பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

குஜிளிங்கோ - சைட்ட லாக் பண்றது எப்படி ?

·


போன பதிவுக்கு ஆதரவு குட்து ஒட்டு போட்ட அல்லாருக்கும்
ரொம்பவே டாங்க்ஸ்பா !!

இந்த தபா ஒரு சின்ன சாப்ட்வேர் பத்தி பாக்கலாம் !! நம்ப ஊட்டுல கீற
புள்ளைங்கோ நம்ப இல்லாத போது internet பக்கம் போனாக்கா !!
google serch ல எதுனா தட்டப் போய் ,

லிங்க் எதுனா குஜிளிங்கோ !! பக்கம் போய்டும், அத்த தடுக்கர்த்துக்கு
தான் இந்த website blocker இன்ற சாப்ட்வேர் ஊசு ஆவுது ,

இந்த சாப்ட்வேர் download பண்ணி அப்பால ரன் பண்ணுங்கோ !! அப்பால்
அதுல செட்டிங்க்ஸ் போய் அதுல அல்லொவ் பண்ணதே இன்ற காலத்துல
சில சைடோட அட்ரச குடுங்கோ !!

( உங்களுக்கு தெரியாதா ? சைடு பேரு அல்லாம் )

அப்பால ஓகே குடுத்துட்டாக்கா !! செரியா பூடுச்சி !! அந்த மேரி அர்த்தம்
வர்ற website அல்லாம் badrequest இன்னு வந்துடும் தலீவா !!

இங்க போய் அத்த download பண்ணுங்கோ !! இது ஒரு trial software தான் ,

உங்க கர்த்துக்கு இந்த டவுசர் பாண்டி வைட்டிங்க்பா !!
20 கருத்துகள்:

Tech Shankar said...

super அண்ணாத்தே

பெயரில்லா said...

குஜிலிங்க இல்லாத இணையம் ....
மப்பு ஏறாத சரக்கு ....
புகை இல்லாத வெண் சுருட்டு ....
போதை இல்லாத கஞ்சா...

-இதை எல்லாம் நினெச்சு பார்த்தா எவ்வளவு கொடுமையா இருக்கு ..... :)

இருந்தாலும் நீங்க சொன்ன ஏத்துக்க வேண்டியதுதான் நண்பரே ..

தேவையான கருத்து அனைவருக்கும் ...எப்பொழுதும் ..

- யூர்கன்

டவுசர் பாண்டி said...

தமிழ் ஹார்ட்டு , அண்ணாத்தே !! உங்களோட வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//பெயரில்லா கூறியது...//

இது இன்னாப்பா !! பேரே இல்லாம ஒரு மன்சன் கீறாரு !! அது எப்பிடி ? அப்போ உங்கள அல்லாரும் எப்பிடி கூப்புடுவங்கோ ??

ஹலோ !! சார் !! Mr . பேரு இல்லாதவரே !! இன்னு கூப்புடுவங்களா ?? இன்னாடா இது கோபாலு ஒரே கொயப்பமா கீதே
( ^ l ^ )

டவுசர் பாண்டி said...

//குஜிலிங்க இல்லாத இணையம் ....
மப்பு ஏறாத சரக்கு ....
புகை இல்லாத வெண் சுருட்டு ....
போதை இல்லாத கஞ்சா...//

ஓஹோ !! இதல்லாம் வேற
கேக்குதா ? இரு இரு உன்ன ..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ,

யூர்கன் க்ருகியர் said...

அய்யய்யோ மன்னிக்க டவுசர் சார் ..... I'm good fellow :)

வேணுமுன்னா இப்படி சொல்றேன்

காரமில்லா மிளகாய்
கரிக்காத உப்பு
புளிக்காத புளி
இனிக்காத அல்வா

டவுசர் பாண்டி said...

...................

.....................

......................

நினைக்காத அவள் .........

யூர்கன் க்ருகியர் said...

//நினைக்காத அவள் .........//


நான் அப்படியே "ஷாக்க்க்" ஆயிட்டேன் .....

ஒரே உவமையில கலக்கிட்டீங்க ..... நெஜம்மா ....

பின் குறிப்பு : யாரு அவங்க ? :)

பொன் மாலை பொழுது said...

'பில்லக்கா ' பசங்கங்க அப்டீன்றது சரியாதான் கீது, ஆறு ;பில்லக்கா' பசங்க ? வேற ஆறு ? டவுசரும் அந்த 'பேரு இல்லாத பொடியனும் தா ? வேற ஆறு ? ரொம்பதா வழியா தீங்கடா .
என் செல்ல பசங்களா !!

பொன் மாலை பொழுது said...

ஐயோ ஐயோ, என் கமெண்ட்ஸ் சொல்ல மறந்து பூட்டேன்.
அண்ணாத்த டவுசரு உண்மைய சொல்லு , நீ குஜிலீன்கோ பக்கம் பாத்தது இல்ல ?
நம்ம பசங்கோ நம்ல விட மேதாவிங்கோ, இன்னாதா பூட்டு போட்டு பூட்டி வச்சாலும் பூட்ட நோகாம தள்ளி வுட்டு புட்டு நுங்கு சாப்டு வாங்கோ . ஆகாங்....

பொன் மாலை பொழுது said...

மாப்ள அசடு வழியுது, தொடச்சிக்கோ உன்ன ஆறு ரெண்டு பேர்ல எழுத சொன்னாக? மாட்டிகினியா தானவே?

யூர்கன் க்ருகியர் said...

// உன்ன ஆறு ரெண்டு பேர்ல எழுத சொன்னாக? மாட்டிகினியா தானவே?//


பீ கேர்புல் ....

நான் என்னையே சொல்லிக்கிட்டேன் !!

Mohan said...

பயனுள்ள பதிவு வாத்யாரே!

டவுசர் பாண்டி said...

//டவுசரு உண்மைய சொல்லு , நீ குஜிலீன்கோ பக்கம் பாத்தது இல்ல ?//

ஐயோ ! ஐயோ !! மாரியாத்தா என்னை ரவ காப்பாத்து தாயே !! நா இன்னா சொன்னாலும் இந்த மன்சன் கேக்கமாட்டாறு ,

குஜிலி இன்னா இன்னான்னே எனுக்கு தெரியாது !! அது இன்னது வாஜாரே !! புது சாப்ட்வேர் ஆ , ...

டவுசர் பாண்டி said...

//ஒரே உவமையில கலக்கிட்டீங்க ..... நெஜம்மா ....
பின் குறிப்பு : யாரு அவங்க ?// யூர்கன் க்ருகியர் கூறியது...

இச்ச்ச்ஸ் அதல்லாம் சொல்லக் கூடாது !!! ( தப்பிச் சேண்டா , சாமி ..)

டவுசர் பாண்டி said...

//பில்லக்கா' பசங்க ? வேற ஆறு ? டவுசரும் அந்த 'பேரு இல்லாத பொடியனும் தா ?// -கக்கு,

ஆகா , யாரு நாங்களா , இன்னாயா ஜூருகினு, நம்ப பாக்காத
குஜிலியா " ? ? ? "

( சோக்கா, கொத்தேம் பாரு உன்னை ) யாரு கிட்ட !!

டவுசர் பாண்டி said...

//பயனுள்ள பதிவு வாத்யாரே!//- Mohan கூறியது...

வாஜார் , சலாமு கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//பீ கேர்புல் ....//

ஐயே !! எதுக்கு என்னை திட்டறே , நம்ப கக்கு , தல தானே அவுரு ஒன்னியும் கோச்சிக்க மாட்டாரு !! அவுரு பாக்காதா மேட்டரா ?

யூர்கன் க்ருகியர் said...

//இன்னாயா ஜூருகினு, நம்ப பாக்காத
குஜிலியா " ? ? ? "
//

அதானே ?? ...

டவுசர் பாண்டி said...

//அதானே ??// - யூர்கன் ,

நீ தாம்பா சத்திய சீலன் !! தெகிரியமா ஒத்துக்கரே பார் !! உன் கிட்ட புட்சதே இந்த நேர்மை தாம்பா !! அக்காங் !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh