பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

சுளுவா !! வெப் சைட்டு வெளம்பரம் - நாமே தயாரிக்க !!

·


அல்லா தோஸ்துங்களுக்கும் , வன்கம் பா !!


இப்போ !! சில விளம்பரம் அதாம்பா இந்த கம்பிட்டர் பொட்டில வர்தே !!
போட்டா கூட மாரி மாறி வரும் அப்பால ,

ஒரு கட்டத்துல அந்த கம்பனி பேரு கூட போய், போய் வருமே !!
அதே மேரி நம்பளும் பண்ணலாம் !!

அதுக்கு ஒரு சின்ன சாப்ட்வேர் கீது , ரொம்பவே ஈசியா இருக்கும் !!
சொம்மா ஒரு மாடலுக்கு நானும் நொட்ட சேகரும் கீரா மேரி பண்ணி
உட்டுக்குனேன் பா !!

பாத்துட்டு எப்பிடி கீதுன்னு ரவ சொல்லு தலீவா !!


Photobucket


Photobucket
Photobucket

இந்த சாப்ட்வேர் இங்க போய் டவுன் லோடு பண்ணி யூஸ் பண்ணி
பாருங்க தலீவா !! சின்ன சாப்ட்வேர் தாம்பா !! ( 4.42MB ) அளவு தான் !!
சொம்மா சிம்பிளா இருக்கும் ,

இந்த சாப்ட்வேர் ஒரு ட்ரையல் வெர்சின் தான் இதைக் கொண்டு சுமார் 20
அனிமேஷன் மட்டுமே செய்ய முடியும் ,

பாண்டி பிளாக்குல மட்டும் கர்சர் பாண்டி போட்டோவோட வருதே?
அது எப்பிடி ? இன்னு, அத்த பதிவுல எழதறேன் தலீவா !!
உங்க போட்டா கூட வெச்சிக்கலாம் !! அக்காங் !!

மறக்காத ஒட்டு போடுங்க !! அத்த எலீச்ஷன் வெரிக்கும் தாங்கும் அக்காங் !!


17 கருத்துகள்:

தேவன் said...

superrrrrrrrrrrrrrrrr......

டவுசர் பாண்டி said...

உங்க கர்துக்கு ரொம்ப டாங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தலீவா !!

ரோஸ்விக் said...

தலீவா! வழ்கம் போல கலக்கு நீ....

அப்பால...அந்த படத்துல எழ்தீருக்க டவுசர்-ல s -ஐ விட்டுட்டாப்பா...அதுனால ரொம்ப செக்ஸ்யாக்கீது...:-))

டவுசர் பாண்டி said...

தலீவா !! உங்க கருத்துக்கு , ரொம்பவே டாங்க்ஸ்பா, அப்பால நாம தான் செக்ஸ்சியா இல்ல பேருலியாவது இருந்துட்டு போட்டுமே !! ஐயே இன்னா நான் சொல்றது !! அக்காங் !!

பாவா ஷரீப் said...

ஏன் தல இந்த சைடு, நடு, ஓர வஞ்சனை எல்லாம்
பின்ன இன்னாபா நொட்ட சேகர் அண்ணாத்தே போட்டோ போட்டு கீற
என் போட்டோ போடாம வுட்டுட்டியேபா
ஒரே பீலிங்கா பூட்சுபா

புலிப்படை said...

Www.Tamilaruvy.Com wach Tamil DVD HQ movies 1 on net visit now Www.Tamilaruvy.COM OR Www.Aruvymvies.Com

டவுசர் பாண்டி said...

//என் போட்டோ போடாம வுட்டுட்டியேபா ஒரே பீலிங்கா பூட்சுபா//-கருவாச்சி,


வாஜாரே !! கோச்சிக்காதே அய்யே !! இனிமேட்டு உம போட்டவ
போட்டுடறேன் !! கர்த்துக்கு
டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

Thanks - TAMILEELAM .

Mohan said...

வாத்யாரே! சோக்கா கீதுப்பா!

பாலா said...

அண்ணாத்த.. நீ நம்ம ஆளா..!! ஒரே கலீஜா கீதுபா!!

அப்பப்ப.. வந்து கண்டுகினுகிறேன்!!

சூப்பரு மேட்டரு மாமே..

டவுசர் பாண்டி said...

அண்ணாத்தே !! மோகனு
அண்ணாத்தே !! எப்பிடிப்பா கீரே !! நல்லா கீரீயா !! கர்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்த.. நீ நம்ம ஆளா..!! ஒரே கலீஜா கீதுபா!!//- ஹாலிவுட் பாலா.

அய்யோ !! பாலா அண்ணாத்தே !! நானு உங்கள எதிரு பாக்கவே இல்லப்பா !!

பெரி மன்சாலு நீங்க உங்க ப்ளாக் அடிக்கடி படிப்பேன் பா !!

எப்புடித் தான் வெள்ளக்கார ஆளுங்கோ படத்துக்கு எல்லாம் , சும்மா !! ஜாலாக்கா விமர்சனம் எழ்தரீங்கோ இன்னு , மண்ட காஞ்சி மசால் வடை கணக்கா ஆய்டேம்பா !!

ஐயே பூந்து இந்த வாங்கு வாங்கி , ரசம் சோத்துக்கு, நார்த்தங்கா ஊர்க்கா தொட்டுக்குணா மேரி !! அட்சி தூளு கெலப்பர வாஜாரே !!

ஆனா ஒன்னு நம்ப ஏரியா ஒண்ணா கலீஜா இருக்கும் நம்ப மனசு
சும்மா !! நாயர் கடை இட்லி மேரி வெள்ளே வேளேர்ன்னு இருக்கும் அக்காங் !!

அடிக்கடி வா வாஜாரே !!
இப்பதிக்கி டான்க்சு !!

பாலா said...

இன்னா.. நைனா... பெர்யமன்சாலுனு சொல்லி நைஃப் போட்ற.

அத்தங்காட்டியும் ஒன்னியும் வோனா..!
சப்ப மேட்டுரு மாமு நானு. தெர்தா!! :)

////

ஆனா ஒன்னு நம்ப ஏரியா ஒண்ணா கலீஜா இருக்கும் நம்ப மனசு
சும்மா !! நாயர் கடை இட்லி மேரி வெள்ளே வேளேர்ன்னு இருக்கும் அக்காங் !!
///

கரீகட்டு! :) :)

டவுசர் பாண்டி said...

//கரீகட்டு! :) :)//-ஹாலிவுட் பாலா கூறியது,


அக்காங் !! இன்னா துரை உம் பேரே சும்மா தூளா கீதே !! அட்சி ஆடு !! வாஜார் !!

Menaga Sathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html

SUBBU said...

சோக்கா கீது வாஜாரே ;))

Unknown said...

எப்படி தலைவா HTML எடுத்து நம்ம ப்ளாக்கில் வரவைக்கிற்து தயவு செய்து விவரமாகத்தரவும்

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh