பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசரு , வாங்கன அவாடு - ???

·அப்பிடி இப்பிடீன்னு ( ? ) நம்பளுக்கும் கூட ? குட்துட்டாங்கோ பா,

இந்த மேரி, இந்த மேரி , அட , இந்த பட்டரு பிளை அவாடு , தாம்பா !!


நா இன்னாமோ !! நம்ப தோஸ்து இங்கோ கிட்ட போய் ஒரே குஜியா,

டேய் , நொட்ட, குள்ளா , கபாலி, இந்த மேரி எனுக்கு ஒரு அவாடு,

குத்தாங்கோ பா , நம்பளையும் மச்சி ,இன்னு சொன்னேன் அதுக்கு,


அந்த டுபாகூரு பார்ட்டிங்கோ சொல்லுது,

எங்கடா !! டவுசரு, அத்த காமி இன்னு, நா உடனே, அந்த கசமாலங்கள,

கூப்ட்டு, இந்த பொட்டிய காம்சி, அதுல கீற, பட்டரு பிளை , போட்டாவ !!

காம்சி, இத்தாண்டா, எனுக்கு குத்த அவாடு இன்னு கூவிக்கினேன்.


அதுக்கு இந்த நொட்ட இல்ல அந்த கசுமாலம் சொல்றான்பா !!

டவுசரு , நீ எங்கள ஏமாத்துற, அவாடுன்னு சொன்னா, ஒரு தட்டுல

இன்னாமோ எழ்தி, அப்பால , வெள்ள காய்த்த , ஒரு மசால் தோச

கணக்கா சுத்தி, உன்ன கூப்ட்டு , நமபுளுக்கு பிரியாத மேரி இன்னா

இன்னாவோ !! சொல்லி , கைத்துல ஒரு கவுறு போட்டு அதுல ஒரு

டாலரு கோத்து கீற மேரி பண்ணி , உனுக்கு மாட்டி உடுவங்கோ ,

அதும் பேரு தான் அவாடு குடுக்குறது, நீ இன்னா எங்களுக்கு

பயாஸ் கோப்பு காட்றியா ?? இன்னு ஒரே ராவடி பண்ணிட்டாம்பா !!எனுக்கு ஒரே அய வந்துடுச்சிப்பா !!! நா ஒரு மேரி , இல்லடா, நொட்ட ,

இல்லடா கபாலி, இது மேரி தான் குடுப்பாங்கோடா, இன்னு ரொம்ப

நாயி கத்தி கீரவேரையா ஆயி , சொன்னேன் , அதுக்கு ,போடா !! செர்தான் , எங்களுக்கு இன்னா ஒன்னிமே தெரியாதா ?

இல்ல , நாங்க இன்னா, சோம் பப்புடி பசங்களா ?? எத்தினி ,எத்தினி,

சினிமால அல்லாம் பாத்துகினு கீறோம் , நா சொன்ன மேரி தான்,

கும்பலு போட்டு , குடுப்பாங்கோ !! உன்ன யாரோ நல்லா

ஏமாத்திட்டாங்கோ , நீயும் ஏமாந்து போய் வந்துகினு கீற, செரியான

டீப் லைட்டு பா நீ ?? இன்னு சொல்றான்.இந்த மேரி ஒன்னிமே தெரியாத, அல்காச குல்சா பார்டிங்கள

வெச்சிக் கீனு , நா இன்னா தான் பண்றதோ !!! நீயே சொல்லு ,


( மெய்யாலுமே , இந்த பசங்கோ சொல்றா மேரி தான்,
குடுப்பாங்களா ? இல்லா காட்டி, என்ன தான் எதனா ஏமாத்திட்டாங்களா ?
உனுக்கு எதனா இத்த பத்தி தெர்ந்ஜா, ரவ சொல்லுப்பா )

உனுக்காவுது தெரிமா ??
அப்பிடியே,
ஒரு ஓட்ட குத்திட்டு போ !! தலீவா !!

15 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

தாங்கல சாமீ. வவுத்த வலிக்குது நைனா உந் தொஸ்துங்கோ சொல்ரதுன் சர்தான் கண்ணு. நீ பொயம்ப்றதும் படா டமாஷாதான் கீது அவார்டு காம்பிக்றேனு TV பொட்டிய காம்சி இந்த்தாண்டா அவடுனா டகாலடி வேல பண்ணிகினா எவன் நம்புவான் தொர.ஒன்னிய நல்ல எமாத்திகினாங்கோ டவுசரு.

டவுசர் பாண்டி said...

வா, வாஜாறே,
நானே நொந்து நூடூல்சு
ஆயி பூட்டேன் ,

என்கூட கீற, பெள்ளககா பசங்க,
யென்ன டென்சன்
பண்ட்டானுங்கோ பா !!

செரி , நா ஒன்னும் ஏமாறல
இல்ல ?? கரீக்ட்டா தானே
குட்தாங்கோ.???

டவுசர் பாண்டி said...

ஐயே !!! ஒரு வோட்ட தான்
குத்துனா இன்னாவாம் !!


நீயும், இந்த நொட்ட கூட
சேன்துகீனியா !!!
அவுனுக்கள நம்பாதே !!!

சொம்மா ,
செவுரு, குதிப்பானுங்கோ !!
சொல்டேன் , அக்காங் !!

யூர்கன் க்ருகியர் said...

உங்க தமிழுக்கு நான் அடிமை!
உங்க பாசையில நான் எப்படி உங்கள பாராட்டுரதுன்னே தெரியல !

டவுசர் பாண்டி said...

சோக்கா, கீதுபா !! கதை, டாணாகாரன் காதுல வீந்தா !!
நம்பல அலேக் ,
பண்ணிடுவானுங்கோ !!!

அப்பால ஜெயிலு கலீஜா பூடும், அக்காங் தேர்ந்ஜிக்கோ
செரி , நம்பளுக்கு அல்லாம் இந்த அவாடு குத்தாக்களே அத
பத்தரமா வெச்சி கினியா ??
தாராந்துற போது , எட்து
பீரோல வையி ,

அக்காங் அப்பால காணல இன்னா நமபுளுக்கு தெரியாதுபா !!!
இப்பவே சொல்டேன் .

dsfs said...

உங்கள் வலைப்பதிவை படிப்பதற்கு எங்கே போய்
கற்றுக்கொள்ள வேண்டும் நண்பரே !
ஒரே மெர்சலா கீதுப்பா !

டவுசர் பாண்டி said...

நம்ப லாங்குவேஜி கத்துக்கோ !! எங்கியும் போதாவலப் பா !!! நம்ப பிளாக்கு மேலையே அர்த்தம் போட்டு ஒரு அகராதி கீது பாரு, அக்காங் !!!!!! வந்ததுக்கு ரொம்ப டான்குசுபா !!

Mohan said...

நம்ம பாண்டிய வம்புக்கு இழுக்குறததே இவுங்களுக்கு வேலயாப் போச்சி! ம்ம்...

டவுசர் பாண்டி said...

மோகனு அண்ணாத்தே !!!
நம்பல அல்லாரும் ஏமாத்துரங்கோ பா !!! எங்க உன்ன ஆளையே
காணோம் , நீ கூட சொல்ல மாட்டியா ? கரீக்டா தான் குத்தங்களா இல்லா காட்டி, எதனா கோல்மால் பண்ணிட்டாங்களா ?? சொம்மா !! சொல்லு தல !!!

Nathanjagk said...

இன்னா வாத்யாரே, பட்டாம்பூசி எல்லாம் இட்டாந்துட்ட ​போல்ருக்கு! அதுக்கு அப்டியே ஒரு ஸலாம்! அவாடு ​கொடுக்கிற பங்ஷனை இன்னாமா புட்டு புட்டு வச்சிருக்​கே..! ​செம்ம கில்லாடிம்மா நீ..! ​மெய்யாலுமே ​சொல்றேன் மாமு, உன் பேட்டை செம கலக்கு கலக்குது!

டவுசர் பாண்டி said...

//பங்ஷனை இன்னாமா புட்டு புட்டு வச்சிருக்​கே..! ​செம்ம கில்லாடிம்மா நீ..! ​// - ஜெகநாதன் கூறியது.

இன்னாது , பங்க்ஷனா ?? செர்தான் , நம்பளுக்கு அவாஜ் க்குத்துட்டான்கோ பா !! ஆனா ஒன்னு, பட்டாம் பூச்சி குத்து செரி பண்டாங்கோ பா !! வந்ததுக்கு ரொம்ப டான்க்சு வாஜாரே .

Tech Shankar said...Madras Tamil - click here


பொன்மலர் சொன்னது…

உங்கள் வலைப்பதிவை படிப்பதற்கு எங்கே போய்
கற்றுக்கொள்ள வேண்டும் நண்பரே !
ஒரே மெர்சலா கீதுப்பா !

டவுசர் பாண்டி said...

இன்னாடா !! இது, ஒரே கணிக்சனு குத்துட்டாறு, நம்ப பிரண்டு,
ரொம்ப டான்குசு வாஜாரே !! இனி மேட்டு யாராது, நம்ப பாஷ
பிரியல கிரியல இன்னு சொன்னா ?? அலேக், அவ்ளோ தான்,
சொல்ட்டேன், அக்காங் >!!<

நட்புடன் ஜமால் said...

அவார்ட்டுக்கு வாழ்த்துகள் மே!

டவுசர் பாண்டி said...

ரொம்ப டாங்க்சு வாஜாரே.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh