பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப பிளாக்குல கேள்வி பதில் , போடுறது எப்படி ?

·

போன பதிவுக்கு , ஆதரவு குடுத்த தோஸ்து கெல்லாம் 
ரொம்பவே டாங்க்ஸ்ங்கோ !! 


இந்த தபா , நாம பக்கப் போறது சின்ன மேட்டரு தாங்கோ !! 
இந்த பதிவு புதுசா பிளாக்கு யூசு பண்றவங்களுக்கு உதவும் 
இன்னு ( ? ) போடுறேன்பா !! 


நீங்க நெரியோ வெப் சைடுல பாத்து இருப்பீங்கோ !! ஒரு 
கேள்வி கேட்டு , அதுக்கு ரெண்டு மூணு பதிலு குட்து 
இருப்பாங்கோ !! 


அதுக்கு நாம ஒட்டு போட்டு இது வெரிக்கும் கீர ரிசல்ட்ட 
பாக்கலாம் , செரி இப்போ அத எப்பிடி நம்ப பிளாக்குல 
வர வெக்கறது இன்னு பாக்கலாம் .


மொதல்ல உங்க டாஸ்போர்டு போங்க அதுல கேட்ஜெட்டை 
சேர் இன்னு இருக்குறதுல போய், கிளிக் பண்ணாக்கா !! 
உங்களுக்கு இது மேரி ஒன்னு வரும் , 


அதுல வாக்கெடுப்பு இன்னு இருக்குறது பக்கத்துல கீர + யை 
கிளிக் பண்ணி உங்க கேள்வி மற்றும் பதிலா குடுங்க , 
பிறகு பண்ணிட்டு , உங்களுக்கு எந்த தேதி வரை பதில் 
வேண்டுமோ !! அதன் தேதிய மாத்தி இப்போ சேவ் பண்ணுங்க , 
உங்குக்கு வேண்டிய எடத்துல இந்த கேட்ஜெட்டு வரா மேரி 
பண்ணிட்டால், வேலை முடிஞ்சிது , 


ஒரு சாம்பிளுக்கு இங்க ஒரு கேள்வி கேட்டு , நாலு பதிலு 
குட்துக் கீரேன், உங்களுக்கு டைம் இருந்தா ஒரு குத்து குத்து தல , 
உங்க பதிலு எதிர்பார்த்து கீரேன்பா !! 


அப்பிடியே மறக்காம ஒரு ஓட்ட போட்டா சந்தோசப் படுவேன் , 
கருத்தும் போட்டா டபுள் சந்தோசப்படுவேன் பா !! 

44 கருத்துகள்:

Paleo God said...

வரலாறு முக்கியம் நைனா.. நாமளும் ஒரு நாளு எல் போர்டா இர்தவங்கதானே.. புச்சா வர்ரவங்க்ளுக்கும் நீ நிரிய அப்பப்ப எலுது .. டான்ன்க்ஸ் பா ..:)

சைவகொத்துப்பரோட்டா said...

சோக்கா கீது தலீவா, நம்ம கடையாண்ட பரோட்டா சாப்புட்டு பாரு(ங்க) வாத்தியாரே.

S.A. நவாஸுதீன் said...

அட அப்போ நம்மளும் எம்.எல்.ஏ., எம்.பி ஆயிடாலாமா தல. சோக்காகீதுபா

டவுசர் பாண்டி said...

//வரலாறு முக்கியம் நைனா.//-ஷங்கர்.. கூறியது.

ஆமாம் தல , அதுல நானு பெயில் ஆயிட்டு இன்னா மேரி ஆயிபூடுச்சி பா !! நம்ப நெலைமே !! இம்மாம் தொலைவு வந்து கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//நம்ம கடையாண்ட பரோட்டா சாப்புட்டு பாரு வாத்தியாரே//-சைவகொத்துப்பரோட்டா கூறியது,


தோ, வண்டேம்பா !! நாஸ்ட்டா துன்ன கொரலு குட்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//அட அப்போ நம்மளும் எம்.எல்.ஏ., எம்.பி ஆயிடாலாமா //-S.A. நவாஸுதீன் கூறியது.


இன்னாது உன்னும், நீங்க ஆவலியா ? உடனே ஆயிடுங்க தல !! கருத்து + உங்க வருகைக்கி டாங்க்ஸ் தல !!

Prathap Kumar S. said...

தலீவா... நாம கமெண்டுக்கு பதில் போடும்போது அதுமட்டும் தனியா ஹைலட் பண்றது எப்படித்தலீவா?

டவுசர் பாண்டி said...

//தலீவா... நாம கமெண்டுக்கு பதில் போடும்போது அதுமட்டும் தனியா ஹைலட் பண்றது எப்படித்தலீவா?//-நாஞ்சில் பிரதாப் கூறியது...

கண்டிப்பா சொல்றேன் தலீவா !! கருத்துக்கு தாங்க்ஸ் தல !!

நட்புடன் ஜமால் said...

நல்லா ஜொன்னேபா

கேள்வி, பதிலும் கூட எழுதி தருவீங்களா

டவுசர் பாண்டி said...

//நல்லா ஜொன்னேபா
கேள்வி, பதிலும் கூட எழுதி
தருவீங்களா//-நட்புடன் ஜமால் கூறியது.


ஒரு சோடா குடு !! ஆம்பள சோடாவா இல்லை பொம்பள சோடாவா காமிடி தாம்பா நெனப்பு வருது !!

malar said...

சோக்கா கீது.
அத்தான் அந்த ஓட்டில்ல ஓட்டு அத்தால புரிது அன புரீயீல்ல சேக்கவேண்டியது தானே?

malar said...

’’தலீவா... நாம கமெண்டுக்கு பதில் போடும்போது அதுமட்டும் தனியா ஹைலட் பண்றது எப்படித்தலீவா?’’

பிரதாபு ....நீங்களும் டவுசரா?

Menaga Sathia said...

சோக்கா கீது அண்ணாத்தே...

malar said...

பாண்டி அகராதி சூப்பர்

டவுசர் பாண்டி said...

//சோக்கா கீது.அதான் அந்த ஓட்டில்ல ஓட்டு அத்தால புரிது அன புரீயீல்ல சேக்கவேண்டியது தானே?//-malar கூறியது.


உங்க வருகைக்கி + கருத்துக்கு ரொம்பவே தாங்க்ஸ் சகோதரி ,

இருக்கட்டும் இருக்கட்டும் , என்ன நானே கேள்வி கேட்டு பதிவு சொல்லிகினா நல்லா இருக்காது இல்லை ? அதான் ,

உங்களுக்கு தெரியுமா , எனுக்கு மொத மொத வந்த கமெண்ட்டே
" நீ எழ்தாதியே இருக்கலாம் " இன்னு தான் , அதுக்கு அப்பால ,

அத தொட்சி தூர போட்டுட்டு நம்ப வேலைய பாத்தேன் , நடுவுல
நடுவுல , சில பேரு என்னை திட்டிட்டி இது இன்னா தம்ழ இன்னு சொல்வாங்கோ !! ( இங்கிலீசுல ) இன்னாவோ எனுக்கு தமிழே தெரியாது போலவும் , இவங்களுக்கு தான் தமிழே மூச்சி மேரியும் ,

இது போல எனுக்கு நெரியோ அனுபவம் கீது !! அதான்
" ஒரு சுய சொரிதல் போல "
இந்தக் கேள்வியையும் வெச்சேன் !! அப்பாடா !! பெர்சா பதில் , சொல்டேம்பா !!

டவுசர் பாண்டி said...

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

எல் கே said...

talaiva kalakara.. patu supera keethu amam

டவுசர் பாண்டி said...

//’’தலீவா... நாம கமெண்டுக்கு பதில் போடும்போது அதுமட்டும் தனியா ஹைலட் பண்றது எப்படித்தலீவா?’’//- malar கூறியது.

உங்களுக்கு பதில் போட்டுட்டு , அப்பால ரோசன பண்ணி பாத்தேன் , நீங்க கேட்டது , நீங்க பதில் போடுற போது தானே ? அதுக்கு சிம்பிளா bold tag யூஸ் பண்ணா போதுமே ,
அதாவது நீங்க பதில் போடும் போது <b>------ </b> போட்டுட்டால் போதும் .

டவுசர் பாண்டி said...

//சோக்கா கீது அண்ணாத்தே...//-Mrs.Menagasathia கூறியது.

உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் சகோதரி ,

டவுசர் பாண்டி said...

//talaiva kalakara.. patu supera keethu amam//-LK கூறியது.

ஒரு வயியா நீங்க சொன்னத பிரிஞ்சிக்கிட்டேன் , ஹா, டவுசரா கொக்கா !! டாங்க்ஸ் தல !!

எல் கே said...

//ஒரு வயியா நீங்க சொன்னத பிரிஞ்சிக்கிட்டேன் , ஹா, டவுசரா கொக்கா !! டாங்க்ஸ் தல !!//

கொஞ்சம் சோம்பேறித்தனம் தமிழ்ல டைப் பண்ண அதன் மேட்டர்... நம்ம ஊட்டாண்ட வந்து கண்டுக்குனு போ நைனா

உண்மை விளம்பி said...

நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான தமிழில் எழுதவும்.

எழுத தெரியாது என்றால்... எழுதுவதை நிறுத்தி விடவும். இப்படி பதிவுலகத்தை குப்பை மூலம் நிரப்பாதீர்கள்.

டவுசர் பாண்டி said...

//நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான தமிழில் எழுதவும்.//-உண்மை விளம்பி கூறியது.

நீங்க ஒழுங்கா இந்த பிளாக்க பாக்கலியா ? இதுக்கு தான் 4 பதிலு குட்து கீரேனே !! அதுல அமுக்கி சொல்றது தானே . ஓஹோ அது கூட உணளுக்கு தெரியாதா ? செரி, உங்க பேரு இன்னா உண்மை விளம்பியா ? இன்னா உண்மை !! ஒயுங்கா ஒரு அட்ரசு கூட இல்ல நீங்க உண்மை விளம்பியா ? செர் தான் , பாகாயம் ( அப்பிடீன்னா , தெர்தா ? )

//எழுத தெரியாது என்றால்... எழுதுவதை நிறுத்தி விடவும். இப்படி பதிவுலகத்தை குப்பை மூலம் நிரப்பாதீர்கள்.//

பதிவுலகம் எப்பிடி கீது இன்னு எனுக்கு தெரியாதா ? நைனா !! உன்ன மேரி எத்தினி பேர நானு பாத்துட்டு இங்க வந்து இருப்பேன் !

நீ இன்னா பெள்ளக்கா பையன் !! சுஜுபீ !! தெரியாத் தனமா இங்க வந்து கமண்ட்டு குட்துட்டியே நைனா !! அத்த தபா ஊரு பேரோட வா !! இன்னா !! அக்காங் !

மரா said...

மெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே........கண்டினியூ

டவுசர் பாண்டி said...

//மெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே........கண்டினியூ//-மயில்ராவணன் கூறியது.

அண்ணாத்தே !! உங்கள மேரி தோஸ்துங்க, குடுக்குற ஆதரவு
கீர வெரிக்கும், எனுக்கு இன்னா
கவலை தல !! அப்பால வருகைக்கி உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

ஜெய்லானி said...

சொந்த செலவில் சூனியம் எதுக்கு தலீவா.அப்பாலிக்க எல்லாமே ராங்கு கர்த்தா போய்ட்டா இன்னா பன்றது.
டாங்க்ஸ் தல.

உண்மை விரும்பி said...

"உண்மை விளம்பி சொன்னது…
6 பிப்ரவரி, 2010 7:12 pm

நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான தமிழில் எழுதவும்.

எழுத தெரியாது என்றால்... எழுதுவதை நிறுத்தி விடவும். இப்படி பதிவுலகத்தை குப்பை மூலம் நிரப்பாதீர்கள். "


அப்படியெல்லாம் சொல்லபடாது

puduvaisiva said...

இந்திய ஒருமைப்பாட்டுக்கு ரொம்ப 'டேஞ்சர்' யார்?

1. பாகிஸ்தான்
2. சீனா
3. பால் தாக்கரே
4. ராஜ் தாக்கரே
5. சோமாலிய கடற்கொள்ளையர்கள்

டவுசர் பாண்டி said...

//சொந்த செலவில் சூனியம் எதுக்கு தலீவா.அப்பாலிக்க எல்லாமே ராங்கு கர்த்தா போய்ட்டா இன்னா பன்றது.
டாங்க்ஸ் தல.//-jailani கூறியது.


தலீவா !! எனுக்கும் பொழுது போவ வாணாமா !! சொல்லு !! எல்லாமே இஸ்மூத்தா போனா எப்பிடி ? இதல்லாம் சகஜமப்பா !!

டவுசர் பாண்டி said...

//உண்மை விரும்பி கூறியது..//

ரோஸ்விக், இன்ற பேரு தான் தல நல்லா கீது !! வருகைக்கி டாங்க்ஸ்
தல !!

டவுசர் பாண்டி said...

//இந்திய ஒருமைப்பாட்டுக்கு ரொம்ப 'டேஞ்சர்' யார்?//-♠புதுவை சிவா♠ கூறியது.

இந்த கேள்விய உங்க பிளாக்குல போடு தல கேள்வி நல்லா கீது ? வருகைக்கி டாங்க்ஸ் பா !!

பத்மா said...

ரொம்ப ஜாலி உங்க ப்ளாக் .அதே சமயம் கத்துக்கவும் முடியுது .கீப் இட் அப் பாண்டியன் சார்
பத்மா

Jaleela Kamal said...

அப்பாலிக்க்கா வரேன் பொருமையா படிக்க

டவுசர் பாண்டி said...

//ரொம்ப ஜாலி உங்க ப்ளாக் .அதே சமயம் கத்துக்கவும் முடியுது .கீப் இட் அப் பாண்டியன் சார்//- பத்மா,


என்னைப் போய் சாரு, இன்னு சொல்லிக்கீனு !! சொம்மா , பாண்டி இன்னே சொல்லலாம் , சகோதரி , அப்பால உங்க கருத்துக்கு + வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்

டவுசர் பாண்டி said...

//அப்பாலிக்க்கா வரேன் பொருமையா படிக்க//-Jaleela கூறியது.


இன்னாடா இது நம்ப தங்கச்சிய காணோம் இன்னு நெனச்சேன் , வந்டீங்க , வருகைக்கி டாங்க்ஸ் .

அண்ணாமலையான் said...

டவுசரு ஒரே கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்....

டவுசர் பாண்டி said...

//டவுசரு ஒரே கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்//-அண்ணாமலையான் கூறியது.

அண்ணாத்தே உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்
வாஜாரே !!

சசிகுமார் said...

தலைவா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு மேட்ர சொன்ன

டவுசர் பாண்டி said...

//தலைவா லேட்டா வந்தாலும்//- சசிகுமார் கூறியது.

தல உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !! அடிக்கடி வந்துட்டு போங்க தல !!

பத்மா said...

நம்ம பக்கம்லாம் வர மாட்டீங்க போல ..

டவுசர் பாண்டி said...

வராம இன்னா !! வந்துட்டேன் , தோ வந்துட்டேன் , இதுக்கு மின்ன ஏற்க்கனவே வந்தேன் , உங்க ஒரு பிளாக்கு நமக்கு பிரியாத இன்னாவோ இங்கிலீசுல எல்லாம் கீது , இன்னு அப்பீட்டு உட்டுட்டேன் பா !! அப்பால தான் காகித ஓடம் , பக்கம் வந்து பாத்தேன் , நல்லா இருக்கு ,

Nathanjagk said...

தோ பாருடா... ​கொஞ்சம் வுட்டா ​போதும் டவுசர் என்னென்ன ​வேலையெல்லாம் பண்ணுது??

சர்வே எடுத்து சண்டை போட்டுக்கிறாங்களே?

டவுசர்... நீங்க பட்டாசு கிளப்புங்க..!
டெக்னிகல் விஷயங்களை தாய்மொழியில் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை நான் இப்போது அனுபவித்து வருவதால் சொல்கிறேன், உங்கள் எழுத்து டெக்னிகல் விஷயங்களைப் படிக்கச் சுவாரஸியமாகத் தருகிறது.

சுத்தத் தமிழ் என்ற பெயரில் தெரியாத விஷயத்தைப் புரியாத வகையில் ​சொல்வதை விட வட்டார வழக்கில் எடுத்தியம்புவது நன்றே.

உங்களின் தமிழைப் பற்றி குறை ​சொல்லுவது அதீதமாகப் படுகிறது எனக்கு.

சென்னைத் தமிழ் (பேட்டைத் தமிழ்) ஒரு இனத்தின் சமூகத்தின் குழுமத்தின் நிலத்தின் மக்களின் அடையாளம். இதை தவிர்ப்பதோ அல்லது மறுப்பதோ இனப்படு​கொலைக்குச் சமமாகும்.

கொங்கு தமிழில், நெல்லை மணத்தில், மதுரை பொங்கு தமிழில், பிராமண தமிழில் பதிவுகள் படைக்கப்படுகின்றன.. அவைகள் எல்லாம் சரியெனப்படும் போது ​சென்னைத் தமிழில் மட்டும் ஒழுங்கின்மையைக் காண்பது ஏன்???

மொழி சமூகத்தின் ஆதி அந்தமான ஒரு சாதனம். அது மக்களின் அடையாளம். அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்றெல்லாம் எதுவுமில்லை. சென்னைத் தமிழ் (பேட்டைத் தமிழ்) எப்போதும் (ஊடகங்களால்) மிகை ​நையாண்டியுடன் அணுகப்படுவதின் காரணம் அதைப் பேசும் மக்களின் வாழ்க்கைத் தரம் சார்ந்ததாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

எப்போதும் எளியவனை எள்ளுதல் எல்லார்க்கும் எளியது​போல.

தொடர்ந்து ​செயலாற்றுங்கள் டவுசர் பாண்டி!!

வாழ்த்துக்களோடு..

டவுசர் பாண்டி said...

//சுத்தத் தமிழ் என்ற பெயரில் தெரியாத விஷயத்தைப் புரியாத வகையில் ​சொல்வதை விட வட்டார வழக்கில் எடுத்தியம்புவது நன்றே.//-ஜெகநாதன் கூறியது,

தல , சொம்மா !! ஒரு டான்க்கரு பூஸ்ட்டு குட்சா மேரி , கீது தல !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !! ஒயுங்கான தமிழு கூட டைப் அடிக்கலாம் ,

ஆனா இது இன்னா மேரி கீது , அதுலயும் எனுக்கு தமிழு டைப்பு வேற தெரியாது , கீரத வெச்சிக்கீனு அட்ஜீஸ் பண்ணிக் கீனு கீரேன், தல !! மறு கா டாங்க்ஸ் பா !!

Dubukku said...

Very nice technical tips.I use yours as a glossary for any quick tips. Kudos very well written. Keep up the good work !!

Sorry for the englibis...avasara typings from a common pc at work...

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh