பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப டெஸ்க்டாப்ப நாலா பிரிச்சி யூஸ் பண்ணுவது எப்படி ?

·

எல்லாருக்கும் டவுசர் பாண்டியோட வணக்கம் பா !! போன பதிவு எல்லாருக்கும் புட்சிருக்கும் இன்னு நெனைக்கிறேன் , 
அப்பால இந்த தபா !! 


பதிவுல நம்ப  டெஸ்க்டாப்பு, பத்தி பாக்கலாம் தலீவா !! 
இது பத்தி நம்ப நண்பர் ஒர்த்தர் போட்டு இருந்தாலும் , அதுக்கு யூஸ் 
பண்ணது வேற சாப்ட்வேர் , 


அதுவும் இல்லாம , இது கொஞ்சம் சிம்பிளா கீரா மேரி , நானு 
நெனைக்கிறேன் பா !! அதா கண்டி இந்த மாடலு , 


இப்போ !! நம்ப டெஸ்க் டாப்ப , வந்து நாலா பிரிச்சிக்கலாம் , 
இந்த மாடலு ரொம்ப பேருக்கு யூஸ் ஆவும் , 


மிக்கியமா ஆபீசுல சொந்த வேலையா நெட் யூஸ் பண்ணும் போது 
உதவும் , நாம பாத்துக்கிட்டு இருந்த டெஸ்க் டாப்பையே மாத்தி 
உடனே வேற எட்துக்கினு வந்துடலாம் , 


நம்ப பாத்துக்கிட்டு இருந்த பேஜ் உம் ஒன்னியும் ஆவாது , மறுபடி அத 
கொண்டு வர்றதும் ரொம்ப ஈசியா இருக்கும் , quick ஐகாணுல போய் 
ஒரு கிளிக் பண்ணி , 

எந்த பேஜ் ஒனுமோ அத right ( or ) left key யூஸ் பண்ணி 
கொண்டு வந்து Enter பண்ணாப் போதும் , 


நமக்கு தேவையான டெஸ்க் டாப் வந்துடும் , இந்த சாப்ட்வேர் 
டவுன் லோட் பண்ண இங்கு கிளிக் செய்யுங்க , தலீவா !! இந்த சாப்ட்வேர் டவுன் லோடு பண்ணி முடிச்சவுடன், ஓபன் பண்ணி 
ரன் பண்ணுங்க தல , 


உங்களுக்கு quick lanch ல ஒரு ஐக்கான் கிடைக்கும் , அதுல போய் right 
கிளிக் பண்ணாக்கா, உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும் , 
அதுல உங்களுக்கு வேண்டிய மாடல செலக்ட் பண்ணி ஓகே பண்ணுங்க , 


அப்புறமா left கிளிக் பண்ணாக்கா !! நீங்க செலக்ட் பண்ண மாடல்ல 
டெஸ்க்டாப் வந்துடும் , 


யூஸ் பண்ணிப் பாருங்க , உங்க கருத்த மறக்காம சொல்லி, 
அப்பிடியே ஒரு ஓட்ட குத்தி உடுங்க தலீவா !! 19 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் said...

ஓஹோ ... !!

டவுசர் பாண்டி said...

யப்பா !! தலீவா !! சுட சுட உங்க கருத்த பாத்த உடனே எனுக்கு ரொம்ப குஜஷாலா பூடுச்சிப்பா !! அக்காங் !!

பாலா said...

///உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும்///

நைனா..., ‘மேரி’... பிகரு எப்டி? தேறுமா?

டவுசர் பாண்டி said...

//நைனா..., ‘மேரி’... பிகரு எப்டி? தேறுமா?//- ஹாலிவுட் பாலா கூறியது.அய்யே !! தல !! மேரி இன்றது பிகரு இல்லப்பா !! "அதுமேரி " இன்னு அர்த்தம் அக்காங் !! நீ சந்துல ரயிலு வண்டியே உடுவியே !!

நித்தி said...

தல கட்டுரை சூப்பர்......படிச்சி பார்த்து டவுண்லோடு பண்ணி போட்டதும் டெஸ்க்டாப்பே 3d ல‌ சும்மா அதிருதில்ல......

டாங்ஸ்பா.....அப்பால ஓட்டு குத்தியாச்சி பா...

டவுசர் பாண்டி said...

//தல கட்டுரை சூப்பர்......படிச்சி பார்த்து டவுண்லோடு பண்ணி போட்டதும் டெஸ்க்டாப்பே 3d ல‌ சும்மா அதிருதில்ல//- நித்தியானந்தம் கூறியது.

தலீவா !! பெரி மன்சாலு அல்லாம் நம்ப ஏரியாவுக்கு வந்து கீரீங்கோ !! டாங்க்ஸ் வாஜாரே !!

//டாங்ஸ்பா.....அப்பால ஓட்டு குத்தியாச்சி பா.//

டபுள் , டாங்க்ஸ் தல ,

கிருஷ்ணா (Krishna) said...

ஒன்கதையும் நல்ல இருக்கு தம்பி.
அப்ப்ரோச் யும் ஸ்டைல் உம் கலக்குறீங்க.

http://rvkrishnakumar.blogspot.com/

பாவா ஷரீப் said...

சூப்பர் தல

டவுசர் பாண்டி said...

//அப்ப்ரோச் யும் ஸ்டைல் உம் கலக்குறீங்க.//-கிருஷ்ணா,ரொம்பவே நன்றி !! தலீவா !! எல்லாம் உங்கள மாதிரி நண்பர்களோட ஆசீர்வாதம் தான் !!

டவுசர் பாண்டி said...

//சூப்பர் தல//- கருவாச்சி,


இல்ல , கம்பனிக்கி லேட்டா வந்துட்டு , இன்னா இது ? ஒரு மன்னாப்பு கேக்கத் தாவலை ? இனிமேட்டு ஒயுங்கா வந்துடனும் , அக்காங் சொல்டேன்

blogpaandi said...

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.

blogpaandi said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பாலா said...

///புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.////

இன்னா.. பாண்டி..! நம்ம ஏரியால வந்துகினு..., இல்க்கியம் பேசிகினு கீறாரு.

கீசிடலாமா.. அண்ணாத்த.... ப்லாக் பாண்டிய?

டவுசர் பாண்டி said...

//புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.//-blogpaandi கூறியது.அஹா !! இன்னா தலீவா !! நீங்க blogpaandi அப்போ நானு ? வந்து கர்த்து சொன்னதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//கீசிடலாமா.. அண்ணாத்த.... ப்லாக் பாண்டிய?//-ஹாலிவுட் பாலா கூறியது.


ஐயோ !! ஐயையோ !! அண்ணாத்த நானு ஒரு ஐயோ பாவம் !! பேரு தான் சும்மா டேரரா இருக்கும் !!

என்னைப் போயி கீக்கர்துக்கு
கூப்புடுறியே ? ஏதே எனுக்கும்
ரெண்டு பேரு வரது உனுக்கு புடிக்கலையா ?

நானு இன்னா பண்ணுவேன் !! பாலா அண்ணா !! ஒரு மன்னாப்பு
குட்துடு !!

பாலா said...

நீ சொன்னாங்காட்டி... ச்ச்சும்மா வுடுறேன் அக்காங்க்!

Mohan said...

கண்ண மூடி திறக்கறதுக்குள்ள ஒரு சூடான பதிவ போட்டற தல! எப்பவுமே நான் லேட்டாத்தான் வர்றேன் !
வயக்கம் போல சூப்பர்தான் தல!

டவுசர் பாண்டி said...

//வயக்கம் போல சூப்பர்தான் தல!//- Mohan,

தலீவா !! ரொம்பவே நன்றி , மோகனு வாஜார் லேட்டா வந்தாலும் , அவுரு வந்த அப்பால தாம்பா ஒரு நிறைவா
கீது , அக்காங் !!

SUBBU said...

சுலுவாக்கீது பாண்டி :))

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh