பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

அனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட் -டவுன் செய்ய

·

டைமுக்கு அல்லாம் நடக்கணும் அப்படின்னு சொல்றவங்களுக்கு ,
இந்த சாப்ட்டு வேர் , நல்ல மேரி யூஸ் ஆவும், நம்ப தான் வேல வெட்டி
இல்லாம கீறோம் , நெரியோ பேர் , ஆபீசுல, வேல செய்யரவங்கோ ,
வேலைல முழ்கி ( ? ) , ஊட்டுக்கு போறதுக்கு கூட மறந்துடுவங்கோ !!
( இந்த காலத்துலையா " ? " ) அவுங்குளுக்கு ரொம்பவே யுசு ஆவும் ,


செரி இப்போ மேட்டருக்கு போலாம் , அதுக்கு மின்ன இங்க அமுக்கி ,
இந்த சாப்ட் வேர டவுன் லோடு பண்ணிக்கவும் , இது ப்ரீ கெடியாது ,
30 - நாள் ட்ரையில், தான் , டவுன் லோடு பண்ணியாச்சா ?


இப்போ இத ரன் பண்ணிட்டு, ஓபன் பண்ண வேண்டியது தான் தலீவா !!


,


( Add , step-1) அதுல Add ,


உனுக்கு இந்த மேரி ஓபன் ஆவும்
இன்னு கீது பாரு , அத்த அமுக்கு ,
( General, step - 2 )
இதுல இருக்கற பொட்டில எதனா தலைப்பு குத்துட்டு , டைம் இன்னு
இருக்குறதுல, நமக்கு எத்தினி மணிக்கு , அடிக்கனுமோ
( அலாரம் தாம்பா ), அத செட் பண்ணிடு , அப்பிடியே , டெய்லி
வோணுமா ? இல்ல ஒரு தபா மட்டும் போதுமா ? இல்ல அடுத்த
மாசம் வோணுமா ? ( இதுக்கு இங்கேயே காலண்டர் இருக்கு
பார்க்கவும் ) செட் பண்ணிடு , இப்போ எதுக்கும் ஒ கே , குடுக்காதே,
அடுத்து மேல Sound /Music , இருக்கு அதுல ஓபன் பண்ணால் ,
இந்த மேரி வரும் ,
(Sounds / Music, step -3)


இதுல , நமக்கு வேண்டிய , பாட்டு வெச்சிக்கலாம் , மார்க் பண்ணி
இருக்குறத பார்க்கவும் , சவுண்டு அட்ஜஸ் மென்ட்டு , கூட இருக்கு ,
செட் பண்ணிட்டு , அடுத்து இதுக்கு O. K குடுக்க வேண்டாம்
கடைசியில் தான் ok


.
( Voice , step-4)


இது அதிகமா தேவை இல்ல , டைம சொல்றது தான் இது , நாம தான்
பாட்டு வெச்சிட்டோமே , அதுல இருக்கும் செகண்ட்ஸ் மட்டும் ,
கம்மியா செட் செய்யவும், அடுத்து ,
( Run event, step-5)
இது ரொம்ப , நல்ல மேட்டர்பா, இதுல இருக்குற ப்ரொவ்ஸ் பண்ணி ,
நம்ப கம்புயூட்டர்ல, இருக்குற எந்த ஒரு பைல் , ப்ரோக்ராம்
ஓபன் பண்ணலாம் , அதுக்கு , ஓபன் குடுத்துட்டு ,இதுல நம்ப
இன்டெர் நெட் ப்ரோவ்செர் கீற மேரி செட் பண்ணிட்டால், கரீக்ட்டா
நெட் ஓபன் ஆயிடும் ( கன்னக்சனு கீதா? பாத்துக்கோ ),(select- Home page)( Lock , step -6)


இந்த எடத்துல, நமக்கு தேவையான , image - வெச்சிக்கலாம் ,(தேவை
இல்லைன்னா , அத்த உட்டுடு தலீவா !!) வெச்சிட்டு , இந்த image ,
நமக்கு எந்த இடத்துல தெரினுமோ , அத செலக்ட்டு பண்ணு ,
அடுத்து ,

(Auto closer, step -7)
இதுல , இருக்குற ஆப்சன , உங்க தேவைக்கு ஏத்த மாதிரி செட்
பன்னுக்கோ , நான் இதுல Auto close after - 30 sec , செட் பண்ணி
இருக்கிறேன் , இதுல இந்த செகண்ட்ஸ் கம்மியா செட் , பண்ணவும் ,
அடுத்து , இந்த ட்ராப் டவுன் மெனுல போய், நம்ப தேவைக்கு ஏத்த
மாதிரி செட் பண்ணலாம் ,


இதுல, shut down p c, கூட இருக்கு , அதே போல அலாரம் Exit Alarm
Application - செலக்ட் பண்ணலாம்,
எல்லாம் , முடிஞ்ச உடனே ஒரு தபா செக் பண்ணிட்டு , O k ,
குத்துடு , இப்போ நாம செட் பண்ண டைம்ல , இது மேரி ஒன்னு
ஓபன் அவும் ,
நா என்னோட அயகான போட்டோவ போட்டு கீறேன் , இதோட வேல
முடிஞ்சிது தலீவா !! நீங்க பாட்டு செட் பண்ணி இருந்தால், அது முடிஞ்ச
உடனே , ஆப் ஆய்டும் .


உங்களோட கருத்துக்காக வழக்கம் போல , Photobucket வெய்ட்டிங்கு ,


25 கருத்துகள்:

Unknown said...

கிரீடம் பெறும் பதிவரை இணைக்க http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post_13.html

Krishna said...

கலக்குற நைனா!!

டவுசர் பாண்டி said...

//கலக்குற நைனா!//- நான் ஒரு விவசாயி!

ரொம்ப டான்குசு தல ( ^ _ ^ )

SUBBU said...

இன்னாத்த டவுசரு, என்னால டவுன் பன்ன முட்யாதுப்பா, என்க்கு அந்த rights கெட்யாதுப்பா, இருந்தாலும் சோக்காகீதுப்பா :)

டவுசர் பாண்டி said...

இன்னாடா !! இது கோரமையா கீது ? கரீக்ட்டு அட்ரசு தாம்பா , சொம்மா டவுன் லோடு பண்ணு தலீவா !! சின்ன சாப்ட் வேர் தான் இது . அக்காங்

டவுசர் பாண்டி said...

தமிழினி அவர்களுக்கு , இந்த வார கீரிடம் இணைத்து விட்டேன்

பெயரில்லா said...

thaliva innaththa solla, pandi agarathi superpa...
apuram posterum super thaliva...
download panniyachupa...

டவுசர் பாண்டி said...

//pandi agarathi superpa..// -பெயரில்லா கூறியது.

நம்ப அகராதி புட்சிக்கீதா ? ரொம்ப டான்குசுபா

பொன் மாலை பொழுது said...

ஒட்டு குத்திகினேன் ராசா. ஆளவுடு. ஆமா நீயீ இன்னா பொழ்துக்கும் இந்த பொட்டியாண்டதான் குந்திகீனுகீரியா இன்னா? இம்பூட்டு விசயம் எழ்திகினுகீரியே நைனா!
அத்துசெரி ஏன் கண்ணு பதிலு கமெண்டு உடாம பூட்ட? ஒயிங்கா பத்லு கமெண்டு எழ்த்தலன்னா கண்டி உன் வூட்டுபக்கம் வர்மாட்டான் இந்த கக்கு... அக்காங்

பொன் மாலை பொழுது said...

// நமக்கு எத்தினி மணிக்கு , அடிக்கனுமோ
( அலாரம் தாம்பா ) //

டவுசரு ஒனக்கு கொயிப்பு ரொபதான் கீது.

பொன் மாலை பொழுது said...

டவுசரு ஒன் வேல பிரமாதமாகீது தொற. நானும் அலாரம் செட் பண்ணி நம்ம பாட்டையும் செட் பண்ணிகினேன் தோஸ்த் .ரொம்ம டாங்க்சுபா
நீயீ இப்டியே வெளிதுகட்டிகீனு ரிந்தா நாங்கல்லாம் இன்னாத்த பண்றது நைனா?

டவுசர் பாண்டி said...

//டவுசரு ஒனக்கு கொயிப்பு ரொபதான் கீது// -கக்கு - மாணிக்கம் ,

வா , வாஜார் இன்னா ஆளயே காணோம் , ரொம்ப பிசியா , இந்த டவுசரு
நாபகம் இல்லியா ? எனுக்கு கொயுப்பு - ஆஹா, ஆஹா ,ஹி , ஹி ,
ஒன்னியும் இல்லப்பா சிரிச்சேன் , அவ்ளோதான் ,

பொன் மாலை பொழுது said...

ஒன்ன இன்னா பன்றதுன்னு என்கே ஒன்னும் பிரீள்ள.
அய்யா மகா சனங்களா, தோஷ்துக்களா அல்லாரும் நாயம் சொல்லுங்கோ .

நா "டவுசரு நம்ம ஆளாபூட்சே" ன்னு நெஞ்ட்சிகினு ரெண்டு,மூணு கமெண்ட்ஸ் எழ்திகினு உட்டா இத்து நம்மள இன்னா கேழ்வி கேட்டுகினுகீது.

ஐயோ என்கு ஒரே கோராமையாகீது.

என்கு தெரிஞ்சிபூட்டுது........ கண்ணு .... ராசா.... மொதோ சோலியா பொழுது விட்ன்ச் ஒன்ன என்கானுன் நல்ல கண்ணு டாகுடற பாத்து கண்ண செக் பண்ணிக்கோ தலீவா .

இந்த பொட்டியாண்ட குந்தி குந்தி ஒன்கண்ணும் ரிப்பேரா பூட்சொன்னு ஒரே மேர்சலாகீது நைனா.

யூர்கன் க்ருகியர் said...

சார் ..நீங்க இடுகை Publish பண்ணும்பொழுது என் கம்ப்யூட்டர் ல அலாரம் அடிக்கற மாதிரி ப்ரோக்ராம் இருந்தா சொல்லுங்க .


இதுக்கு நீங்க சீரியஸ் ஆ பதில் சொல்லணும் :-
நீங்க பதிவை இடும் பொழுது என்னுடைய கைப்பேசிக்கு SMS வருமாறு எதாவது வழி இருக்கா?

நன்றி!

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த முதல்ல நீங்கோ ஆருக்கு எழ்திகிநீன்கோ அத்த சொல்லுங்கோ நம்ம டவுசருக்கா அல்லாங்காட்டி என்கா?
பின்னாடி நா ஒங்களுக்கு ஜவாப் சொல்லிகினுவேன் .அத்தான் கேட்டுகினே.

பொன் மாலை பொழுது said...

This is very easy to do. If I know your mobile # and mail ID (especially Yahoo for messenger) You would get the same before "Tavusar " knows. I think You are planning to do something to tear his Tavusar. am I right?

டவுசர் பாண்டி said...

கீது ,வாஜார் , கீது அநேகமா இனி மேட்டு, உனுக்கு மெயில் வரும் , அது காண்டி வரல எனுக்கு வரும் ( ? )

டவுசர் பாண்டி said...

//am I right?//


?????????????? Left .

யூர்கன் க்ருகியர் said...

//This is very easy to do. If I know your mobile # and mail ID (especially Yahoo for messenger) You would get the same before "Tavusar " knows. //


சார், எப்படின்னு கொஞ்சம் விலாவரியா பதிவ போட்டீர்களென்றால் என் மாதிரி சிறுவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
நன்றி

யூர்கன் க்ருகியர் said...

//I think You are planning to do something to tear his Tavusar. am I right?
//

ha haha haaaa !
அய்யோ... அய்யோ!!

யூர்கன் க்ருகியர் said...

// கக்கு - மாணிக்கம்//

sir அநியாயத்திற்கு நீங்களும் மெட்ராஸ் பாஷையை கத்து வைத்திருக்கிறீர்கள் ....
ஒரே காமெடியா இருக்கு !

பொன் மாலை பொழுது said...

இந்த டவுசரு கீதே அத்து ஒன்னுன் "சும்மானாங்காட்டி " ஆளு இல்ல கண்ணு. படாபெரீய ஆளு அக்காங் . அந்த அண்ணாத்தே கிட்டதா நான் இத்த கட்துகினே நைனா. அத்து எழுதிகின பிலாகரு ஒரு நா பாத்துகினனா ஒட்னே நம்க்கும் பத்திகிச்சி அக்காங் . நமக்கு நையாண்டி நா படா குஷியாபூடுவேன் நமகேத்த ஆளுதான்னு தோநிகிச்சா,, அப்பால அண்ணாத்தே சதாய்க்க பிரவு நாம சதாய்க்க ....... ஐயோ.... ஐயோ..... ஒரே ராவடியா பூட்சு
தோஸ்து.
Get my G mail ID from "Tavusaru"

டவுசர் பாண்டி said...

//இந்த டவுசரு கீதே அத்து ஒன்னுன் "சும்மானாங்காட்டி " ஆளு இல்ல கண்ணு. படாபெரீய ஆளு அக்காங்//-கக்கு - மாணிக்கம்,

இந்த ஊரு உண்ணுமா நம்பள
நம்புது ? ? ?

பொன் மாலை பொழுது said...

இத்தோடா ....நீயீ பொட்டியாண்டத்தான் குந்திகினுகீரீயா ......... இத்த பாரு நா பெர்ய மன்ஷன் சொல்லிகினா கேக்கணும் . இப்டி பொழுதன்னைக்கும் இந்த பொட்டியாண்ட குண்திகிநேஇருந்தா ஒன் "பாநாட்டு " ஜூடாய் பூடும் கண்ணு . அப்பால மினிமா தா ஆசுபத்திரி இட்டுகினுபோவும் . அக்காங் .. ஒயிங்கா மருவாதியா அப்பப்போ எழுந்த காத்தாட வெளிய போயீ வந்துகீனு இரு ராசா.

பெயரில்லா said...

Amiable dispatch and this mail helped me alot in my college assignement. Thank you seeking your information.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh