பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

சாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.

·

போட்டோ ஷாப் இன்னு ஒரு விசியம் கீது , அப்பீடீன்ற மேட்டர்

எனுக்கு , நம்ப தலீவர் வேலன் எழ்தரப்பத்தான் தெரியும் ,
அதுல ,

இந்த மேரி பெரி பெரி தில்லாலங்கடி வேல அல்லாம் செய்யலாம் ,
அப்பெடீனு , லேட்டா தாம்பா தெரிய வந்துது , செரி, இன்னுட்டு
நானும் அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் , இன்னு பாத்தா ,

நம்ப கிட்ட போட்டோ ஷாப் - சாப்ட் வேர், இல்ல .செரி அதுக்கு
நம்ப இன்னாடா !! பண்ணலாம், இன்னு ரோசன பண்ண பின்னால,
தான் இதுக்கு ஏண்டா ? பாண்டி பீலிங்கு , இன்னு தோஸ்து ஒர்த்தர்
சொன்னாருப்பா , அப்பால , அர்ஜீன்ட்டுக்கு அதுல போய் தான்
எதோ நம்பளுக்கு தெர்ஞ்ச வெரிக்கும்,கத்துக்கினு வர்றேன் .

செரி , என்ன மேரி போட்டோ ஷாப் - சாப்ட் வேர் இல்லாம ,
கஷ்டப்படரவங்களுக்கு உதவட்டுமேன்னு தான் இந்த மேட்டர
சொல்றேன் ,

போட்டோ ஷாப் - 6 - கீற அல்லா டூல்சுல்ம் இதுல இருக்கறதால
சாப்ட் வேர் இல்லை அப்படின்ற, கஷ்டமே இல்லை , ஆன் லைனுல -
இதுல வொர்க் பண்றது ரொம்ப ஈசியா கீது, இங்க வந்து ,
பாத்துக்கோ தலீவா !! ரொம்ப நல்லா இருக்கும்.


அப்பால உங்களோட ஒட்டு + கருத்துக்கு தாம்பா டவுசரு வெய்ட்டிங்கு.Photobucketweb counter11 கருத்துகள்:

Tech Shankar said...

ஜூப்பர் மேட்டர் தல

டவுசர் பாண்டி said...

ரொம்ப , டான்குசு வாஜார்

சரவணன். ச said...

பயனுல்ல தகவல்
நன்றி
www.cdmsaran.blogspot.com

டவுசர் பாண்டி said...

புத்சா நம்ப ஊட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப டான்குசுங்கோ !!

யூர்கன் க்ருகியர் said...

அவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.
அனைவருக்கும் பயன்படும் பதிவு
பகிர்வுக்கு நன்றி. .

டவுசர் பாண்டி said...

//அவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.// - யூர்கன்.

அவசரமா இருந்தா,இங்க போவிங்களா? இன்னாடா இது அக்குறும்பா கீது !!
( ............... அதுக்கு,A.T.M - சென்டருக்கு இல்ல போவனும் )

டவுசர் பாண்டி said...

நீங்க அவசரம் இன்னு சொன்னது துட்டு எடுக்கறத்துக்கு தானே ?
வேர ஒன்னியும் இல்லையே ?

பொன் மாலை பொழுது said...

இத்தோடா..... இம்மாதூண்டு பிள்ளகா பசங்கோஇல்லாம் போட்டோ ஷாப் ல பயம் துன்னு
கொட்டைய போட்டுகினுதூங்கோ ... நாம டவுசரு இப்பாதம் கத்துகினுகீதாம்.
போட்டோ ஷாப் ல உனக்கு இன்ன வானும் தொர? நம்ம கைல சொல்லிகினா நா இட்டாரா மாட்னா?

பொன் மாலை பொழுது said...

யூர்கன் - க்ருகியர் அண்ணாத்த ரவ பிரீர மாத்ரீ சொல்லிகினா இன்னாவாம்?
அத்து இன்னா அவசர தேவக்கீ டவுசரு அண்ட வர்றது? சொல்லிகினா நம்ளுக்கும் ரவ எல்பா கீது. சொல்லிகினுங்கோ ஜல்தி.

நஜி said...

ரொம்ப உபயோகமான தகவல் - நன்றி

THANGA MANI said...

பயனுள்ள தகவல்.நன்றி.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh