பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

ரயிலு வண்டிய காணோம்.

·


யப்பா ! இன்னடா கோராமையா கீது ? ரயிலு வண்டிய, 
கூடவா இந்த டுபாகூரு பசங்க தள்ளிக்கீனு போவானுங்கோ ? 
அதுவு இல்லாம, அத வேற, இட்சிட்டான்னுக்கோ பாரு, 
இன்னாத சொல்லு, ஒழுங்கான டிரைவருங்க்களே, 
செரியா வண்டி ஓட்ட மாட்டராங்கோ, இதல இது 
வேற ?? 

செரி, இத எட்தும் போய் இன்னதா பண்ண முடியும் ? 
அவுங்க ஊர்ல ரயிலு வண்டி இல்லன்னு,
நினைக்கேரன் பா !! அத்தா கண்டி தான் இந்த வேல 
செஞ்சாங்களோ ? , 

ஒரு தபா ஓட்டலுக்குரவ நாஸ்ட்டா துன்றந்துக்கு
போய் நம்ப ஓட்ட, வண்டிய நிற்திட்டு
உள்ள போய், வெளிய, வந்து பாத்தா ?? 
ஐயோ !! நம்ப வண்டிய காணோம்பா ? அப்ப நம்பளுக்கு 
இன்னா மேரி கஷ்டம் இருந்திச்சி தெரிமா ?? 
சொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா !!  
தவுலூண்டு ஓட்ட வண்டி காணாத போனதுக்கே, இந்த 
மேரின்னா, அந்தே பெரி வண்டி, டிரை வருக்கு இன்னா 
மேரி இருந்து இருக்கும் பா, அவுரு நெனைச்சே பாத்து இருக்க மாட்டாரு,

இன்னா, இன்னாவோ நடக்குது பா, நம்ப நாட்ல, 
செரி வர்ட்டா, எலிக்சனு, வேல நெரிய கீது, 
போய் கெளிச்சிட்டு வந்து அப்பால பேசறேன் ?? 

டவுசரா மக்கா ? சீ, கொக்கா ??
web counter

6 கருத்துகள்:

Mohan said...

அண்ணாத்தே! எலெக்சன்லே நிக்கறியா? சொல்லவே இல்ல! ம்ம்... நடக்கட்டும்....
நடக்கட்டும்....

டவுசர் பாண்டி said...

// Mohan கூறியது...
அண்ணாத்தே! எலெக்சன்லே நிக்கறியா? சொல்லவே இல்ல! ம்ம்... நடக்கட்டும்....
நடக்கட்டும்....//

டவுசர் டெல்லிங் ; வா வாஜாரே, உட்டாண்ட நீ வருங்காட்டியு உடமாட்டேன், எலீக்சன்னு நா நிக்கலப்பா !! நம்ப தோஸ்த்து இங்கோ, நெரியோ, பேரு கீறாங்கோ அத்தா கண்டி சொன்னேன், அப்பால வந்ததுக்கு, ரொம்போ டாங்க்ஸ்பா.

Mohan said...

அண்ணாத்தே! என்ன ரொம்ப நாளா நம்ம பக்கம் எட்டிக் கூட பாக்கல! ரொம்ப பிசியோ?
வந்து கண்டுகினு போ தலிவா!

தேவன் மாயம் said...

ஒரு தபா ஓட்டலுக்குரவ நாஸ்ட்டா துன்றந்துக்கு
போய் நம்ப ஓட்ட, வண்டிய நிற்திட்டு
உள்ள போய், வெளிய, வந்து பாத்தா ??
ஐயோ !! நம்ப வண்டிய காணோம்பா ? அப்ப நம்பளுக்கு
இன்னா மேரி கஷ்டம் இருந்திச்சி தெரிமா ??
சொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா !! ///
இன்னா பெரிய மன்சு உனுக்கு!! வவுறு கலங்குச்சே போனியா? இல்லியா?
சும்மா!! டமாசு!! இஃகி!!! இஃகி!!

டவுசர் பாண்டி said...

தோ வண்டேம்ப்பா ! தலீவா !! சொம்மா பேஜாரா பூட்சி, இந்த வை யிலு கொடும தாங்கலப்பா !! இஸ்ஹு, யப்பாடா !! நம்ப ஏரியால கீற அல்லாரும் பேஸ்தாய் பூட்டாங்கோ பா !!!

டவுசர் பாண்டி said...

//சொம்மா வவுரே கலங்கி பூட்ச்சிபா !! ///
இன்னா பெரிய மன்சு உனுக்கு!! வவுறு கலங்குச்சே போனியா? இல்லியா?//


ஐயே !! அத்த வேற ஏம்பா கேக்கறே ? மேர்சலு ஆய்ட்டேன் போ !!!!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh