பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசர் பாண்டி உலா

·

சும்மா ஒரு ரவுண்டு,,,,,,( கவலையில் இருக்கும் வை கோ - வைப் பார்க்க டவுசர் மற்றும் அவர் கூட்டாளி ,குள்ள பாலு ,இருவரும் வருகிறார்கள் ) இனி .....  

டவு பா ; தலீவரே ! இன்னா இது எப்பிடி கீரீ ??  

வைகோ ; வா , டவுசரு , என்ன இந்த பக்கம் ,?  

டவு பாண் ; தலீவா ! இன்னா கோரமியா ! கீ ரே , எனுக்கே வவுத்தெரிச்சலு, தாங்கலேபா , இன்னடா ,டவுசரு இன்னா இப்பிடின்னு , நீ ஒரு கொரலு குட்த்தா , சும்மா உஸ்தாது கணக்கா , இர்ந்திருக்கும், அத்தவுட்டுட்டு !!!!!!  

வைகோ ; நீ கூட்டணி பத்தி சொல்றியா ? அத விடுப்பா !! என்னமோ எல்லாமே ,என்ன கேட்டு தான் நடக்குராப்போலே , நீ வேற ,  

டவு பாண் ; செரி, நீ எம்மாம் பெரி மன்சன் , புரட்சி புயலு , நீயே இப்பிடி, கலங்கலாமா ? சொம்மா ,கெத்தா , போய், ரெண்டுல ஒன்னு , கேட்டு ,இன்னதான் மேட்டரு ? இன்னு பாரு ,  

வைகோ ; அட நீ ஒன்னு , எனக்கு தான் ஒரு வேட்டு, விழுந்து , மனசே , சரி இல்லை , நம்ம தோழர்கள் தான் , எனக்கு ஆறுதல் . 

டவு பாண் ; நீ ரோசன பண்ணி ,ரோசன பண்ணி , போ சொல்லோ , ஊ கூட வர்றத்துக்கு , யாரிமே , காணோமின்னு , நீ பேஸ்தாவப் போறே , சொல்டேன், அப்பால ஊ இஷ்டம் .  

வைகோ ; நீ சொல்றதும் ஒரு சரியான பாய்ண்ட்டு தான் . என் தோழர்களை கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கிறேன் .  

டவு பாண் மனசுக்குள், ( ம்ம் நீ ஒன்னு திருந்தரா மேரி என்கு தெரிலெ ) செரி , தலீவரே , நா அப்ப, ஜூட் உட்டுக் கரேன் .. அப்பாலே , உன்ன கண்டுகறேன் . வர்ட்டா !!

4 கருத்துகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

அப்துல்மாலிக் said...

இன்னாப்பா டவுசரு
இன்னாது இது பேஜாராக்கீது

ஹி ஹி

நன்னாருக்கு

டவுசர் பாண்டி said...

அண்ணாத்தே !! வந்ததுக்கு ரொம்ப டான்குசுபா , அப்பாலே நம்ப தோஸ்துங்கோ ,
அல்லாரையும் கேட்டதா சொல்லு நைனா .

வேலன். said...

டவு பா ; தலீவரே ! இன்னா இது எப்பிடி கீரீ ??

வைகோ ; வா , டவுசரு , என்ன இந்த பக்கம் ,?

டவு பாண் ; தலீவா ! இன்னா கோரமியா ! //

டவு. பா :- வணக்கம் தலீவரே..

வைகோ :-வா , டவுசரு , என்ன இந்த பக்கம் ,

டவு பாண் ; தலீவா ! இன்னா கோரமியா !//

மேற்கண்ட வாறு உரையாடல் ஆரம்பிக்கவேண்டும்
நல்ல நகைச்சுவை.இன்னும் உடையாடலை அதிகபடுத்தியிருக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh