பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

படம் எடுக்குறது எப்பிடி? அப்பால, ஐயோ !! டாப்பு டென்னு.

·வாரா வாரம், யாரோ ஒரு பேரீ ( ? ) மன்சன் உக்காந்த எட்த்துல இருந்து கீனு,
ஊர்ல கீற சினிமா அல்லாத்தையும், சொம்மா !! டாரு டாரா கீப்பாறு,

இந்த வாரம் ஒரு டிவில, அப்பிடி, கீச்சு இவுரு குத்த கமண்ட்டு கீதே !!
யப்பா !! சாமி " ? "

எனுக்கு ஒரு விசியம் மட்டும் பிரியவே இல்லப்பா !! சொம்மாவா சினிமா எடுக்குறது, ?

மொதல்ல, ஒரு ஹீரோவ புட்சி அவுரு கிட்ட காலு சீட்டு, வாங்கணும் ,
( அவுரு ஒரு அர சீட்டாவது குட்தா பரவா இல்ல ) அப்பால,

எதோ ஒரு ஹீரோயின்னு அட பாக்க சொல்ல ஒரே கறுப்பா, கலீஜா !! ஆனா,
போட்டால மட்டும் அழகா, கீரா மேரி ஒரு பொம்மைய புட்சி அது கிட்ட
ஒரு காலுல பாதி அதாங்க காலு சீட்டு வாங்கி வெச்சிக்கீனு ,

இதல்லாம், வாங்கி வெச்சிக் கீற ஆளு யாருன்னு தெர்தா ? அட , ஒரு நாலு
படம் எட்து அதுல ஒரு படமாச்சும் சும்மா !! மஞ்சா குள்ச படமா இருந்தா,
அத்த எட்த டைரு டக்கரு , தாம்பா !! அவுருக்கு இதுக்குள்ள வேத்து
விறுவிறுத்து போய்டும் பாரு ,

அப்பால, இதுக்குன்னே, எதனா ஊர்ல எதனா ஒரு மைனரு அவுங்க நைனா !! இல்லா காட்டி , பெர்சுங்கோ கட்டி காப்பாத்தி வச்சி கீற சொத்த வித்து , ஊர ஏமாத்தி ஓலைல போடற பட்டணத்துக்கு வந்து , எத்தாந்த துட்டுல பாதிய ரூம்பு போட்டு ரூம்பு போட்டு -------,
காலி பண்ணி அப்பால ,

இந்த டைரு டக்கரு அவர கண்டு புட்சி, அவுருக்கு காது குத்தி நாலு கல்யாணம் பண்ணி , தயாரிப்பாளரா ஆக்கி ,

ஒரு வையா நோட்டிசு அட்சி வெழா வச்சி ஆச்சிப்பா !!! படம் எத்தாச்சி, இஸ் அப்பாடா !!!

சொம்மா மண்ட காஞ்சி மர மண்டையா ஆயி ,
( ஏற்கனவே பாதி அப்பிடித்தான் கீது ) ஒரு வையா !! படம் , ரிலிசு ஆச்சி, வாங்கனவுனுக்கு , வவுத்துல தண்ணி தண்ணியா ஆவுது , நெலம, இந்த, டைரு டக்கருக்கு, கத வேற மேரி கீது ,

அப்பால , இந்த தயாரிப்பாளரு ( " ? " ) கீறாரு !! பாரு ,அவுரு மட்டும் , ரிலிசு அன்னிக்கி ,ஒரு கோயிலு உடாத தேங்கா உட்டுக்கினு கீராரு ? இப்பிடி , கீது நெலம , ஆனா ,

இந்த கசுமாலம் கீதே , அதாம்பா டாப்பு டென்னு , சொல்ற, கசுமாலம் தான் , அவுரு சொல்வாரு , வாய்ல வந்த மேரி எதனா ஒன்னு ,

இந்த வாரம் சொன்னாம் பாரு , மன்சன் ,சோக்கா இருந்துதுபா மேட்டரு , அல்லாத்தையும் உடு , நாடோடி இன்னு ஒரு படம் வந்து கீது , எனுக்கு தெர்ஞ்சி நிஜிமாளிமே சோக்கா கீது, படம் , அது ரெண்டாவுது இடமாம் , இவுரு எட்து கீஞ்சி போச்சே !! காது , சொம்மா வேலம்பரமே கணக்கு பண்ணா மூணு படம் எடுக்கலாம்பா ,அதாம்பா மாசில்ல்ல்ல்ல்ல்லா மணி ... அதாம்பா மொதல்லையாம் ?
இன்னா மேரி கீது பாரு ?? நாயம் !! சீ ,சீ , வெக்கமா கீது .


" ரவ கஷ்டம் பாக்காத கர்த்து எழ்து நைனா "

10 கருத்துகள்:

Tech Shankar said...

s u p e r


//எதாவது புரீரா மேரி எழ்து நைனா.

டவுசர் பாண்டி said...

வா , வாஜாரே, உனுக்காவுது என் கஷ்டம் பிரியுதே, அதுக்கே ரொம்ப சந்தோசமா கீதுபா

Mohan said...

அந்த பயலுக இப்புடிதான் மன சாட்சியே இல்லாம விமர்சனம் பண்றாங்கோ! எந்த தகுதிய வச்சி அந்த படத்துக்கு முதல் இடம் தாராங்க? ஒண்ணுமே பிறிய்யலையே நைனா?
ஆமா வாத்யாரே இன்னா நீ நம்ம பக்கம் எட்டிக் கூட பாக்க மாட்டென்ற?

யூர்கன் க்ருகியர் said...

//இன்னா மேரி கீது பாரு ?? நாயம் !! சீ ,சீ , வெக்கமா கீது . //


டிவி ல இப்படி இவனுங்க இப்பிடி கூவலன்னா...

மா சில்லா மணி .................காசில்லாமணி ஆயிடுவான்

இதுக்கே இப்படி சொல்றீங்கள " உளியின் தோசை" படம் வெளி வந்தப்ப இன்னொரு டிவி ல மொதோ இடம் வந்துச்சே ...

டவுசர் பாண்டி said...

//எந்த தகுதிய வச்சி அந்த படத்துக்கு முதல் இடம் தாராங்க?// - Mohan கூறியது.

நம்ப ஊட்டு புள்ள ஜோபில கீர போது, அடுத்த ஊட்டு புள்ளிய தூக்கி தல மேலயா வச்சிக்க முடியும் ?
உண்ணும் கூட தெரமைக்கி மதிப்பு குடுக்காத கீறாங்கோ பார். இன்னா பண்றது ,
உன்மை தமிழன்,

டவுசர் பாண்டி said...

//" உளியின் தோசை" படம் வெளி வந்தப்ப இன்னொரு டிவி ல மொதோ இடம் வந்துச்சே// -யூர்கன் க்ருகியர்..... கூறியது...

யப்பா !! தயவு செஞ்சி நாபகப்படுத்தாத நைனா !!! பாதி படத்துலயே வாந்தி , பேதி அயிபூடுச்சி,

அப்பால , அதுக்கு மொத எடம் எப்பிடின்னு கேக்கறியா ?? செர் தான், ரவ சத்தமா தான் கூவிப்பாறேன் ( ? ) ஊட்டுக்கு ஓயிங்காப் போமுடிமா நீ ?

நட்புடன் ஜமால் said...

மாசில்ல்ல்ல்ல்ல்லா மணி]]


நாடோடிக்கிட்ட மணி இல்லபா

டவுசர் பாண்டி said...

அண்ணாத்தே !! நல்லாகீறியா ? நாடு ஓடி மணி, ஓடிகீனே கீதுபா !! அக்காங் , நம்ப மாசில்லா மணி தான் இப்ப கூவுது . ( எப்ப அரந்து உழவுமோ தெர்ல )

பொன் மாலை பொழுது said...

டாப் டென் - அத்தவுடு, நீ எங்கன போய்கின தோஸ்து? ரண்டு நாலா சுத்திகினு வர்றம்பா. இன்னாட நம்ம ஆளு சொல்லாம கொள்ளாம துபாய் பூட்ச்சா இன்னு டவுட்டுதான்.சடக்குன்னு டவுசர மாட்டிகினு டி ஷர்ட்ட இட்டுகினு உலகம் பூரா சுத்திகினு கீற. குட்து வெச்ச மன்சன் தா நீயீ . வெர்சா வந்து உன் கமெண்ட்ஸ் எய்து கண்ணு.!

டவுசர் பாண்டி said...

//இன்னாட நம்ம ஆளு சொல்லாம கொள்ளாம துபாய் பூட்ச்சா இன்னு டவுட்டுதான்.//- கக்கு - மாணிக்கம்.

இன்னா, தலீவா !!! உன்கிட்ட சொல்லாத நா துபாய் வருவேனா, நீ தான் அங்க கீற, காத்து அடிக்கிற கதிய போட்டோவுல போட்டியே, அத்த பாத்தா பின்னாடி அங்க வர்த்துக்கு, எனுக்கு இன்னா பேஸ்து அட்சிக்கீதா இன்னா !! ஆ , அக்காங் .

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh