பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

கணினியில் பைல்களை வேகமாக காப்பி செய்ய !!

·

நம்ப தோஸ்த்து அல்லாருக்கும் பாண்டியோட வணக்கம் பா !! 


இப்போ !! நாம ஏற்கனவே copy to இன்ற சின்ன சாப்ட்வேர் பத்தி 
பாத்தோம் , 


அதப் பத்தி படிக்காதவங்க , இங்கு சென்று  பார்க்கவும் . இப்போ அதே 
மேரி , copy , cut , paste பண்ணும் போது,  வயக்கமா , copy ஆவறது , 
கொஞ்சம் லேட்டா ஆவும் , 


இந்த super copier நம்ப பொட்டில இன்ஸ்டால் பண்ணிட்டா !! அதும் 
ஸ்பீடு சும்மா தூள் டக்கரா இருக்கும் , 


இதுல இன்னா ஒரு நன்மைன்னா !! minimize பண்ணிக்கலாம் , pass 
பண்ணி வெக்கலாம் , இது கண்டிப்பா எல்லா பொட்டிளையும் 
இருக்க வேண்டிய ஒன்னு !! 
   இங்கு சென்று        ( சின்ன சாப்ட் வேர் தான் 454 kb அளவு ) 
இத டவுன் லோடு பண்ணிக்கங்க தல !! 
 வயக்கம் போல உங்க கருத்து + ஓட்டுக்கு இந்த பாண்டி வெயிட்டிங் . 
20 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

ஷோக்கான மேட்டர் அண்ணாத்தே. ரொம்ப டேங்ஸ்

நட்புடன் ஜமால் said...

வாத்தியாரே நெம்ப ஈஜியாக்கீதே

அ.நன்றிbaa

டவுசர் பாண்டி said...

//ஷோக்கான மேட்டர் அண்ணாத்தே. ரொம்ப டேங்ஸ்//-S.A. நவாஸுதீன் கூறியது,


நாவாஸ் அண்ணாத்த !! உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு நன்றி தல !!

டவுசர் பாண்டி said...

//வாத்தியாரே நெம்ப ஈஜியாக்கீதே//-நட்புடன் ஜமால் கூறியது,

தலீவா !! பஞ்ச தந்திரம் படத்துல ஒரு வசனம் வரும் ( சின்ன கல்லு பெத்த லாபம் ) அதே மேரி தான் தல இது !! வருகை +கருத்துக்கு டாங்க்ஸ்பா !!

பாவா ஷரீப் said...

தல சும்மா ராக்கெட் கணக்கா கீதுபா

Mohan said...

நல்லாக்கீது தல! ஓட்டும் போட்டாச்சுப்பா! நான் நல்லாக்கீறேன்! நீங்க சௌக்கியமா தலீவா?

டவுசர் பாண்டி said...

//தல சும்மா ராக்கெட் கணக்கா கீதுபா//-கருவாச்சி கூறியது.


சொம்மா ஜிகிடி கணக்கா இருக்கும்
தல !! கருத்துக்கு + வர்கைக்கி
டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//நல்லாக்கீது தல! ஓட்டும் போட்டாச்சுப்பா! //-Mohan கூறியது.

வாஜார் !! நானு நல்லாத்தான்
கீரேன்பா !! கர்த்து + ஒட்டு + வர்கைக்கி ரம்பவே டாங்க்ஸ் பா !!

ரமேஷ் said...

நல்லாக்கீது .supper மேட்டர் அண்ணாத்தே

டவுசர் பாண்டி said...

//நல்லாக்கீது .supper மேட்டர் அண்ணாத்தே//- ரமேஷ்,


ரொம்பவே யூசு ஆவும் அண்ணாத்தே !! உங்க வர்கைக்கி அப்பால கர்த்துக்கு டாங்க்ஸ் தலீவா !!

Jaleela Kamal said...

ஆஹா இனி நானும் ரொம்ப பாஸ்டா காப்பி பண்ணிடுவேன். ரொம்ப டாங்க்ஸ் பா


இன்னுமொரு பெரிய டவுட் அண்ணாத்தே கிளியர் பண்ணுங்க‌,

பதிவை போட்டுட்டு அதன் கீழ் உள்ள பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதில் போட்டுட்டு, இருக்கும் போதே, இல்லை லிங்குக்காக மற்ற பிளாக் ஓப்பன் பண்ணும் போது கணக்கிலடங்கா பிலாக் வின்டோ ஓப்பன் ஆகி அத்த க்குளோஸ் பணறதுகுள்ள படா பேஜாரா போவுது, அதுக்கு ஒரு வழி சொல்லுங்களே......

டவுசர் பாண்டி said...

//ஆஹா இனி நானும் ரொம்ப பாஸ்டா காப்பி பண்ணிடுவேன். ரொம்ப டாங்க்ஸ் பா//- Jaleela கூறியது,உங்க வருகைக்கி + கர்துக்கு டாங்க்ஸ்பா !! அப்பால நம்ப கருத்து பொட்டிய, ஓபன் பண்ணும் போது நிறைய விளம்பரம் தான் வரும் , இத மேரி பண்ற google காரண நாம ஒன்னியும் பண்ண முடியாது !!
( அதுக்கு தான் ஓசில blog குடுக்கறான் )

டவுசர் பாண்டி said...

சகோதரி ஜலீலா !! நீங்க internet explorer use பன்றீங்கோ இன்னு நெனைக்கறேன் !! google crome use பண்ணுங்க !! இந்த பிரச்சன ஓரளவு solve ஆவும் !!

puduvaisiva said...

சும்மா டக்கராகீது பா

இப்புடுத்தான் தூலுகானம் கூவிகினா
இதை வைச்சிதான் வேட்டைகாரன் படத்துக்கு கதையை
மத்த படத்து இருந்து copy , cut , paste செய்ஞ்சிட்டானுகளாம்.

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல தகவல்
கருத்து பகிர்விற்கு நன்றி

ய்வனராணி said...

என்னாபா எழுதுரது...
மேட்டர விட தோஸ்த்தோட டாக்கு சூப்பரா கீதுபா...

மெர்சல்லா கீதுமா...

டேங்ஸ்பா ... வர்ட்டா?

டவுசர் பாண்டி said...

//சும்மா டக்கராகீது பா//-புதுவை சிவா கூறியது.

தலீவா !! கர்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

//வேட்டைகாரன் படத்துக்கு கதையை
மத்த படத்து இருந்து copy , cut , paste செய்ஞ்சிட்டானுகளாம்.//

யப்பா !! ஏற்கனவே , வேட்டைக்காரண நம்ப பிளாக்கு எழ்தரவங்கோ பட்தர பாடு போதாதா ? தல !!

வாணாம் !! பாவம் அவுங்க வேலைய அவங்க பாக்கட்டும் !! நம்ப வேலைய நம்ப பாக்கலாம் தல !!

டவுசர் பாண்டி said...

//நல்ல தகவல் கருத்து பகிர்விற்கு நன்றி//-நிகே கூறியது,


உங்க கருத்துக்கு + வருகைக்கி டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//என்னாபா எழுதுரது...//-ய்வனராணி கூறியது,

இது இன்னாடா கோராமையா கீது ? இன்னா எழ்தர்துன்னு நம்பளையே கேக்குறாங்கோ !!

//மேட்டர விட தோஸ்த்தோட டாக்கு சூப்பரா கீதுபா.//

ஹி ஹி ஹி , ரொம்பவே டாங்க்ஸ் பா !! ( அப்போ மேட்டரு ஒன்னிமே இல்லன்னு சொல்லுங்கோ !! )


//மெர்சல்லா கீதுமா..//

மெர்சல் ஆவாதே பா !! இது இன்னா பிஸ்கோத்து , பெள்ளககா மேட்டரு !! நம்ப கற்பனை பேட்டிபட்சிப் பாரு தல !! உன்னும் உஸ்தாது கணக்கா இருக்கும் அக்காங் !

Jaleela Kamal said...

இன்டர் நெட் எக்ஸ்புளோர் தான் யுஸ் பண்றோம், அது கதைக்காகாது.. நம ஒன்னியோ பண்ண முடியாது.. நானே ஓப்பன் செய்த ரொமப் லேட் ஆகுது,

உட்டாண்ட வந்து டவுட்ட கிளியர் பண்ணிட்டு, அப்படியே புத்தாண்டு பொக்கேவுக்கும் ரொம்ப டாங்க்ஸ் பா

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh