பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

பிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க

·


இன்னைக்கி டவுசர் கலாய்க்கப் போறது , நம்ப லோகோவ, நம்ப
பிளாக்குல , தேவையான எடத்துல , வர வெக்க, ஒரு ஐடியா !!
( இன்னாவோ நம்பலே கண்டு புட்சா மேரி " ? " )

நம்ப பிளாக்குல , logo,- தேவையான எடத்துல , வெச்சிக்கலாம் ,
இதுக்கு , நாம்ப பிளாக்குல யூஸ் பண்றோமே , அந்த போட்டோவ
வேணும்னாலும், வர வெக்கலாம் , அதுக்கு ,

ஒரு சின்ன கோடிங்க்கு கீது ,வெவரம் தெரிஞ்ச பெரி மன்சாள்லாம் ,
கோச்சிக்காத நவுந்துடுங்கோ , அப்பால இந்த டவுசரு கொயப்பிட்டான்,
இன்னு என்கிட்டே சண்டைக்கி வரக் கூடாது , அக்காங் !!

மொதல்ல , இங்க பாத்திங்கன்னா , டவுசரு போட்டவ சின்னதா ஆக்கி ,
வெச்சிக்கினேன் , அதுக்கு, நெரியோ வயி கீது , Photobucket


நம்பளுக்கு தேவையான , போட்டோவ , Photobucket .com ,
போட்டு , மொதல்ல , http; // அட்ரசு எட்துக்கோ , அப்பால அதுலயே
எடிட் இன்னு கீது பாரு , அதுல போய், தேவையான அளவுக்கு அந்த
அளவ கொரச்சிக்கினு , வந்துடு , ( படத்த பெரிசா போட்டா, எடத்த
மறைக்கும் )

இப்போ , கிய கீற கோடிங்குல ,

<div style="position: absolute; top: 102px; left: 18px">
<img src=http://your_picture_URL.jpg></div>



இதுல கீற கோடிங்க காப்பி பண்ணி , உங்களுக்கு தேவையான
போட்டோ http // அட்ரேச போட்டு
அத எட்துக்கினு போய் , Dasboard > layout > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் அப்பால save குத்துட்டு வெளில வந்துடு ,
அங்கியே இருக்காத ,

இதுல top ; 102 px ,இன்னு இருக்குறது , நம்ப படம் மேல இருந்து
எத்தினி அளவு கீழ இருக்கணும் அப்படின்ற அளவு , உங்களுக்கு
தேவையான அளவு , வெச்சிக்கலாம்

அடுத்து left 18 px - இன்னு கீது பாரு ,நம்பளோட , பிளாக்கு
டைட்டில் கீது பாரு அதனோட மொத்த அளவு 900 Px , இப்போ ,
இத்த கணக்கு வச்சி , படம் நடுவுல வேணுன்னா , 450 Px, வெக்கணும் ,
கொஞ்சம் இடது ஓரம் வேன்னும்னா ,200px, வெச்சா சரியா இருக்கும் ,
முடிஞ்ச அளவு நம்ப பிளாக் கோட, பேருக்கு, பக்கத்துல
வந்தா நல்லா இருக்கும் , அதுக்கு , ஒரு 210 px , சரியா இருக்கும் ,

ஒரு முறை , இந்த அளவு குத்துட்டு , எங்க வேணுமோ ,
அந்த மாதிரி , லேசான அளவு , மாத்தி save பண்ணிடுங்கோ ,
செரியா !!

வயக்கம் போல தான் , உங்க கருத்துக்கு
Photobucket வெய்ட்டிங்,





19 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

ஐயோ ... என்கு தல சுத்திகீனு வர்து. நீ இன்ன எய்துரனு ஒனும் பிரீல போ.
நீயீ இன்னமும் அந்த "பேனட்டு" கமெண்ட பட்கிலனு தெர்து. பிசாசு கணக்கா இப்பிடியே பொட்டியண்ட குந்திகினா கட்சில அத்தான் நட்கப்போவுது

டவுசர் பாண்டி said...

//அந்த "பேனட்டு" கமெண்ட பட்கிலனு தெர்து// - கக்கு -

வர வர நீ எனுக்கு மேல கொயப்பிட்டியே , இன்னாது "பேனட்டு" கமண்ட்டு , அது செரி,எத்தினி மணிக்கி கர்த்து போட்டுக்கீது , உன்னோட கடமை உணர்ச்சிக்கி ஒரு எல்லையே
இல்லையா ?

யூர்கன் க்ருகியர் said...

ரொம்ப நன்றி டவுசர் பாண்டி சார் !

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த என்கு ஒரு டவ்ட்டு கீது .அத்து இன்னா உங்க பேரு இப்ப்டிகீது? யாரானும் புற்சி தலவரு பேரா? எந்த ஊருகாரு? நம்க்கு விஷயம் ஒன்னும் தெர்றாது கண்ணு . இப்பத்தான் ரவ ரவ நம்ம டவுசரு கிட்ட கட்துகினு வாறன் ராசா கொவிசிகாதே தல, சும்மா காட்டியும் ஒரு "இத்தல " கேட்டுகினேன்.

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த என்கு ஒரு டவ்ட்டு கீது .அத்து இன்னா உங்க பேரு இப்ப்டிகீது? யாரானும் புற்சி தலவரு பேரா? எந்த ஊருகாரு? நம்க்கு விஷயம் ஒன்னும் தெர்றாது கண்ணு . இப்பத்தான் ரவ ரவ நம்ம டவுசரு கிட்ட கட்துகினு வாறன் ராசா கொவிசிகாதே தல, சும்மா காட்டியும் ஒரு "இத்தல " கேட்டுகினேன். பக்கத்ல அத்து இன்னா படம் ? ஆங் ......டர்கானு படம் கீதா அத்தான் கொஞ்சம் கிலியா பூட்ச்சு. சின்ன சின்ன கொயந்தங்கோ , என்ன மேரி கை புள்ளிங்கோ வந்து போய்கினு கீறோம் . பெர்ய பெர்ய ஆளுங்கோ இப்படி வந்துகிநீங்கன்னா நாங்க அல்லாரும் பயந்துகினுகீறோம் அக்காங் ...

கலையரசன் said...

சோக்கா சொன்ன போ... ராவானா சோலிய முட்சிரவேன்டிதான்!!

யூர்கன் க்ருகியர் said...

டவுசர் பாண்டி சாருக்கு பெயர்காரணம் தெரியும் சார் !

மெட்ராசுல இல்லாமலேயே பாஷையை இந்த வாங்கு வாங்குறீங்களே !

யூர்கன் க்ருகியர் said...

// கக்கு - மாணிக்கம்//

சார்.. தங்களுக்கு தனி மின் மடலொன்று அனுப்பி உள்ளேன்.
நேரமிருப்பின் படிக்கவும்.
நன்றி '

டவுசர் பாண்டி said...

இன்னாபா !! இது நா பதிலு குடுக்குறா மேரி ஒன்னியும் மேட்டரே இல்லியே ? அக்காங் !!

டவுசர் பாண்டி said...

நம்ப , யூர்கேனு அன்னாத்தக்கி, இந்த பேரு சும்மா , சூப்பரா , கீது அதுலயும் அவுரு போட்டுக்கீர , ஐக்கானு இது வெரிக்கும் என்கினா பிளாக்குல பாத்துக்கீரியா ? தலீவா !!
அதும் பேரு கடலு குதிரை , அக்காங் , நீ இன்னாவோ .டர்கானு , இன்னு கூவிக்கீரே , ரவ கண்ணா கழ்விட்டு பாரு தொரெ , !!

டவுசர் பாண்டி said...

//ராவானா சோலிய முட்சிரவேன்டிதான்!//- கலையரசன் கூறியது,

தலீவா !! நா இன்னா பண்ணேன் , என்னப் போய், இந்த மேரி " முட்சிட வேண்டித்தான் "இன்னு சொல்ட்டியே , நாயமா இது ?

டவுசர் பாண்டி said...

//ரொம்ப நன்றி டவுசர் பாண்டி சார் !//-யூர்கன் க்ருகியர்,

இன்னாத்துக்கு , இந்த டவுசருக்கு போய் நன்றி அல்லாம் சொல்லிக்கீனு ?
ஐயே !! நம்பள்லாம் ஒரு தோஸ்து, இந்த HTML க்கு ஒரு ஐடியா கேட்டேனே அத்த ரவ சொல்லேன் பா !!

யூர்கன் க்ருகியர் said...

மன்னிக்கவும் சார்.. நேரமின்மையால் பதில் எழுதவில்லை.
கம்பெனிக்கு வந்தா வேலையெல்லாம் செய்ய சொல்றாங்க ! :)
மேலும் ஒருவார விடுமுறையில் தமிழ்நாட்டுக்கு வருவதால் பணிச்சுமை இன்று அதிகம்தான்.

ஹிந்திகாரனுன்களை பார்த்து பார்த்து கடுப்பாகி விட்டதால் ...தமிழ்நாடு வருகை ரொம்ப ஆவலாக உள்ளது.

வாழ்க தமிழ்நாடு...ஒழிக அரசியல்வாதிகள் !

நன்றி

யூர்கன் க்ருகியர் said...

//டர்கானு//

ஓ..இதைபார்த்துதான் "டர்கானு" சொன்னாரா... அடகடவுளே...என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டேன் :)

யூர்கன் க்ருகியர் said...

டவுசர் பாண்டி சார்...பதிவர் சந்திப்பு-இல் சந்திக்கலாம்..

நன்றி!

யூர்கன் க்ருகியர் said...

பதிவர் சந்திப்பை இந்த ஊருக்கே சாரி இந்த உலகத்துக்கே தெரியபடுத்தனும்.

என்னது ..ஏனா? எல்லாம் விளம்பரந்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!

பொன் மாலை பொழுது said...

இத்தான் கடலு குத்ரயா? கடலு குத்ர ன்னா இம்மாதொண்டா ....ரவயோடாதாகீம் னு பாத்தாக்கா இவரோட குத்ர மேலுக்கு நெறைய கொம்பெல்லாம் மொல்சி கீது . அய்யே... குட்டி டர்கானு படத்த இட்டுகினு இன்னா பயாஸ்கோப்பு காமிசிகினுகீரிங்கோ

டவுசர் பாண்டி said...

//இத்தான் கடலு குத்ரயா?//

ஆமா ! ஆமா !! ஆமா !!! ஐயே நா சொன்ன நீ நம்ப மாட்டேன்ற பத்தியா ?

பொன் மாலை பொழுது said...

நம்ம டவுசரு அண்ணாத்தைய நெனசிகினா என்கு எம்மாம்ப் பெருமயாகீது ...... தலீவரு பில்கேட்சு அண்ணாத்த கண்டி நம்ம டவுசர தன்கூட வெச்சிகினுருந்தாருன்னா இன்னம் ஒரு இருபது வர்ஷத்துக்கு அந்தாளு தான் ஒலக மகா பணக்காரனா இருந்துகினுருப்பாறு. இன்னா பண்ணிக்கிறது ? அந்த மன்ஷனுக்கு கொடிப்பின இல்லாம பூட்டுது.


ஒன்கு இப்போ அத்து இன்னா ......விர்து ஆஆ ...... ங் மெட்டலு ஆ ங் , அத்து வேணுமா வேணாமா கரீட்டா சொல்லிபுட்டு. இந்த வாட்டி நம்ம "ராயபேட்ட முண்டக்கன்னிதா " வாஜரே!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh