பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.

·

 டவுசரின் 25 - பதிவு .


"இது என்னோட 25- பதிவு தலீவரே !! ஒன்னிமே தெரியாத இருக்குற எனக்கு,
இது வெரிக்கும் , ஆதரவு குட்த அத்தினி நல்ல உள்ளத்துக்கும் டான்குசுபா ,"
- என்றும் அன்போட பாண்டி


நம்ப வெளில போய் இருக்கும் போது , முக்கியமான வெப்
சைடு அட்ரச (book mark) மறந்து போய்டுவோம் இல்ல ,

இந்த மேரி ஒரு வெப் சைடுல போய் நம்ப தேவையான, அட்ரெஸ
up load - பண்ணிட்டு, ஜாலியா !! எங்க இருந்தும் , நமுக்கு தேவையான
முக்கியமான அட்ரெஸ எட்துக்கலாம் , அதுக்கு ,

இங்க ஒரு அட்ரேசு கீது, இத கிளிக்கு பண்ணு . இப்போ , இதுல
மொதல்ல, நாம ஜாயின் பண்ணனும் ,

இந்த மேரி ஒன்னு ஓபன் அவுதா,1 ) நம்பல பத்தி, அல்லா மேட்டரையும் கேப்பாங்கோ , ஒரு மெய்லு
அட்ரசு , குட்து அப்பால யூசர் நேமு , கேக்கும் அப்பால இந்த பாஸு
வேடு கீதே , யப்பா சாமி , lettering + number ரெண்டையும் கலந்து கட்டி
கரீக்ட்டா குத்துட்டு, அவுங்க சொல்ற கண்டீசனுக்கு ஒத்துக்குறேன்,
இன்னு கீற பொட்டில , டிக்கு பண்ணிட்டு ஒக்கே பண்ணிடு ,2 ) இதை, வேணுன்னா பண்ணலாம், அதாவது , நம்ப டெஸ்க்கு டாப்புல,
கீற மேரி ஒனுமா ? இல்லியா இன்னு கேக்கும் , இத ஸ்கிப்பு, பண்ணிடு ,
இல்லன்னா, உங்க விருப்பம் இன்னவோ அது போல செய் ,


3 ) இதாம்ப்பா , ரொம்ப மிக்கியம் , இதுல A & B, C இன்னு மூணு கீது,
மொதல்ல நம்ப கிட்ட கீற புக்கு மார்க்கு அல்லாத்தையும், எறக்கி ஒரு
பைலா பண்ணி வெச்சிக்கணும் , அடுத்து , Up load - இன்னு கீரதுல
போய் , கிளிக் பண்ணி நம்ப கிட்ட இருக்குற புக்கு மார்க்கு பைல அதல ,
Up load பண்ணிடனும் ,அடுத்து C- இக்கு நேர கிர சின்ன பொட்டில
ஒரு டிக்கு பண்ணிடு , அது நம்ப பைல எட்துகின உடன நமுக்கு
சொல்றதுக்கு, அட்து, இந்த மேரி வந்துடும் ,


இப்போ , நம்ப கம்ப்லீட்டா செய்துட்டோம் ,
ஒரு முக்கியமான விஷயம் இன்னான்னா நம்பளுக்கு நம்ப Mail -
போய் ஓபன் பண்ணி Inbox -, Delicious Import Complete இன்னு ,தகவல்
வந்த பின்னாடி , நம்ப, delicious.com போய் ஓபன் பண்ணி நம்ப புக்கு
மார்க்கு தொறந்து பாக்கலாம்,

இது நம்ப எங்கனா வெளில இருக்கும் போது , அவசரத்துக்கு எங்க
இருந்தும் பாத்துக்கலாம் . இதுல மிக்கியமான புக்கு மார்க்கு சிலது
அவுங்குளே குடுப்பங்கோ , அந்த ஆப்சன் இருக்கு ,

எப்பிடி கீது இன்னு சொல்லு வாஜார், உன்னோட கர்த்த்துக்காக
டவுசரு வெய்ட்டிங் ,


25 கருத்துகள்:

வேலன். said...

சோக்கா கீது பா மேட்டரு...
நானும் நம்ம பெட்டியிலே உஷார் பண்ணிக்கிறேன்.

வரட்டா...

நல்லயிரு....

வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

super matter தலைவரே .

//மொதல்ல நம்ப கிட்ட கீற புக்கு மார்க்கு அல்லாத்தையும், எறக்கி ஒரு
பைலா பண்ணி வெச்சிக்கணும் //

எப்படி செய்வது என்று சொல்லிக்குடுங்க டவுசர் பாண்டி சார்.

யூர்கன் க்ருகியர் said...

சொல்ல மறந்துட்டேன் சார்...
25க்கு வாழ்த்துக்கள் சார்.

Senthil said...

kalakkal eluthu!!!!!

Draj Ramy said...

tats really cool info buddy

தியாகராஜன் said...

அண்ணன் பாண்டி அவர்களே!
வணக்கம்.
சென்னைத் தமிழ், படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.(என்க்கு.வேலன் சாருக்கல்ல)

உபயோகமான தகவல்.
நன்றி.

டவுசர் பாண்டி said...

//நம்ம பெட்டியிலே உஷார் பண்ணிக்கிறேன்.//- வேலன்.

உஷார் , தலீவா !! பொட்டி சூடு ஆயிடைப் போது.

டவுசர் பாண்டி said...

//எப்படி செய்வது என்று சொல்லிக்குடுங்க டவுசர் பாண்டி சார்.//
- யூர்கன் க்ருகியர் .

அ , ஆ , உனுக்கு ஒன்னிமே தெரியாது, பாவம் கொயந்த .

//25க்கு வாழ்த்துக்கள் சார்.//-

டான்குசுபா .!!

டவுசர் பாண்டி said...

//kalakkal eluthu!!!!!// - Senthil.

//tats really cool info buddy//-Draj Ramy.

வந்ததுக்கு ரொம்ப டான்குசு வாஜார். அப்பால என்ன எதுவும் திட்டல இல்ல , இன்னவோ ,சொல்றேன்னு பிரியுது ( ? ) ஆனா, இன்னாதுன்னு தான் தெரியல

டவுசர் பாண்டி said...

//சென்னைத் தமிழ், படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.// - தியாகராஜன்.

கோச்சிக்காதே வாஜார் , இப்போ தான் ரவ , ரவ , ஒய்ங்கா பேசறத்துக்கு கத்துக்கீனு வரேன் .

கொஞ்ச நாள்லே செரியா பூடும், அது வெரிக்கும் பிளாக்கு மேல கீர அகராதிய வெச்சி சமாளி, வந்ததுக்கு , கர்த்து சொன்னதுக்கு டான்குசு பா !!!!

Nathanjagk said...

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே! அப்டி இப்டி டகிலு வுட்க்கினே, அட்சிட்டீயே ​நைனா.. 25!!! ​மெய்யாலுமே​மெர்ஸலாகீதுப்பா...! இன்னும் எத்தினி அடி, அடின்னு அடிக்க​போறீயோன்னுட்டு!! ஆனா அடிக்கறத கண்டியும் ஸ்டாப் பண்ணிடதா பாண்டி!

டவுசர் பாண்டி said...

//வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே!//
- ஜெகநாதன் கூறியது.

ஐய !! உட்டா மன்ஜா தண்ணி சுத்திடுவே போல கீதே, சோக்கு தான் போ !!

அப்பால, நானாவுது அடிக்கறத உடரதாவுது , அக்காங் !!

கார்த்திக் said...

சோக்கா கீது பா...மெர்சில் ஆயிட்டேன்...

டவுசர் பாண்டி said...

//சோக்கா கீது பா...மெர்சில் ஆயிட்டேன்..// - கார்த்திக்.

வா, வாஜாரே, ஊட்டாண்ட ,,,
ரொம்ப டான்குசு வாஜாரே !!!

பொன் மாலை பொழுது said...

அத்தெல்லாம் ஸ்ர்த்தான்பா நா இன்னா சொல்லிகினே அத்கு நீயீ இப்டீ தியிம்பிகீனுகீர நைனா? அட் உன்னதாம்பா டவுசரு . உன்வூட்டுபக்கம் வந்தாக்கூட கண்டுகினமாட்டேன்ற?
அட மன்சன்னு இருந்த்தாக்கா நோவு நொடி வந்த்கினு போய்கினுதா இர்கும். இம்மாதூண்டு கேப் கெட்சாக்கா வண்டிய எட்துகினு நீயீ போய்கினே கீரீய ராசா இத்து இன்ன நாயம் சொல்லு? இத்தேல்லா நால்லாள்ளே ஆகாங்.

25 பதிப்புக்களா? நீர் எமகாதக ஆளையா வாழ்த்துக்கள். சென்னை தமிழில் பிளாக் எழுத்தும்
உங்கள் நையாண்டித்தனமும் அப்பாவி, ஒன்றும் தெரியாத "மொக்கை" போல முகம் மறைத்து நீங்கள் தரும் செய்திகளும் பிளாக்கில் நடத்தும் "ராவடிகளும் " எல்லோருக்கும் பிடித்துபோனது உண்மை.

பூந்து வெள்ளாடு நைனா நாங்க கீரோமுள்ள !!!

டவுசர் பாண்டி said...

ஹப்பாடா !! எங்க வாஜார் வண்டாருப்பா இனி மேட்டு
தான் கச்சேரி கல
கட்டும் பா !!

தலீவா உம்மேல போய் நானு கோசிக்குவேனா, உன்ன தான் ஆளையே காணோம்,உங்க ஊர்ல வேற புயலு காத்து, அட்சிதாமே பா !! ஜாக்கிர்தே தலீவா !! அடிகடி வந்துப் போப்பா, அக்காங் !!

Mohan said...

அண்ணாத்தே! எங்கியோ போய்ட்ட! கலக்கு! கலக்கு!
அப்புறம் 25 வது பதிவுக்கு மனசார வாழ்த்துரெம்பா!
தொடர்ந்து எழுதி கலக்குப்பா!!

SUBBU said...

மெர்சலாகீதுபா

யப்பா பாண்டி 25க்கு புட்ச்சிக்கோ பருஸு :))))))))))

டவுசர் பாண்டி said...

//தொடர்ந்து எழுதி கலக்குப்பா!//- Mohan கூறியது..

உங்கள மேரி கூட்டளிங்கோ ஆதரவு என்னிக்கும் இந்த டவுசர் பாண்டிக்கு வோணும் வாஜாரே !!! வாழ்த்துக்கு டான்குசுங்கோ !!!

டவுசர் பாண்டி said...

//யப்பா பாண்டி 25க்கு புட்ச்சிக்கோ பருஸு :)))))//- SUBBU கூறியது,

பரிசு குட்ததுக்கு, ரொம்ப டான்குசு தலீவா !! ரொம்ப சந்தோசமா கீது !!

Krishna said...

டவுசரு எப்டியோ குவாட்டர் போட்டீரு, புல் அடிக்க வாழ்த்துகள்!!

வோட்டு போட்டாச்சு நைனா

டவுசர் பாண்டி said...

//புல் அடிக்க வாழ்த்துகள்!!// - நான் ஒரு விவசாயி!

எங்கப்பா தாராந்து பூட்டே , ஐயே !! ஆளியே காணோமே தலீவா !!
அப்பால , புல்லா அடின்னு சொல்லி மாட்டி உடாதேப்பா !! அடிக்கடி வந்டுப்போ !!

பொன் மாலை பொழுது said...

இன்னா வாஜாரே நீயி மன்சுக்குள்ள இன்னாதான் நெங்சுகீனுகீர தொற? உன் வூட்டாண்டவந்தா இல்லமே புச்சாகீது.பெயிண்டு அட்சி சும்மா நம்ம நமீதா பொண்ணு கண்கா ஜம்முன்னு வெடசிகீனுகீதே இன்னு சொல்லி கமெண்டு எழுத்திகினேன் நீ கண்டுகினியா?
அத்தவுடு கண்ணு நீயீ இந்த பொட்டியாண்ட குந்திகினு இன்னாதா பண்ணிகினுகீர? ஒன் மெயிலு பொட்டிய தொறந்து பாரு நைனா. ஒட்டு குத்திகினா ரொம்ப பேஜாரா பூடுது தல. ரவ சல்பேட்டா உட்டுகினு நம்ம கஜ்ஜாமணி காயிதே ரோட்டல சுத்திகினுகீரன்ள்ள அத்துமேரீ ஒட்டு குத்திகினா "கொய்ன் கொய்ன் " இன்னு சுத்துகீனுகீதுபா . மன்சன் அங்கெ இங்கே போவ தாவல்ல?
ஏதுனாச்சும் பண்ணி ஒட்டு குத்ரத சுலவாக்கு தோஸ்த்.
Check Your G mail.

டவுசர் பாண்டி said...

இஸ்டாப்பு ,இஸ்டாப்பு , தப்பு தான் நா பண்ணது தப்பு தான் அதுக்கு மன்னாப்பு கேட்டுக்கிறேன் , தொடர்ந்து பதிவு போடறதுக்கு ரெடி பண்ணிட்டு , அப்பால , உண்ணோம் போட்டோ ஷாப்பு கத்துக்கீர்த்துக்கு நேரம் கரீக்ட்டா கீது நைனா !! அதாம்பா ,அப்பால நம்ப ஊட்ட மாத்தினா மேரி உனுக்கொரு டக்கரு ஊடு கட்டிட்டா போச்சி !! ஐயே !! இதுக்கு போய் ? நமீதா !!!!!!!!!!!!!!! ( மினிமா காதுல வுழ்ந்தா செந்தேன் பா )

கண்ணகி said...

ரொம்ப ரொம்ப நன்றி பாண்டி...உங்க உதவியால் என் வலிதளத்தில் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்....நன்றி. நன்றி. வர்ட்டா.....

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh