பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

சிம்பிளா பென் டிரைவ - ரிமூவ் பண்றது எப்படி ?

·


நம்ப தோஸ்துங்க அல்லாருக்கும் , வணக்கம் பா !!


போன பதிவுக்கு ஒட்டு போட்ட
ஜெகநாதன் அப்பால, மோகன் அண்ணாத்தே,

இவங்கோ + கருத்து போட்ட அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ்பா !!
அப்பால வருகை தந்து படிச்சிட்டு போன அல்லாருக்கும் டாங்க்ஸ் ,

இன்னைக்கி நம்ப பேனா டிரைவரு பத்தி பாக்கலாம் பா !! அதாம்பா
pendrive இப்போ !!

நம்ப பென் டிரைவ மாட்டி, எதுனா பைல காப்பி பண்ணுவோம் , அப்பால
அத்த வெளி எடுக்கறத்துக்கு safely Remove Hardware இன்னு போய் அப்பால
stop குடுத்து எடுப்போம் , இதுக்கு வேற மேரி ஒரு ஐடியா கீது !!

இந்த சின்ன சாப்ட்வேர்( 467 kb ) நம்ப பொட்டில போட்டு வெச்சிட்டா
போதும் , இப்போ இங்க போய் இந்த software டவுன் லோடு
பண்ணுங்க ,

Zip பைல இருக்கும் , அத்த extract பண்ணி உட்டுட்டா போதும் வேற
எதுவும் பண்ணத் தேவல அக்காங் !!

இப்போ இது மேரி ஒன்னு வரும் ( அத டெஸ்க் டாப்புல வெயுங்க ) அப்பால ,ஒரு pendrive போட்டு இத்த ஓபன் பண்ணாக்கா !! இது மேரி வரும் ,இப்போ டபுள் கிளிக் , இல்லாக்காட்டி என்டெர் பண்ணாக்கா !!
இது மேரி வரும் ,

வேல ரொம்ப சிம்பிள் , எதுனா ப்ரோக்ராம் ரன் ஆயக்கீனு இருந்து இப்ப
எடுக்க முடியாது !! இன்னு சொல்லுது இன்னு வைங்க ,

அதுல autorun ப்ராபிளம் கீது இன்னு அர்த்தம் இல்லன்னா எதுனா
வைரசு கிரசு இருக்கும் ,

அதுமேரி சில சமயம் கூவும் போது அது மேரி சொல்லாம
கீரத்துக்கு நம்ப நண்பர் INVISIBLE ஒரு பதிவு உட்டுக் கீனு
இருக்காரு ,

அதுல கீற மேரி பண்ணாக்கா , எப்பவும் இது மேரி கூவாது !!

ஐய , மறந்துட்டேனே !! தொயில் நுட்பம் பத்தி எழ்தரவங்களுக்கு வெக்கற
போட்டில எனுக்கு ஒட்டு போட்ட அத்தினி பேருக்கும் நன்றி ,

போடாதவங்கோ !! உடனே போய் ஒரு ஓட்டத்தான் போடுங்களேன் ,

-- டாங்க்ஸ் -- -- டாங்க்ஸ் -- -- டாங்க்ஸ் --


20 கருத்துகள்:

அப்துல்மாலிக் said...

தலீவா

நல்ல கருத்தை சொல்லவரும்போது மற்றவர்களுக்கும் எளிதில் புரியுராமாதிரி எழுதுங்க தலீவா...

இது போல‌ எழுதுவதால் இது மாதிரி நல்ல இடுக்கைகள் கண்டுக்காம போக சான்ஸ் இருக்கு

வர்ட்டா

டவுசர் பாண்டி said...

//புரியுராமாதிரி எழுதுங்க தலீவா.//

//நல்ல இடுக்கைகள் கண்டுக்காம போக சான்ஸ் இருக்கு//

தலீவா !! நம்ப பாஷையே இதானே தலைவா !! அப்பிடிக் கூட ரொம்ப கஷ்டமா இருக்காதே !!

நம்ப அகராதிய ஒரு வாட்டி பட்சிட்டா போதும் தலைவா ! அப்பால கருத்துக்கு ரொம்ப தாங்க்ஸ் , அடிக்கடி நம்ப பிளாக்கு பக்கமும் வாங்க .

பொன் மாலை பொழுது said...

ஐயோ ..pendrive ல இம்மாம் வெசயம் கீதா ?? அப்ப சரிதான்,
நம்ம டவுசரு ஒரு 'ஜீனியஸ்' தான்.
தலீவா ...எங்க குல தங்கம் டவுசரு பாண்டி அண்ணாதே வால்க வால்க !!
அவரு புகளு எங்கபாத்தாலும் பரவிக்கினும் ன்னு நா அந்த முண்டக்கண்ணி அம்மன வேண்டிகிறேன் .ஆக்காங் .டான்க்ஷு வாஜாரே!!

டவுசர் பாண்டி said...

//ஐயோ ..pendrive ல இம்மாம் வெசயம் கீதா//- கக்கு,

இன்னாது , கீதாவா யாரு அது
நைனா !!
எனுக்கு தெரியாத பூடுச்சே !! அப்பால பேனா டிரைவரு பத்தி ,

உன்னும் எவ்வளவு மேட்டர் கீது !! உன்னும் போடுறேன் , அப்ப பாரு தலீவா !!

டவுசர் பாண்டி said...

//நம்ம டவுசரு ஒரு 'ஜீனியஸ்' தான்.//

யப்பா !! இப்பயாச்சும் ஒத்துக்
கீனியே !! அதுவே ரொம்ப சந்தோசமா கீது !!

அயயோ புல்லரிக்கீது !! போ !! நம்ப மாப்பு good இன்னு சொல்லக் கூட ஆளையே காணோம் பா !!

அத்த நெனச்சா தான் கஷ்டமா கீது !!

டவுசர் பாண்டி said...

ஐயே !! இன்னாமோ போட்டி அல்லாம் வெச்சிக் கீனு கீறாங்களே அதுல ஒட்டு போட்டியா இல்லியா ? கக்கு தல,

மொதல்ல போய் குத்து, நீ குத்துற குத்துல பொட்டி ஒடைரா மேரி குத்து , அக்காங் !! எம்மாம் பேரு குத்திக் கீனு கீறாங்கோ நீ இன்னாடான்னா சும்மா அலுக்கா, கீர !!

பெயரில்லா said...

ஏண்டா அம்பி , டவுசரு பாண்டி , நன்னாதா நம்ம பட்டணத்து பாஷயில ப்ளாக்கு எழுதிண்டிருக்கே. நான்னாதா இருக்கு, பேஷா இருக்கு, ஆனாலும் உங்க குப்பத்து ஆளுங்களுக்கு மட்டும் தான் இந்த பாஷா நன்னா பேச வரும்,
புரியம். ஆனா மத்த வா எல்லான் என்ன பன்னுவோ ? அவாளுக்கு புரியறது கஷ்டமாச்சே டா அம்பி ??
என்னா மேரி பட்டணத்தல இருக்கறவா, உன் குப்பத்து ஜனங்கள் எல்லாருக்கும் இது புரியம். ஆனாக்க மத்த ஊர் காரா எல்லாம் என்ன பண்ணுவ? அவாளுக்கு இந்த பாஷா புரியறது கஷ்டமாச்சே ? நீ என்னதான் டிக்ஷனரி போட்டாலும் அதெல்லாம் காரியத்துக்கு ஆகுமோ?
நானும் கூடத்தா ரொமாண்டிக் மூடு வந்துடுத்துன்னா என் ஆத்துகாரி அண்ட கிச்சன்ல போயி மெட்ராஸ் பாஷயில பெசிண்டுடுவோம். அதுவும் அஷடு சிரிச்சிண்டு நிக்கும். அதுக்காக அதையே டெய்லி பேசிண்டுருக்க முடியறதோ ?
என்னமோடா அம்பி மனசல பட்டுது சொல்லிட்டேன். அது சரி, அது யாரு அந்த கிறுக்கு? அதான் 'கக்கு -மாணிக்கம் அப்டீன்னு பேரு வெச்சிண்டிருக்கே அதான். ஏன் இப்டீ தத்து பித்து இன்னு உளறிண்டு இருக்கே? என்னமோ ஜீனியஸ் கீநியஸ் இன்னுட்டு அந்த லூசுதான்.. யாரு பக்கத்துக்கு வூட்டு காரனா? ஈஸ்வரா இந்த காலத்து மனுஷா எல்லாம் என்னனவோ பேரு வெச்சிண்டு கூத்தடிசிண்டு இருக்கா!


அது சரி டா அம்பி, எம்பெரு' இன்னா ' ன்னு அட ராமா பாரு பாரு உன்கூட பேசிகிண்டே எனக்கும் அந்த பாஷ வந்துடுத்துடா அம்பி .எங்க வுட்டேன் ? ஆ....... ஏன் பேரு என்னான்னு நோக்கு தெரியுமோ ? நோக்கு எப்பிடி தெரியும் நா சொன்னாதானே தெரியும். எம் பேரு கேஷூ ஆமாம் கேஷூ உடனே வக்கீல் கோர்ட்டு ன்னுட்டு நினைச்சிகாதே,கேஷூ இன்னா கேசவன் - கேசவ் பெருமாள் அப்டீன்னு அர்த்தம். எங்க தாத்தா பட்டணத்த்ல பெரிய ஆளு. வெள்ளக்காரால் காலத்ல பெரிய பதவில இருந்தவா . நம்ம பட்டனத்ல பொறந்ததால எனக்கும் அதே பேர வச்சினுட்டா என் தோப்பனார். சரி சரி நாழி யாரது , ஆத்ல மாமி தோச வாத்து வச்சிண்டு காத்துகினு கீரா.
அட ஈஸ்வரா ஈஸ்வரா....................................................................................................

பொன் மாலை பொழுது said...

I already cast my vote panndi. It was no 5 at that time OK?

பெயரில்லா said...

I am sorry to say this. Please change your language to normal Tamil. It is a torture to understand. Unable to read fully any post.

வேலன். said...

நைனா எனக்கு புரியுது...ஆனால் அப்பால புரியல..

கக்கு - மாணிக்கம் கூறியது
தலீவா ...எங்க குல தங்கம் டவுசரு பாண்டி அண்ணாதே வால்க வால்க !!


.டவுசர் தங்கம்னா...
அப்போ சர்ட் வெள்ளியா...
டவல் பித்தளையா...?
குழப்பமாக இருக்கே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி

டவுசர் பாண்டி said...

//அவாளுக்கு இந்த பாஷா புரியறது கஷ்டமாச்சே ? //

மொதல்ல அப்பிடி தான் இருக்கும் அப்பால பிரியும் , இல்லன்னா இத்தினி பதிவு போட முடியுமா ?

//அது யாரு அந்த கிறுக்கு? அதான் 'கக்கு -மாணிக்கம் அப்டீன்னு பேரு வெச்சிண்டிருக்கே அதான்.//

நாட்டுலே இன்னா இன்னாவோ பேரு வெச்சிக் கீனு இருக்காங்கோ !! எங்க வாத்தி கக்கு - மாணிக்கம் இண்ட்டு பேரு வெச்சிக் கீரதா பெர்சு !! அப்பால அது என்னிக்கும் ஒலராது !! நாட்டுல கீர அரசியலு வாதிங்கள விட ஒன்னியும் பெர்சா ஒலராதே !!

//பக்கத்துக்கு வூட்டு காரனா? //

பக்கத்து ஊட்டுக் காரன் கூட நம்பல புகழ்ந்து பேசிடுவானா ? அது ஒரு அன்பு தான் தல , உங்க பக்கத்து ஊட்டுக் காரன் கிட்ட கேட்டா உங்க மேல எப்படா கல்லு போடலாம் இன்னு நெனைப்பான் !! அதனால பக்கத்து ஊட்டுக்காரண நம்பாதே !!

//எங்க தாத்தா பட்டணத்த்ல பெரிய ஆளு. //

ஐ எங்க தாத்தா யாரு தெரியுமா ? காந்தி தாத்தா !!

//அட ஈஸ்வரா ஈஸ்வரா.....//

டேய் , நொட்ட, குள்ளா , கருப்பு பாலு , குண்டு மணி , பக்கிரி ரிக் ஷாவ எட்றா , இன்னா தான் ஆவுதுன்னு பாக்கலாம் போவ சொல்ல அல்லாரும் சல்பேட்டா உட்டுக்கீனு போவலாம் !! சும்மா பேஸ்து ஆய்டனம், ஏரியா !!

நொட்ட : டவுசரு அவசரப் படாதே !! அது நம்ப தோஸ்து கக்கு தான் , சும்மா மங்கம்மா வேல காட்டிக்கீனு கீது !! கோவப்படாதே !! அக்காங் !!

டவு : அப்பிடியா !! விஷியம் , ஓகே ஓகே ,

டவுசர் பாண்டி said...

//I already cast my vote panndi. It was no 5 at that time OK?//-கக்கு,

அட ராமா !! நானு சொன்னது Axleration , ல வெச்சிக்கீர போட்டில ஒட்டு போட சொன்னேன் பா !!

அப்பால உனுக்கு தான் கக்கு இன்னு ஒரு பேரு கீதே ? அப்பால , இன்னாத்துக்கு பேரு இல்லாதவன் இன்னு எழ்தரே !! நொட்ட கண்டு புட்சான் பாத்தியா ?

டவுசர் பாண்டி said...

//டவுசர் தங்கம்னா...
அப்போ சர்ட் வெள்ளியா...
டவல் பித்தளையா...?
குழப்பமாக இருக்கே.//-வேலன்.


ஐயே !! டவுசருக்கு ஏது சர்ட்டும் , டவுளும் , வெறும் டவுசர் தான் . கர்துக்கு டான்க்சுங்கோ !!

டவுசர் பாண்டி said...

//I am sorry to say this. Please change your language to normal Tamil.//-shirdi.saidasan,

இதுக்கு போய் இன்னாத்துக்கு சாரி அல்லாம் சொல்லிக்கீனு !! மின்னைக்கி இப்போ கொஞ்சம் கொஞ்சம் உருப்படியா பேச வருது !!

50 - வது பதிவுக்குள்ள உன்னும் கொஞ்சம் நல்லா தமிழ் கத்துக்கறேன், தலைவா !! உங்க வருகைக்கி + கருத்துக்கு தாங்க்ஸ் ,

டவுசர் பாண்டி said...

//தகவல் பகிர்வுக்கு நன்றி//-யூர்கன் க்ருகியர்,


மின்னல் போல் வந்து ,
தூறலாய் சாரல் பொழியும்,- நீ ,
எப்போது இடியுடன் கூடிய
மழையாய் பொழியப் போகிறாய் !!என்னை நனைக்கப் போகிறாய் ?


- டவுசர் பாண்டி ,

எனுக்கும் தமிழ் வருதான்னு செக் பண்ணி பாத்தேன் !!

Mohan said...

வாத்யாரே! ஒன்னோட பாஷை எங்களுக்கு புரியுது! இருந்தாலும் நம்ம தோஷ்த்துங்க வார்த்தைய கொஞ்சம் கண்டுக்க வாஜாரே! தொடர்ந்து கலக்குங்க தலீவா!

டவுசர் பாண்டி said...

//நம்ம தோஷ்த்துங்க வார்த்தைய கொஞ்சம் கண்டுக்க வாஜாரே!//-Mohan,

தலைவா !! கண்டிப்பா கேக்கறேன் !! நா இன்னா பண்ணுவேன் வெச்சிக்கீனு வஞ்சனையா பண்றேன் !! இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கத்துக்கறேன் !! கூடிய சீக்கிரம் ஒயுங்கா எழ்தறேன் .

//தொடர்ந்து கலக்குங்க தலீவா!//


கண்டிப்பா தலைவா !! உங்க ஆதரவுக்கு ரொம்பவே தாங்க்ஸ் !!

hari raj said...

கலக்குங்க,.வாழ்த்துக்கள்

ஹரி ராஜகோபாலன்

டவுசர் பாண்டி said...

//கலக்குங்க,.வாழ்த்துக்கள்//-hari raj,


நன்றி தலைவா !! அடிக்கடி வந்து போங்க !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh