பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

இன்னா தான் ஆச்சி ? எங்க தான் கீராரு ? இலங்கை வீடியோ.

· 2 கருத்துகள்


பிரபாகரன் அண்ணாத்தே கீறாரா ? 


இன்றது ஒரு பிரச்சனைன்னா, அதுக்கோசரம் நம்ப ஆளுங்க பண்ற கூத்து கீதே !!! யப்பா !! ஒரே கேரா ஆய் பூட்ச்சிபா !!!! ஆளாளுக்கு ஒரு சந்தேகம் கெளப்பி உடுராங்கோ பா !!  
செரி, அல்லாருக்கும் சந்தேகப்படறத்துக்கு, உரிமை கீது நைனா !! 

அப்பிடியே எனுக்கும் அந்தே மேரி ஒரு சந்தேகம் பா.  

இந்தே விடுதலை புலிங்க, சண்டைல எப்போ இருந்து வீக்கு ஆனாங்கோ இன்னா, அவுங்க கூடவே இருந்த, இந்த கருணா திடீர்னு கோசிக்கினு ( அது இன்னா விசையமோ) போன பின்னாடி தான் இன்னு நா நெனைக்கிறேன் பா, அதுக்கோசரம் அவுரு மட்டு தான் காரணமின்னு நா சொல்லலைபா!! அதுவு ஒரு காரணமா இருக்கும்,  

அப்பால ஒரு மேட்டரு,  

இது வெரிக்கும் அல்லா மன்சாளுங்களும், ஆளாளுக்கு ஒவ் ஒன்னு கூவிகினு கீரா மேரி, இன்னாத்துக்கு, இந்த நூசு குடுக்குற ஆளுங்கோ, நேரா போய், கண்டுகினு வரத்து தானே ?  

அப்பால, இந்த கருணா இப்போ தமிழ் எம் பி தானே, அவுரு இன்னாதான் சொல்றாரு ? இன்னாத்துக்கு எதுமே சொல்லாம கீராரு ?  

நம்ப நெடு மாறன் அண்ணாத்தே இன்னாடான்னா, பிராபாகரன் உயிரோட தான் கீறாரு, அவுருக்கு ஒன்னிமே இல்ல, இன்னு சொல்றாரு, 

செரி அப்பிடியே எட்துக்கினா கூட, அவுரு எங்க கீராரு, இன்னா தான் மேட்டரு, ஆவுது ? 

ஒன்னிமே பிரிலபா, ஒரே கேரா கீது, உடனே, சில உன்மே விளம்பிங்கோ கிராங்கோ, அவுங்கோ சொல்றாங்கோ, 

இத்த வெச்சி செல பேரு பதிவு போடரங்கோ ஐயோ ! இது நாயமா ? எப்படா எளவு விழும் இன்னு காத்துகினு கீறாங்கோ பா !! இன்னு கூவி, கூவி, அதுக்கோசரமே, 

அத்த பதிவு போடாதீங்கோ இன்னு சொல்லி இவுங்கோ ஒரு பதிவு போடராங்கோ பாரு, 
இன்னா ஒரு அறிவு நம்ப ஆளுங்களுக்கு சொல்லு நைனா ?  

என்ன மேரி ஒன்னிமே தெரியாத, கை நாட்டு ஆளுங்கள எப்பிடி ஏமாத்துராங்கோ பாரு ? செரி, இதுக்கு மேல , 

எனுக்கு கீற சில டவுட்டு,  

1 ) புலி தலைவரு உசுரோட கிராருன்னு, நெடுமாறன் சொல்றாரே, எப்பிடி அவ்ளோ இஸ்ராங்கா, சொல்றாரு?  

2) இந்த விசையமா நம்ப கவுருமென்டு இன்னா தான் சொல்லுது ?  

3) முதல் அமைச்சரு கவித எழதி கீறாரே அதுக்கு இன்னா அர்த்தம் ?  

4) உலக நாடுங்க இத்த பத்தி இன்னா தான் சொல்லுது ?  

5) உலக வல்லரசு நாடு, அதாங்க இந்த அமேரிக்கா ஒன்னிமே கொரலு கொடுக்கலியே ?  

6) மின்னமே புலிங்க கூட இருந்த கருணா, இப்போ , எம் . பி யா, கீரர் அவுரு இன்னா சொல்றாரு ?  

7) மெய்யாலுமே, புலி தலைவரு இறந்துட்டாருன்னா, அவுரு பாடி எங்க ?

எதுக்கும் இங்க இன்னாதான் கீதுன்னு பாரேன்.  


இலங்கை அரசு டிவில கீற வீடியோ, பாரு .

    


ஸோக்கு தான் சேக்கு டான்சு தான்,

· 0 கருத்துகள்


யப்பா !! இன்னா மேரி ஆளுங்கப்பா நம்ப மன்சாளுங்கோ !
இந்த பேப்பரு கார ஆளுங்கோ , இன்னா மேரி எழ்தனாங்கோ பா !அத்த உடு, 
இந்த இலங்க பிரச்சனை பத்தி இன்னா மேரி தான் சொல்றதுன்னு இல்லாமெ, 
சொம்மா லெப் டு ரைட்டு இன்னு வாங்கு வாங்குன்னு, கத்தி 
கமரலு எட்து போச்சி இந்த பாரதி ராசா,அப்பால இந்த சீமான் அப்பால 
செல்வமணி அல்லாருக்கும். இவுங்கோ, 
இந்த பிரச்சனைய பத்தி மட்டு பேசி இருந்தாக்கா ?
பரவா இல்ல 

ஆனா இதுக்கு, அந்த அம்மாவுக்கு வோட்டு போட சொல்லி இருந்தாங்களே, அது இன்னா மேரி டுபாகூரு வேலைன்னு பாத்தியா ? அது காண்டி இல்ல,

வுன்னோ ஒரு மேட்டரு கீது நைனா, 

ஆ நாங்க தான் கேலீக்கற கட்சி, எங்க கூட யாரு கீரான்களோ அவுங்க தான் கேலீப்பாங்கோ ! இன்னு, கூவி கூவி சொம்மா சவுண்டு உட்டு, யப்பா !! இன்னா கோராமடா ?? சாமி இது??
ஐசா, வச்சானுங்க பாரு ஆப்பு, மக்களு இன்னா உங்க வேல அல்லாத்தையும் பாத்துகினு தானே கீறாங்கோ ? நாலர வர்சமா அமீச்சரா அது கூட கேபிநெட்டு மந்திரியா, இருந்துட்டு, அப்பால இது செரி இல்ல அது செரி இல்லன்னு கூவிகினு இருந்தா, 

எந்த மக்களு நைனா அது ஒத்துக்குவாங்கோ? அதாம் புட்டுகிச்சி. அப்பால, மணி சங்கரு நைனா, உனுக்கு போன தபா ஒரு பைனல் குத்தாங்கோ, அத்த கண்டி நீ உசாரா இருந்து, கவுநிச்சினா இந்த தபா, நீ கெலிச்சி இருப்பே , இன்னா சொல்லு,
நம்ப மக்களு இன்னா வெவரம் இல்லாதியா கீறாங்கோ.  

கருத்து கணிப்பு,

இது ஒரு கோராம !!! பாரு, யாராவது ஒரு ஆளாவது மத்தில எதுவோ, 
ஒரு கட்சியாது மெஜாரிட்டி வரும்னு சொன்னாங்களா ?? இதுக்கு இன்னாத்துக்கு ஒரு கணிப்பு, 

அட கன்றாவியே !!!!!

இது ஒரு பாடம் நம்ப அரசியலு வாதிங்களுக்கு,

அதே மேரி இது நாடாளு மன்றத்துக்கான தேர்தலு இதுக்கு இவுக தான் கரீக்ட்டு இன்னு மக்களு நல்லா ரோசன பண்ணி தான் வோட்டு போட்டு கீறாங்கோ பா, ஆக மொத்தம் நம்ப வெதைக்கிறது தாம்பா மொளைக்கும்.

இன்னா சொல்ற ?
ரயிலு வண்டிய காணோம்.

· 6 கருத்துகள்


யப்பா ! இன்னடா கோராமையா கீது ? ரயிலு வண்டிய, 
கூடவா இந்த டுபாகூரு பசங்க தள்ளிக்கீனு போவானுங்கோ ? 
அதுவு இல்லாம, அத வேற, இட்சிட்டான்னுக்கோ பாரு, 
இன்னாத சொல்லு, ஒழுங்கான டிரைவருங்க்களே, 
செரியா வண்டி ஓட்ட மாட்டராங்கோ, இதல இது 
வேற ?? 

செரி, இத எட்தும் போய் இன்னதா பண்ண முடியும் ? 
அவுங்க ஊர்ல ரயிலு வண்டி இல்லன்னு,
நினைக்கேரன் பா !! அத்தா கண்டி தான் இந்த வேல 
செஞ்சாங்களோ ? , 

ஒரு தபா ஓட்டலுக்குரவ நாஸ்ட்டா துன்றந்துக்கு
போய் நம்ப ஓட்ட, வண்டிய நிற்திட்டு
உள்ள போய், வெளிய, வந்து பாத்தா ?? 
ஐயோ !! நம்ப வண்டிய காணோம்பா ? அப்ப நம்பளுக்கு 
இன்னா மேரி கஷ்டம் இருந்திச்சி தெரிமா ?? 
சொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா !!  
தவுலூண்டு ஓட்ட வண்டி காணாத போனதுக்கே, இந்த 
மேரின்னா, அந்தே பெரி வண்டி, டிரை வருக்கு இன்னா 
மேரி இருந்து இருக்கும் பா, அவுரு நெனைச்சே பாத்து இருக்க மாட்டாரு,

இன்னா, இன்னாவோ நடக்குது பா, நம்ப நாட்ல, 
செரி வர்ட்டா, எலிக்சனு, வேல நெரிய கீது, 
போய் கெளிச்சிட்டு வந்து அப்பால பேசறேன் ?? 

டவுசரா மக்கா ? சீ, கொக்கா ??
web counter

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh