பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டாக்குமெண்ட் பைல்களை upload செய்து download செய்வது எப்படி ?

·

இந்த தபா, பெரி இஸ்கூலு படிக்கிற புள்ளைங்களுக்கு

அவுகோ பாட சம்பந்தமா எதுனா, டாக்குமென்ட்டு ,

கீது பாரு அத்த மெய்லு பண்ணி தான் ஷேர், பண்ணிக்குவாங்கோ ,
ஆனா இந்த மேரி கொஞ்சம் டாக்குமென்ட்டு தான் , அனுப்ப முடியும் ,

ஆனாக்கா !! இந்த Deposite file . com - இன்னு கீரதுல , நீங்க
வெறுமினே sign பண்ணி அப்பால,
உங்களுக்கு ஒரு அக்கவுன்ட்டு ஓபன் பண்ணிக் கோங்க,
அப்பால எந்த பைல upload பண்ணனுமோ அத்த upload
பண்ணிட்டா !

அதனோட url குடுக்கும் , அத sms பண்ணி பைல டவுன்லோட்
பண்ணிக்கலாம் ,

இதுல 2 GB அளவுக்கு பைல upload பண்ணலாம் , ஊஸ் பண்ணி பாருங்கோ !!

புட்சா அல்லாருக்கும் சொல்லுங்கோ !!


அப்பிடியே எனுக்கு கருத்து ரவ சொல்லுங்கோ !!


10 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

கண்ணுங்களா, படிக்கிற புள்ளங்களா ரவ இத்த பாத்திட்டு யூசு பண்ணிகிங்கோ. அப்பால அம்மா அப்பா ங்கோ இத்த பத்தி அவங்கோ புள்ளங்களுக்கு சொல்லிவுடுங்கோ. நம்ம டவுசரு

அண்ணாத்த எம்மா நல்ல நல்ல காரியம் அல்லா சொல்லிகினுகீராறு ! அவருக்கு ஒரு டாங்க்சு சொல்லிடுங்கோ.ஆக்காங் .

அண்ணாத்த ஒட்டு குத்திகினே, வர்டா

டவுசர் பாண்டி said...

யப்பா !! சூடா கருத்து போட்டு என்னை புல்லரிக்க வெச்சிட்டியே தல !!

உனுக்கு ரொம்பவே தாங்க்ஸ் தலீவா !!

பொன் மாலை பொழுது said...

அட... புல்லு அரிககிதாமா?? அத்து ஒன்னும் இல்ல, ரெண்டு நாளக்கி குளிக்காக கொல்லாமா இருந்தா இப்டீதா புல்லு த்தா அரிக்கும் பாண்டி. Yardley சோப்பு போட்டு குளிசிகினு அப்பால ஒரு full u அடிச்சா சும்மா கம்முண்ணு ஆயிபூடும் அனுப்பி வெக்கட்டா??

டவுசர் பாண்டி said...

//சும்மா கம்முண்ணு ஆயிபூடும் அனுப்பி வெக்கட்டா??//- கக்கு,


வாணாம் !! வாணாம் அப்பால எங்க ஏரியாவுல என்னை சேக்கவே மாட்டாங்கோ பா !

Nathanjagk said...

நீ ஒரு ஜீனியஸ் டவுசர்!
பின்னிறீங்களே! 2ஜிபி அளவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

டவுசர் பாண்டி said...

//நீ ஒரு ஜீனியஸ் டவுசர்!
பின்னிறீங்களே! 2ஜிபி அளவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!//-ஜெகநாதன் கூறியது.

எனுக்கு ஒன்னிமே பிரியலயே !! நம்பல வெச்சி காமிடி கீமிடி பண்றாங்களா ? ஆனா ஜெகனு அண்ணாத்தே " ரொம்ப நல்லவரு "

( ஒரு சேப்டிக்கி எதுக்கும் சொல்லிடலாம் ) , வாஜார் உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா ! !

Prapa said...

உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!

டவுசர் பாண்டி said...

//உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு//-பிரபா கூறியது.

வேலையாவது வெட்டியாவது அதல்லாம் ஒன்னிமே இல்லப்பா !!

சொல்ட்டே இல்லே கண்டிப்பா அடிக்கடி வரேன் தலீவா !!

Mohan said...

வழக்கம் போல நல்ல பதிவு வாத்யாரே!

டவுசர் பாண்டி said...

//வழக்கம் போல நல்ல பதிவு வாத்யாரே!//-Mohan கூறியது,


தாங்க்ஸ் வாஜாரே !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh