பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

தேவையான வெப் அட்ரெஸ் ஒரே சொடுக்கில் - காம்போ பாக்ஸ்.

·தேவையான வெப் அட்ரெஸ்ஸ ஒரு சின்ன எடத்துல,
எப்பிடி வர வெக்கறது ? இன்னு பாக்கலாம் ,

இப்போ , நம்ப தோஸ்துங்கோ, பிளாக்கு அட்ரெஸ்ஸு அல்லாம்
கீது, அத்த , நம்பளும் நம்ப விட்ஜெட்டுல , போட்டு அத்த கிளிக்
பண்ணா , அங்க போர மேரி பண்ணி வெச்சிருப்போம் ,

அதுக்கு, நெரியோ பேர் நெரியோ ஐடியா !! பண்ணி ரெடி பண்ணி
இருப்பாங்கோ, சில பேருக்கு , மனசுல எடம் இருக்கும் , விட்ஜெட்டுல
எடம் இருக்காது , கரீக்ட்டா !!

அவங்கோ அல்லாம் இத்த ரவ ட்ரை பண்ணி பாத்துட்டு
போட்டுக்கலாம், செரி, இப்போ மேட்டருக்கு வரேன் ,

இத ரெடி பன்றதுக்கு, ஏதும் கோடிங்கு, அல்லாம் கெடியாது, இந்த
எடத்துல , ஓபன் பண்ணிட்டு , சொம்மா பேரு, அட்ரெஸ்ஸு
குடுத்தா, அதுவே ரெடி பண்ணி குட்துடும், மொத்தல்ல,

இந்த அட்ரெஸ்ஸ ஓபன் பண்ணிக்குங்கோ,


இந்த படத்துல கீற மேரி, Step 1 , இல போய் எத்தினி பேர் இன்னு
குடுங்கோ,அப்பால, Step 2: - இல போய் , பேரு , அவுங்கோ அட்ரெஸ்ஸு, குத்துட்டு ,
அதுன் கீயே , Go to last step இன்னு கீர்த, அமுக்குனா ,
ஒரு கோடிங்க்கு வரும் ,

அத்த எட்துக்குனு போய் , வயக்கமா , குடுக்குற மேரி ,

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,
முன்ஜிது கத, இப்போ !! கம்போ லிங்க்கு வந்துடும் , புட்சிக்கீதா ?

உங்க கருத்துக்கு இந்த Photobucket வெய்டிங்க்கு, வாஜார்.14 கருத்துகள்:

Krishna said...

என்னமோ கலக்குற பாண்டி. உனக்கு இதெல்லாம் எங்க இருந்து கிடைக்குதோ தெரியல!! நல்ல நல்ல விசியம் சொல்ற ஆனா மூஞ்ச மட்டும் அப்பாவி கணக்கா வச்சிருக்க.

எதோ நம்மள முடிஞ்சது தமிலிஷ் ல வோட்டு போடறதுதான்.

பொன் மாலை பொழுது said...

அத்து சேரி . இந்தாமேரி பதிவு இட்டுகினே போனா நான்கல்லான் இன்னா பண்ணிக்கிறது?
கொஞ்சனா கேப்பு குட்டு நைனா. ஆனாக்க ஒன் பதிவு அல்லான் ரொம்ப சோக்காதான் கீது பா. மெய்யாலுமே.

அத்து சேரி அந்த ராயபேட்ட முண்டக்கண்ணி இன்னா ஆச்சி பா? கொஞ்சனா சொல்லு தல.அய்ய........................

க. தங்கமணி பிரபு said...

ரெம்ப நல்ல பதிவுங்ணா! சும்ம சொல்லக்கூடாது, எத்தன பாடுபட்டு இந்த் மதற அந்த மாதற எத்தன த்கவல் குடுக்கிறீங்கண்ண! ரெம்ப பிரமாதமுங்க!
வாழ்த்துக்கள்ங்க!!

டவுசர் பாண்டி said...

//என்னமோ கலக்குற பாண்டி. உனக்கு இதெல்லாம் எங்க இருந்து கிடைக்குதோ தெரியல!!//- நான் ஒரு விவசாயி,

தலீவா !! கர்த்து + வருகைக்கு ரொம்ப தாங்க்ஸ் பா !! நா மின்னையே சொன்னா மேரி ,அல்லாமே, இந்த பொட்டில(கம்ப்யூட்டர்) கீதுபா, நாம தான் நோண்டி எடுக்கணும் ,

டவுசர் பாண்டி said...

//கொஞ்சனா கேப்பு குட்டு நைனா. ஆனாக்க ஒன் பதிவு அல்லான் ரொம்ப சோக்காதான் கீது பா. மெய்யாலுமே.//-கக்கு,

வாஜாரே !! இந்த நெலா கீதே அது கூட சில நாள்லே வரத்துக்கு மறந்துடும், எங்க வாஜார்
கக்கு, மட்டும் என்னை மறக்க மாட்டாருப்பா!! கரீக்டா அட்டெண்டன்சு , போடுவாரு , அஜக்- தா , குஜக்- தா, ( சொம்மா , ஒரு சந்தோசம் )

டவுசர் பாண்டி said...

//அத்து சேரி அந்த ராயபேட்ட முண்டக்கண்ணி இன்னா ஆச்சி பா? //-கக்கு ,

ஆ , யாரது ? என் குஜிலிய போய், முண்டக் கன்னி இன்னு சொல்றது , அஹா , நம்ப தலீவரு !! ஏம்பா ? என் குஜிலி , கண்ணு , சொம்மா பானு பிரியா ( ? ) கணக்கா , சோக்கா, இருக்கும் ,அதப் போய் , முண்டக்கன்னி இன்னு சொல்டியே, ஒரு வேல மினிமா, பத்தி
சொல்றியா ? அது காதுல வுயுந்துடப் போது. அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//எத்தன பாடுபட்டு த்கவல் குடுக்கிறீங்கண்ண! ரெம்ப பிரமாதமுங்க!
வாழ்த்துக்கள்ங்க!// -Thangamani Prabu,

தல , உங்களோட வாழ்த்து கீதே, அது கெடிக்கர்த்துக்கு கஷ்டப்பட்டுத்தான் ஆவனும், உண்மைக்கி சொன்னா !! இது ஒன்னியும் நானே கண்டு புட்ச்சது கெடியாது ,யாரோ !! கண்டு புட்சத, நாம கண்டு புடிக்கறோம் , அவ்ளோதான், புத்சா, நம்ப ஏரியா பக்கம் வந்து கீற, நம்ப பழைய பதிவு கீது பாரு, அத்த டைம் கெடச்சா, படிச்சிப் பாரு, தாங்க்ஸ்பா,

டவுசர் பாண்டி said...

கக்கு - மாணிக்கம் அண்ணாத்தே !! உன் கிட்ட ஒரு விசியம் சொல்றேன் பா !! இந்த பொட்டி பத்தி தெரிஞ்ச ரொம்ப அறிவாளிங்கோ கீறாங்கோ பாரு !!! அவுங்கோ கிட்ட ஒரு விசியம் கேட்டேன் , அது கூட ரொம்ப மருவாதியா தாம்பா கேட்டேன் , அண்ணாத்தே !! இது மேரி ,,, இது மேரி , ஒரு சந்தேகம் இதுக்கு இன்னா பண்றது ? இன்னு கேட்டு ஒரு மூணு நாளு, ஆவுதுப்பா , ஒர்த்தரும் வாயே தொறக்கல, அட ஒர்த்தர் மட்டு சொல்றாரு , இந்த பிளாக்
போய், பாரு இன்னு அங்க போய் பாத்தா , அவுரு இத்த பத்தி ஒன்னியும் சொல்லல , அதுமேரி ஒன்னு போட்டுக்கிராறு , அதுக்கு அங்க ஏன் போவனும் ? நா கேட்ட சந்தேகம் ,அது எப்பிடி செய்யறது ? இன்னு அதுக்கு , ???????? உண்ணும் ரெண்டு நாள் பாக்கறேன் ,யாரது , சொல்றாங்களான்னு , இல்லன்னா? >>>>>>>>>>>>>>>>>>>>> வேற இன்னா , பண்றது, ஒர்த்தருக்கும் சொல்லிக் குடுக்கனும்னு தோணலியே ,
அது ஏன் ? இதல்லாம் உன்கிட்ட தான் சொல்ல முடியும், வேற யாரு நம்ப குப்பத்துல கீறாங்கோ !! சொல்லு ?

Mohan said...

அண்ணாத்தே! வயக்கம்போல ஜோரான மேட்டர் சொல்லிகீர! டான்க்சுப்பா!

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்தே! வயக்கம்போல ஜோரான மேட்டர் சொல்லிகீர! டான்க்சுப்பா//
- Mohan கூறியது,

ஆதரவுக்கு , ரொம்ப டாங்க்ஸ் வாத்தியாரே !!

TAMIL said...

நல்ல பதிவுகள் நண்பரே இன்னும் பல பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துகள்

டவுசர் பாண்டி said...

//நல்ல பதிவுகள் நண்பரே இன்னும் பல பதிவுகள் எழுத என்னுடைய வாழ்த்துகள்// - தமிழ் கூறியது.

ரொம்ப டாங்க்ஸ், தலீவா !! உங்க வருகை + கர்த்துக்கு நன்றி, இது போல பதிவு மூலம் தாம்பா , பிரண்டுங்கோ நெரியோ, பேரு கெடைக்கிராங்கோ , உங்க மேரி நண்பர்கள் இருந்தால் , இன்னும் எழ்தர்த்துக்கு ஆர்வம் இருக்கும், - அல்லாத்துக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது said...

ஏண்டா அம்பி, நோக்கு இதுகூட தெரியாதான்னோ? அவாளுக்கு தெரிஞ்சா சொல்லுவாலேன்னோ? அவாளுக்கு தெரியலேன்னா வேறு என்ன பண்ணுவா? அபிஷ்ட்டு !!
இதுக்குத்தான் அப்பவேருந்தே கத்திண்டிருக்கேன் தியரிய ஒழுங்கா நன்னா படிச்சிக்கோ படிச்சிகொன்னு. நீ எம் பேச்ச என்னைக்கு கேட்டுண்ட? இன்னைக்கு கேக்கப்போற? அது சரி, என்னடா அம்பி திடீர்ன்னுட்டு புளியோதர வாசன மூக்க தொலைசிண்டு போறதே ? ஒன்காத்துல ஆத்துக்காரி பண்றாளோ? நேக்கும் ஒரு டப்பாவுல போட்டு அனுப்பிண்டுடு!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh