பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

ஒரே கடவுளுக்கு - 108 விதமான பெயர்கள் ,

·

எனுக்கு ஒரு பேறு கீது , அல்லாரும் பாண்டி இன்னு

கூப்புடுவாங்கோ , இல்லா காட்டி , டவுசருன்னு
கூப்புடுவாங்கோ ,

நம்புளுக்கே ரெண்டு பேரு கீதே ?

நம்ப முருகருக்கு - 108 பேரு கீது ,

அவுங்க அண்ணன் புள்ளையாரு கீரர் பாரு அவுருக்கும் - 108 பேரு கீது ,

அப்பால , நம்ப கிஷ்ணறு கீராரு பாரு அவுருக்கும் - 108 பேரு கீது ,

இன்னும் பெருமாள் சாமிக்கும், - 108 பேறு கீது ,

நமபுளுக்கு தெரிஞ்சி ஒரு ரெண்டு பேரு இல்லன்னா ,
ஒரு பத்து பேறு தான் தெரியும் , எல்லா சாமிக்கும் ,
இன்னா இன்னா பேரு கீதுன்னு ,

இங்க போய்
,பாத்தா ,நமபுளுக்கு இது வெரிக்கும் தெரியாத பேரு எல்லாம் , கீது பா !!
ரவ போய் இன்னா தான் இன்னு பாரேன் !!
8 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

பாத்துகினே ,ஷோக்காத்தாகீது. .........ஆமா என்கு ஒரு டவுட்டு நைனா .....நீயீ இன்னா தூங்கினமாட்டியா? பொழுதுக்கும் இந்த பொட்டியாண்ட குந்திகீனு எத்துனாசும் நோன்டிகினுகீரீயே ....... மினிம்மா கண்டாக்கா அட்சி இஷ்துகினு பூடாதா?

Tech Shankar said...

Classic Boss.

Your collection is amazing..

நம்ம புது ஊட்டாடண்ட வந்து எட்டிப் பாருங்க மாமே!


AmazingOnly

பொன் மாலை பொழுது said...

டான்ஸ்சு மாப்ளே !!!
ஒங்க வூட்டாண்ட போயீ பாத்துகினே .அத்தான் நம்ம favourite இடமாச்சே. அத்து சேரி ,இங்கன வந்து அத்த எழுதிகினா இந்த டவுசர வெட்சிகும் நைனா. டவுசரு "வெட்சிகினா" அப்பால வம்பாபூடும் தல.

டவுசர் பாண்டி said...

//மினிம்மா கண்டாக்கா அட்சி இஷ்துகினு பூடாதா?//- கக்கு,


மூச் , ஒரே ஓட்டம் ஓடிப் புடுவேன்
பா , என்னை புடிக்க முடியாதே ?

டவுசர் பாண்டி said...

//எட்டிப் பாருங்க மாமே!//-tamilnenjam


வந்தேன் வாஜார், தூளு டக்கரா கீது , வாழ்த்துக்கள், தல.

டவுசர் பாண்டி said...

//டவுசரு "வெட்சிகினா" அப்பால வம்பாபூடும் தல.//- கக்கு ,


ஐயே ,நானு இன்னா மொலக்கா டப்பாசா ? வெடிக்கிறதுக்கு , சோக்கா, சொல்றியே தமாஷு , அக்காங் .

பொன் மாலை பொழுது said...

ஐயோ அத்து "வெடசிக்கினா"

இப்போ சொல்லு நைனா!

டவுசர் பாண்டி said...

//இப்போ சொல்லு நைனா//- கக்கு,

இன்னா பண்றது ?? நம்ப நெலம அவ்ளோ தான்னு கம்முன்னு
கெடக்க வேண்டித்தான் பா !!!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh