பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

எளிய வழியில் Task manager வர வைப்பது எப்படி ?

·


அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!

ரொம்ப நாளா பதிவு எதுவும் போட முடியாம , எங்க ஏரியாவுல வேல
அதிகமா பூடுச்சி ,

( அப்போ வேல வெட்டி எதுவும் இல்லாம இருந்தா தான் பதிவு
போடுவியா , இன்னு கேக்காம இருந்ததுக்கு ரொம்பவே தாங்க்ஸ் பா )
செரி, இப்போ நேரா விஷியத்துக்கு வருவோம் !! ( ? )

நாம இந்த பொட்டில எதுனா நோண்டிக் கீனு இருக்கும் போது,
இல்லன்னா எதுனா சாப்ட்டு வேருல எதுனா பிரச்சனை வந்தாக் கூட
இல்லா காட்டி எதுனா வைரசு நம்ப பொட்டிய அட்டாக் பண்ணாக் கூட
இந்த taskmanager இன்னு ஒரு மேட்டரு கீதே அது அம்பேலு ஆய்டும்
அதுக்கு , இன்னா அப்பிடின்னு நெனைக்கறீங்களா !!

இந்த task manager இல்லாக் காட்டி எந்த ப்ரோக்ராமையும் ரன்
பண்ணவே முடியாது தலீவா !! அதே மேரி எந்த ப்ரோக்ரமையும்
ஸ்டாப் பண்ண முடியாது , தலீவா !!

இன்னா தான் பண்றது இன்னு ஒரு கொயப்பம் வரும் , அதுக்கு
ஒரு சின்ன வயி கீது , இப்போ , மொதல்ல நம்ப taskmanager விசிபிலா
கீதா ? இன்னு செக் பண்ணிக்கலாம் ,

நம்ப டாஸ்க் பார்ல நம்ப கரசர வெச்சி ஒரு ரைட்டு கிளிக்கு குடுங்கோ !!
அப்போ தெரியும் , நம்ப taskmanager விசிபிலா கீறாரா இல்ல hide ஆயி
பூட்டாரா இன்னு தெரியும் .

அந்த manager இல்லன்னா !! அவர இட்டுக்கீனு வரலாம் !!

செரி. இப்போ start ல போய் ஓபன் பண்ணிக்கோங்க !!
அதுல run ஓபன் பண்ணி
இப்போ இது மேரி ஒன்னு வரும் ,
அதுல gpedit இன்னு போட்டு புள்ளி வெச்சி msc இன்னு type
பண்ணுங்கோ !! அப்பால அத்துல ok பண்ணவும் ,

இது மேரி ஒன்னு வரும்

அதுல user configuration இன்னு கீர்த, டபுள் கிளிக் பண்ணவும் , உங்களுக்கு
இது மேரி ஒன்னு ஓபன் ஆவும்

அதுல Administrative Template இன்னு கீர்த டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு இது மேரி ஒன்னு ஓபன் ஆவும் ,


அதுல system இன்னு கீர்த, டபுள் கிளிக் பண்ணவும் , உங்களுக்கு இது
மேரி ஒன்னு ஓபன் ஆவும்

அதுல ctrl+Alt+Del option இன்னு கீர்த, டபுள் கிளிக் பண்ணவும் ,
உங்களுக்கு இது மேரி ஒன்னு ஓபன் ஆவும்

இப்போ இதுல எதுனா ஒன்னுல டபுள் கிளிக் பண்ணால் இது மேரி ஒன்னு வரும்

,
இப்போ அதுல Disabled கிளிக் பண்ணி Apply குடுக்கவும் அப்பாலிக்கா ok குடுக்கவும், இப்போ , மறுபடி கீய கீற task குல வந்து right click பண்ணி பார்த்தால் taskmanager வந்து குந்திக்கினு இருக்கும் , அவ்ளோ தாம்பா மேட்டர்.

பதிவு புடிச்சி இருந்தாக்கா ஒரு ஓட்ட போட்டு சொல்லு தல அப்பிடியே உனுக்கு தோனுறத ரவ கருத்து பொட்டில போடுங்க !!


இது வெரிக்கும் காணாம போன task manager வர வெச்சவங்க !!


web counter

20 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

எல்லாம் நல்லதாகீது, டாஸுக்கு மேனேஜர எப்டீ வர வைக்கிறது இல்லானா எப்டீ இட்டாறது . சரிதான் கண்ணு; எங்க கம்பனில நெறைய 'உதவாக்கற மேனேசருங்கோ; ஒரு கூட்டம் கீது பா, அத்துங்கள எப்டீ வெளிய தள்ளிகிறது இன்னு யாராச்சும் ஒரு பதிவு இட்டா இன்னா ??

பொன் மாலை பொழுது said...

ஆமா, CTRL + ALT + DEL இந்த மூணு பொத்தானையும் ஒண்ணா அமிக்கினா கூடாதா இந்த 'டாஸுக்கு மேனசறு' வந்து கினுதே ? அப்பறமா எதுக்கு இத்தே தண்டில ஒரு பதிவு இட்டுகினு...என்கு ஒண்ணுமே பிரீல தலீவா !!
தப்பா இருந்தா கண்டி மன்னாப்பு குத்று. இன்னா ரைட்டா ?????????????

டவுசர் பாண்டி said...

ஐயோ !! எங்க கக்கு அண்ணாத்த வன்டாருப்பா இனிமேட்டு ஒன்னியும் கவலை இல்ல ,

அவுருக்கு வர சந்தேகம் எப்பவும் அவரு கம்பனி பத்தியே தான் கீது , இன்னா தான் பண்றது ? ஐயே !! எனுக்கு ஒன்னிமே பிரியலப்பா !!

டவுசர் பாண்டி said...

//ஆமா, CTRL + ALT + DEL இந்த மூணு பொத்தானையும் ஒண்ணா அமிக்கினா கூடாதா இந்த 'டாஸுக்கு மேனசறு' வந்து கினுதே ?//- கக்கு,

உங்க பொட்டிக்கி ஜுரம் வந்த அப்பால பாரு நைனா !! அந்த மேரி மேனேஜரு வர மாட்டாரு அப்போ சொல்லு , அக்காங் !!

பொன் மாலை பொழுது said...

என்பொட்டிக்கும் ஜுரம் இன்னா, ஜன்னியே வந்துகினுது, அப்பாளவும் இந்த 'டாஸுக்கு மேனேசரு' தான் வந்து சரி பண்ணிகினாறு !! ரொம்பதான் பிலிமு காட்டாத வாஜாரே !!

பொன் மாலை பொழுது said...

என்பொட்டிக்கும் ஜுரம் இன்னா, ஜன்னியே வந்துகினுது, அப்பாளவும் இந்த 'டாஸுக்கு மேனேசரு' தான் வந்து சரி பண்ணிகினாறு !! ரொம்பதான் பிலிமு காட்டாத வாஜாரே !! வேணும்னா நம்ப மாப்ஸ் கீறாரே அவரண்ட கேட்டுக்கோ தலீவா !!

ILA (a) இளா said...

:)) Comedy Panatheenga. CTRl-Shift-Esc adicha pothathaa?

டவுசர் பாண்டி said...

//Comedy Panatheenga. CTRl-Shift-Esc adicha pothathaa?//-இளா கூறியது..

இதுல காமிடி கீமெடி ஒன்னியும் இல்ல தலீவா !!

CTRl-Shift-Esc அடிச்சா , manager வருவாரு நான் சொன்னது , அதே மேரி வரும் போது சில சமயம் Taskmanager " Hide " ஆயி இருக்கும்

அதக் கொண்டு வருவதற்கு தான் , இந்த மேட்டர் , அதே மேரி ctrl +Alt + Del அடிச்சாக் கூட தான் taskmanager வரும் ஆனா Hide ஆயி இருந்தாக்கா வராது , பிரியுதா ?

Mohan said...

பாண்டி அண்ணாத்தே! இவ்ளோ நாளா எங்க போயிருந்தீங்க! ஆளையே காணோமே? வந்தோனையே ஒரு சூடான பதிவா! கலக்குங்க போங்க!!

டவுசர் பாண்டி said...

//வந்தோனையே ஒரு சூடான பதிவா! கலக்குங்க போங்க!//- Mohan கூறியது.

மோகனு அண்ணாத்தே !! உங்க வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ்பா !! இந்த பதிவு சூடானதா இல்லியா இன்னு நம்ப மக்கள் தான் சொல்லணும் , அக்காங் !!

ILA (a) இளா said...

Group Policy மாத்த முயற்சிக்க உங்களுக்கு உரிமை இருக்குன்னா TaskManager Hideஆகி இருக்காது. காரணம் Task Manage Defaultஆ மறைந்து இருக்காது. Group Policy/ADS இல் செய்திருந்தா என்ன பண்ணினாலும் வெளியே கொண்டு வர முடியாது. Local Adminஆ இருந்தா நீங்க சொல்றது சரி வரும். ஆனா, மறுபடியும் Policy Update ஆச்சுன்னா மறுபடியும் மறைஞ்சுக்கும். So இந்தப் பதிவு மூக்கச் சுத்தி சாப்பிடற கதை. சில பேருக்கு மூக்கச் சுத்தினாலும் சாப்பிர முடியாது.

டவுசர் பாண்டி said...

//Group Policy மாத்த முயற்சிக்க உங்களுக்கு உரிமை இருக்குன்னா TaskManager Hideஆகி இருக்காது//-இளா கூறியது.

group policy - மாத்தி தான் இந்த Taskmanager கொண்டு வந்தது, இதுல கீர படத்த பாத்தாலே உங்களுக்கு பிரிஞ்சி இருக்கும், அப்பால, உங்க பொட்டில group policy மாத்த முடியாதா?

கொஞ்சம் பிரியற மேரி சொல்லு தலீவா !!

அதே மேரி மொதல்ல நேரா சாப்புட கத்துக்கலாம், அப்பாலிக்கா மூக்கு, தல அல்லாத்தையும் சுத்தி சுத்தி வந்து சாப்புடலாம், தலீவா !!

உங்களுக்கு taskmanager போவர்த்துக்கு .exc file ஒனுமின்னா சொல்லுங்கோ!! உடனே அனுப்பறேன், 24 மணி நேர சேவை உண்டு.

துரை.வேலுமணி said...

enennamo

ILA (a) இளா said...

//group policy/ADS//தெளிவாச்சொல்லி இருக்கேன் பாருங்க. ADSன்னு. Personal PCக்கு எதுக்குங்க Hide ஆகி இருக்கப்போவுது?

//நேரா சாப்புட கத்துக்கலாம்//
இப்படி GP edit பண்ணியா? Shift-Ctrl-Esc அடிச்சா எந்தப் பாலிஸி போட்டு வெச்சிருந்தாலும் Task Manager வந்துரும்.

ILA (a) இளா said...

taskmgr.exe--> Run பண்ணினாவே வந்துரும், இல்லாட்டி Right Click பண்ணி - New ShortCut-taskmgr.exe தந்தாலும் போதுமே. My Last Comment.

துரை.வேலுமணி said...

உள்ளூர் பேச்சு வழக்கில் மிகவும் அருமையான பதிவு. இருந்தாலும் பிறருக்கு புரியவேண்டும் அல்லவா! எடுத்துக்கட்டாக சொல்ல வேண்டும் என்றல், "krishna ஆயில்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி ஒரு ஆயில் இருக்க என்ன? எங்க ஊரில் "மண்ணெண்ணெய்" என்று சொல்வோம், அல்லது "சீமை எண்ணை" என்று சொல்லுவோம். மண்ணில் இருந்து கிடைப்பது "மண்ணெண்ணெய்". அந்த காலத்தில் "சீமை" என்றல் இப்ப சொல்லக்கூடிய "வெளிநாடு" , வெளிநட்டில் இருந்துது கிடைக்கக்கூடிய எண்ணை " சீமை எண்ணை" சரியா? krishna oil என்று எப்படி பெயர் வந்தது? "கிருஷ்ணனுக்கும் ஆயிலுககும்" ஏதாவது தொடர்புண்டா? ராமாயணம், மகாபாரதம் என்பதே, நம்ம ஊர் ராஜேஷ் குமார் மாதிரி ஒரு நபர் எழுதிய கதை. krishna oil என்பது kerosine oil என்பதின் திரிபு சொல்லே! இன்னும் சொல்ல வேண்டும் சொன்னால், "ஆஸ்பத்திரி" என்ற சொல்லை பார்த்தீர்கள் என்றால் இன்னும் விந்தையாக இருக்கும். "Hospital" என்ற சொல்லை நமது படிக்காத கிராமத்து சனங்கள் உச்சரித்தது "ஆஸ்பத்திரி" என்று. அதை போலவேதான், "நடு centre", "Post கம்பம்", போன்றவை.

துரை.வேலுமணி said...

உள்ளூர் பேச்சு வழக்கில் மிகவும் அருமையான பதிவு. இருந்தாலும் பிறருக்கு புரியவேண்டும் அல்லவா! எடுத்துக்கட்டாக சொல்ல வேண்டும் என்றல், "krishna ஆயில்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி ஒரு ஆயில் இருக்க என்ன? எங்க ஊரில் "மண்ணெண்ணெய்" என்று சொல்வோம், அல்லது "சீமை எண்ணை" என்று சொல்லுவோம். மண்ணில் இருந்து கிடைப்பது "மண்ணெண்ணெய்". அந்த காலத்தில் "சீமை" என்றல் இப்ப சொல்லக்கூடிய "வெளிநாடு" , வெளிநட்டில் இருந்துது கிடைக்கக்கூடிய எண்ணை " சீமை எண்ணை" சரியா? krishna oil என்று எப்படி பெயர் வந்தது? "கிருஷ்ணனுக்கும் ஆயிலுககும்" ஏதாவது தொடர்புண்டா? ராமாயணம், மகாபாரதம் என்பதே, நம்ம ஊர் ராஜேஷ் குமார் மாதிரி ஒரு நபர் எழுதிய கதை. krishna oil என்பது kerosine oil என்பதின் திரிபு சொல்லே! இன்னும் சொல்ல வேண்டும் சொன்னால், "ஆஸ்பத்திரி" என்ற சொல்லை பார்த்தீர்கள் என்றால் இன்னும் விந்தையாக இருக்கும். "Hospital" என்ற சொல்லை நமது படிக்காத கிராமத்து சனங்கள் உச்சரித்தது "ஆஸ்பத்திரி" என்று. அதை போலவேதான், "நடு centre", "Post கம்பம்", போன்றவை.

டவுசர் பாண்டி said...

//உள்ளூர் பேச்சு வழக்கில் மிகவும் அருமையான பதிவு. இருந்தாலும் பிறருக்கு புரியவேண்டும் அல்லவா!//- வேலு கூறியது,

வேலு அண்ணாத்தே !! உங்க வருகைக்கி டாங்க்ஸ்பா !!

நம்ப பாஷ பிரியலையா !! இன்னா வாஜாரே !! நம்ப கூட அடிக்கடி பேசிக்கீனு இருந்தாக்கா, சும்மா கப்புன்னு பிரியும் பா !!

நம்ப குப்பத்துக்கு அடிக்கடி வாங்க வாஜாரே !! அப்பால அது இன்னா கிஷ்னாயிலு நம்ப குப்பத்துல இப்பல்லாம் தலிவரு குட்த கேஸ் அடுப்பு தாம்பா !! அக்காங் !!

sundar said...

enn computerla neenga sonna madhiri senjum task manager varala thala

டவுசர் பாண்டி said...

வரும் தலீவா !! network - ல, கீறீங்கோ !! உங்குளுக்கு போய் இது வராதா ? இன்னா ?

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh