பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

புதுவை .காம் உடன் தொழில் நுட்பச் சந்திப்பு

·

 பதிவுலக தோஸ்துங்களே !! அல்லாருக்கும் டவுசரோட வணக்கம் !! 
நம்ப பதிவுங்க மூலமா எனுக்கு கெடச்ச பிரண்டுங்கோ !! நெரியோ பேர் !! 
அதுல நானு ஏற்கனவே சொல்லிக்கீறேன் நம்பளுக்கு பிரான்சுல கூட 
தோஸ்து கீறாங்கோ இன்னு !! 


அவுர நேர்ல பாக்கற மேரி ஒரு சந்தர்ப்பம் கெடச்சது !! அவுரும் செரி 
நாம சந்திக்கலாம் இன்னு கேரன்ட்டி குட்து வந்தாரு !! 


எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு  கேக்கப் 
போறாரு இன்னு தான் !! ) 
ஆனா அப்படி எல்லாம் நடக்கலை , அநியாயத்துக்கு நல்ல புள்ளையா 
கீறாரு பா !! இந்த காலத்துலே இப்பிடியா ? 


இந்த சந்திப்போட நோக்கமே வெறும் பதிவர் சந்திப்பு மட்டு இல்லே !! 
புதுவை .காம் ஒரு டெக்னிக்கல் பதிவருங்கோ கீர .com அவங்க 
நோக்கமே கற்போம் !! கற்பிப்போம் !!  - pudhuvai.com  

அதா  கண்டி அவங்களுக்கு தெரிஞ்ச விஷியத்த எல்லாருக்கும் சொல்லித் 
தர்றது தான் , 


இதை நான் பதிவர் சந்திப்பு இன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் ! 
ஏன்னா !! 


அவங்க வந்தது முதல் திரும்பிப் போகும் வரை எங்களின் கணினி 
பற்றிய சந்தேகங்களுக்கு , விளக்கம் அளிப்பதிலேயே நேரம் 
செலவானது !! மிகப் பயனுள்ளதாக அமைந்தது !! 


அதுனால , நம்ப கேட்ட டவுட்டுக் கெல்லாம் , சொம்மா !! நச்சு 
நச்சுன்னு !! பதிலு குட்துக் கீனாங்கோ ! !   


செரி நம்ப கூட இருந்த போட்டோ அல்லாம் போடறேன் , பாருங்க தலீவா !! இவங்க தான் புதுவை .காம் ,நண்பர்கள் ,முதலில் இருக்குறது 
நித்தியானந்தம், அடுத்து மோகன கிருஷ்ணன் ,  


ஹைட்டு மட்டும் இல்ல தலீவா !! மனசும் உயர்ந்த மனசு !! தான் , 
அடுத்து மோகன கிருஷ்ணன் பேரு மட்டும் இல்ல ஆளும் 
கிருஷ்ணன் மேரி தூளா கீராரு !! 

இது நம்ப வேலன் அண்ணாத்தே !! இன்னா மேரி டவுட்டு அல்லாம் 
கேக்குறாரு !! பாருங்க !! நம்ப செட்டுலயே ரொம்ப கொயந்த ( வயசுல தான் மத்த படி கம்பீட்டருல ம்ம்ம்ம்ம்ம்ம் ) 


invisible விஜி !!  விஜி கேட்ட டவுட்டுக்கு எல்லாம் பொறுமையா 
பதிலு குடுக்குறாரு !! நித்தி சார் !!

                                  ஹி!!  ஹி !! நம்பளுக்கு !!  மோகன கிருஷ்ணன் சார் !! சொல்லிக் குடுக்கறாரு !! 

வேலன் அண்ணாத்தைக்கி , மோகன் சார் சொல்லித் தாராரு ! 
இன்னாமோ அந்த பொட்டிய ரெண்டு பேரும் ஒரு வயி பன்றாங்கோ !! மூணு பேரு கிட்டயும் மாட்டிக்கினாறு, மோகன் சார் !

சொம்மா !! லெப்ட்டு,  ரைட்டு அல்லாம் கேள்வி மேல கேள்வி !! 

எல்லாம் ஆச்சி !! இப்ப தான் கொஞ்சம் ப்ரீயா !! ஒண்ணா நின்னு 
போட்டோஎத்துக்கினோம் !! எனுக்கு ரொம்பவே ஆச்சரியமா பூடுது !! நாம இன்னா 
சந்தேகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு பதிலு குடுக்கறாங்க பாருங்க !! 
அப்ப தான் புதுவை .காம் மரியாதையே தெரிஞ்சிது !!                       


" நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லிக் குடுக்கறதுல 
இருக்குற திருப்தி வேற எதுலயும் இல்லீங்க !! " -


இந்த இனிய சந்திப்புக்கு புதுவை .காம் நண்பர்களுக்கு நன்றி 


வாழ்க வளர்க !! 

26 கருத்துகள்:

அண்ணாமலையான் said...

வாழ்க வளர்க !!

வேலன். said...

பதிவர்கள் சந்திப்பில் நானும் உடன் இருந்ததை பெருமையாக கருதுகின்றேன்.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி said...

//வாழ்க வளர்க !!//-அண்ணாமலையான் கூறியது.

வணக்கம் தலீவா !! உங்க கருத்துக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//பதிவர்கள் சந்திப்பில் நானும் உடன் இருந்ததை பெருமையாக கருதுகின்றேன்//- வேலன். கூறியது.

நீங்க இல்லாமையா ? செர்தான் !! கர்துக்கு டாங்க்ஸ் தல !!

ராஜேஷ் said...

இன்னா கண்ணு கூட்டத்துக்கு என்ன கூப்புடவே இல்ல

டவுசர் பாண்டி said...

//இன்னா கண்ணு கூட்டத்துக்கு என்ன கூப்புடவே இல்ல//-RAJESH கூறியது.


தலீவா !! எனுக்கு மன்னாப்பு குட்துடு !! அத்த தபா நாம எல்லாம் சேந்து தூள் கேளப்பலாம் !! வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

பாவா ஷரீப் said...

உங்க பேச்சு கா வாஜாரே
இன்னா தல நம்மள கண்டுக்காம போய்கினியே

Chitra said...

எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு கேக்கப்
போறாரு இன்னு தான் !! ) ...............ha,ha,ha,........

யூர்கன் க்ருகியர் said...

வாழ்க வளர்க !!

டவுசர் பாண்டி said...

//உங்க பேச்சு கா வாஜாரே
இன்னா தல நம்மள கண்டுக்காம போய்கினியே//-கருவாச்சி கூறியது.


தல !! பழம் உடு தல !! நம்பள மேரி ஆளுங்களுக்கு கூடவா கா !!
உடறது !! ஆனா ஒன்னு உன்கிட்ட சொல்லாத இருந்தது தப்பு தான் தல !! நீ நம்ப கம்பனி ஆளு !! அத்தா கண்டி மன்னாப்பு கேக்கறான் இந்த பாண்டி !!

டவுசர் பாண்டி said...

//.......ha,ha,ha,........//- Chitra கூறியது.


என் கத உங்களுக்கு சிரிப்பாக் கீதா !! ( சொம்மா டமாஷ்) வந்து கருத்து சொன்னதுக்கு ( சிரிப்பா சிரிச்சதுக்கு ) டாங்க்ஸ் .. சகோதரி !! உங்களுக்கு இன்னா மேரி கோவம் வருது !! யப்பா !! உங்க பிளாக் பாத்துட்டு பேஜாரா பூட்டேம் பா !! வாழ்க வளர்க !!

டவுசர் பாண்டி said...

//வாழ்க வளர்க !!//-யூர்கன் க்ருகியர் கூறியது.


உங்கள அல்லாம் கேள்வி கேக்காம !! சுடனும் தலீவா !! பின்ன இன்னா ஒரு போன் பண்ணா !! இன்னாமோ ஒரு பொண்ணு இந்தில பேசி காலய்க் கீது ?

சந்திரி பண்ணாம வந்து , ஒரே ஓட்டமா ஓடி பூட்டீன்களா ? நாங்க இன்னா உங்கள கட்சா துன்னப் போறோம் !! ( இதுல வாழ்க வளர்க வேற )

Mohan said...

பாண்டி அண்ணாத்தே! என்ன இப்படி உங்க முகத்தை மறச்சுடீங்கலே! எனக்கு மட்டுமாவது உங்க முகத்தை
என் மெய்லுக்கு அனுப்புங்க தல! அனுப்புவீங்களா?

பெருங்காயம் said...

அண்ணாத்த நீங்க பிரவுசிங் சென்டரா வைச்சிர்ங்கீங்க? இந்த மேரி மொம்ம முகம்லா வேண்டா அண்ணாத்த.

டவுசர் பாண்டி said...

//பாண்டி அண்ணாத்தே! என்ன இப்படி உங்க முகத்தை மறச்சுடீங்கலே!//- Mohan கூறியது.

அதல்லாம் ஒன்னியும் பெரி காரணம் இல்ல தலீவா !! யாரது ரோட்ல பாத்துட்டு !! மவனே நீதாண்டா டவுசர் பாண்டி , உன்னத்தாண்ட இத்தினி நாளா தேடிக்கீனு இருந்தேன் இண்ட்டு என்ன கவுன்சி அனுப்புனா ? ( அட மாலை மருவாதையை தான் சொன்னேன் பா ) அதுக்கு தான் !!

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்த நீங்க பிரவுசிங் சென்டரா வைச்சிர்ங்கீங்க?இந்த மேரி மொம்ம முகம்லா வேண்டா அண்ணாத்த//-விஜய் கூறியது.


வாங்க தலீவா !! ஐயோ !! பேன்கிரமான ஆளா கீரீன்களே !! எப்புடி கண்டு புட்சீங்கோ !!

அப்பால , பொம்ம மொகம் வெச்சிக்க காரணம் மோகனு அன்னாத்தைக்கி போட்ட பதில்ல கீது பாருங்க தல !! இம்மாம் ரீஜின்ட்டா வந்து கர்த்து சொன்னதுக்கு ரொம்பவே
டாங்க்ஸ்பா !! அடிக்கடி வாங்க தல !!

மோகனகிருஷ்ணன் said...

டவுசர் சாரின் பாரட்டிற்க்கு மிக்க நன்றி. தங்களின் நட்பு கிடைத்ததில் நாங்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...

மோகனகிருஷ்ணன்
புதுவை.காம்

Premkumar Mani said...

உங்கள் சேவை... என்றும் எங்களுக்கு தேவை..

வாழ்க வளர்க...!

அன்புடன்
பிரேம்

டவுசர் பாண்டி said...

//ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...//- மோகனகிருஷ்ணன்,


வாங்க தல !! இன்னாது போற போக்குல என்னையும் டெக்னிக்கல் பதிவாளரா சேத்ததுக்கு

( இது கொஞ்சம் ஓவரா தெரியல ? )

டவுசர் பாண்டி said...

//உங்கள் சேவை... என்றும் எங்களுக்கு தேவை.//-vanur கூறியது.


மாட்னாரு !! மன்சன் !! என் சேவைக் கூட தேவையா ??????? இன்னாடா இது ஆச்சரியமா கீது ?

( டவுசரு நீ பெரி ஆளுடா !! )

நித்தி said...

வாஜாரே.....

டவுசர் பாண்டி சொன்னது:

"எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு கேக்கப்
போறாரு இன்னு தான் !! )"

அய்ய இன்னாபா இது..நமக்கு உங்களாண்ட புட்சதே இந்த "Language Slang" தான் அதப்போயீ இன்னா அண்ணாத்தே...இப்பூடியெல்லாம் "insult" பண்ணிகினு...

டவுசர் பாண்டி சொன்னது:

"நம்ப கேட்ட டவுட்டுக் கெல்லாம் , சொம்மா !! நச்சு
நச்சுன்னு !! பதிலு குட்துக் கீனாங்கோ ! !"

நாம எல்லாம் டெக்னிக்கல் பதிவருங்கோ...

டவுசர் பாண்டி சொன்னது:

"எனுக்கு ரொம்பவே ஆச்சரியமா பூடுது !! நாம இன்னா
சந்தேகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு பதிலு குடுக்கறாங்க பாருங்க !! "

எனக்கு தெரிஞ்சத கேட்டீங்க அதான் டக்கு டக்குன்னு சொல்லிகினேன்...இண்ணா வாத்தியாரே இதபோய் பெர்சா பேசிக்கினு அய்ய போய் பொழப்ப பாருங்க அண்ணாத்தே வாஜாரே வர்ட்டா.....

டவுசர் பாண்டி said...

//எனக்கு தெரிஞ்சத கேட்டீங்க அதான் டக்கு டக்குன்னு சொல்லிகினேன்.//- நித்தியானந்தம்,


தலீவா !! எப்பிடி கேட்டாலும் சொம்மா லெப்ட்டு ரைட்டு வாங்குறீங்களே !! அத தான் சொன்னேன் !!

எனுக்கு ஒரு ஆசை தலீவா !! நாம மட்டும் இது போல சந்திப்பு
வெச்சோம் !! ஆனா இந்த பதிவுலகத்துல நாம மட்டுமா
கீரோம் !!

உன்னும் நம்ப நண்பர்கள் நெரியோ பேர் கீராங்களே ? அல்லாரும் இதே மேரி ஒரே எடத்துல ஒண்ணா சேந்து நம்ப கருத்துக்களையும் , நம்ப பதிவுகளால எதுனா நல்லது செய்வது பத்தியும் ஒண்ணா கூடி பேசி ஒரு திட்டம் போட்டா !! எப்பிடி
இருக்கும் !!

அது என்னைக்கி நடக்குதோ !! நடக்கும் , நடக்கணும் . உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்
தல !!

SUBBU said...

//" நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லிக் குடுக்கறதுல
இருக்குற திருப்தி வேற எதுலயும் இல்லீங்க !! " -
//
சோக்கா சொன்னீங்கோ வாஜ்ஜாரே ;)

டவுசர் பாண்டி said...

SUBBU தலீவா !! இன்னா இவ்ளோ லேட்டு !! ஆளையே பாக்க முடியலையே !!

அறிவுமதி said...

திரு.டவுசர் பாண்டி அவர்களுக்கு

உங்களது குப்பத்து தமிழ் படிப்பதற்கு நன்றாக உள்ளது. எங்களை போல் வெளிமாநிலத்தில் இருப்பவர்களுக்கு உங்களது தமிழ் படிக்கும் பொது நம் ஊரில் இருப்பது போன்று உள்ளது. மிக்க மகிழ்ச்சி. உங்களது முகத்தையும் பதிவில் காட்டவும்.

நன்றி.

இப்படிக்கு,

நட்புடன்,
சி.அறிவழகன்

டவுசர் பாண்டி said...

உங்க ஆதரவுக்கு ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !! அடிக்கடி வந்துட்டு போங்க தல !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh