பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நாட்டுல கீற நல்லவக்கோ

·


ஒரு பெரி மன்சன் மேட்டரு !!

யப்பா !!!! நொட்ட சேகரு , குள்ள பாலு 

கேட்டுகினியா இந்த கதிய,??

இருவரும் சொல்லு டவுசரு , இன்னா மேட்டரு ?  

நம்ப தலிநகரத்துல கீற ஒரு ஆபிசுல வேல செய்ற
ஒரு பெரி மன்சன்,பெரி டுபாகூரு பார்ட்டி யாம்பா !!  

அப்பிடி இன்னா டுபாகூரு பண்ட்டாறு பா ??  

செர் தான் கேட்டுக்கோ ,

நம்ப பெரி மன்சன் இன்னா பண்ணுவாராம் தெரிமா ??  

நேர புச்சா காரு விக்கற கடைக்கி போய், அல்லா 
வண்டியயையும், சொம்மா, அப்பிடியே ஒரு பார்வை 
பாத்துகுனு ,இன்னாவோ , வண்டி வாங்குற மேரியே , 
ஆக்குட்டு , குட்துகுனு , இப்புடி பாத்துக்குனு பாத்துக்குனு , 
அவங்கோ அப்பால கீற போது, அந்த வண்டி சாவிய 
ரெண்டு சாவில ஒன்ன ரூட்டு போட்டுகுவாராம்பா !!  

அவுங்கோ கிட்டே அப்பால வரம்பா இன்னுட்டு சாவியோட 
எஸ்கேப்பூ ஆயிபூடுவரு , அப்பால அந்த வண்டிய , ஆரு 
வாங்குறதுன்னு நோட் பண்ணி அசரப்போ , சொம்மா 
நேக்கா, டாக்கா குட்துடுவாறு ,  

நொட்ட ; அப்பால எப்பிடி தான் கண்டு புட்சாங்கோ பா ?  

டவு ;; இவுரு ரொம்ப நாளாவே இந்த டகால்ட்டி வேல 
செய்துகீனு கீறாரு, இப்போ , இதே மேரி ஒர்த்தரு புது 
வண்டி வாங்கி ஒரு எடத்துல உட்டுட்டு போய்டாரு, 
கூடவே, அவுரு யூஸ் பண்ற செல்லு போனை மறந்து 
வண்டில உட்டுட்டாரு , நம்ப ஆளு தான் எப்போ, எப்போ
இன்னு கீராரே ? அவுரு கிட்ட கீற டூப்பிலி கேட்டு சாவிய 
போட்டு வண்டிய சுட்டுட்டாரு !

அப்பால !!! கேளு கதைய , வண்டிய உட்டவரு நொந்து போய், 
போலீசுல சொன்னாரு பா!! 

இந்த செல்லு போனு கூட அந்த வண்டில கீது, 
அப்பிடீன்னு சொல்லி கீறாரு ,நம்ப போலிசு இன்னா, சூப்பரா , 
அந்த மேட்டர புட்சி செல்லு கம்பனி கிட்ட பேசி இப்ப அந்த 
செல்லு எங்க கீது இன்னு கண்டு புட்ச்சா , அது நம்ப ஆபிசரு 
வேல செய்யற ஏரியாவ கரீக்ட்டா , சொல்சிபா , அப்பால !!!  

ஐயே !! அப்பால இன்னா பெரி மேட்டரு , சொம்மா உஸ்தாது 
கணக்கா வாட்சு பண்ணா ,இந்த மேரி ஒரு ஆபிசுல நிக்கிது, 
நைசா போய் வாட்சி மேனு கிட்ட கேட்டா, இந்த மேரி இந்த 
ஆபிசரு இந்த வண்டில வந்தாரு , இன்னு சொன்னா , செரி, 
ஆளு வர்ட்டுன்னு நம்ப போலிசு கம்முன்னு இர்ந்து கீது,  

நம்ப தலீவரு சொம்மா சோக்கா, வந்து வண்டிய எட்தாறு, 
அவ்லோ தான் சொம்மா ,

கோழி குஞ்ச அமுக்குரா மேரி அமுக்கி விஜார்ச்சா !!!  

ஆமா , இந்த மேரி இந்த மேரி அப்பிடீன்னு மொத்த 
மேட்டரையும், கக்கிட்டாறு பா, 

நொட்ட , குள்ள பாலு - இருவரும் , யப்பா , யார தான் 
நம்பறதுன்னு தெரிலபா ????
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh