பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

அனைத்து image பைல்களையும் ஓபன் செய்வது எப்படி ?

·

போன பதிவுக்கு ரொம்பவே ஆதரவு குடுத்தீங்கோ !!

ரொம்ப குஷாலா பூடுச்சிப்பா !! செரி, சூடா உன்னொரு பதிவு போடலாம்
இன்னுட்டு , ரோசன பண்ணி பாத்தேன்பா !!

இது தான் நாபகம் வந்துச்சி !! செரி , மேட்டருக்கு வருவோம் , இப்போ
நாம எதுனா டவுன்லோட் பண்றோம் இன்னு வெச்சிக்கோங்க !!

சில சமயம் அது iso image - பைலா வரும் , அத்த நாம்ப nero வுக்கு போய்
தான் burn பண்ணுவோம் !!

செரி இத்த அப்பிடியே open பண்ணி பாக்க முடியாதா ? இன்னு
மண்டைய போட்டு கொயப்பிக்குவோம் !! அதுக்கு ஒரு வயி கீது
தலீவா !! ஒரு சின்ன software கீது ,

அத்த டவுன்லோட் பண்ணி run பண்ணிட்டு அப்பால அத ஓபன்
பண்ணிக்கோங்க ,

இப்போ !! ஓபன் பண்ண உடனே ungister இன்னு கீர்த , click பண்ணி
உடுங்கோ !! ஏன்னா இது ஒரு trial சாப்ட்வேர் தான் ,
அப்பால , file இன்னு கீர்த click பண்ணி நாம download பண்ண image file ஐ
open பண்ணிக்கோங்க ! அப்பால ,அந்த பைல்ல ரைட் கிளிக் பண்ணி , view பண்ணாக்கா image பைல்ல
இன்னா தான் கீது இன்னு பாக்கலாம் , அதுல எதுனா வோணும்னா கூட
அத்த காப்பி பண்ணி எடுத்துக்கலாம் ,

இல்ல extract இன்னு கீர்த click பண்ணி All files இன்னு
கீர்த செலக்ட் பண்ணி ok பண்ணனும் ,இப்போ அது extrat ஆகி நாம்ப எங்க save குடுத்தொமோ அங்க வந்து
குந்திக்கும் , இதுலயே Burn option கூட கீது ,

செரி இப்போ இந்த சாப்ட்வேர் இங்க வந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க !!
மறுபடியும் சொல்றேன் இது trial தான் ,

உங்களுக்கு மேட்டர் புடிச்சா ஒரு ஓட்ட குத்தி உடுங்கோ .13 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

நம்ம டவுசரு உட்டுகினுகீர விசியம் அல்லாம் டக்கரு மேட்டருங்க தான், சலாம் வாஜாரே !! அப்பால ஒட்டு குத்திகினு வந்தாச்சி. வேற இன்னா கீது? நா வரட்டா தலீவா?

டவுசர் பாண்டி said...

யப்பா !! இப்போ தான் குஷியா கீது !! எங்க தலீவரு வண்டாரு , அப்பால தலீவா !!

டாங்க்ஸ்சுங்கோ !!!!!!!!!!!!

யூர்கன் க்ருகியர் said...

I.C.

டவுசர் பாண்டி said...

//I.C.//-யூர்கன்,

T.Q

பொன் மாலை பொழுது said...

மாப்ள ...இது ரொம்ப ஓவரு மாப்ள. ' I C ' அப்டீன்னு கமெண்டு உட்டுகின்னு போனா இன்னா அர்த்தம் ?
ஆஹா ....என்கு பிரிஞ்சிடிசீ ...இன்னாடா நம்ம தோஸ்து இப்டியே எப்ப பாத்தாலும் இந்த கம்புடர் பத்தியே எழுதி உட்டுகின்னு கீதே வேறு ஒன்னத்தையும் பத்தி 'பதிவு ' உட்டுகல்யே இன்னு உனக்கு மெர்சலா பூடிச்சு இல்ல? இந்தா பாரு கண்ணு, டவுசரு நம்ம ஜிக்ரிதோஸ்து அக்காங். அத்து இன்னா இஸ்டோரி உட்டுகினுதோ அதுக்கு நம்ம சப்போர்ட் பண்ணனும் ராசா. இன்னா நா சொல்லிகின சரியா ஆக்காங்.

டவுசரு அண்ணாத்த, அட நீயும் த்தா கொஞ்சம் தமாஷா, கில்மாவா எதாவது எழதி உடுவியான்.
சரி வர்ட்டா .

டவுசர் பாண்டி said...

மின்ன , அத்த சொல்லு தலீவா ! ! பத்தியா பெரி மன்சன் பெரி மன்சன் தாம்பா !!

தலீவரே !! ஒரு பக்கா காமிடி சப்ஜெக்ட்டு எழதறேன் தல , அல்லாம் உங்க மேரி பெரியவங்க ஆசீர்வாத் தாம்பா !!

கடவுளே !! டவுசர் கைல இருந்து அல்லாரையும் காப்பாத்து !!

பொன் மாலை பொழுது said...

கடவுளே ......எங்க கைல இற்ந்து டவுசர காப்பாத்து. என் மாப்ள ரெடியா கீறாரு கைல க்லௌஸு இட்டுகினு.!! எதுக்கா ?? இன்னா கைல கிலௌஸு எதுக்கான் ?? ஐயோ ஐயோ உன்னிய மேரி ஆள வெச்சிகினு இன்னா த்தா பிரயோசனும்? டவுசரு மட்டும் காமெடி பண்ணிகிறதா நெஞ்சிகினு இந்த பொட்டிய பத்தி எழுதி உட்டுகினா அவ்வளவுதான், நம்ம மாப்ள சும்மா வாஜாறு கணக்கா பாய்ச்சி பாண்டியோட டவுசர உருவிக்கினு ஓடி பூடுவாறு ,,,ஆக்காங் அப்பால ஒரே பவரு கட்டு தான் இந்த பொட்டியே அம்பேல் !!.

டவுசர் பாண்டி said...

// டவுசரு மட்டும் காமெடி பண்ணிகிறதா நெஞ்சிகினு இந்த பொட்டிய பத்தி எழுதி உட்டுகினா அவ்வளவுதான்,//- கக்கு

ஐயோ !! வாஜார், நீங்க சொன்னதுக்கு அப்பால இந்த டவுசரு இன்னா பண்ண முடியும், கண்டிப்பா காமிடி தான் , ஆனா ஒன்னு,

அது நல்லா கீதா இல்லியான்னு நீங்க தான் சொல்லணும் , அக்காங் !

Simran said...

Hi

I am Simran, designer of the template that you are using on your blog right now. Its a humble request that please replace the following links in your template :

http://www.tricksdaddy.com/wp-content/uploads/2009/06/001_32.png

http://www.tricksdaddy.com/wp-content/uploads/2009/06/001_50.png

with these links :

http://i34.tinypic.com/1z4v3if.png

http://i37.tinypic.com/2448ux5.png

As your blog gets huge traffic, that is why these images are consuming alot of my CPU usage.
Please replace the links as soon as possible

Thanks & Regards

Prasanna said...

Daemon Tools சஃப்ட்வேர் மூலம் இது இன்னும் சிம்ப்ள் அல்லவா? Daemon Tools என்பது virtual cd/dvd drive tool

டவுசர் பாண்டி said...

//I am Simran, designer of the template that you are using on your blog right now,

Please replace the links as soon as possible// -Simran கூறியது.

சிம்ரன் வாஜார், இந்த template பண்ணிக் குடுத்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ், தலீவரே !!

அப்பால , நீங்க சொன்னா மேரி மாத்திட்டேன் , தலீவா !! உங்க வருகைக்கி அப்பால இந்த மேரி உதவிக்கி டாங்க்ஸ் !!

டவுசர் பாண்டி said...

//Daemon Tools சஃப்ட்வேர் மூலம் இது இன்னும் சிம்ப்ள் அல்லவா?//-பிரசன்ன குமார் கூறியது.

தலீவா !! அது ஒரு வயி இது ஒரு வயி, உங்க கருத்துக்கு டாங்க்ஸ்பா !!

Jaleela Kamal said...

அய்ய இத்ததான் ரொம்ப நாளா தெரியாம மண்டைய ஒடச்சுக்குன்னு இருந்தே, அப்பாலிக்கா முயற்சி செய்து பாக்குறம்பா, ரொம்ப தாங்க்ஸ்பாஅ அ ஆ

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh