பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

பிளாக்,ஓபன் செய்யும்போது ,அதிக நேரம் லோடு ஆகாமல் இருக்க.

·

Happy New Year    2010


அல்லா தோஸ்த்துக்கும் பாண்டியோட வன்கம்பா !! 


இன்னைக்கி நாம பாக்கப்போற பதிவு , பதிவுன்களைப் பத்தி தாம்பா !! 
இன்னா கொயப்பரனா !!அதாவது , 


நாம சில பிளாக்குங்கப் பக்கம் போய், அத ஓபன் பண்ணுவோம் !! 
அப்போ சில பிளாக் மட்டும் ,ரொம்ப நேரம்  லோடு ஆவும் , 
அப்பால பாத்தா !! 


கிட்டத்தட்ட ஒரு பத்து இல்ல பதினஞ்சி பதிவுங்க ஒன்னு ஒண்ணா 
இருக்கும் , 


அதுனால கூட நமக்கு ரொம்ப நேரம் லோடு ஆவும் தல !! நெறைய பேர் இது மாதிரி தான் வெச்சிக்கிட்டு கீராங்கோ !! அதிகமான 


பதிவுகள் எழதிட்டு இருந்தா இல்லன்னா போட்டோ நெரியோ upload 
பண்ணி இருந்தாக்கா !! 


இது மாதிரி வரும் , இதுக்கு இன்னா பண்றது ? இன்னா ? நம்மோட 
பிளாக்குல ஒன்னு இல்லன்னா ரெண்டு பதிவு மட்டும் ஒரு பக்கத்துக்கு 
வெச்சிட்டா இது மேரி கழ்டம் எல்லாம் வராது !! 


கீழே கீர படத்துல எப்படி அத பண்றது இன்னு கூவிக் கீரேன் , 
ரவ பாருங்க தலீவா !! 


மொதல்ல டாஷ்போர்ட் போயிட்டு 
அடுத்து அமைப்புகள் கிளிக் பண்ணி ,


,வடிவமைத்தல் கிளிக் பண்ணி 

அதுல 1 (அல் ) 2 என்பதை டைப் செய்யவும் , 

அப்பால save பண்ணவும் . இப்போ உங்க பிளாக் போய் பாருங்க ,


பதிவ படிச்சிட்டு அப்பிடியே உங்க கருத்து + ஓட்ட போட்டீங்கன்ன 
ரொம்பவே சந்தோசமா இருக்கும் தல !!  

31 கருத்துகள்:

Mohan said...

சூப்பர் தல! ரொம்ப தேவையான மேட்டர சொல்லிக்கீரீங்க! தேங்க்ஸ் தலீவா!!

டவுசர் பாண்டி said...

தல மின்னலு மேரி கருத்து சொன்னதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

Mohan said...

ஓட்டும் போட்டாச்சு தல!

டவுசர் பாண்டி said...

ரொம்பவே டாங்க்ஸ் !! தல !!

நட்புடன் ஜமால் said...

தேவையான மேட்டருபா

ஆ... நன்னி பா

Prathap Kumar S. said...

தலீவா இத்த நான் அன்கிக்கோ பண்ணிட்டேன்...வாஜாரே... நீங்க சொன்ன மேரி...
இப்ப ஓகேயாடுச்சு... ரொம்ப டாக்ஸ்பா...

S.A. நவாஸுதீன் said...

புதியவர்கள் எல்லோருக்கும், இந்த விஷயம் தெரியாத பழைய ஆளுங்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும். நீ கலக்கு தல

Paleo God said...

எதாவது புரீரா மேரி எழ்து தலீவா ..

அதான் நீயே சொல்லிட்றியே .... புது வர்சத்துக்கும் பொங்குளுக்கும் இதா வச்சிக்க என் வாய்த்து... வர்ட்டா தோஸ்த்து ..

டவுசர் பாண்டி said...

//தேவையான மேட்டருபா//-நட்புடன் ஜமால் கூறியது.

உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//தலீவா இத்த நான் அன்கிக்கோ பண்ணிட்டேன்//-நாஞ்சில் பிரதாப் கூறியது.

தலீவா !! உங்க பிளாக்கு மேரியே நெரியோ பேரு பிளாக்கு சொம்மா டொயின் , டொயின்னு சுத்திக் கீனு இருந்தத அப்ப தான் பாத்தேன் தல !!

செரி இது நெரியோ பேருக்கு யூசு ஆவுமேன்னு, தான் போட்டேன் !! இந்த பதிவுக்கு நீங்களும் ஒரு
காரணம் !!

அதுக்கு உங்களுக்கு டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

// நீ கலக்கு தல//- S.A. நவாஸுதீன் கூறியது.


ரொம்பவே டாங்க்ஸ் தல !! உங்கள மேரி ஆளுங்க ஆசீர்வாத் எப்பவும் வேணும் தல !!

டவுசர் பாண்டி said...

//புது வர்சத்துக்கும் பொங்குளுக்கும் இதா வச்சிக்க என் வாய்த்து... வர்ட்டா தோஸ்த்து//- பலா பட்டறை கூறியது.


ஹி ஹி டாங்க்ஸ் தல !!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு நண்பரே..

ராஜேஷ் said...

இன்னா தல ஒரே பிசியா
சோக்கான மேட்டுரு தல

டவுசர் பாண்டி said...

//நல்ல பகிர்வு நண்பரே// -முனைவர்.இரா.குணசீலன்,


உங்க வருகைக்கி ரொம்பவே
டாங்க்ஸ் !! வாஜார் !!

டவுசர் பாண்டி said...

//இன்னா தல ஒரே பிசியா
சோக்கான மேட்டுரு தல//-RAJESH கூறியது.

அதல்லாம் ஒன்னியு இல்ல தல !! உங்க கர்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!!

malarvizhi said...

நல்ல பகிர்வு

பாலா said...

இத்த தான் நைனா நான் ப்லாகு ஓப்பனு பண்ணி மொத வேலயா செஞ்சேன்.

டவுசர் பாண்டி said...

//நல்ல பகிர்வு//-malarvizhi கூறியது.

அய்யே !! இன்னா அல்லாரும் பகிர்வு , பகிர்வு இன்னு கூவுறீங்கோ !! அப்பெடீன்னா இன்னா !! ஓஹோ , நல்ல மேட்டரு சொன்னேடா டவுசரு இன்னு சொல்றீங்களா ? யப்பா !! இது எனுக்கு ,பிரியர்துக்குள்ள , நானு ரெண்டு மேட்டரு சொல்டுவேனே ? ? ?

டவுசர் பாண்டி said...

//இத்த தான் நைனா நான் ப்லாகு ஓப்பனு பண்ணி மொத வேலயா செஞ்சேன்.//-ஹாலிவுட் பாலா கூறியது.

இது தான் நம்ப தலீவரு இன்னு சொல்றது , அக்காங் !!

நானு பிளாக்கு ஆரம்பிச்சி !! மொத வேலையா , போய் மாரியாத்தவ ,வேண்டிக்கிநேன்பா !!

மாரியாத்தா , இந்த புள்ளைங்கள என்கிட்டே இருந்து " காப்பாத்து " , என்னால இதுங்குளுக்கு எதுவும் ஆயிட கூடாது !! இன்னு தாம்பா !!

malarvizhi said...

நன்றி பாண்டி சார் . பதிவை சரி செய்து விட்டேன் என நினைக்கிறேன்.

Jaleela Kamal said...

ஒகே அண்ணாத்த , நான் 1 என்று தான் வைத்துள்ளேன், அமைப்புகள் 2 மாற்றனுமா?

இதற்கு முன் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே????

டவுசர் பாண்டி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி , நீங்கள் போட்டோ அதிகமாக போடுவதாய் இருந்தால் , 1 வைக்கவும் அது தான் நல்லது , இப்போது நீங்கள் 2 பக்கம் வைத்துள்ளீர்கள் , அதிகமான நேரம் எடுத்துக் கொள்கிறது , மேலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் நீங்கள் கவனிக்கவில்லை போல் தெரிகிறது , அதாவது நீங்கள் இன்டர்நெட் explorer உபயோகிக்கிறீர்கள் என நினைக்கிறேன் , google crome முயற்சி
செய்யுங்கள் , நன்றி , சகோதரி

உங்கள் பிளாக்கில் பக்கங்கள் காட்டும், இணைப்பு போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் , எனது பதிவில் சொல்லி இருக்கிறேன் முயற்சி செய்யவும் .

SUBBU said...

Happy New Year 2010

கனவுகள் said...

எனுங் மாமா சூப்பரா இருக்குதுங்க....

Eralkaaran said...

நிஜமாகவே படிக்க சூ...சூ..சூப்பரா இருக்குதுங்க . நி. நி. நிறைய எழுதி தள்ளுங்க

jannal said...

super

Unknown said...

ரொம்ப நன்றிங்க. என் வலைபூக்கு வந்து இந்த தகவலை தந்தமைக்கு. மாற்றிவிட்டேன்.

VINO said...

super na

ஹுஸைனம்மா said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஹுஸைனம்மா said...

(அசல்) டவுசர் பாண்டியண்ணே,

வெல்கம் டு மை பிளாக்.

ஆல்ஸோ மெனி மெனி டாங்க்ஸ் ஃபார் யுவர் டிப்ஸ் டு ரெடியூஸ் தெ பேஜ் லோடிங் டைம். ஐ ஹேவ் டன் இட் இம்மீடியட்லி.

இன்னா முழிக்கிறீங்கோ, இத்தான் எங்க குப்பத்து பாஷை!!

ரொம்ப நன்றிண்ணே. (இது கலைஞ்ஜர் (தப்பா எழுதலை) பாஷை)

:-)))))

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh