பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.

·

ஒரு நாளு நம்ப கம்பீட்டரு பொட்டிய , தட்டிக்கீனு இர்ந்தம்பா ,
இன்னவோ !! நோண்டிட்டு , ( பொட்டிய தாம்பா ) அப்பால ,

டெஸ்க் டாப்பு - க்கு ,வந்து பாத்தா , இந்த ஐகான் அடில , ஒரே புளு
கலரா கீது , இன்னாடா இது பேஜாரா , பூட்துன்னு நம்ப , கம்பீட்டரு
லிப்பேறு பண்ற ஆள இட்டாந்து,
யப்பா , தலீவா !! இது மேரி ஆயி போச்சி , இன்னு சொன்னேன் ,அவுரு
இந்த நோண்டி அத்த நோண்டி ச்சே , இதுனால உனுக்கு இன்னா கஷ்டம்
இன்னு கேட்டுட்டு ,

என்னை ஒரு லுக் உட்டுக்குனாறு ,யப்பா !! எனுக்கு ஒரு கஷ்டமும்
இல்ல இந்த பொட்டிக்கி தான் இன்னாவோ , திஷ்ட்டி பொட்டு வெச்சா
மேரி கீது இன்னு ஒரு கொரலு உட்டேன் ,

அவுரு கூலா , சொன்னாரு !! செரி, செரி O .S , மாத்திட்டா செரியா
பூடும் , இன்னு சொல்லி அத்த மாத்தலாம் இன்னு சொன்னாரு ,

யப்பா !! சாமி நீ கெளம்பு காத்து வரட்டும் இன்னு அவர கெளப்பிட்டேன்,

உன்னொரு , லிப்பேறு காரு வந்தாரு , பாத்தாரு, ---- ம்ம் , முடியல ,
அப்பால ,

அவுரே ரெண்டு நாளு உட்டு வந்தாரு , ஒரு அர மணி நேரம் ,நோண்டி ,
செரி பண்ணிட்டாரு ,

உஸ் , யப்பாடா , இன்னு அயி போச்சி ,கொஞ்சம் நாளு கழிச்சி நானு
இத்த நோண்டி பாத்தா ?? ஒன்னிமே இல்லப்பா !! மேட்டரு ரொம்ப
சின்னது ,

அத்த நீ தான் ரவ பாரேன்,
,


எப்பிடி இருந்த டெஸ்க்கு டாப்பு >>>>>>>>ஒன்னிமே மேட்டரு இல்ல , இந்த இதுல இருந்த டிக்கு மார்க்க
எட்து உட்டேன் , அவ்ளோ தாம்பா !

இதுக்கு ???????????

இதுனால எனுக்கு கெடச்ச பாடம் இன்னான்னா , இந்த லிப்பேறு
பண்றவங்கள நம்பாதே !!! செரியா !! இன்னா நா சொல்றது ,
கரீக்டா ,


வயக்கம் , போல கருத்துக்கு Photobucket - வெய்ட்டிங்கு .28 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது said...

ஒன்ன இன்னா பன்றதுன்னு என்கே ஒன்னும் பிரீள்ள.
அய்யா மகா சனங்களா, தோஷ்துக்களா அல்லாரும் நாயம் சொல்லுங்கோ .

நா "டவுசரு நம்ம ஆளாபூட்சே" ன்னு நெஞ்ட்சிகினு ரெண்டு,மூணு கமெண்ட்ஸ் எழ்திகினு உட்டா இத்து நம்மள இன்னா கேழ்வி கேட்டுகினுகீது.

ஐயோ என்கு ஒரே கோராமையாகீது.

என்கு தெரிஞ்சிபூட்டுது........ கண்ணு .... ராசா.... மொதோ சோலியா பொழுது விட்ன்ச் ஒன்ன என்கானுன் நல்ல கண்ணு டாகுடற பாத்து கண்ண செக் பண்ணிக்கோ தலீவா .

இந்த பொட்டியாண்ட குந்தி குந்தி ஒன்கண்ணும் ரிப்பேரா பூட்சொன்னு ஒரே மேர்சலாகீது நைனா.

டவுசர் பாண்டி said...

//"டவுசரு நம்ம ஆளாபூட்சே"//

ரொம்ப டான்குசுபா , என்ன மறக்காதே கீறியே அதுவே போதும்பா ,

//இந்த பொட்டியாண்ட குந்தி குந்தி ஒன்கண்ணும் ரிப்பேரா பூட்சொன்னு ஒரே மேர்சலாகீது நைனா.//-கக்கு - மாணிக்கம் ,

மெய்யாலுமே தாம்பா , ஒன்னிமே தெர்ல அத்த வேற லிப்பேறு பண்ணனும் தலீவா !!

டவுசர் பாண்டி said...

( நீ இன்னாபா , T- ஷர்ட்டுக்கு இப்போ தான் கர்த்து போட்டியா நைனா ,இருக்கட்டும் , உன்ன கவ்ஞ்சிக்கிறேன்)

Krishna said...

என்னமோ டவுசரு, என்னென்னவோ சொல்ற. ஒன்னும் புரியல. இருந்தாலும் உனக்கு கொஞ்சம் அறிவு அதிகம்தான்.

நீர் எழுதுறது இண்டரெஸ்டிங் ஆ இருக்குது.

கமென்ட்டும் போட்டாச்சு வோட்டும் போட்டாச்சு

நல்லா இரு வாத்தியரே

பா.வேல்முருகன் said...

எனக்கும் ரொம்ப பேஜாரா இருச்திப்பா.
நல்ல மேட்ரு சொல்லிருக்குற.

ரொம்ப தேங்க்ஸ்--பா.

யோ வொய்ஸ் (யோகா) said...

i have done a post on this view it

http://yovoice.blogspot.com/2009/06/window-icon-hide-file.html

யூர்கன் க்ருகியர் said...

தெரியாத வரைதான் மேட்டர் பெருசு ..!
தெரிஞ்சிட்டா அல்லாமே சிறுசுதான்...என்ன சொல்றீங்க பாண்டி சார் ?

கற்றது கல்லளவு..கல்லாதது உலகளவு!

யூர்கன் க்ருகியர் said...

ஆமா ..உங்க DeskTop" ல இருக்குற பூ ..என்ன பூ ?

டவுசர் பாண்டி said...

//உனக்கு கொஞ்சம் அறிவு அதிகம்தான்.//- நான் ஒரு விவசாயி!

? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

நானா ? இதுல்லாம் ரொம்ப ஓவரா தெரில !!

டவுசர் பாண்டி said...

//நல்ல மேட்ரு சொல்லிருக்குற//- Vels கூறியது.

இது மேரி நா ரொம்ப கஷ்டப்பட்டேம்பா !! அதான் , கர்த்துக்கு டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//i have done a post on this view it// - யோ (Yoga),


வாஜார், இதுக்கு அந்த(Mycomputer) எடத்துக்கு எல்லாம் போ வாணாம் தலீவா !!
சிம்பிளா இங்கியே முட்சிக்கலாம், இருந்தாலும் இத்த சொன்னதுக்கு
ரொம்ப டான்குசுபா !!

டவுசர் பாண்டி said...

//தெரியாத வரைதான் மேட்டர் பெருசு ..!தெரிஞ்சிட்டா அல்லாமே சிறுசுதான்...என்ன சொல்றீங்க?//- யூர்கன் ,

நீங்க எத்த சொல்றிங்க ? நா ரொம்ப சின்னப் பையன் , தலீவா !! ( - ? ? ? - )

டவுசர் பாண்டி said...

//என்ன பூ // -யூர்கன்,

கண்டிப்பா, குஷ்பு கடியாது , ( ! ) ஹி ஹி , காமிடி ?

Mohan said...

டவுஸர் அண்ணாத்தெ! தகவலுக்கு நன்றிப்பா! ஆமாம், என்ன ஒரே கம்ப்யூடேர் பத்தீயே எழுதிக்கீனு கீறியே! என்னா மேட்டர்?

Mohan said...

கொஞ்சம் எங்களப் போல பாமரனுக்கும் எய்துப்பா! அக்காங்!!

டவுசர் பாண்டி said...

//ஒரே கம்ப்யூடேர் பத்தீயே எழுதிக்கீனு கீறியே! என்னா மேட்டர்?// - Mohan கூறியது

ஒன்னியும் பெர்சா இல்ல தலிவா !! நம்புளுக்கும் , இந்த மேரி எழத வர்தா
இன்னு நானே செக் பண்ணிக்கினேன்

//பாமரனுக்கும் எய்துப்பா! அக்காங்!//
- Mohan கூறியது,

யப்பா !! நானே குப்பத்து ஆளு தாம்பா என்ன விட பாமரன்
யாரு நீயே சொல்லு ?

பொன் மாலை பொழுது said...

அய்ய.... இன்னா ஆளு பா நீ அவன் அவன் இன்னநோமோ வெசிக்கினுகீதுங்கோ ஒன்கு மட்டும் இந்த சுயின்கிகின பூவு தா கெட்சிதா?

டவுசர் பாண்டி said...

//சுயின்கிகின பூவு தா கெட்சிதா//- கக்கு

சுயின்கிகின பூவுக்கு கீற மரியாத இன்னான்னு உனுக்கு தெரியாதா ? தலீவா !! அல்லாம் ஒரு பாசனு தல .

பொன் மாலை பொழுது said...

இத்தோடா...... நீயீ லைன்ல தான் கீரீயா ? போயீ ஒன் மெய்லு பாத்துகினு இங்கன வா இல்லாங்காட்டி கத கந்தலா பூடும் அக்காங் .

பொன் மாலை பொழுது said...

ஆமா .... நீயீ இன்னா இன்னமும் அந்த முண்டக்கன்னி ராயபேட்ட காரி கூடாதா சுத்திகினுகீரியா? இன்னா கொயந்த பையங்கனக்கா முயிக்கிறே? அட்தெல்லா என்கு தெர்யும் கண்ணு. முந்தானா சைதாபேட்ட போலான்னு சொல்லிகினு 12 B இல வந்துகினுரிந்தனா. நம்ம கபாலி டாகீசு வாசல்ல பஸு டேர்ன் அட்சிகீநிகீது செவரண்ட பாத்தா நீயீ அந்த முண்டக்கன்னி அப்பால அந்த லூசு துலுக்காணம் அல்லாரும் மங்காத்தா உட்டுகினுகீரீங்கோ. தள்ள மஞ்சா கலரு டவலு இட்டுகினா இன்னா? என்கு தெரியாமலா பூடும். இந்தா ..... இத்த போயி ஒன் வூட்டாண்ட மினிம்மா கைல சொல்லிகினா நீ அவ்வளோதான்.

இன்ன .... சொல்லட்டா?

டவுசர் பாண்டி said...

வாணாம் !! வாணாம் !! எதுவும் சொல்லாதே !! உனுக்கு சால்னா கடைல , சொல்லி முட்ட
பிரியாணி , அப்பால சல்பேட்டா வாங்கி தரேன் .

பொன் மாலை பொழுது said...

இன்னா கண்ணு மெர்சலாயீ பூட்டியா ..... அத்தெல்லாம் சும்காண்டி உதாரு .
நீ எம்மாம்பெரீய மன்ஷன் ஒன்னைய போயி அப்டில்லான் போட்டு குத்ரவநா.
ஒன்கிடியே டகால்டி வேலகத்துகினு ஒன் கைலையே ராங் உட்வனா தொற?
சும்மாங்காட்டி டமாசு.

டவுசர் பாண்டி said...

//நீ எம்மாம்பெரீய மன்ஷன் //


? ? ? ? ? ? ? ? ? ? ? டாங்க்ஸ்பா.

Thomas Ruban said...

//இதுனால எனுக்கு கெடச்ச பாடம் இன்னான்னா , இந்த லிப்பேறு
பண்றவங்கள நம்பாதே !!! செரியா !! இன்னா நா சொல்றது ,
கரீக்டா ,//

இந்த லிப்பேறு பண்றவங்கள நம்பாதே!

இந்த லிப்பேறு சரி பண்றவங்கள
நம்பு! இன்னா நா சொல்றது கரீக்டா!!!

டவுசர் பாண்டி said...

//இந்த லிப்பேறு சரி பண்றவங்கள
நம்பு! இன்னா நா சொல்றது கரீக்டா!!!// - Thomas Ruban கூறியது,


அதே தான் , அக்காங் !! கப்புன்னு பாயன்ட்ட புட்சிட்ட வாத்தியாரே !! கரீக்ட்டா சொன்னே !!

vasu balaji said...

கெஞ்சோ கெஞ்சுனு கெஞ்சி இட்டாந்தா, பிலிம் காட்டிகினு சுளுவா அல்லாம் அய்சிட்டு புச்சா போடும்பானுங்கோ. இதுக்கு வேற துட்ட அயுது வுட்ராபா. நானே பாத்துக்கறேன்னா மேட்டரு ஓவரு.

டவுசர் பாண்டி said...

//புச்சா போடும்பானுங்கோ. இதுக்கு வேற துட்ட அயுது வுட்ராபா. நானே பாத்துக்கறேன்னா மேட்டரு ஓவரு.//- பாலா... கூறியது.

இன்னா பண்றது தலீவா !! அதுல வேற இத நோண்டி அத்த நோண்டி , சும்மா !! ஒரு மன்நேரம் கழ்ச்சி
தான் , என்ன ப்ராபிளம், இன்னு கேப்பாங்கோ !! படா தமாஷா இருக்கும் .

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh