பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

தேவையான இடத்தை மட்டும் screen shot எடுப்பது எப்படி ?

·நம்ப தோஸ்துங்க , அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட

வணக்கம் பா !!

போன பதிவு , யப்பா !! இந்த கம்பனி ஆளுங்க பண்ண கலாட்டா கீதே !!
அதுவே ஒரு பதிவு போடலாம் போல கீது , அது மேரி ஒரு கலாட்டா
பண்ணிட்டாங்கோ !! செரி, நம்ப மேட்டருக்கு வரலாம் ,

இப்போ !! நம்பல மேரி பெரி " ? " ( சும்மா சொல்லிக்கலாம் ) பதிவருங்க ,
எதுனா நம்பளுக்கு பிரியரா மேரி !! சொல்றத்துக்கு இந்த screen shot
பண்ணி அந்த போட்டோவ காமிச்சி சொல்வாங்கோ !!

இதுக்கு , நம்ப key board ல இருக்குற print screen பட்டன அமிக்கி அத்த
எட்துக்குனு போய், பெயிண்ட் மூலம் தான் காப்பி பண்ண முடியும் ,

அதுவும் நம்ப ஸ்க்ரீன்ல இருக்குற மொத்தம் தான் capture ஆவும் , அதுல
நமக்கு தேவையான எடத்த பெயிண்ட் மூலம் தான் கட் பண்ணி காப்பி
பண்ணி save பண்ணுவோம் !! இது எவ்வளவு சுத்து வேல ஆனா !!

இந்த சின்ன சாப்ட்வேர் நம்ப இன்ஸ்டால் பண்ணிட்டா !! நமக்கு
தேவையான எடத்த மட்டும் நாம கரீக்ட்டா !! capture பண்ணலாம் !!
இப்போ அது எப்பிடி இன்னு பாக்கலாம் ,

மொதல்ல , இங்கு போய் இந்த சாப்ட்வேர் டவுன்லோட்
பண்ணிக்கோங்க !! 620 Kb அளவு தான் , (free software)

இத இன்ஸ்டால் பண்ணிட்டா நம்ப டெஸ்க் டாப்புல ஒரு ஐகான் வரும்
அத ஓபன் பண்ணாக்கா !! கீழே இருக்குற மேரி வரும் ,


இதுல , Browse இன்னு இருக்குறதுல போய் நாம எங்க save பண்ணனுமோ
அந்த எடத்த குடுங்க !! அப்பால ,

அந்த போட்டோவுக்கு பேர் வெக்க capture இன்னு இருக்குறதுல பேர்
குடுங்க , அடுத்து நாம இந்த screen ல இருக்குற ஒரு குறிப்பிட்ட எடத்த
மட்டும் capture பண்ண ,

கீழே இருக்குற மாதிரி selection இன்னு இருக்குற எடத்த டிக் பண்ணிடுங்க ,
பண்ணிட்டு capture இன்னு இருக்குறத ஒரு தடவை அமிக்கி விடுங்க ,
பிறகு ,

இத minimize பண்ணிட்டு எந்த பக்கம் நாம screen shot
எடுக்கணுமோ அத ஓபன் பண்ணிக்கோங்க !

அதுல எந்த எடம் வேணுமோ அத மட்டும் mouse மூலம் left click பண்ணி
அப்பிடியே அது முடியுற மட்டும் இழுத்து முடிச்சிடுங்க ,

நீங்க mouse சை விட்ட வுடன் நீங்க capture பண்ண வேண்டிய இடம் நீங்க
save பண்ண இடத்தில் வந்து விட்டு இருக்கும் ,

பல முறை செய்து பார்த்தால் சரியாக வரும் , முயற்சி செய்து பாருங்கள் ,
நாம paint மூலம் செய்ததை விட மிக சுலபமாக இருக்கும் ,

பதிவை முயற்சி செய்து விட்டு உங்கள் கருத்தை மறக்காமல்
சொல்லவும் , டான்க்ஸ் ,


29 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் said...

Thanks 4 sharing.
Can u try winsnap ?
for me thats easy ,,

யூர்கன் க்ருகியர் said...

if u wanna use snaps for documents try for zapgrab ...it is amazing.

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலிவா!

டவுசர் பாண்டி said...

//Can u try winsnap ?//- யூர்கன் க்ருகியர்.


உண்மை தான் தலீவா !! நீங்க சொன்னது ரொம்பவே
ஈஸியா கீது ??????

ஆனாக்கா !! இது வொரு ட்ரையல் தாம்போல கீது ?? அதுவும் இல்லாம நாம எடுத்த போட்டோ நடுவுல அந்த கம்பனி பேரு தான் பெர்சா வருது ??

நம்ப மேட்டர்ல அது மேரி கஷ்டம் அல்லாம் இல்ல தலீவா !! மொதல்ல அத்த use பண்ணி பாருங்க , நீங்க சொன்ன winsnap விட நல்லா இருக்கும் .(total free software) உங்க கருத்துக்கு நன்றி ,

அப்துல்மாலிக் said...

தலிவா நீ ஒரு ஐ.டி. தகவல் மையம்

டவுசர் பாண்டி said...

//சூப்பர் தலிவா!//-சூர்யா ௧ண்ணன்,


கருத்துக்கு + வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ் தலீவா !!

அப்துல்மாலிக் said...

தலிவா நீ கொடுத்த லின்க் கிளீக் பண்ணா அராபிக் லே வருது, அதை ஆங்கிலதுலே மாத்த இன்னாப்பா செய்யோனும்

டவுசர் பாண்டி said...

//தலிவா நீ ஒரு ஐ.டி. தகவல் மையம்//- அபுஅஃப்ஸர்,


தலீவா !! பெரி வார்த்த அல்லாம் சொல்றீங்கோ !! எனுக்கு ஒரே கூச்சமா கீது !!

ரொம்ப நன்றி தலீவா !! அடிக்கடி வாங்கோ !!

அப்துல்மாலிக் said...

OK I DONE IT

டவுசர் பாண்டி said...

//தலிவா நீ கொடுத்த லின்க் கிளீக் பண்ணா அராபிக் லே வருது, அதை ஆங்கிலதுலே மாத்த இன்னாப்பா செய்யோனும்//-அபுஅஃப்ஸர்


தலீவா !! காரீக்ட்டா தான் கீது !! செக் பண்ணிட்டேன் !! நன்றி ,

4 -shared பக்கத்துல மேல ரைட் சைடுல இருக்குற டிராப் டவ்ன் மெனுல போய் மாத்தலாம் ,

யூர்கன் க்ருகியர் said...

//ஆனாக்கா !! இது வொரு ட்ரையல் தாம்போல கீது ?? அதுவும் இல்லாம நாம எடுத்த போட்டோ நடுவுல அந்த கம்பனி பேரு தான் பெர்சா வருது ??

நம்ப மேட்டர்ல அது மேரி கஷ்டம் அல்லாம் இல்ல தலீவா !! மொதல்ல அத்த use பண்ணி பாருங்க , நீங்க சொன்ன winsnap விட நல்லா இருக்கும் .(total free software) உங்க கருத்துக்கு நன்றி ,//Sorry I never ever use trial versions any more.
if u wish u can buy (http://www.ntwind.com/software/winsnap/download.html) or u can get from anybody (free of cost ..ofcourse ) who already own that :) ..Thx Pal !

யூர்கன் க்ருகியர் said...

lot users stored here :) go 4 it for free :)http://search.4shared.com/network/search.jsp?sortType=1&sortOrder=1&sortmode=2&searchName=winsnap&searchmode=2&searchName=winsnap&searchDescription=&searchExtention=&sizeCriteria=atleast&sizevalue=10&start=0

Jaleela Kamal said...

அன்னாத்த எப்புடி இப்புடி எல்லாம் கலக்குறீங்க, சூப்பரா இருக்குதுபா......

டவுசர் பாண்டி said...

//Sorry I never ever use trial versions any more.
if u wish u can buy//- யூர்கன்,

தலீவா !! நம்ப எல்லாமே ஓசில கீரதத் தான் மொதல்ல use பண்ணுவோம் !!

இதுக்கு போய் யாராவது துட்டு குத்து வாங்குவாங்களா ?

அப்பால ஒரு பய மொழி ,

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று , - இதுக்கு அர்த்தம் பழமாவே ஒன்னு இருக்க சொல்லோ !! காயி யார்னா வாங்குவாங்களா ?

அய்யே !! நான் சொல்றது பிரியுதா !! அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//அன்னாத்த எப்புடி இப்புடி எல்லாம் கலக்குறீங்க, சூப்பரா இருக்குதுபா.//-Jaleela கூறியது,

அடடே !! வாங்க சகோதரி , உங்க வருகைக்கி + கருத்துக்கு ரொம்பவே நன்றி .

யூர்கன் க்ருகியர் said...

//கனியிருப்பக் காய் கவர்ந்தற்று , - இதுக்கு அர்த்தம் பழமாவே ஒன்னு இருக்க சொல்லோ !! காயி யார்னா வாங்குவாங்களா ? //

Oh I see !!

டவுசர் பாண்டி said...

யூர்கன் தலீவா !!உண்மைக்கி ரொம்பவே சிரிச்சேன் !!

இத எழுதும் போது உங்க பதிலு இன்னாவா இருக்கும் இன்னு நானு எதிர் பாக்கவே இல்லை !!

நீங்க உஷாரா i see இன்னு குட்தீங்கோ ச்சே !! i c இன்னு குடுத்தாக்கா அதுகூட வெல ஜாஸ்தி இன்னு சொல்லி இருப்பேன் உங்களுக்கு தெரியும்,

அதானே !! ஹா ஹா ! ஹா

பெயரில்லா said...

ஓய் ..பாண்டி வாள் ... பொண்ணுங்க மனச காப்சர் பண்றதுக்கு என்ன பண்ணனும்னு ஒரு பதிவ போட்டேள்னா நன்னாயிருக்கும் .. என்ன சொல்றீரு ஓய் ?

பெயரில்லா said...

ஓய் ..பாண்டி வாள் ... கக்கு ன்னு சொல்லிண்டு ஒரு புள்ளாண்டான் சுத்திண்டு இருப்பார் ..காணலை .. என்ன பண்ணிண்டு இருக்காராம் ? நோக்கு தெரியுமா ஓய் ?

டவுசர் பாண்டி said...

அவுரு தான் பேரு இல்லாத சுத்திக்கீனு கீராரே !! ஆளையே காணோம் பா !!

பாவா ஷரீப் said...

இன்னா வாஜாரே,

எப்பிடிப்பா கீற

கடை ரெண்டு மூணு நாளா பூட்டிக்கினு போய்டியேப்பா

hari raj said...

டவுசர் பாண்டி

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ,விளக்கமான பதிவு.

அன்புடன்
ஹரி ராஜகோபாலன்

பெயரில்லா said...

ஓய் ..பாண்டி வாள் ... பொண்ணுங்க மனச காப்சர் பண்றதுக்கு என்ன பண்ணனும்னு ஒரு பதிவ போட்டேள்னா நன்னாயிருக்கும் .. என்ன சொல்றீரு ஓய் ? அப்பால கீல ஒருத்தர் சொன்ன மாதிரில்லீம் கேப்சர் பண்ணமுடியுமா? விலுந்து விலுந்து சிர்ச்சுடேன்.. சூப்பரப்போ!
ஜிஆர்ஜி
பாண்டி.

டவுசர் பாண்டி said...

//எப்பிடிப்பா கீற
கடை ரெண்டு மூணு நாளா பூட்டிக்கினு போய்டியேப்பா//-கருவாச்சி கூறியது,


ஐயோ !! தலீவா !! நா இன்னாத்துக்கு லீவ் உடப்போறேன் ? நம்ப கம்பனிக்கு தான் கதவே கெடியாதே !!

டவுசர் பாண்டி said...

//டவுசர் பாண்டி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ,விளக்கமான பதிவு.//- hari raj கூறியது,


உங்க கருத்துக்கு , ரொம்ப தாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

//பொண்ணுங்க மனச காப்சர் பண்றதுக்கு என்ன பண்ணனும்னு ஒரு பதிவ போட்டேள்னா நன்னாயிருக்கும் //-ஜிஆர்ஜி,

இன்னாத்துக்கு நானு நல்லா கீரது உனுக்கு புடிக்கலியா ? என்னை மாட்டி உடரதுளியே குறியா கீரா மேரி
தெர்தே !!

பெயரில்லா said...

//இன்னாத்துக்கு நானு நல்லா கீரது உனுக்கு புடிக்கலியா ? என்னை மாட்டி உடரதுளியே குறியா கீரா மேரி
தெர்தே !!
//

ஓய் பாண்டி வாள்..
படாது ..படாது ..படாது .....அப்படி எல்லாம் சொல்லப்படாது !
நோக்கு விஷயம் என்னான்னு தெரியுமோன்னோ ..அப்ப பதிவ போடுங்கோ ..
கக்கு வாள் நீங்க என்ன சொல்றேள் ?

raju said...

super thalaiva......
Ilike u r web site

கண்மணி/kanmani said...

superb

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh