நம்ப தோஸ்துங்க அல்லாருக்கும் , வணக்கம் பா !!
போன பதிவுக்கு ஒட்டு போட்ட
கக்கு , தமிழ் நெஞ்சம் ,
கிரிஷ்ணா , தாமஸ்ரூபன் ,
இவங்கோ + கருத்து போட்ட அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ்பா !!
அப்பால வருகை தந்து படிச்சிட்டு போன அல்லாருக்கும் டாங்க்ஸ் ,
இன்னைக்கி நம்ப பேனா டிரைவரு பத்தி பாக்கலாம் பா !! அதாம்பா
pendrive இப்போ !!
நம்ப பென் டிரைவ மாட்டி, எதுனா பைல காப்பி பண்ணுவோம் , அப்பால
அத்த வெளி எடுக்கறத்துக்கு safely Remove Hardware இன்னு போய் அப்பால
stop குடுத்து எடுப்போம் , இதுக்கு வேற மேரி ஒரு ஐடியா கீது !!
இந்த சின்ன சாப்ட்வேர்( 467 kb ) நம்ப பொட்டில போட்டு வெச்சிட்டா
போதும் , இப்போ இங்க போய் இந்த software டவுன் லோடு
பண்ணுங்க ,
Zip பைல இருக்கும் , அத்த extract பண்ணி உட்டுட்டா போதும் வேற
எதுவும் பண்ணத் தேவல அக்காங் !!
இப்போ இது மேரி ஒன்னு வரும் ( அத டெஸ்க் டாப்புல வெயுங்க ) அப்பால ,

ஒரு pendrive போட்டு இத்த ஓபன் பண்ணாக்கா !! இது மேரி வரும் ,

இப்போ டபுள் கிளிக் , இல்லாக்காட்டி என்டெர் பண்ணாக்கா !!
இது மேரி வரும் ,

வேல ரொம்ப சிம்பிள் , எதுனா ப்ரோக்ராம் ரன் ஆயக்கீனு இருந்து இப்ப
எடுக்க முடியாது !! இன்னு சொல்லுது இன்னு வைங்க ,
அதுல autorun ப்ராபிளம் கீது இன்னு அர்த்தம் இல்லன்னா எதுனா
வைரசு கிரசு இருக்கும் ,
அதுமேரி சில சமயம் கூவும் போது அது மேரி சொல்லாம
கீரத்துக்கு நம்ப நண்பர் INVISIBLE ஒரு பதிவு உட்டுக் கீனு
இருக்காரு ,
அதுல கீற மேரி பண்ணாக்கா , எப்பவும் இது மேரி கூவாது !!
ஐய , மறந்துட்டேனே !! தொயில் நுட்பம் பத்தி எழ்தரவங்களுக்கு வெக்கற
போட்டில எனுக்கு ஒட்டு போட்ட அத்தினி பேருக்கும் நன்றி ,
போடாதவங்கோ !! உடனே போய் ஒரு ஓட்டத்தான் போடுங்களேன் ,