பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப இதுவரைக்கும் பிளாக்கில் எழுதியதை பாதுகாக்க !!

·

அல்லா தோஸ்துங்களுக்கும் டவுசர் பாண்டியோட வணக்கம் பா !! 
போன பதிவுக்கு ஆதரவு குட்த எல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ்பா !! இன்னிக்கி நாம பாக்க போற பதிவு ரொம்பவே முக்கியமானது தலீவா !! 
எப்பிடீன்னா !! 


நாம எவ்ளவோ கஷ்டப்பட்டு ரோசன பண்ணி , பதிவு அல்லாம் 
போடறோம் , ஏதோ ஒரு காரணத்தால நம்ப பிளாக்கு அப்பீட்டு 
ஆய்ப் பூடுச்சீன்னு வெச்சிக்கோ அப்போ !! 


நாம இத்தினி நாளு கஷ்டப்பட்டு எழ்தனது அல்லாம் பூடும் தலீவா !! 
செரி இதுக்கு ஒரு சின்ன வழி கீது !! 


மொதல்ல நம்ப டாஷ்போர்ட்க்கு போங்க தலீவா !!  அப்பால கீய கீர 
படத்துல கீரா மேரி செய்ங்க !! 

அமைப்புகள் ( settings ) இன்னு கீர்த கிளிக் பண்ணி உள்ளே போங்க !! 

அடுத்து ,  இருக்குறதுல வலைப்பதிவை ஏற்றுமதி செய் (Export blog ) இன்னு இருக்குறத கிளிக் பண்ணுங்க !! 

படத்துல கீரா மேரி வலைப்பதிவை பதிவிறக்குக (Down load blog ) 
இன்னு இருக்குறத கிளிக் பண்ணி save பண்ணிடுங்க !! அவ்ளோ தான் 
இப்போ நீங்க கஷ்டப்பட்டு எழ்தின எல்லாமே நம்ப கம்பீட்டரு பொட்டில 
save ஆய்டுச்சி !! 


செரி save பண்ணியாச்சி இப்போ !! இதை அப்பிடியே ப்ளாக்ல 
எப்பிடி வர வைக்கறது இன்னு பாக்கலாம் , 


புதுசா ஒரு பிளாக் ஆரம்பிச்சி அதுல அதே மேரி 
டாஷ்போர்ட் >அமைப்புகள் > போயிட்டு அதுல வலைப் பதிவை இறக்குமதி செய்  ( import blog ) 
இன்னு இருக்குறத கிளிக் பண்ணா இது மாதிரி வரும் ,
choose file இன்னு இருக்குறத கிளிக் பண்ணி நாம save பண்ணி வெச்சிருக்குற 
பதிவுகளை குடுத்துடுங்க !! அப்பால , ( இது கீழேயே இருக்குற சின்னப் பொட்டில நாம கிளிக் பண்ணால் நமது 
பதிவுகள் எல்லாம் அதுவே வெளியீட்டு விடும் ,) கிளிக் பண்ணாமல் 
விட்டால் நமது பதிவுகள் save ஆகி வரும் பிறகு நாம மறுபடி திருத்து 
போய் வெளியிடு இன்னு குட்தாக்கா நமது இடுகை வெளியிடும் , 
இதுல வரும் பெட்டில அங்க இருக்கும் எழ்துககளை சரியா டைப் செய்து 
வலைப்பதிவை இறக்குமதி செய் இன்னு குடுத்துட்டா 
செரியாப் போச்சி !! 
நாம save பண்ணி வெச்சிக் கீரதுல நெரியோ , போட்டோ இருந்தாக்கா 
கொஞ்சம் upload ஆவ கொஞ்ச நேரம் ஆவும் , வெயிட் பண்ணுங்க 
அப்பால அதுவே தானா நம்ப புது பிளாக்குல வந்துடும் , 


இது வெரிக்கும் நாம எழ்தன பதிவுங்க எல்லாம் ஒன்னு உடாம 
வந்துடும் தலீவா !! டெம்பிளட்டு, மட்டும் மாறி வரும் !!! 
பதிவுகள் கரீக்டா வரும் , 


உங்க பதிவுகள காப்பாத்த வழி சொன்ன இந்த டவுசருக்கு 
ஒரு ஓட்ட போடுங்க தலீவா !! 
மறக்காம உங்க கருத்த போடுங்க !! 

46 கருத்துகள்:

தினேஷ் said...

தல. பின்னிடீங்க போங்க

தினேஷ், புதுவை.காம்

டவுசர் பாண்டி said...

//தல. பின்னிடீங்க போங்க//-தினேஷ் கூறியது.


அய்யோ !! தலீவா !! உண்மைக்கி எனக்கு இன்ப அதிர்ச்சியா கீது !! இந்த பதிவுக்கு நா எட்துக்கீன கஷ்டம் எல்லாம் , வீண் போவல தலீவா !!

உங்க மொதல் கருத்து நா பட்ட கஷ்டத்த சந்தோஷமா மாத்திடுச்சி தலீவா !! உங்க கருத்து டாங்க்ஸ்
தல !!

சூர்யா ௧ண்ணன் said...

பின்னீட்டிங்க தலீவா !! சூப்பர்!

டவுசர் பாண்டி said...

//பின்னீட்டிங்க தலீவா !! சூப்பர்!//-சூர்யா ௧ண்ணன் கூறியது.


ஆஹா !! உங்க வருகைக்கி + கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்
வாஜாரே !!

THANGAMANI said...

நன்று.

டவுசர் பாண்டி said...

//நன்று.//-THANGAMANI கூறியது.


டாங்க்ஸ் தலீவா !!

kishore said...

பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பா..

டவுசர் பாண்டி said...

//பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பா//-KISHORE கூறியது.

உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

வேலன். said...

ஆகா...என்னா டவுசரு...காலையிலேயே வந்துட்டே...உந்து பதிவு சொக்காகீதுபா...என்பதிவுகளை தனியே எடுத்து வைச்சிக்கினப்பா...ரொம்ப டாக்ங்ஸ்...வரட்டா....
வாழ்க வளமுடன்,
வேலன்.

அடங்காதவன் said...

ம்ம்ம்ம்....அங்கிள் எனக்குஒருடவட்...
நான் இன்னிக்குதன் பதிவுபோட்டேன்.அதை இதுமாதிரி பாதுகாக்க முடியுமா அங்கிள்...?
அப்புறம் என்குடவிளையாடவாங்கஅங்கிள்.
அடங்காதவன்

Subankan said...

அட, டவுசரு.சோக்காக்கீதுப்பா, டாங்க்ஸ் தலீவா.

டவுசர் பாண்டி said...

//என்னா டவுசரு..காலையிலேயே வந்துட்டே...உந்து பதிவு சொக்காகீதுபா.//-வேலன்.

நம்பளுக்கு ஏது தலீவா நேரம் காலம் எல்லாம் !! கர்துக்கு டாங்க்ஸ்
வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//அங்கிள் எனக்குஒருடவட்.//-அடங்காதவன்.

மொதல்ல எனுக்கு ஒரு டவுட்டு எனுக்கு இன்னா வைசு ஆயி பூடுது ? என்னப் போய் அன்கிள் இன்றீங்கோ !!


//நான் இன்னிக்குதன் பதிவுபோட்டேன்.//

சரி .......

//அதை இதுமாதிரி பாதுகாக்க முடியுமா அங்கிள்...?//

ஐயோ !! மொதல்ல அத பதிவிறக்கம் செய்து வெச்சிக்கோங்க !! எவ்ளோ முக்கியமானது உங்க போட்டோ அல்லாம் வேற போட்டுக் கீரீங்கோ !!

//என்குடவிளையாடவாங்கஅங்கிள்//-
அடங்காதவன்,

யாருப்பா இது ? ராசா !! கலாம் அண்ணாத்த கண்ட கனவு இப்ப தாம்பா பலிக்குது !! குயந்தைங்க எல்லாம் கம்பீட்டர் தட்டுங்க இன்னு சொன்னாரே அதனால வந்த வினை !! ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் .......

டவுசர் பாண்டி said...

//அட, டவுசரு.சோக்காக்கீதுப்பா, டாங்க்ஸ் தலீவா//-Subankan கூறியது.

வாங்க தலீவா !! உங்க வருகைக்கி , கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

S.A. நவாஸுதீன் said...

உங்களுக்கு இங்குட்டு 2 கண் இருக்குறது தெரியாமப் போச்சே. ரொம்ப நன்றிங்கோ.

இதை தெரியப் படுத்திய ஜமாலுக்கு - தேங்க்ஸ் மாப்ள

டவுசர் பாண்டி said...

//உங்களுக்கு இங்குட்டு 2 கண் இருக்குறது தெரியாமப் போச்சே. ரொம்ப நன்றிங்கோ.இதை தெரியப் படுத்திய ஜமாலுக்கு//-S.A. நவாஸுதீன்

ஆமா தலீவா !! தெரியாத்தனமா !! அது வேற கீது !! அப்பால , உங்கள அறிமுகப் படுத்திய ஜமால் அண்ணாத்தைக்கி ரொம்பவே
நன்றிங்கோ !!

பெருங்காயம் said...

ரொம்ப நன்றி டவுசர் அண்ணாத்த... நான் முதல்ல ஆரம்பிச்ச பெருங்காயம்-ங்ற பிளாக்கை கூகுள்கார துhக்கிட்டான் அண்ணாத்த. நன்றி அண்ணாத்த

டவுசர் பாண்டி said...

//பெருங்காயம்-ங்ற பிளாக்கை கூகுள்கார துhக்கிட்டான் அண்ணாத்த//- விஜய்.

வாங்க விஜய் தலீவா !! இன்னாது பெருங்காயத்த காணாமா ?? ஐயோ !! ஐயோ !! ஆமா !! எந்த
பெருங்காயம் !! இந்த தபா பாத்து சூசகமா நடத்துக்கப்பு !!

Mohan said...

தல! மிகவும் பயனுள்ள, உபயோகமான பதிவு! நன்றி தலீவா!!

உண்மைத்தமிழன் said...

டவுசரு..!

என்னோடதையும் பேக்கப் பண்ணி வைச்சிருந்தேன். அப்படியும் புது பிளாக்ல ஏத்த முடியலை..!

சும்மா 48 எம்.பி.தான் இருக்கு. இதுக்கே சிஸ்டம் ஹேங் ஆவுதுதான்னா நான் என்னன்னு சொல்றது..?

டவுசர் பாண்டி said...

//தல! மிகவும் பயனுள்ள, உபயோகமான பதிவு! நன்றி தலீவா!//-Mohan,

வாங்க !! மோகனு அண்ணாத்தே !! இதுக்கு போய் இன்னாத்துக்கு நன்றி எல்லாம் சொல்லிக்கீனு !! நீங்கலாம் நம்ப தோஸ்து !! இன்னா நானு சொல்றது அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//சும்மா 48 எம்.பி.தான் இருக்கு. இதுக்கே சிஸ்டம் ஹேங் ஆவுதுதான்னா நான் என்னன்னு சொல்றது//-உண்மைத் தமிழன்,


யப்பா !! உங்க பேருக்கு பின்னால கீர நம்பருங்கள பாத்தாலே எனுக்கு மழ்கம் மழ்க்கமா வருது !! பாவம் இந்த பொட்டி அது இன்னாதான் பண்ணும், அக்காங் !!

தலீவா !! வருகைக்கி + கருத்துக்கு நன்றி தல ( நம்மோட upload speed வேகமா இருந்தா, சீக்கிரமா ஆய்டும் தலீவா !! )

டவுசர் பாண்டி said...

உங்களோட உண்மைத் தமிழன் பிளாக்குல இருக்குற உன்னொரு பிளாக் இன்னா தலீவா !! உங்க பேருக்கும் அதுல இருக்குறதுக்கும் சம்பந்தமே இல்லாமே கீது !!

Prathap Kumar S. said...

தலைவா...சூப்பர் இதை ஒருவருஷம் முன்னாடி சொல்லிருந்திங்ண்ணா... உஷாராயிருந்திருப்பேன்...பிளாக்கை எவனோ ஆட்டையைப்போட்டான் தலைவா..
ஓகே இப்போ பண்ணிட்டேன்...நன்றி தலைவா..

டவுசர் பாண்டி said...

//தலைவா...சூப்பர் இதை ஒருவருஷம் முன்னாடி சொல்லிருந்திங்ண்ணா... உஷாராயிருந்திருப்பேன்...பிளாக்கை எவனோ ஆட்டையைப்போட்டான் தலைவா..
ஓகே இப்போ பண்ணிட்டேன்...நன்றி தலைவா.//-நாஞ்சில் பிரதாப் கூறியது.


வாங்க வாஜார் !! உங்க பிளாக்க இனிமேட்டாவது பத்தரமா பாத்துக்கோங்க !! தலீவா !! உங்க கருத்துக்கு + வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் தல !!

Paleo God said...

தோஸ்த்து

இஸ்துகினு, இஸ்துகினு எய்திகினுகிறோமே, ராவுல தூங்கசொல்ல எப்பனா டவ்சர் கைட்டிருவானுங்களோன்னு மெர்சலாவே இர்ந்திச்சி... இன்னா பண்றது சேதி தம்மத்தூண்டா இருந்தாலும் நீ இன்கீல்ஸ்ல சொன்னாதான் சுகுரா புரியிது... உசாரான மாட்டேர்ல்லாம் ஒடனே சொல்லி உசார் படுத்திடு இன்னா.

ஆங்... இன்னாத்தையோ சொல்ல நெனச்சன்.. அதாம்ப்பா தாங்க்ஸ்சு..

ஜோதிஜி said...

குத்து குத்துன்னு குத்தியாச்சுங்றேன்

டவுசர் பாண்டி said...

//தோஸ்த்து இஸ்துகினு, இஸ்துகினு எய்திகினுகிறோமே, ராவுல தூங்கசொல்ல எப்பனா டவ்சர் கைட்டிருவானுங்களோன்னு மெர்சலாவே இர்ந்திச்சி//- பலா பட்டறை கூறியது.

யப்பா !! நம்ப டவுசர யாரும் உருவ முடியாதபடி செய்ண்டேன் தல , நீங்களும் உஷாரா இர்ந்துகுங்க தல !! உங்க வருகைக்கி அப்பால கர்த்துக்கு டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//குத்து குத்துன்னு குத்தியாச்சுங்றேன்//-
ஜோதிஜி கூறியது.

தல பாத்து குத்துங்க , பொட்டி ஒடன்சிடப் போவுது !! அப்பால குத்தனதுக்கு + கருத்துக்கு
டாங்க்ஸ் பா !!

பாவா ஷரீப் said...

தல பெரிய பிஸ்னஸ் மேக்னட் ஆய்டீங்க
(ஆமா.... பின்ன என்ன இம்போர்ட் & எக்ஸ்போர்ட் எல்லாம் பண்றீங்கோ)

ரோஸ்விக் said...

நயினா! அத்து கரீட்டா வேல செய்யமாட்டேங்குது... நம்ப கடைய ஒரு தபா ஏற்றுமதி பண்ணிட்டு அப்பறமாட்டி இறக்குமதி பண்நீனாக்க அது சரியாய் வேல செய்யலப்பா.. நொம்ப நம்மள டபாய்க்கீது. இன்ன பன்றதுன்னு ஒன்னும் பிரியலப்பா... ஓரே பேஜாராக்கீது.

டவுசர் பாண்டி said...

//தல பெரிய பிஸ்னஸ் மேக்னட் ஆய்டீங்க//-கருவாச்சி கூறியது.

பின்ன இன்னா நானு எவ்ளோ நாளைக்கி தான் குப்பத்துல குரலு குட்துக்குனு இருப்பேன் !! நானும் பிசினசு மேனு ஆவத்தாவிலியா !!

டவுசர் பாண்டி said...

//நயினா! அத்து கரீட்டா வேல செய்யமாட்டேங்குது.//- ரோஸ்விக் கூறியது.

இன்னாது வேல செய்லியா ?

//நம்ப கடைய ஒரு தபா ஏற்றுமதி பண்ணிட்டு அப்பறமாட்டி இறக்குமதி பண்நீனாக்க அது சரியாய் வேல செய்யலப்பா.//

அதானே பாத்தேன் , இது கடைய எல்லாம் எர்க்காது தலீவா !! ஒன்லி பிளாக் தான் !!

//இன்ன பன்றதுன்னு ஒன்னும் பிரியலப்பா... ஓரே பேஜாராக்கீது.//

இதுக்கு போய் பீலிங்கு ஆவலாமா தல !! screenshot டப் பாத்து கரீக்டா பாலோவ் பண்ணுங்க தல !! அப்பிடியும் வரலியா எனுக்கு மெய்லு உடுங்க !! நானு சொல்றேன் !!

Jaleela Kamal said...

annaaththaa thappa ninaikakthiingka

konjsam busy, vareen vanthu paarkkiReen,

uurilirunthu paiyan vanthu irukkaan. neeram illaathathaal entha pathivum padikka mudiyala/


pathivukaL munpu pooddu vaiththathu vanthu koNdu irukku

டவுசர் பாண்டி said...

//annaaththaa thappa ninaikakthiingka//-Jaleela கூறியது.


அதல்லாம் ஒன்னியும் தப்பா எட்துக்க மாட்டான் இந்த டவுசரு !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் !! சகோதரி !!

மகா said...

very useful post...

டவுசர் பாண்டி said...

//very useful post.//-மகா கூறியது,


கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் !!

ராஜேஷ் said...

டலிவா சூப்புரு டமிலு சூப்புரு மேட்ரு கல்கு டலிவா

டவுசர் பாண்டி said...

//சூப்புரு மேட்ரு கல்கு டலிவா//-RAJESH கூறியது.

இன்னா தோஸ்து , எப்பிடி கீரீங்கோ? ரொம்ப டாங்க்ஸ்பா !! சோக்கா வந்து கர்த்து சொன்னதுக்கு !! அக்காங் !!

malarvizhi said...

thanks for visiting my blogemu , thambi. emu egg superba irukum.

டவுசர் பாண்டி said...

//thanks for visiting my blogemu , thambi. emu egg superba irukum.//-malarvizhi,

உங்க வர்கைக்கி டாங்க்ஸ் !!
சகோதரி !!

Jaleela Kamal said...

அண்ணாத்தா இத ஒரு டெஸ்ட் வேற பிலாக்கில் செய்து பார்த்தேன் சூப்பர் அப்படியே ஒன்று விடமா வந்து விட்டது, பதிவுகளை இப்படி சேமித்து பாதுகாத்து வைத்து கொள்ளலாம்,

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்த இத ஒரு டெஸ்ட் வேற பிலாக்கில் செய்து பார்த்தேன் சூப்பர் //- Jaleela கூறியது.


ரொம்ப சந்தோசம் !! உங்க கருத்துக்கு டாங்க்ஸ் சகோதரி !!

tamilnanbarkal.com said...

நைனா பூச்சி நைனா உன் சொல் பேச்சை கேட்கலையே,http://beermohamedtamilgroup.blogspot.com இந்த பிளாக் எவணோ அப்பீட் பன்னிட்டான் தலை எதோ ஸ்பேம் போட்டுட்டானாம், எப்படி நைனா எனக்கு வேனும் நைனா இந்த பிளாக்கு ஒருவழி சொல்லு நைனா
ple email beermohamed@gmail.com
யாருக்கு தெரிந்தாலும் எனக்கு மெயில் பன்னுங்களேன், எப்படி மூடிய பிளாக்கை திரும்ப திறப்பது

Jaleela Kamal said...

இன்னுமொரு பெரிய டவுட் அண்ணாத்தே கிளியர் பண்ணுங்க‌,

பதிவை போட்டுட்டு அதன் கீழ் உள்ள பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் போட்டுட்டு, இருக்கும் போதே, இல்லை லிங்குக்காக மற்ற பிளாக் ஓப்பன் பண்ணும் போது கணக்கிலடங்கா பிலாக் வின்டோ ஓப்பன் ஆகி அத்த க்குளோஸ் பணறதுகுள்ள படா பேஜாரா போவுது, அதுக்கு ஒரு வழி சொல்லுங்களே......

prabhadamu said...

தல. பின்னிடீங்க போங்க.


////இன்னுமொரு பெரிய டவுட் அண்ணாத்தே கிளியர் பண்ணுங்க‌,

பதிவை போட்டுட்டு அதன் கீழ் உள்ள பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் போட்டுட்டு, இருக்கும் போதே, இல்லை லிங்குக்காக மற்ற பிளாக் ஓப்பன் பண்ணும் போது கணக்கிலடங்கா பிலாக் வின்டோ ஓப்பன் ஆகி அத்த க்குளோஸ் பணறதுகுள்ள படா பேஜாரா போவுது, அதுக்கு ஒரு வழி சொல்லுங்களே......////

please?

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh