பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

அரசியலு பண்றாங்கோ அரசியலு?

·

இந்த அரசியலு வாதிகள, நெனச்சா என்னுக்க் ஒரே கலீஜா கீதுபா ! 
மின்ன இர்ந்த பேரீ மன்சனுக்கோ, அல்லாறோம் சாதி, மதம், 
இதல்லாம் பாக்காதீங்கோ !! அப்பாலே இது உசந்த சாதி இது 
இப்பிடி, அது அப்பிடி, இன்னு சொல்லி, இன்னான்னாவோ, 
தல கீய நின்னு பாத்துட்டாங்கோ !! ஆனா அன்னிலேந்து இன்னி 
வரிக்கும், எதனா எலிக்சனு, வன்டா போதும், 

இங்க இந்த சாதி ஜனம் அதிகமா கீது, அப்பால அந்த தொகீதீல 
இன்னா சாதி அதிகமா கீது ? இன்னு பாத்து, பாத்து தானே சீட்டு 
குடுகராங்கோ ??  எந்த ஜாதி ஆளுங்கோ, அதிகமா கீரான்களோ ! 
அந்த ஜாதி ஆள போடு, இந்த வெள்ளாட்ட ( ?? ) அல்லா கட்சின்களோ, 
கரீக்டா பாலோ பண்ணுதுங்கோ !! 

பரவால்லப்பா !! இதிலயாது ஒன்னா கீர்ரான்களே ??
 
இது இன்னா அக்குரும்பு பாத்தியா?? அப்பறமா
சாதி இல்லைன்னு எந்த அரசியலு வாதின்னா கொராலு குட்தா, 
நம்பளுக்கு இன்னா மேரி வவுறு எரீது,  

அப்பால இன்னொரு மேட்டரு பா, மின்ன அதாம்பா பழிய ஆளுங்கோ, 
இந்த கமராஜறு , அண்ணா , அப்பால பக்தவச்சலம், உன்னோ நேரீ 
பேரு அரசியல்ல கீற அப்போ, நீ எப்பிடி இது வெரிக்கும் இன்னா 
நல்லது பண்ணே ? , பட்சி கிரியா ? சமூகத்து மேல உனுக்கு 
அக்கறை கீதா ? மக்கள் செல்வாக்கு கீதா ??? அத்த மட்டும் 
தாம்பா பாத்து, சீட்டு குட்து, கெலிக்க வச்சாங்கோ !! இப்ப 
இன்னாடான்னா $$$$$$$$$$$$ பிரிஞ்சி இருக்குமே ?
ஆ அதான் துட்டு பா துட்டு ......

நீ இன்னா செலவு பண்ணுவே ? எத்தினி கோடி கீது,?
இன்னாடா ? இது , அக்குரும்பு ? இவ்லோ துட்டு குட்து சீட்டு 
வாங்கி, உன்னோ ஜெனக்களுக்கு துட்டு குட்து , 

அப்பாலிக்கா
கெலிச்சி வந்த பின்னால, இன்னா பண்ணுவாங்கோ, கெடச்சத 
பிராஞ்சிகுனு, அம்பேலு உட்டுடுவாங்கோ !! உன்னோ கொடுமே கேளு ! 

சில நல்லவன்கோ கீறாங்கோ !!
நாடாளர மன்றத்தில கேள்வி கேக்கர்த்துக்கே 
மாலு வாங்கி கீறாங்கோ ? எத்தினி நல்லவன்கோ பாரு, 

இத்தல்லாம் கேட்டா, டவுசரு உனுக்கு இன்னா ? 
அப்பிடீன்னு எம் மினீமா, கேக்குதுபா ? 

நீயே ஒரு நாயத்த சொல்லேன்பா ?தோ, பாரு கர்த்து சொல்றத்துக்கு அப்பால ஒட்டு போடறத்துக்கு அல்லாம் 
துட்டு கேக்கூடாது சொல்டேன், அக்காங் !!!

6 கருத்துகள்:

Mohan said...

டாவுசர் அண்ணாத்தே ! வோட்டு போட்டாசுப்பா! காசெல்லாம் வோணாம்!
எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒரு நாயத்த கேட்டுக்கினே கீறீயப்பா! என்னேமோ போ!
ஒம் மினிமா சொல்ரத கேளுப்பா! அக்காங்!!!

டவுசர் பாண்டி said...

மோகனு அண்ணாத்தே, இன்னா பண்றது சொல்லு, நாட்ல கீற அநியாயத்த பாத்து, எதோ என்னால முன்ட்ச நாயாத்த கேட்டுகினே கீறேன், இன்னா இர்ந்தாலும்,

அது எங்க மினிமா ??

( இப்ப தான் லேசா ... உம் மனசோட வச்சிக்கோ )

Tech Shankar said...

உங்க கூட்டாளிகள் வயகரால சாரி

வகையறால - என்னையும் சேர்த்ததுக்கு நன்றிங்கோ

டவுசர் பாண்டி said...

டமிலு ஹார்ட்டு அண்ணாத்தே, உனுக்கு கோடி வன்கம் பா, உன்ன மேரி ஆளு நம்ப கோடா இருந்தா, சொம்மா பிகிலு கணக்கா, இருக்கும்.

ivingobi said...

innapa tavusaru Viagra kiyagra nu varthu... muneema kaila sollavaa ?

டவுசர் பாண்டி said...

ivingobi-எங்க வாஜார், போய்கீனே உன்ன பாக்கவே முட்லையே?

நீ வந்த அப்பால தான் கச்சேரியே கல கட்டும்,
( உன்ன பத்தி உசதாதுன்னு, சொல்லி கீறேன் , நம்ப வயாக்கர் கதிய அப்பிடியே அமுக்கு )

ம்ம் வால்க, இவின் கோபி, வளர்க அவுரு புகளு. உஸ் யப்பாடா !! அல்லாம் இந்த டமிலு ஹார்ட்டு ஆல வந்துது. அவர ம்ம்ம்ம்ம் ..வச்சிகீறேன்.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh