பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

எனது 50 -வது பதிவு - நம்ப பென் டிரைவ எப்பிடி லாக் பண்றது ?

·

50 - வது பதிவு
Photobucket உங்களிடம் சில வார்த்தைகள் ,

கடந்த மார்ச் மாதம் 4 -ஆம், தேதி இந்த பதிவுலகத்தில் காலடி எடுத்து
வைத்தேன் , இதற்கு முழு முதற்க் காரணம் , எனது அருமை நண்பர்
திரு வேலன் அவர்கள் தான்,

நாங்கள் இருவரும் ஒரே ஊர் என்பதாலும் அவரிடம் பேசும் சந்தர்பம்
கிடைத்தது , ஒரு நாள் பேச்சு வாக்கில் கணினி பற்றி பேச்சு வந்தது ,

அப்போது அவர் என்னிடம் நீ கூட ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் , என்று
சொன்னார் அப்போது நான் சொன்னேன் , அண்ணா எனக்கு கணினி பற்றி
ஒன்றும் தெரியாது என, முதலில் படித்துப் பார் என்றார் ,

அவரின் பதிவுகளை பற்றியும் சொன்னார் , அடடா !! என நினைத்து
முதலில் அவரின் பிளாக் படித்தேன் , பிறகு ,

மற்ற பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன், அப்போது தான் எனக்கு
ஒவ்வருவரும், அவர்களுக்கென ஒரு பாணியுடன்
எழுதுகின்றனர் ,என்பதை அறிந்தேன் ,

அதன் விளைவாக நான் முயற்சி செய்த ஒரு பாணி தான் இந்த
குப்பத்து தமிழ் , முதலில் காமிடி எழுதினேன் ,

பிறகு படிப்படியாக தொழில் நுட்பம் பற்றி எழுதினேன் , இது வரை
எனக்கு கணினி பற்றி யாரும் சொல்லித் தந்ததில்லை ,

எனது சுய முயற்சியில் நானே கற்று அதை செயல் படுத்திப் பார்த்து ,
பிறகு அதை எழுதுகின்றேன் ,

எனக்கு ஆங்கில டைப்பிங் மட்டுமே தெரியும் , தமிழ் எழுத
google transliteration தான் பயன் படுத்தி வருகிறேன்,

இதில் தமிழ் எழுத முடிகிறது ஆனால் , டவுசர் பாண்டி தமிழ் மிகவும்
கஷ்டமாக இருக்கும் ,

எனக்கு வந்த கருத்துக்களில் சில பேர் இது என்ன தமிழ் ஒன்றும்
புரியவில்லை ? என என்னை திட்டிக் கூட இருக்கின்றார்கள் ,

சில பேர் இதனாலேயே நண்பர்களாகவும் கிடைத்து இருக்கிறார்கள் ,
அப்படி கிடைத்த நண்பர் தான் கக்கு -மாணிக்கம் , என்ற நண்பர் துபாய்
நாட்டில் வேலை பார்த்து வருகிறார் ,

அதே போல் புனே வில் இருக்கும் அன்பு தம்பி ஜெய் ( யூர்கன் க்ருகியர் )
மற்றும் பாரிஸ் நாட்டில் இருக்கும் நண்பர் நித்தியானந்தம் ,

சமீபத்தில் கிடைத்த நண்பர் ஹரி ராஜகோபாலன் , இவர்
கலி போர்னியாவில், இருக்கிறார் ,

கருவாச்சி - இவர் திருப்பூரில் இருக்கிறார் , இவர்கள் அனைவரும்
எனக்கு இந்த வலை உலகம் மூலம் கிடைத்த மிக நெருங்கிய நண்பர்கள்

மேலும் , காலடி , மோகனச்சாரல் , INVISIBLE - விஜி ,போன்ற வலை
தளம் எழுதும் நண்பர்களும் இருக்கிறார்கள் ,

மேலும் எனது வலைத்தளத்தை follow செய்யும் 63 - நண்பர்களுக்கும்
நன்றி , நன்றி , மேலும் உங்கள் ஆதரவை வேண்டி - டவுசர் பாண்டி ,

டவுசர் பாண்டியின் தமிழ் புரியவில்லை என சொல்பவர்களுக்கு ,
ஒரு சின்ன வேண்டுகோள்,அவர்களுக்காகவே , எனது பிளாக்கில்
பாண்டி அகராதி என கொடுத்து இருக்கிறேன் ,
முடிந்தால் அதை படிக்கவும் ,

- நன்றி "பாண்டி "

நாம வெச்சிக்கீர பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர்
வெச்சிருப்போம் !! அத்த பாஸ் குடுத்து லாக் பண்றது பத்தி இப்போ
பாக்கலாம் ,

இங்க போய் இந்த சாப்ட்வேர் down load பண்ணிக்கோங்க !!
( 79 Kb அளவு தான் ) அப்பால ,

அத open பண்ணி run பண்ணுங்க, இது மேரி ஒரு ஐகான் வரும்


இப்போ !! மொதல்ல நம்ப பென் டிரைவை போடுங்க !! அப்பால,

இதை ஓபன் பண்ணுங்க !! உங்களுக்கு இது போல் ஓபன் ஆகும்,உங்கள் விருப்பம் போல் password கொடுக்கலாம்

(அதில் 16 digit என இருப்பதை பார்த்து மிரள வேண்டாம் }

இதில் old password என்பதை விட்டு விட்டு , new pass word என்பதையும்
அதை மறுபடி type செய்யவும் , HInt கொடுக்க வேண்டாம் ,

பிறகு Apply கொடுக்கவும் , முடிந்தது ,அதை remove செய்து விட்டு
மீண்டும் போடும் போது தான் லாக் ஆகும் ,

நமது பென் டிரைவ் இப்போது லாக் ஆகி விட்டது ,

இப்போது , பென் டிரைவை எடுத்து விடுங்கள் மீண்டும் அதை
போட்டுவிட்டு mycomputer சென்று open செய்து பாருங்கள் ,
இது போல் வரும் ,
மீண்டும் உங்கள் பென் டிரைவை மீட்க்க முதலில் உள்ள ஐகானை ஓபன்
செய்து அதில் unlock என்பதை பிரஸ் செய்தால் இது போல் தோன்றும் ,


இதில் உங்கள் password கொடுத்து OK செய்யுங்கள் ,

அவ்வளவு தான் , உங்கள் pen டிரைவ் மீண்டும் செயல் படும் ,

மீண்டும் லாக் செய்வதற்கு அதே போல் செய்யவும் , ஒன்று இரண்டு
முறை செய்தால் சரியாக வரும் , உபயோகப் படுத்திப் பாருங்கள் ,

இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து ஆதரவு
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

உங்கள் கருத்துக்காக காத்திருக்கும் டவுசர் பாண்டி .46 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் said...

வாழ்த்துக்கள் நண்பரே ..

டவுசர் பாண்டி said...

மிக்க நன்றி நண்பரே !!

Jaleela Kamal said...

50 வது பதிவு வாழ்த்துக்கள்.


அண்ணாத்தே தொடருங்கள் இன்னும் பயனுள்ள பதிவுகளை.வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

//இது வரை எனக்கு கணினி பற்றி யாரும் சொல்லித் தந்ததில்லை ,
எனது சுய முயற்சியில் நானே கற்று அதை செயல் படுத்திப் பார்த்து , பிறகு அதை எழுதுகின்றேன் ,
//

ஒரு ராயல் சல்யூட் பாண்டி,

தொடர்ந்து கலக்க்கு நய்னா, நானும் வாழ்த்திக்கீறேன்

பெயரில்லா said...

ஓய் ..பாண்டி வாள் ... நீர் ஐம்பது போஸ்ட் போட்டுருக்கேளா ?
ஜமாய்ச்சிருக்கேள் போங்கோ ...
ஆனா ஒண்ணு ஓய் ..நீறு எழுதற தமிழ் அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போலேருக்கு ஓய் ...

டவுசர் பாண்டி said...

//50 வது பதிவு வாழ்த்துக்கள்.
அண்ணாத்தே தொடருங்கள் இன்னும் பயனுள்ள பதிவுகளை.வாழ்த்துக்கள்//-Jaleela கூறியது,


ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் , சகோதரி , உன்னும் பதிவு எழதறேன் எல்லாம் உங்கள மேரி ஆளுங்க ஆசீர்வாத் தான் காரணம் .

பெயரில்லா said...

//டவுசர் பாண்டியின் தமிழ் புரியவில்லை என சொல்பவர்களுக்கு ,
ஒரு சின்ன வேண்டுகோள்,அவர்களுக்காகவே , எனது பிளாக்கில்
பாண்டி அகராதி என கொடுத்து இருக்கிறேன் ,
//

ஓய் .
நீர் பெரிய அகராதி பிடிச்ச பாண்டியாய் இருப்பேள் போலேருக்கே ..
உம்முடைய அகராதிக்கு முன்னாள் லிப்கோ அகராதி தோத்தது ஓய் ..

டவுசர் பாண்டி said...

//ஒரு ராயல் சல்யூட் பாண்டி,

தொடர்ந்து கலக்க்கு நய்னா, நானும் வாழ்த்திக்கீறேன்//-அபுஅஃப்ஸர் கூறியது.


ரொம்ப சந்தோசம் தலீவா !! உங்க ஊக்கமே என்னை போல ஒன்னிமே தெரியாத மன்சால அல்லாம் , உன்னும் கத்துக்க தூண்டுது , நன்றி நன்றி

Varma said...

வாழ்த்துக்கள் நண்பரே...
தொடருங்கள் இன்னும் பதிவுகளை...

டவுசர் பாண்டி said...

//நீறு எழுதற தமிழ் அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போலேருக்கு ஓய் .//

யப்பா !! தலீவா !! யாரு பெத்த புள்ளையோ இப்பிடி பேரு இல்லாம கீரது , எனுக்கு ரொம்ப வேதனையா கீது பா ! பேசாத நானே உனுக்கு ஒரு பேரு வெச்சிட்டா ? வாழ்த்துக்கு தாங்க்ஸ்.

டவுசர் பாண்டி said...

//நீர் பெரிய அகராதி பிடிச்ச பாண்டியாய் இருப்பேள் போலேருக்கே ..//

நீங்க எந்த அகராதிய சொல்றீங்கோ !! நானு அந்த மேரி அகராதி அல்லாம் புட்ச பாண்டி இல்லீங்கோ !! சும்மா கொழந்த மேரி பா !! நானு ( அட நம்புப் பா )

டவுசர் பாண்டி said...

///வாழ்த்துக்கள் நண்பரே...
தொடருங்கள் இன்னும் பதிவுகளை.//- Varma கூறியது.

மிக்க நன்றி தலீவா !! ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!

beer mohamed said...

தலை நல்லகீறியா, உன் மேட்டரை படித்தேனா அப்படியே கப்புனு புடிச்சிகிட்டேன் தலை நல்லா இரு தலை
beer mohamed
beermohamedtamilgroup.blogspot.com

hari raj said...

//இது வரை எனக்கு கணினி பற்றி யாரும் சொல்லித் தந்ததில்லை ,
எனது சுய முயற்சியில் நானே கற்று அதை செயல் படுத்திப் பார்த்து , பிறகு அதை எழுதுகின்றேன் ///

அருமை,வாழ்த்துக்கள்,டவுசர் பாண்டி
ஹரி ராஜகோபாலன்

டவுசர் பாண்டி said...

//தலை நல்லகீறியா, உன் மேட்டரை படித்தேனா அப்படியே கப்புனு புடிச்சிகிட்டேன் தலை நல்லா இரு தலை//-beer mohamed,

தலீவா !! நல்லாவே கீரேன் பா !! அப்பால உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//அருமை,வாழ்த்துக்கள்,டவுசர் பாண்டி
ஹரி ராஜகோபாலன்//-hari raj கூறியது,

உண்மை தான் தலீவா !! இந்த பொட்டிய வாங்கும் போது எப்பிடி ON /OFF பண்ணனும் இன்னு சொல்லிக் குடுத்துட்டு பூட்டாங்கோ !!

அதுக்கு அப்பால நானு பட்ட பாடு
கீதே !! யப்பா !! கொஞ்சம் கொஞ்சமா இத்த தட்டி தட்டி கத்துக் கினேன் வாஜாரே !! உங்க கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ் தல !!

வேலன். said...

கடந்த மார்ச் மாதம் 4 -ஆம், தேதி இந்த பதிவுலகத்தில் காலடி எடுத்து
வைத்தேன் , இதற்கு முழு முதற்க் காரணம் , எனது அருமை நண்பர்
திரு வேலன் அவர்கள் தான், //

பெயரை காப்பாற்றியதற்கு நன்றி டவுசர் பாண்டி....
முகவரி தெரியும் ...முகம் தெரியாது...ஆனால் உதவும் நல்ல உள்ளங்கள்...
இதுதான் இணைய நண்பர்கள்...
உங்களது நண்பர் எனக்கும் நண்பர்..எனது நண்பர் உங்களுக்கும் நண்பர்...இதுபோல்தான் நமது நட்பு வட்டாரம் விரிவடைந்துகொண்டு செல்கின்றது...நாம் யாவரும்
பிறக்கும்போது கொண்டுவந்ததில்லை...
இறக்கும்போதது கொண்டுபோவதில்லை..தங்களது 50 வது பதிவில் என்னை நினைவுகூர்ந்து பதிவிட்டமைக்கு நான் எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை....
தாங்கள் இதுபோல் பல நூறு பதிவுகள் இட்டு
வாழ்க வளமுடன் என்று
வாழ்த்தும்
அன்பு உள்ளம்
வேலன்.

ஜிஆர்ஜி allways cool said...

50...100...150...200... என்று தொடர்ந்து சாதியுங்கள். மனிதன் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது. வாழ்த்துக்கள்! பாண்டிக்கு... ... பாண்டியிலிருந்து
ஜிஆர்ஜி.
புதுவை.

ரோஸ்விக் said...

வாழ்த்துக்கள் டவுசரு!

//சில பேர் இதனாலேயே நண்பர்களாகவும் கிடைத்து இருக்கிறார்கள்//

இதுல என்னையும் சேர்த்துக்கலாம். நான் அந்த சென்னை தமிழுக்காகவே உமது பதிவைப் படிக்க ஆரம்பித்தேன். :-) அப்புடி டைப் அடிக்கிறது ரொம்ப கஷ்டமையா...

Jaleela Kamal said...

வாங்க அண்ணாத்தே 50 பதிவு வாழ்த்துக்கள் அதே குஷியோடு வந்து அவார்டு வாங்கிக்கங்க

டவுசர் பாண்டி said...

//பெயரை காப்பாற்றியதற்கு நன்றி டவுசர் பாண்டி....//-வேலன்,

உங்களோட வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணாத்தே !! உன்னும் நல்ல மேட்டரா எழ்தி நல்ல பேரு எடுக்க முயற்சி பண்றேன் !!

நீங்க சொன்னா மேரி , இந்த வலை தளம் மூலம் ,நல்ல நண்பர்கள் கிடைத் திருக்கின்றார்கள் ,

மேலும் நண்பர்கள் நம்பளுக்கு கிடைப்பார்கள் , என்ற ஆவலில் - டவுசர் பாண்டி .

டவுசர் பாண்டி said...

//மனிதன் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது. வாழ்த்துக்கள்!//- ஜிஆர்ஜி,

ரொம்ப ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! உங்க கருத்துக்கும் + வாழ்த்துக்கும் , நன்றி

//பாண்டிக்கு... பாண்டியிலிருந்து//

எம் பேரு கூட நீங்க சொல்லும் போது ரொம்ப ரைமிங்கா கீது தல !! ரொம்பவே ரசிச்சேன் !!!

டவுசர் பாண்டி said...

//வாழ்த்துக்கள் டவுசரு!//-ரோஸ்விக் கூறியது,

ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

//இதுல என்னையும் சேர்த்துக்கலாம்.//

நீங்களும் நம்ப தோஸ்து தான்
தலீவா !!
முடியும் போது சேட்டிங் வாங்க !!

//நான் அந்த சென்னை தமிழுக்காகவே உமது பதிவைப் படிக்க ஆரம்பித்தேன்.//

இந்த சென்னை தமிழ் வாழ்க !! வளர்க !!
(அய்யே , அடிக்காதீங்கோ! பா !! அவங்கோ அவுங்களுக்கு அவங்கோ மொழி தானே மிக்கியம் )

//அப்புடி டைப் அடிக்கிறது ரொம்ப கஷ்டமையா//

என் கஷ்டம் புரிஞ்சி சொல்றீங்க ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

//அதே குஷியோடு வந்து அவார்டு வாங்கிக்கங்க//- Jaleela கூறியது.

நமக்கு கூடவா !!
ரொம்ப ஆச்சரியமா கீது !!

ரொம்ப டாங்க்ஸ் சகோதரி ,

ரொம்ப சந்தோஷத்துடன் வாங்கிக் கொள்கிறேன். இந்த அவார்டை நான் பெருமையாக கருதுகிறேன் .
நன்றி

பாவா ஷரீப் said...

தலீவா 50 வது பதிவு வாழ்த்துக்கள் எல்லாம் சொல்ல மாட்டேன்பா.
உங்க டாலேண்டுக்கு 50000 பதிவு(குப்பத்து தமிழ்ல) எழுதுவிங்க தல, வாழ்த்துக்கள்.

டவுசர் பாண்டி said...

//தலீவா 50 வது பதிவு வாழ்த்துக்கள் எல்லாம் சொல்ல மாட்டேன்பா.//-கருவாச்சி கூறியது.

ஹே , இன்னாது இது ஒரு வித்தியாசமா கீது ? உங்க பேரு போலவே !!

//உங்க டாலேண்டுக்கு 50000 பதிவு(குப்பத்து தமிழ்ல) எழுதுவிங்க தல, வாழ்த்துக்கள்.//

அப்பவே நெனெச்சேன் பா !! இன்னாமோ ஒரு மேரியா சொல்றாரே இன்னு !! எனுக்கு கூச்சமா கீது
( ^ l ^ ) ( ^ l ^ ) ( ^ l ^ )
அட மெய் தாம்பா !! வாழ்த்துக்கு டாங்க்ஸ் தல !!

பொன் மாலை பொழுது said...

அம்பது பதிவு இட்டுகினியா ?! ஆஹா, டவுசர் பாண்டி அண்ணாத்தக்கி அல்லாரும் எழுந்த நின்னுகினு ஒரு Standing Ovation குட்தாக்க இன்னா?! அதெல்லாம் நம்க்கு வராது.நம்ம பாணியே தனித்தான் வாஜாரே. ......இன்னாவா?.....................................

// எங்க தங்கம்,எங்க தலீவரு,நம்ம குப்பத்து தமீலு வளர்த்துகின டவுசரு அண்ணாத்தே பாண்டி வால்க வால்க !! //
எக்கா ....மிணிம்மா க்கா ...நம்ம கொயிந்தனாறு வூட்டு பக்கம் வந்துகினா மஞ்சா தண்ணி ஊத்தி கற்பூரம் காட்டி, வெள்ள பூசிணிக்கா ஒடச்சி திருஷ்ட்டி சுத்தி போடுக்காவ்.

ஆக்காங்.

பொன் மாலை பொழுது said...

இந்தா ..............நா... லேட்டா வந்துகினன்னு திட்டிகினுகீர ? அத்து வூட்ல இந்த புள்ளிங்கோ ரெண்டும் மாத்தி மாத்தி இந்த பொட்டியண்ட குந்திகினுகீதுங்கோ! நம்மக்கு சான்ஸ் இல்லாம பூட்டுது தல. அத்தான் . இன்னா கோவிசிக்கின்யா?? அத்தான பாத்தேன்.

டவுசர் பாண்டி said...

//குப்பத்து தமீலு வளர்த்துகின டவுசரு அண்ணாத்தே பாண்டி வால்க வால்க//-கக்கு,

யப்பாடா !! இன்னாதான் நென்சிககீனு கீரேபா !! நீயி !!

இம்மாம் நேரம் எங்க குந்திக் கீனு இருந்தே ? அய்யே ,

பெரி பெரி உஸ்தாது அல்லாம் நம்புளுக்கு ஷேக் ஹாண்டு குட்து , சும்மா அப்பிடியே மனசார வாழ்தனாகோ !! தெரிமா நீ தான் காணாத பூட்டே !!

இப்பவாது வந்து கண்டுக்கீனியே ரொம்ப டாங்க்ஸ் பா !!

வாயேன் ஒரு வாய் சல்பேட்டா குடிக்கறத்துக்கு !! அய்யே நீ ரொம்ப ரீஜின்ட்டான ஆளு தான் போ !!

நம்ப கூட அல்லாம் வருவியா ? அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//அத்து வூட்ல இந்த புள்ளிங்கோ ரெண்டும் மாத்தி மாத்தி இந்த பொட்டியண்ட குந்திகினுகீதுங்கோ!//- கக்கு,

அய்யே !! இன்னா மன்சன் பா நீயி !! புள்ளைங்கோ ஆசைப் படரா மேரி ஒரு பொட்டி வாங்கியாந்து , குடுக்கத்தாவளியா , இன்னா போ !!

உனுக்கு ஒன்னிமே வெவரம் பத்தாது !!எங்க அக்கா கிட்ட சொல்லி ரெண்டு போட்டா தான், நீ சீர் படுவே
போல கீது !!

Mohan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல! இது போல பல பதிவுகள் தொடர்ந்து எழுதி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!! கலக்குங்க தலீவா!!!

டவுசர் பாண்டி said...

//மனமார்ந்த வாழ்த்துக்கள் தல!//-Mohan கூறியது.

ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! உங்க ஆதரவு என்னிக்கும் ஒனும் ,
நன்றியுடன் - பாண்டி .

நித்தி said...

அண்ணாத்தே வாழ்த்துக்கள் பா....50வது பதிப்பு....அண்ணாத்த சென்னை தமிழ்ல பிளாக்ல கலக்குற ஒரே தல அது நம்ம டவுசரு தான்....

அப்பால ஒண்ணு சொல்லிக்கிறேன் பா....கம்ப்யூட்டர பத்தி ஒன்னுமே தெரியாம ஒரு பிளாக் ஆரம்பிச்சி எல்லோருக்கும் தகவல் தரீங்க பாத்தீங்களா.....
அதான் "சுயம்பு"....நம்மல யாரும் உருவாக்காம நாமலே உருவாவறோம் பாத்தீங்களா..அங்க‌ தான் நிக்கறாரு டவுசரு...

நம்ம வலைப்பதிவு வைத்து அதுல சொந்த கதை சோக கதை சொல்லாம நடிகர் நடிகை கவர்ச்சி படம் போடாம அறிவ வளர்க்க நல்ல தகவலா கொடுக்கிறோம் இல்ல அதுல கிடைக்கிற திருப்திக்கு அளவே இல்ல தல.....

அப்பால நானும் இந்தியா வரேன் பா....வந்தா மீட் பன்னுவோம் தல.....

ஆல் த பெஸ்டு பா...வாழ்த்துக்கள்....இன்னும் பதிவ தொடருங்கள்......

நித்தியானந்தம்
www.pudhuvai.com
பிரான்ஸ்

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்தே வாழ்த்துக்கள் பா....50வது பதிப்பு....அண்ணாத்த சென்னை தமிழ்ல பிளாக்ல கலக்குற ஒரே தல அது நம்ம டவுசரு தான்.//-நித்தியானந்தம்,

ரொம்ப டாங்க்ஸ் தல !! உங்கள மேரி ஆளுங்க குடுக்குற ஊக்கத்துல தான் தல இத்தினி பதிவு எழத முடிந்தது , உங்கள் வாழ்த்துக்கு ரொம்பவே நன்றி,

நீங்கள் இந்தியா வரும் போது மறக்காமல் சந்திக்கவும் ,
ஆவலுடன் - பாண்டி

பெயரில்லா said...

is it work in another computer aslo ?

For example
I installed this softwrae in my computer. OK

I want to use my USB in another computer. At that time, will it in lock mode or unlock mode ?

d_n_anandan@yahoo.com
Anand

Tech Shankar said...

50ம் பதிவுக்கு வாழ்த்துகள். தொடர்க உங்கள் சேவை.

பெயரில்லா said...

ஏண்டா அம்பி டவுசர் பாண்டி, நன்னா ருக்கியோன்னோ?வேண்டாமோ பின்னே.!
நீ அம்பது போஸ்டிங் போட்டுட்டியமே ! congratulation !!.நீ பிளாக் எழுதற ஸ்டைல ஏன் " குப்பத்து தமிழ் "
அப்டீன்னு ஏன் சொல்லணும் ? நன்னா "சென்னை தமிழ் " இல்லேன்னா "பட்டணத்து தமிழ் " அப்டீன்னு அழகா சொல்லலாமே ?நோக்கு தெரிஞ்சிண்டத மத்தவாளுக்கும் சொல்றியோன்னோ அது மகா புண்ணியமாச்சே!! சுத்தமா பேசிண்டு இருக்கறவா அல்லாரும் என்ன பண்ணிண்டு இருக்கா ??இத பாரு, நீ இப்டியே தான் எழ்த்தனும். அதுதானே நோக்கு ப்ளஸ் பாயிண்ட் ? சரிடா அம்பி, நா வரட்டுமா ?
அது சரி ,ஒடம்ப பாத்துக்க படாதோ? இப்டீ ஓவர் வெயிட் போட்டு வெச்சிண்டு இருக்கே ? புரியறது,புரியறது!! ஒன் ஆத்துக்காரி நன்னா ஒன்ன கவனிசிண்டு இருக்கா!! இருந்தாலும் நீயுன் சித்த கவனமா இருக்கப்படாதோ ?? சரி நா வரட்டுமா ? என் ஆத்துக்காரி "அரிசி உப்புமா தேங்கா எண்ணைல பண்ணி வெக்கிறேன் " ன்னா . நா போறேன், நேக்கு பசிக்கிறது டா ...அம்பி.!!

பாவா ஷரீப் said...

அய்யா பெயரில்லாதவரே உங்க கடமை உணசிக்கு அளவேயில்லையா
இன்னாரதுக்கு பின்னூட்டமா ?

டவுசர் பாண்டி said...

//is it work in another computer aslo ?//- பெயரில்லா கூறியது.


அது எப்பிடி தலீவா !! வேல செய்யும் ? நீங்க தான் லாக் பண்ணிட்டீங்களே !! மறு படி ஓபன் பண்ண password குடுக்கணும் , அதுக்கு அதே software வேணும் .

டவுசர் பாண்டி said...

//50ம் பதிவுக்கு வாழ்த்துகள். தொடர்க உங்கள் சேவை.//-Amazing Photos 4 All கூறியது,


மதிப்பு மிகு தமிழ் நெஞ்சம் சார் !! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தலீவா !!

டவுசர் பாண்டி said...

//சுத்தமா பேசிண்டு இருக்கறவா அல்லாரும் என்ன பண்ணிண்டு இருக்கா ??இத பாரு, நீ இப்டியே தான் எழ்த்தனும்.// ---------,

நா மின்னயே சொன்னேன் மொதல்ல ஒரு பேரு வெச்சிக்கோங்க, இன்னு எம் பேச்ச கேக்கவே மாட்டீங்களா ? அப்பால ,

யார் சொன்னாலும் சேரி , நம்ப பாஷைல எழ்தர்த்து தான் எனுக்கு மட்டும் இல்லாம எங்க பிரெண்டுக்கோ அல்லாருக்கும் புடிக்கும் !! அக்காங் அதோ சொல்லோ அப்பிடியே தாம்பா எழ்துவேன் , வர்ட்டா !!

டவுசர் பாண்டி said...

//இன்னாரதுக்கு பின்னூட்டமா ?/- கருவாச்சி கூறியது...

//November 11, 2009 2:44 AM//

யப்பா !! நா தெரியாம தான் கேக்கறேன் நீங்க ரெண்டு பேரும் , ராத்திரி இத்தினி மணிக்கி கூடவா கருத்து போடுவீங்க !!

கருவாச்சி - நீ பலே ஆளுதாம்பா !! கருத்துக்கே கருத்து போடறத்துக்கு இத்தினி மணி தானா கெடச்சிது !! அய்யே !! எம் மேல நீங்க ரெண்டு பேரும் வேச்சிக்கீர பாசத்துக்கு ஒரு அளவே இல்லியா !! ( ம்ம்ம்ம் அங்க இன்னா கத ஓடுதோ , ?? )

பெயரில்லா said...

Increasing your web traffic submit your story at http://www.cinefnitz.com

Prathap Kumar S. said...

தலீவரே இப்பத்தான் தலீவரே உன்வூட்டான்ட வர்றேன்...ஷோகாகீது வாத்யாரே...

யுஎஸ்பி. மேட்டரு படுஜோரு..டவுன் லோடு பண்ணிட்டேன்...

டவுசர் பாண்டி said...

வாங்க !! தலீவா !! நம்ப கோஷ்டில சேந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !! ( ? ) இன்னா ஆவப் போறீங்களோ !! அப்பால கருத்துக்கு நன்றி தல !!

satha said...

thalaiva neenga sonna mathiri sethen pen drive reinstal panna read aga matengiradu. pathil solla mudiyuma. pls reply tollfree50@gmail.com

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh