பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

ஒரே சொடுக்கில் நம்ப போல்டரை இடம் மாற்ற !!

·


எல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம்,
என்னோட 50 - வது பதிவுக்கு நெரியோ பேர் வாழ்த்து, சொல்லி கருத்து
போட்டு இருந்தாங்கோ !!

அவங்க அல்லாருக்கும் ரொம்பவே நன்றிங்கோ !! இப்போ !!

இந்த பதிவுல சின்ன மேட்டர் தான் ஆனா , ரொம்பவே உபயோகமான
மேட்டர் , கண்டிப்பா எல்லா கணினியிலும் இருக்க வேண்டிய ஒன்னு ,

அதாவது நாம எதுனா ஒரு போல்டர்ஐ, copy இல்லன்னா cut குடுத்து move
பண்ணுவோம் அதுக்கு அந்த போல்டர்ல , ரைட் கிளிக் பண்ணி அப்பால
cut இல்லன்னா copy குடுத்து பிறகு நாம எங்க அத save பண்ணுவோமோ
அந்த drive இல்லன்னா desktop போய் தான் past குடுப்போம் ,

இது கொஞ்சம் சுத்து வேல தானே , இந்த software போட்டுட்டோம்னா
எந்த போல்டரையும் நாம நெனைக்கிற எடத்துல ஒரே க்ளிக்குல paste
பண்ணலாம் ,

இந்த software ரொம்ப ரொம்ப சின்னது , 1 kb தான் ,
இங்கு சென்று download செய்யவும் , பிறகு extract செய்து
run செய்யவும் ,

கீழே உள்ள படத்தை பாருங்க முதலில் இருக்குற படத்துல , cut , copy
மட்டும் தான் இருக்கும் ,


இரண்டாம் படத்துல copy to Folder .... & Move to Folder .... இன்னு இருக்கும் ,
நாம எந்த போல்டரை எங்க Move , ( அல் ) copy பண்ணனுமோ ,
அங்க பண்ணலாம் ,


கீழே இருக்கும் படத்தை பார்க்கவும் , தேவையான இடத்தை click செய்து
copy குடுத்தால் போதும் , ரொம்ப சிம்பிள் ,

படிக்கும் போது , ரொம்ப பெரிய வேலை போலத் தோன்றும் செய்து பாருங்கள் ,
இதை விட சுலபமாக போல்டர்களை இடம் மாற்ற முடியாது ,

வாஜாரே !!
பதிவு புட்சா ஒரு ஒட்டு போட்டு உங்க கருத்த
ரவ சொல்லுங்க தலீவா !!

37 கருத்துகள்:

SUBBU said...

50 - வது பதிவுக்கு வாழ்த்து,சோக்கா இருக்கு வாஜ்ஜாரே ;))

INVISIBLE said...

நான் அப்பவே நெனைச்சன் அண்ணாத்த இந்த மேரி சேதி உங்களால் தான் போட முடியும் 1kb ல போல்டெர் ஐ மு செய்ற மாத்ரி 1kb ல os போட முடியுமா னு ரவ சொலு தலிவா என்ன இருந்தாலும் உன் பதிவு சூப்பர் தலிவா தொடரு ..........

அப்துல்மாலிக் said...

தலீவா
உமது தளம் ஒரு ஐ.டி. பெட்டகம்

நீ நடத்து

பெயரில்லா said...

//ஒரே சொடுக்கில் நம்ப போல்டரை இடம் மாற்ற !! //

என்னது ஒரே சொடுக்கா !

எனக்கு நாலு சொடுக்கு தேவைப்பட்டதே ?? :)


கோச்சிக்காதே வாஜார் ,, நாலு சொடுக்குன்னாலும் மைக்ரோ சாப்ட்காரன் நாண்டுகிட்டு சாவற மாதிரி ஒரு மேட்டரை சொல்லி இருக்கீங்க ... :)

யூர்கன் க்ருகியர்

பெயரில்லா said...

ஒய் ..பாண்டி வாள்,
சின்ன மேட்டரு பெத்த லாபம் ஒய் ....

டவுசர் பாண்டி said...

//50 - வது பதிவுக்கு வாழ்த்து,சோக்கா இருக்கு வாஜ்ஜாரே//-SUBBU கூறியது.


சுப்பு வாஜாரே !! நல்லா கீரீங்களா ? ரொம்ப நாள் ஆவுது உங்கள பாத்து , வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

//1kb ல os போட முடியுமா னு ரவ சொலு தலிவா//- INVISIBLE,

தாராளமா !! போடலாம் தலீவா !! windows os இன்னு எழதி நம்ப பொட்டி ஓட்ட வேண்டியது தாம்பா !!

நித்தி said...

வாஜாரே..நல்ல தகவலாதான் கொடுத்து இருக்கிறீங்கோ......தேங்க்ஸ் அண்ணாத்தே....வோட்டு கூட போட்டுடேன் பா.....

டவுசர் பாண்டி said...

//தலீவா உமது தளம் ஒரு ஐ.டி. பெட்டகம்//-அபுஅஃப்ஸர் கூறியது.


தலீவா !! ரொம்பவே டாங்க்ஸ் பா !! எனுக்கு இது மேரி வார்த்த அல்லாம் கேட்டா !! ரொம்ப கூச்சமா கீது !! வருகைக்கி + கருத்துக்கு ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் .

டவுசர் பாண்டி said...

//என்னது ஒரே சொடுக்கா !
எனக்கு நாலு சொடுக்கு தேவைப்பட்டதே//-யூர்கன் ,

அய்யே !! ஒன் மினிட்ல வந்துடறேன் இன்னு சொல்றோம் , ரெண்டு மணி நேரம் கைச்சி வரத்தில்லியா ? அது மேரி தான் அக்காங் !!

//மைக்ரோ சாப்ட்காரன் நாண்டுகிட்டு சாவற மாதிரி ஒரு மேட்டரை சொல்லி இருக்கீங்க//

இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், சத்தமா சொல்லாதே தலீவா !! நம்ப பீஸ் கேரீர புடிங்கிட , கிடிங்கிட
போறான் !!

டவுசர் பாண்டி said...

//ஒய் ..பாண்டி வாள்,
சின்ன மேட்டரு பெத்த லாபம் ஒய்//-முனியாண்டி கூறியது.


அதே தாம்ப்பா !! இன்னா பாக்குரீங்கோ இந்த பேரு இல்லாதவருக்கு நானு மின்ன சொன்ன மேரி ஒரு பேரு வெச்சிட்டேன் பா !!

அதான் முனியாண்டி எப்பிடி பேரு நால்லா கீதா ? இக்கும் டவுசரா ?
மக்கா !! ச்சே , கொக்கா ?

டவுசர் பாண்டி said...

//வாஜாரே..நல்ல தகவலாதான் கொடுத்து இருக்கிறீங்கோ.//-நித்தியானந்தம்,

வாங்க !! தலீவா !! ரொம்ப ரொம்ப நன்றி ,

Thomas Ruban said...

பயனுள்ள தகவல் நன்றி தலீவா.

டவுசர் பாண்டி said...

//பயனுள்ள தகவல் நன்றி தலீவா.//-Thomas Ruban,


உங்க கருத்துக்கு அப்பால வருகைக்கி , ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

பாவா ஷரீப் said...

சூப்பரா இருக்கு தல

இதே மேரீ நான் திருப்பூர்ல இருந்துகினு ஒரே சொடுக்கில் மெட்ராஸ் வாரதுக்கு ஏதாவது
சாப்ட்வேர் க்கீதா ???

hari raj said...

அருமை டவுசர் பாண்டி!!!

ஹரி ராஜகோபாலன்

டவுசர் பாண்டி said...

//திருப்பூர்ல இருந்துகினு ஒரே சொடுக்கில் மெட்ராஸ் வாரதுக்கு ஏதாவது சாப்ட்வேர் க்கீதா ???//-கருவாச்சி,


நீங்க அங்க இருந்துக்குனு , திருப்பூர் மக்களுக்கு செய்ய வேண்டியது அல்லாம் ஒரு வையா செஞ்சிட்டு அப்பால வரலாம் ( மெட்ராஸ் இன்னாத்துக்கு ஆவார்து )

டவுசர் பாண்டி said...

//அருமை டவுசர் பாண்டி!!!//-hari raj,

தலீவா !! உங்க பொட்டில இத use பண்னிப்பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும் , இதோட speacial இன்னான்னா இருக்கறதே 1 kb அளவு தான் , அது இன்னா இன்னா மேரி வேல அல்லாம் சுளுவா ஆக்குது ? வருகைக்கி + கருத்துக்கு நன்றி

பாவா ஷரீப் said...

தல நம்ம ரெண்டு பேர் டெஸ்க்டாப் பிச்சர் ஒரே மேரீ கீதுபா

வேலன். said...

நாம்ப வுட்ட கூட நீ உங்க மெட்ராஸ் குப்பத்து பக்கம் மாத்தரா மாதிரி எதாவது சாபட்வுர்இருந்தா சொல்லு நைனா..அப்புறம் யாரு அது...
//ஒய் ..பாண்டி வாள்,
சின்ன மேட்டரு பெத்த லாபம் ஒய் ..ஃ//
னு காமெண்ட் உட்டுக்குனு கீறாரு...வா .ஆட்டோ எடு உட்டாண்டே ஒரு தப நம்ப பசாங்களோட போய்வரலாம்...
போவும்போது குரல்குடு நானும் ஒடியாந்திர்ரன்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி said...

//தல நம்ம ரெண்டு பேர் டெஸ்க்டாப் பிச்சர் ஒரே மேரீ கீதுபா//-கருவாச்சி கூறியது.


ஹையா ........... இருக்காதா பின்ன !! நீ நம்ப தோஸ்து ஆச்சே
அதான் பா !!

டவுசர் பாண்டி said...

//ஆட்டோ எடு உட்டாண்டே ஒரு தப நம்ப பசாங்களோட போய்வரலாம்..//-வேலன்.

வாணாம் பா !! சும்மா !! உட்டுடலாம் , அதுக்கு நா ஒரு பேரு வெச்சிட்டேன் நம்ப மினியாண்டி தான் பா !! அக்காங் !

Mohan said...

பயனுள்ள பதிவு! ஒட்டும் போட்டாச்சி!

டவுசர் பாண்டி said...

//பயனுள்ள பதிவு! //- Mohan கூறியது.

உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

பெயரில்லா said...

super thaliva

saga said...

Super thaliva

Menaga Sathia said...

நல்ல பதிவு!!

உங்க மெட்ராஸ் பாஷை எனக்கு பிடிக்குது ஆனா சில வார்த்தைகளை புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கு..

Menaga Sathia said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணாத்தே!!

எப்படி என் தமிழ் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான் வாஜ்ஜாரே...

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

டவுசர் பாண்டி said...

//super thaliva//-தமிழ்பேசு கூறியது.

உங்க வருகைக்கி + கருத்துக்கு டாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

//Super thaliva//-saga கூறியது.

உங்க வருகைக்கி + கருத்துக்கு டாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

//உங்க மெட்ராஸ் பாஷை எனக்கு பிடிக்குது ஆனா சில வார்த்தைகளை புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கு.//- Mrs.Menagasathia,


மொதல்ல படிகர்த்துக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் , அப்பால போவப் போவ செரியா பூடும் , அக்காங் !!

இப்பெல்லாம் கொஞ்சம் இஜீயா தான் எழதறேன் , வால்க சென்னை தமிழு ,

உங்க வருகைக்கி + கருத்துக்கு டாங்க்ஸ்

டவுசர் பாண்டி said...

//குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்//-
தமிழ்நெஞ்சம்.


நானு குழந்த மேரி இன்னு கரீக்டா வாழ்த்து சொன்னதுக்கு ரொம்பவே டாங்க்ஸ், தலீவா !!

நானு கொழந்த இன்னு சொன்னாக்கா, நம்பாதவங்கோ !! இப்பவாது நம்புங்கப்பா !!
வால்க தமிழ் ஹார்ட்டு .

டவுசர் பாண்டி said...

//எப்படி என் தமிழ் உங்ககிட்ட கத்துக்கிட்டது தான் வாஜ்ஜாரே//-Mrs.Menagasathia கூறியது.

இன்னும் சிறிது பயிற்சி வேண்டுமோ !!!

பாவா ஷரீப் said...

எங்க தல நம்ம கக்கு தலைவர காணோம் எங்க பூட்டாரு ?

டவுசர் பாண்டி said...

//எங்க தல நம்ம கக்கு தலைவர காணோம் எங்க பூட்டாரு ?//-கருவாச்சி,


அவுரு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து மூணு நாள் ஆவுது , தலீவா !! இன்னான்னே தெரீல

கம்பனிக்கி கூட எதுவும் ரிப்போர்ட் பண்ணல !! உன்னும் ரெண்டு நாள் பாத்துட்டு டானாக் காரங்க கிட்ட சொல்லிடப் போறேன் பா !!

Nathanjagk said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் டவுசர் பாண்டி!

சாதாரணமா ஃபோல்டரை மூவ் பண்றது ஒரு இம்சைதான். இது நல்ல உபயோகமான குறிப்பா இருக்கு!
நன்றி ட.பா!
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh