பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.

·

நம்ப தோஸ்து அல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் பா !!

எனுக்கு ஒரு குசி இன்னான்னா !! நெரியோ பேருக்கு OS மாத்த தெரியும்
போல கீது , நானு இன்னாடான்னா !! அது தெரியாத கீறேன் பா !!
செரி அத்த உடு ,

புட்சா பிளாக்கு ஆரம்பிச்சி கீரவங்களுக்கு !! இந்த மேட்டர் !!

இந்த தபா , ஒரு சின்ன மேட்டர் பா !! நம்ப பிளாக்குல youtube படத்த
வர வெக்கறது எப்பிடி ?

இது நெரியோ பேரு சொல்லி இருப்பங்கோ !! இருந்தாலும் நானும் ஒரு
தபா கூவிக்கிறேன் பா !!

அதே மேரி நமபுளுக்கு புட்சா மேரி கீர, வீடியோவ , நம்ப சைடுல கீர
கெட்ஜெட்ல கூட போட்டுக்கலாம் , சோக்கா இருக்கும் ,

இப்போ அது எப்பிடின்னு பாக்கலாம் , மொத்தல்ல youtube ஓபன் பண்ணி
அதுல உங்களுக்கு புட்சா மேரி கீர ஒரு வீடியோவ ஓபன் பண்ணிக்கோங்க !!

அதும் பக்கத்துல ஒரு சின்ன பொட்டில நாம்ப செலக்ட் பண்ண வீடியோ
பத்தி இருக்கும் அதுக்கு கீய Embed அப்பிடின்னு ஒன்னு இருக்கும் அத்த
அப்பிடியே காப்பி பண்ணி ,

நம்ப பிளாக்குல போடறத்துக்கு newpost இன்னு கீர்த , போய் அதுல
Edit HTML கிளிக் பண்ணி அதுல paste பண்ணிடனும் ,

அப்பால compose இன்னு கீர்த அமுக்கி பாத்தா நம்ப போட்ட வீடியோ
அங்க வந்து இருக்கும் அப்பால ,எதுனா நீங்க எழ்தரா மேரி இருந்தா
எழ்தி வெளியிடலாம் ,

அதே மேரி தான் இந்த வீடியோவ , நம்ப கெட்ஜெட்டுல போடறதுக்கும் ,
இப்போ layout ( தளவமைப்பு) போய் அதுல HTMl /javascript இன்னு கீர்த
ஓபன் பண்ணி இந்த Embed கோடிங்க paste பண்ணிடுங்க ,

அதுல கீர அளவ நம்ப கேட்ஜெட் அளவுக்கு ஏத்த மேரி மாத்திக்கலாம் ,

இங்க ஒரு வீடியோ குத்துக்கீறேன் , படா சோக்கா கீது பா !! இன்னா மேரி
அல்லாம் இந்த தம்பி போட்டு வாங்கு வாங்கு இன்னு வாங்குது அத
நீயும் தான் ரவ பாரேன் !!இன்னாபா !! மேட்டர் புட்சிகீதா !! உங்க கருத்த சொல்லு தலீவா !!


13 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் said...

good.

டவுசர் பாண்டி said...

தலீவா !! சலாம் வாஜாரே !! ஊர்ல தான் கீரியா ? இல்ல எங்கனா அபீட்டு உட்டுக்கீனியா ?

ஆளே காணோம் !! சொம்மா உஸ்த்தாது கணக்கா, வந்து கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ்பா !! இன்னா ஒன்னு கர்த்து தான் ரொம்ப பெர்சா கீது !! அக்காங் !!

பொன் மாலை பொழுது said...

\\தலீவா !! சலாம் வாஜாரே !! ஊர்ல தான் கீரியா ? இல்ல எங்கனா அபீட்டு உட்டுக்கீனியா ?
ஆளே காணோம் !!\\
இத்தால் ஒன்னியும் கொறச்ச கெடியாது அக்காங் ... இன்னமோ இத்து தெனைக்கும் வந்துகினு போயிகினுகீது, இத்தல மாப்ள ய வேற 'வாரி ' உட்டுகினு. இத்தெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல ?? .அந்த புள்ள தீவாளிக்கு ஊருக்கு போய்கிகீது, இன்னாவோ ரொம்பதா பிலிமு காட்டிகினு, ஆக்காங்......

சர்தான், புச்சா 'கெட்ஜட்டு' உட்டுகினு கீது போல, நல்லாத்தான் கீது தலீவா, ஆனாக்க இந்த கஸ்மாலம் நெட்டு இஸ்பீடு கீதே அத்து தான் கொய்ன்,கொய்ன் இன்னு சுத்திகினு கீது லேட்டா பூடுது ஆக்காங்.
சரி வர்டா.

டவுசர் பாண்டி said...

ஐயே !! நீ இன்னா தான் பயாஸ் கோப்பு காட்டிக்கீனு கீரே !!

வந்தமா நம்ப தோஸ்துக்கு ஒரு ஓட்ட குத்துனோமா !! அப்பிடியே ரவ சல்பேட்டா உட்டுக்கீனு ,

ஒரு கருத்து போட்டோமா இன்னு கீரியே !! நம்ப குப்பத்துலையே பெரி மன்சன் இன்னு பேரு வேற கீது உனுக்கு !!

அய்யே !! நாயாமா இது ? இவ்ளோ லேட்டாவா வர்றது ? அப்பால நம்ப தோஸ்துந்க மேர்சலு ஆய்ட மாட்டாங்களா !!

ஜரூரா வந்து ஒரு கர்த்து போடத்தாவலையா நீ ?

பொன் மாலை பொழுது said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வேலன். said...

என்னப்பா மனுசங்க நிங்க...நினைச்ச வரிங்க நினைச்ச வரமாட்டனுகிறீங்க...
ஒருத்தர் கருத்தே போடமாட்டேங்கிறாரு..அப்பால மாம்ஸ் கேட்டுது அதான் ராரு...அப்பால நாம கோயிச்சிக்க போரோனுட்டு சும்மாவந்துட்டுபோராரு....இன்னுருத்தர்டொய்ங் டொய்ங் சுத்துதுன கூவறாரு...என்னவோ செய்ங்க்கப்பா...
பதிவு சூப்பரப்பா...
அப்புறம் நீ வாழு...வளமுடன்....
செல்ல மறந்துட்டேன்...வரட்டா...
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

வேலன் மாஸ்டர் பின்னூட்டத்தை படித்ததும் எனக்கு சிப்பு... சிப்பா வருது :-)
சரியான ....தமாசு !!!

டவுசர் பாண்டி said...

//என்னப்பா மனுசங்க நிங்க.//-வேலன். கூறியது.


அப்பிடியா ?

டவுசர் பாண்டி said...

//எனக்கு சிப்பு... சிப்பா வருது//- யூர்கன் க்ருகியர்.


ஆஹா !! உங்க சிரிப்பு தான் தலீவா !! ரொம்ப பேமஸ் !! வாழ்க பல்லாண்டு .

Mohan said...

வாத்யாரே! சோக்கா கீது மேட்டரு! எங்கிருந்துதான் இப்புடி மேட்டரு புடிக்கிறீங்கலோ? ஒண்ணும் பிரியல! அக்காங்!!

டவுசர் பாண்டி said...

மோகனு அண்ணாத்தே !! வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ்பா !!

ISR Selvakumar said...

Good!

டவுசர் பாண்டி said...

மிக்க நன்றி தலீவா !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh