகா இருக்குங்க//

அஹா , நம்பள புலவருன்னு சொல்(நம்பிட்)டாங்கோ !! டேய் மாரி, நொட்ட , குள்ளா அல்லாரும் கேட்டுக்கோங்க !! ரொம்ப டாங்க்ஸ் சகோதரி !!

ஜெய்லானி said...

வாஜாரே! அல்லாமே வருதுபா ஆனா அத்தாம்பா நம்ம நமிதா மிட்டும் வரலே இன்னா கொயப்பம்

ரோஸ்விக் said...

இன்னா... நயினா எப்புடீக்கிரே...??
புச்சு புச்சா பறக்கவிடுரே... அல்லாம் தொயில்நுட்பமாக்கீது... விடு மாமு... நீதான் அடுத்த தொயில்நுட்ப மினிஷ்டரு... (நமீதாவையும் இப்புடி இங்க ஆட விட்டீன்னா.... கன்பார்ம்)

என் பக்கத்துல உனக்கு பதிலு குடுக்காம போனதுக்கு மன்னிச்சுக்கோ மாமு... எப்புடியோ டவுசரு என் கண்ணுக்கு தெரியாம பூடுச்சு... என் தோஸ்த்த ச்சிம்புளா வுட்டுருவேனா நா... :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எம்பா ரோஸ்விக் ,
எங்க பெரிய அண்ணன் டவுசரு , உமக்கு எப்படி தெரியாம போச்சு..
தல.. உம்-னு சொல்லுங்க.. ரோஸ்விக்குல , விக் மட்டும் புடிங்கிட்டு வந்தரேன்..

பதிவு சூப்பர்..

பித்தனின் வாக்கு said...

இது நல்ல ஆக்கம் டவுசர் சார், ஆனா பூச்சிகள் பறப்பது, பதிவு படிப்பவர்களின் கருத்தை சிதறடிக்கும் அல்லவா?

டவுசர் பாண்டி said...

ஜெய்லானி கூறியது...
//நம்ம நமிதா மிட்டும் வரலே
இன்னா //

இன்னாது !! அல்லாரும் வந்தாக் கூட நமீதா மட்டும் , வரலியா ? இத்த நானு சும்மா உடப் போர்து இல்ல , ஐநா !! சப வெரிக்கும் இத்த எட்துக்குனு போய் நீதி கேக்கறேன்
தல !!

நம்ப பச்ச ரோசா ஊட்டு விசேசத்துக்கு மட்டும் ஏன் வரல ? இன்னு போராடப் போறேன் !! இதானே நீ கேட்டது ? கரீக்டா !!

டவுசர் பாண்டி said...

ரோஸ்விக் கூறியது...
// நீதான் அடுத்த தொயில்நுட்ப மினிஷ்டரு... (நமீதாவையும் இப்புடி இங்க ஆட விட்டீன்னா.... கன்பார்ம்)//

இப்ப கீர , தொழில் நுட்ப மினிஷ்டரு , நமீதாவ , ஆட வெச்சாரா ? ஆட கஷ்ட காலமே !! நாட்ல , இன்னன்னவோ நடக்குதுப்பா !!

// டவுசரு என் கண்ணுக்கு தெரியாம பூடுச்சு..//

இனிமேட்டு பெரி டவுசரா மாட்டிக்கரேன் பா !! கருத்துக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

பட்டாபட்டி.. கூறியது...
//ரோஸ்விக்குல , விக் மட்டும் புடிங்கிட்டு வந்தரேன்..//

ஐயையோ !! வாணாம் , வாணாம் !! அது மட்டு வாணாம் , அப்பால அந்த மன்சன் அழகா ஆய்டுவாரு , விக் எட்துட்டா " Rose " தானே !!

பட்டாப்பட்டி, பேரே சொம்மா டெரரா கீதுபா !! டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

பித்தனின் வாக்கு கூறியது...

//பூச்சிகள் பறப்பது, பதிவு படிப்பவர்களின் கருத்தை சிதறடிக்கும் அல்லவா?//

எந்த காலத்துல கீர தலீவா நீயி , நம்ப தோஸ்து அல்லாரும் நமீதா ரேஞ்சிக்கி கனவு கானராங்கோ !!
( நம்ப ரெண்டு பேரு மட்டும் தான் நல்லவங்க போல கீது )

ரமேஷ் said...

அண்ணாத்தே சூப்பரூ

SUFFIX said...

இன்னா மேட்டரு, கவுஜ எழுதுற, இப்போ பூ கொட்ட வைக்கிற, பேட்டைல எதுனா ஸ்பெஷலாப்பா? நல்ல விசயம்தாம்ப்பா..டேங்க்ஸ்.

பெயரில்லா said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh