பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசரு ஊரு பயணம்

·நானு அப்பால நொட்ட சேகரு ரெண்டு பேரு சொம்மா 
தில்லா லங்கடி கணக்கா வெளி நாட்டுக்கு போநோம்பா ! 

ஐயே !! அந்த போட்டா எல்லா பாத்து இருப்பே ! 
பாக்கலீன்னா, மின்ன அத்த பாத்துடு அப்ப தான் 
நீ என்ன பாலோ பண்ண முடியம் செரி , 

இப்போ நா மேட்டருக்கு வர்றேன் .
நம்ப கைல ஏரோ ப்ளான் டிக்கெட்டு வாங்கி குத்துட்டு 
ஏம்ப்பா ! டவ்சறு நீயும் நொட்டையும் மட்டு போர்ரீங்கோ 
எப்பன்னா போய் வாங்கோ ! அப்பிடீன்னு சொல்ட்டு 
ஓர கட்டி கினாம்பா !! அந்த டுபாகூறு ,

செரி மன்சல தேரியத்த ஏத்திக் கீனு வாடா நொட்ட 
நம்பளுக்கு ஆச்சீ அவ்னுக்களுக்கு ஆச்சீ இன்னுட்டு 
கெளம்பி ஏரோ ப்ளான் ஸ்டாண்டுக்கு வந்தம்பா ! 

அங்க 
இன்னாடான்னா ,நம்ப பொட்டிய ஓர்த்த வந்து புடின்கீனு
போய்டாம்பா, அங்கே ஒரே ராவடி பண்ணே இன்னாட இம்மா 
தொலைவு போறேன் ,எனக்கு துணி மணி தேவலையா
இன்னு சண்ட போட்டு, அப்பலா அந்த ஸ்டாண்டு ஓனரே, 
வந்து நம்பல இன்றூஸ் பண்ணிக்கீனு யப்பா ! ஊ
பொட்டிக்கீ நா கேரன்ட்டீ அப்டீன்னு சொல்லி நம்பல 
கைய புட்ச்சி இட்டாந்து ஒரு ஏரோ ப்ளான்ல ஒரு 
ஓரமா ஒக்கார வச்சீட்டு தான் அப்பால போனாரு ,

ஏரோ ப்ளான் கலம்ப ரத்துக்கு மின்ன குஜிளிங்கோ, 
வந்து இன்ன சாரு உனக்கு இன்னா வோனுன்னு 
கேட்டு சிபா நானு அய்யே ! என்கு வொன்னோ 
வானாம்மே ! இன்னுட்டு சீட்ட கெட்டியா புட்சிகீனே , 

ஐயோ ! அந்த டிரைவரு கம்னாட்டி இன்னவோ கத்திகீனே
கேடந்தாம்பா ! நம்பளுக்கு ஒரு எழவும் பிரியல நம்ப 
கத தான் இப்பெடீன்ன நம்ப நொட்ட இன்னாடா பண்றான்னு 
பாத்தா, 

ஒரு குஜிளி கிட்ட ஒரே சத்தம் போட்டு கீறான், 
நா போய் இன்னாட சோமாரி நம்பல மச்சி இந்த வண்டீல 
இட்டும் போறாங்கோ ! நீ இன்னாட இந்த மேரி பண்றே 
இன்னு ஒரே கண்டீசனா , உட்டேம் பா ! அப்பால தான்
அவன் கொஞ்சம் அடங்கி இல்லடா டவ்சறு ,

இந்த வண்டில வந்த வொடனே அந்த அக்கா , ஒரு 
கவுறு வச்சி கட்டுசீபா ! அல்லாருக்கு அத்த எட்து 
வொட்டுட்டாங்கோ ,என்து இன்னவோ கல்லு முடி 
போட்டு கச்சிபா அத்த ரவ எட்து வுட சொல்லுபான்னா , 
அப்பெடீன்ன பாரு எனுக்கு கோவமான கோவம் வந்துட்ச்சி 

அந்த குஜிலிய புட்சி தள்ளி இன்னமா கொழந்த பையன 
போய் இந்த மேரி அநியாயம் பண்றே ,அப்பால நா வண்டிய
செயினு புட்சி ஈத்து வண்டிய நெர்த்திடுவேன் ,அப்பெடீன்னு 
ஒரு கொரலு குட்த பொறவு தான் அந்தெ கசமாலம், என்ன 
பாத்து இன்னவோ சொல்லிகீனே ! போச்சி ,

ஒரு வையா மலேசியா வந்து சேன்தோம்பா அட இன்னடா 
இது கோராமே !! சொம்மா இன்னா மேரி ஏரோ ப்ளான் 
ஸ்டான்டு கீது தெரிமா !! 

அந்த ஸ்டாண்ட உட்டு வெளில வரக் காட்டியு நா பட்ட 
அவஸ்த யப்பா !!

சொம்மா நம்ப முஞ்சிய தரைலையே 
பாக்கலாம் மேரி கீது பா , அது இன்னவோ டுவின்னு டவரு, இன்னு சொல்றாங்கோ, 
எனுக்கு இன்னாடானா, இது இன்னவோ பொம்மே மேரி கீது,

அய்யோ, இன்னாட நொட்ட ஒரு தூணு கணக்கா கீது ? 
இதுல வேற லைட்டு எல்லாம் எரியுது, மேல வேற 
சாராய கடை கீதாம், போய் ஒரு வாய் சல்பேட்டா உடலாமா ?


செரி, வவுறு கவா கவா இன்னுது சொல்லி 
நாஷ்டா துன்ன ஓட்டலுக்கு போனா, ஒன்னிமே நல்லா இல்லப்பா, 
நொட்ட பேஜாரு அயி பூட்டாம்பா , ஊர சுத்திட்டு எப்பிடியோ  
ஊடு வந்து சேன்தம்பா !!ஒட்டு தாம் போடுப்பா, இல்லன்னா தேர்தலு கமீசனுக்கு சொல்வேன்


18 கருத்துகள்:

Krishna said...

போட்டாச்சு போட்டாச்சு!!

பாத்து சூசகமா இருந்துகப்பு!! இருந்தாலும் வெளிநாடு போனத டவுசர் பாணில கேக்குறதுக்கு நல்லா இருக்குதுப்பா

Krishna said...

கமிசனுகெல்லாம் வேண்டாம் டௌசறு. வேணுமினா கமிசன் குடு இன்னொரு கள்ள வோட்டு உனக்கு டமிளிஷ் ல போடறேன்.

டவுசர் பாண்டி said...

வெவசாயி வெவசாயி ,,, வந்ததுக்கு டாங்க்ஸ்பா , மறக்காதே ஓடு வேற போட்டாச்சா ? அப்பால டபுல்லு சந்தோசம்

Mohan said...

டவுசர் அண்ணாத்தே! இங்கே நம்ம பேட்டயக் கலக்கனுது போதாதுன்னு ஏரோ ப்ளான், மலேசியா ன்னு சும்மா ஒரு கலக்கு கலகீனு வந்டே! ம்ம்ம்... நல்லாத்தான் கீது ஒம் பயணக் கட்டுர!

டவுசர் பாண்டி said...

மோகனு அண்த்தே ! வண்டியாபா !! எங்க ஆளே காணுமே !! நல்ல வேலே நா உன்ன காணுமின்னு கம்பிளைண்டு குட்டுக்கோ இர்ந்தேம்பா !! அப்பால டாங்க்ஸ்பா .

Tech Shankar said...

ஆவ்வ்...

//நாஷ்டா துன்ன ஓட்டலுக்கு போனா, ஒன்னிமே நல்லா இல்லப்பா,

அனுபவம் said...

தம்பீ பாண்டி ஏண்டா ஒந்நோட பாஸ வௌங்க மாட்டேங்குது நேக்கு?

டவுசர் பாண்டி said...

//தம்பீ பாண்டி ஏண்டா ஒந்நோட பாஸ வௌங்க மாட்டேங்குது நேக்கு?//- அனுபவம் கூறியது..


அதுக்கு தான் பா நம்ப அகராதிய படிகனுன்னு சொல்லறது, பக்கத்துல்ல என் கட்சி கொடி கீது பாரு, அங்க கிளிக்கு. வந்ததுக்கு டாங்க்ஸ்பா !!

தங்கமீன் said...

அண்ணாத்தே, நம்மகடை பக்கம் வந்து கண்டுகினே.... நொம்ப குசியா இருக்கு மாமு...
அப்பாலிக்கா கஸ்டமரா வேற செர்ந்துகினே நொம்ப டாங்சு.... உன்னி மேரி ஆளுங்க எனக்கு என்னிக்கும் வோணும் மாமு...
இன்னிலேருந்து நீயும் நானும் தோஸ்து மாமு...

டவுசர் பாண்டி said...

//அப்பாலிக்கா கஸ்டமரா வேற செர்ந்துகினே நொம்ப டாங்சு....//


கஷுடமருக்கு இன்னாவோ ப்ரீ குடுக்கிரியாமே, !! அதாம்பா !!!

தலைவர் said...

தல, உன் அதே கண்கள்-ல தலைவர் ஒரு கண் வச்சிட்டார், இனி அடிக்கடி கண் வைப்பார் திருஷ்டி சுத்தி போடு...

Tech Shankar said...

சூப்பர் மாமே

Mohan said...

ம்ம்ம்... நாளுக்கு நாள் கடைய மெருகேத்திக்கிட்டே போய்ட்ருக்க! சோக்கா கீதுப்பா!
சொம்மா அட்சி தூள் கெளப்புற அண்த்தே!

டவுசர் பாண்டி said...

//தல, உன் அதே கண்கள்-ல தலைவர் ஒரு கண் வச்சிட்டார், இனி அடிக்கடி கண் வைப்பார் திருஷ்டி சுத்தி போடு...// - தலைவர் கூறியது..

டவுசரு டெல்லிங் -

வன்கம் வக்கிறேன்பா , நம்ப ஊட்டாண்ட வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்பா , ஆப்பால நீ இன்னவோ சொன்னியே ? கண் திருஷ்டி பட போதுன்னு அது மட்டு நடக்காது அண்ணாத்தே , ஏன்னா எம் போட்டோ தான் மின்ன கீதே !!! எப்பிடி ?

டவுசர் பாண்டி said...

//ம்ம்ம்... நாளுக்கு நாள் கடைய மெருகேத்திக்கிட்டே போய்ட்ருக்க! சோக்கா கீதுப்பா!
சொம்மா அட்சி தூள் கெளப்புற அண்த்தே!// - Mohan கூறியது.

டவுசரு டெல்லிங் ;

சொக்கு தான் சேக்கு டான்சு தான் ... ஆ ஆ ஹி ஹி ஹீ ம்ம் ஆ ஆ ...

டவுசர் பாண்டி said...

//சூப்பர் மாமே//

- தமிழ்நெஞ்சம் கூறியது.
டவுசர் டெல்லிங் -
வாராவதி இறக்கம் ,
வாஜார் வந்து நின்னா கலக்கும் , அது யாரு இன்னா -
பிகிலு கணக்கா நம்ப

ஸ்டாரு டமிலு ஹார்ட்டு ,

தானுக்கோ ....
டாங்க்ஸ்பா >>

Mohan said...

டவுசர் அண்ணாத்தே! ஏன் பாண்டி கொடி இத்தினி டெரரா கீது? மெர்சல் ஆவுதேப்பா? நல்லா கெளப்புராங்கையா பீதிய! அக்காங்!

டவுசர் பாண்டி said...

ஆளு தான் ஜோக்கரு, அட நம்ப கொடி யாவது டேர்ரரா இருக்கட்டூன்னு தான்,

( அப்பால கட்சி, கிட்சி ஆரம்பிச்சா, புச்சா கொடி தேட வாணாம் பாரு அதான் அய்லசா)

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh