பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

எளிமியான வழில தேர்தல நடத்தர்துக்கு, டவுசர் பாண்டி ஐடியா !!

·
1) ஒட்டு போட்ற பொட்டிய ஒரு பேரீ வண்டில வச்சி, ரோடு ரோடா, 
எட்தார்னும் பா, அப்ப தான் நம்ப மன்சாளுங்கோ அல்லாரும் 
ஒட்டு போடுவாங்கோ,  

2) ஊட்டாண்ட சில அபீசருங்கோ வந்து ஏம்மா ? நீ யாருக்கு ஒட்டு 
போட போறே இன்னு கேட்டு கூட எழ்திக்கீனு போலாம்,  

3) ஒரு ஊருல போய் கூட்டம் போட்டு மொத்தமா அல்லாரையும் 
கூப்ட்டு, இந்த வேட்பாளருக்கு ஒட்டு போடரவங்கோ அல்லாம் கை 
தூக்குங்கோ !! இன்னு கூவனும், அப்பால அட்த வேட்பாளறு, இப்பிடி 
அல்லா ஊர்லயும் போய் மேட்டர முடிக்கலாம் .

உன்னூ சிம்பிளா ரவ கூட துட்டு செலவு அவாம, எலீக்சனே, நடத்தாத கூட 
நம்ப ஆள செலீக்ட்டு பண்ணலாம் அதுக்கு மீனிமா ஐடியா !!  

1)நம்ப ரசினி காந்து இல்ல ரசினி காந்து . அவர கூப்ட்டு கைல ஒரு 
மைக்கு குட்து யப்பா !! யாரு செலீக்ட்டு ன்னு நீயே ஊ வாயாலே சொல்லீடு, 
அப்பீடீன்னு சொல்லிடலாம் ,


இல்லன்னா ,  

2)ரெண்டு பேரையும் கூப்ட்டு நிக்க வச்சிட்டு இந்த ஓர் ரூபா காய்னு இல்ல ,
அத்த தூக்கி போட்டு தல - வீந்தா இவுருக்கு , பூ - வீந்தா இந்த அம்மாவுக்கு, 
இன்னு சொல்லி ஆட்டத்த முட்சிக்கலாம் பா !!


எதனா சந்தேகம் , கின்தேகம், இர்ந்தா கூச்சப்படாத கேளு நைனா !! 
இந்த பாண்டி சொல்வான்,


தோ, பாரு வாஜாரே அவுங்குளுக்கு தான் ஒட்டு போடாம கெலிக்க ஐடியா குட்தேன், 

ஆனா எனுக்கு நீ வோட்ட போட்டு தாம்பா ஆவணும் , சொல்டேன் அக்காங் வர்ட்டா,ஐயே ! ஊ கர்த்து இன்னான்னு தான் ரவ சொல்ட்டு போயேன்பா !


5 கருத்துகள்:

டவுசர் பாண்டி said...

இது மேரி, சோக்கு, ஐடியா !!
குட்தா , ஒன் கர்த்த சொல்லாத கீறியே ? இது, எவ்ளூ மிக்கியமான மேட்டரு.

Mohan said...

எலெக்சன் கமிசனுக்கு வேல இல்லாத பன்றியா நைனா? ம்ம்... ஒன்னும் நல்லால!
அரசியலு வாதிங்கட்ட எவ்ளோ துட்டு வாங்கின நைனா?

தங்கமீன் said...

மாமே ஐடியால்லாம் சூப்பர் மாமே.... அப்பிடியே நம்ம வருமானத்துக்கும் ஐடியா கொடேன்.

டவுசர் பாண்டி said...

Mohan கூறியது..
//எலெக்சன் கமிசனுக்கு வேல இல்லாத பன்றியா நைனா? ம்ம்... ஒன்னும் நல்லால!//

டவுசர் டெல்லிங் - அண்னாத்தே, நம்பளுக்கு இந்த எலிக்சனு, கமிசனு மேல நம்பிக்கையே இல்லை அத்தா கண்டி, இந்த ரூட்ட பாலோ பண்ணலாம், அக்காங் !! அத்து இல்லாம, நம்ப
பொது மக்களு துட்டு தானே வேஸ்டு ஆவுது ( !! ) இன்னா சொல்றே ! ஒரு நல்லது பண்ண
சந்தோசம் தான், (?) அப்பால டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

நகைக்கடை நைனா கூறியது.. //அப்பிடியே நம்ம வருமானத்துக்கும் ஐடியா கொடேன்.//

டவுசரு டெல்லிங் - இதுக்கு சோக்கான ஐடியா !! கீது, அத்த தபா, லிஸ்ட்டு போட்டு சொல்றேன், செரி, ஒ கடை நல்லா போதா ? ஒரே குஜிளிங்கோ கூட்டமா கீதே ? இன்னா மேட்டரு ? சோக்கு , தான் போ.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh